மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Nijamo NizhaloNijamo Nizhalo - Episode 13Post ReplyPost Reply: Nijamo Nizhalo - Episode 13

Quote from monisha on May 18, 2023, 6:17 PM

13
அடுத்து வந்த ஒரு வாரம் வெங்கட்டின் இரவையும் பகலையும் ஸ்ரீ முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டாள். குறுந்தகவல்கள்… அழைப்புகள்… என்று பல நேரங்களில் தொந்தரவாக சில நேரங்களில் குழந்தைத்தனமாக என்று அவன் பொழுதை அவள் களவாடிக் கொண்டாள். ஆனால் எந்த சந்தர்ப்பத்திலாவது காதல் என்ற உணர்வு எட்டிப் பார்த்தது என்றால் அது அவனுக்கே தெரியவில்லை. ஒரு வேளை அவனது மருத்துவ மூளை காதலை வெறும் ஹார்மோன் கலவரமாகப் பார்ப்பதினால் காதல் என்ற உணர்வில் அவனால் லயிக்க முடியவில்லையோ என்னவோ? அதேநேரம் ஸ்ரீயின் செய்கைகளும் அவனுக்கு ஒரு சிறுப் பெண்ணிடம் பழகுவது போன்ற உணர்வைதான் தோற்றுவித்தது. இதற்கிடையில் திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் நடந்தேறிக் கொண்டிருக்க, மல்லிதான் பாவம்! தனியாக திருமண வேலைகளை இழுத்து போட்டு செய்து கொண்டிருந்தார். அதேநேரம் பள்ளி வேலைகளையும் மல்லியால் யாரையும் நம்பி விட முடியவில்லை. ஸ்போர்ட்ஸ் டே நெருங்கிக் கொண்டிருந்தது. இம்முறை விளையாட்டு துறையில் இணை அமைச்சராகப் பதவியேற்ற இன்பரசனை அவ்விழாவிற்குத் தலைமை தாங்க அழைத்திருந்தனர். அமைச்சர் வரவேற்பு மற்றும் விழாவிற்கான முன்னேற்பாடுகள் என்று மல்லிக்கு தலைக்கு மேல் வேலைகள் குவிந்திருந்தன. பணிப்பெண் யாரும் சரியாக அமையாத நிலையில் மல்லிக்கு வீட்டு வேலைகளும் சேர்ந்து கொண்டது. மருத்துவமனையிலிருந்து வெங்கட் வந்தப் பிறகும் மல்லி மாடிக்கு வரவில்லை. எப்போதும் அவன் கார் வந்த சத்தம் கேட்டாலே காபியுடன் அவன் அறைக்கு வருபவர் இன்று இவ்வளவு நேரமாகியும் ஒரு குரல் கூட கொடுக்காதது அவனுக்கு ஏனென்று தெரியவில்லை. கீழே அறைக்கு வந்து பார்த்தவன் மல்லி துவண்டு படுக்கையில் கிடப்பதைப் பார்த்து பதட்டத்துடன் அவரருகில் அமர்ந்து நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். மகனின் தொடுகையை உணர்ந்தவர், “வெங்கட்” என்றபடி எழுந்து கொள்ள முயல, “பரவாயில்ல படுங்க மா” என்றான். “இருக்கட்டும் டா… நான் வந்ததும் கொஞ்சம் டயர்டா இருந்ததுன்னு படுத்திட்டேன்… நீ எப்போ வந்த… வந்து ரொம்ப நேரமாச்சா? காபி போட்டுத் தர்றேன் இரு” என்று எழுந்தவரை அமர்த்தியவன். “உட்காருங்க மா… நான் போட்டு எடுத்துட்டு வரேன்” என்றான். “இல்லடா… பால் உள்ளே இருக்கும்… உனக்கு தெரியாது” என்று மீண்டும் எழுந்து கொள்ள பார்க்க, “உட்காருங்க… எனக்கு எல்லாம் தெரியும்… நான் போட்டு எடுத்துட்டு வர்றேன்” என்றவன் அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் இருவருக்கும் காபியைப் போட்டு எடுத்து கொண்டு வந்தான். காபியை ருசித்தவர், “நல்லாதான்டா போட்டிருக்க” என்று மகனின் தோளில் தட்டி, “இப்படி யாராச்சும் போட்டுக் கொடுக்க மாட்டாங்களான்னு இருக்கும்டா” என்றவர் கவலையுடன் சொல்ல, “அப்பா நல்லா போடுவாரேம்மா” என்றான். “அவர்தான் என்கிட்ட சரியா பேசுறதே இல்லையே… மருமகள்களோட சேர்ந்து யுடுயூப்ல புரோக்ராம் பண்றதுதான் அவருக்கு இப்போ ரொம்ப முக்கியமா போச்சு” என்றார். அவனுக்கு தன் அம்மாவின் குரலில் அப்பாவின் மீது கோபத்தை விட பேசவில்லையே என்ற ஆதங்கமும் கவலையுமே அதிகமாகத் தெரிந்தது. அவன் பதிலின்றி அமர்ந்திருக்க, “எவ்வளவு வேலை தெரியுமா வெங்கட்… ஒரு பக்கம் கல்யாண வேலை… இன்னொரு பக்கம் ஸ்கூல்ல ஸ்போர்ட்ஸ் டே… எல்லாத்துக்கும் மேல வீட்டு வேலை வேற… முடியலடா” என்றவர் மகனிடம் தன் பரிதாப நிலையை விவரிக்க, “இந்த நிலைமைல ஏன் நீங்க ஒரே மாசத்துல கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டீங்க… கல்யாணம்னா சும்மாவா… இதுல ஸ்போர்ட்ஸ் டே வேற” என்றவன் கடிந்து கொள்ள, “உனக்கு தெரியாது வெங்கட்… உன் ஜாதகப்படி இந்த ஒரு மாசத்துல உனக்கு கல்யாணம் முடிஞ்சுடனுமாம்… லக்ஷ்மி ஜாதகத்துலயும் கூட அதேதான் சொல்லி இருக்காங்க… அதனாலதான் அவங்க வீட்டுலயும் இந்த ஒரு மாசத்துல முடிச்சுடலாம்னு சொன்னாங்க” என்றார். வெங்கட்டிற்கு இந்த ஜாதகம் ஜோசியங்களில் பெரிதாக நம்பிக்கை இல்லை என்றாலும் அம்மாவின் வார்த்தையை அவன் மறுத்து பேசவில்லை. மேலும் மல்லி வருத்தத்துடன், “ரத்னாவை நான் அனுப்பி இருக்க கூடாது… வெங்கட்” என்றவர், “பேசாம நீ ரத்னாவை வர சொல்றியா?” என்று அவர் கேட்க, அவன் யோசனையாக அமர்ந்திருந்தான். “ரத்னாகிட்ட பேசிப் பாரு வெங்கட்” என்று மீண்டும் அவர் கூற, “இல்லமா… நான்தான் ரத்னாவுக்கு அவங்கப் பொண்ணு படிக்கிற ஸ்கூலில் வேலை வாங்கித் தந்தேன்” என்றான். இதை கேட்டதும் மல்லியின் முகம் சுருங்கிப் போனது. சில நொடிகள் அமைதியாக இருந்தவன் பின் தன் அம்மாவின் கரம் பற்றி, “அம்மா நான் ஒன்னு சொல்லுவேன்… நீங்க கோவிச்சுக்க கூடாது” என, “நான் ஏன் வெங்கட் உன்கிட்ட கோபிச்சுக்கப் போறேன்… சொல்லு” என்றார். “இல்லமா அது வந்து” என்று தயங்கியவன் பின் அம்மாவின் முகம் பார்த்து, “நாமெல்லாம் ஒன்னா இருந்தா… உங்களுக்கு இவ்வளவு வேலை பளு இல்லயில்ல” என, மல்லி மகனை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்து, “யார் கூட ஒன்னா இருக்க சொல்ற… உன் தம்பிங்க குடும்பத்து கூடவா” என்றவர் காட்டமாகக் கேட்க, அவன் மௌனமானான். “எனக்கு யார் உதவியும் வேண்டாம்… நான் என் கௌரவத்தை விட்டுக் கொடுத்துட்டு எவகிட்டயும் என்னால இறங்கிப் போக முடியாது… இதெல்லாம் ஒரு பெரிய வேலையா என்ன… நான் இதை விட டபுள் மடங்கு வேலை செஞ்சு இருக்கேன்… என்னால எல்லாத்தையும் ஒத்தை ஆளா நின்னு சமாளிக்க முடியும். நீ பாரு… உன் கல்யாணத்தை நான் எப்படி தனியா நின்னு நடத்தி காட்டுறேன்னு” என்றவர் பேசிக் கொண்டே உணர்ச்சி வசப்பட்டு உடைந்து அழ, வெங்கட் பதறிவிட்டான். “ம்மா என்ன ம்மா நீங்க” என்றவன் அம்மாவின் கண்களை துடைத்துவிட அவன் கைகளைப் பிடித்துக் கொண்டவர், “நீ எப்பவும் என் கூடவே இருப்ப இல்ல வெங்கட்” என்றார். “நான் எங்கம்மா போகப் போறேன்… நான் எப்பவும் உங்கக் கூடதான் இருப்பேன்மா” என்றவன் உறுதி கூறிவிட்டு தலையணையை சரி செய்து, “நீங்க ரொம்ப டையர்டா இருக்கீங்க… கொஞ்ச நேரம் படுத்து தூங்குங்க… எல்லாம் சரியாயிடும்” என்றவன் அவரைப் படுக்க வைத்து தலையைத் தடவிக் கொடுத்தான். “நிறைய வேலை இருக்கு வெங்கட்” “என்ன வேலை இருந்தாலும் அப்புறம் பார்த்துக்கலாம்” என்றவன் கட்டாயப்படுத்தித் தூங்கச் சொல்ல சில நொடிகள் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தவர் பின் தானாக உறங்கிவிட்டார். மெதுவாக கதவை மூடிவிட்டு வெளியே வந்த வெங்கட் தன் அப்பாவைத் தேடி வந்தான், அவர் மிக மும்முரமாக வீடியோ போட்டு கொண்டிருப்பதைப் பார்த்து சுறுசுறுவென்று கோபமேறியது. வெங்கட் அவர் முன்னே வந்து நின்று, “ப்பா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான். அவனை நிமிர்ந்து பார்த்தவர், “இருடா… சப்பாத்தி சுட்டுட்டு வரேன்” என,  “இப்ப சப்பாத்தி ரவுண்டா சுடுறதுதான் ரொம்ப முக்கியம்… வாங்க அதெல்லாம் அப்புறம் சுட்டுக்கலாம்” என்றவன் அவர் கையைப் பிடித்து சமையலறைவிட்டு வெளியே இழுத்துச் செல்ல, “மாமா… சப்பாத்தி சுடணும்… சீக்கிரம் வந்திருங்க” என்று பின்னிருந்து அர்ச்சனா குரல் கொடுத்தாள்.  அவளைத் திரும்பி பார்த்து முறைத்த வெங்கட், “ஏன் அதை கூட நீங்க சுட மாட்டீங்களோ?” என்றான். “வீடியோல மாமா இருந்தாதான் நல்லா இருக்கும்” என்று சொல்ல, “ஆமா பின்ன… எனக்கு எவ்வளவு ஃபீமேல் ஃபேன்ஸ் தெரியுமா? என்னைப் பார்க்கிறதுக்காகவே இந்த வீடியோ பார்க்கிற பொண்ணுங்க ஜாஸ்தி” என்றவர் பெருமையடித்துக் கொள்ள, “ஐயோ… என்னால முடியலப்பா… கொஞ்சம் வாங்க… உங்ககிட்ட பேசணும்” என்றான். இருவரும் தோட்டத்திற்கு வரவும் தன் தலையிலிருந்த துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டே, “சொல்லு வெங்கட்… என்ன பேசணும்?” என, “அம்மா பாவம் பா” என்றவன் ஆரம்பித்தான். “யாரு உங்க அம்மாவா?” என்றவர் ஏளனமாகக் கேட்க, “பின்ன பக்கத்து வீட்டு அம்மாவா?” என்று அவன் கோபமானான். “உங்க அம்மா ஊரேயே பாவம் ஆக்குவா? இவன் என்னவோ அவளைப் பாவங்குறான்” என்றவர் அலட்சியமாக வேறெங்கோ பார்த்தபடி சொல்லி, “இதை சொல்ல என் சப்பாத்தி வீடியோவை கெடுத்துட்டான்” என்று கடுப்பாக, “சப்பாத்தி வீடியோ… இப்ப ரொம்ப முக்கியமா?” என்றவன் பல்லைக் கடித்தான். “ஆமான்டா… எனக்கு சப்பாத்தியும் என் சப்ஸ்கரைபர்ஸும்தான் முக்கியம்” “அப்போ உங்களுக்கு அம்மா முக்கியம் இல்லையா?” “இல்ல… உங்க அம்மாவுக்குதான் நான் முக்கியம் இல்ல” அவரின் நேரடியான பதிலுக்கு அதிர்ச்சியானவன் இறங்கிய குரலில், “அப்பா ப்ளீஸ்… சீரியஸ்னஸ் புரியாம பேசாதீங்க… அம்மா இன்னைக்குப் பேசும் போதே ரொம்ப மனசொடைஞ்சு அழுதுட்டாங்க” என்றதும் நந்தா மகனை ஆழ்ந்து பார்த்தார். அவன் தொடர்ந்தான். “அவங்க ரொம்ப டிப்ரஸ்டா இருக்காங்க… எல்லா வேலையும் அவங்களே இழுத்து போட்டுட்டு செஞ்சுட்டு இருக்காங்க” “எல்லாத்தையும் இழுத்து போட்டுக்கிட்டது அவதானே… அப்ப அவதானே செஞ்சாகணும்” “என்ன ப்பா இப்படி பேசுறீங்க?” “வேறெப்படி பேச சொல்ற… நான் உங்க அம்மாகிட்ட சொன்னேன்… அவசர அவசரமா இந்தக் கல்யாணத்தை ஏற்பாடு பண்ணாதே… கொஞ்சம் பொறுமையா இருன்னு… உங்க அம்மா நான் சொல்றதைக் கேட்டாளா?  இல்லையே… ஏதோ ஊர்ல இல்லாத சம்பந்தம் கிடைச்ச மாதிரி அப்படியே ஆடிட்டு இருக்கா” என்றவர் கோபமாகப் பேச, “அப்போ உங்களுக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லையா?” என்று கேட்க, “இப்போ கேளுடா… விருப்பம் இருக்கா இல்லையான்னு” என்றவர் சொன்னதில் அவன் அதிர்ந்தான். “உனக்கு என் விருப்பம் எல்லாம் முக்கியமா என்ன? உனக்கு உங்க அம்மாதானே முக்கியம்” என்றதும் வெங்கட் தவிப்புடன், “ச்சே ச்சே நான் எப்பவுமே அப்படி நினைச்சது இல்லபா… உங்களுக்கு விருப்பம் இல்லன்னு எனக்கு தெரியாது” என்றான். “நீ தெரிஞ்சுக்க விரும்பல” என்றவர் சொல்ல அவன் தலையைத் தாழ்த்திக் கொண்டு, “தப்புதான் பா” என்றான். நந்தா மேலும், “அந்த வேதா குடும்பத்தைப் பார்த்தாலே எனக்கு பிடிக்கல… ஊரை அடிச்சு உலையில போடுறவனுங்க… புறம்போக்கு நிலத்தையெல்லாம் ஆட்டையைப் போட்டு ஸ்கூல் கட்டி வைச்சு இருக்கானுங்க… ஃபீஸ்ங்குற பேர்ல பகல் கொள்ளை அடிக்கிறானுங்க… அந்தப் பாவமெல்லாம் அவனுங்களை சும்மா விடுமா என்ன? இதுல நாம அவனுங்க கூட சம்பந்தம் பண்ணி நம்ம குடும்பத்துக்கு வேற அந்தப் பாவமெல்லாம் வந்து சேரணுமா?” என்று சீற்றத்துடன் கேட்க வெங்கட் வாயடைத்து நின்றான். வெங்கட் அப்படியொரு கோணத்தில் யோசிக்கவே இல்லை. அம்மாவின் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டுவிட்டால் பின் அவருடன் எப்படியாவது பேசி சமாதானம் செய்து தன் குடும்பத்தின் பிரிவினையைச் சரி செய்துவிடலாம் என்ற எண்ணத்தில்தான் அவன் இந்தத் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டதே! ஆனால் அதுவே இப்போது பிரச்சனையாகிவிடுமோ என்றவன் யோசனையில் ஆழ்ந்திருக்க நந்தா மகனைப் பார்த்து, “உங்க அம்மா வீம்புக்குனாலும் இதெல்லாம் செஞ்சிட்டு இருக்கா… செய்யட்டும்… அவ இஷ்டப்படியே எல்லாத்தையும் செய்யட்டும்… ஆனா எங்கயாவது அவ உன் வாழ்க்கையில ஏதாவது சொதப்பி வச்சான்னு மட்டும் வை… நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்… சொல்லிட்டேன்” என்று அவர் எச்சரிக்கையாகச் சொல்லிவிட்டு சென்றுவிட வெங்கட் அப்படியே தளர்ந்து அங்கிருந்து கல் மேடையில் அமர்ந்து கொண்டான். மனப் பிரச்சனைகளுடன் அவனைத் தேடி வந்த எத்தனையோ பேரை அவன் குணப்படுத்தி இருக்கிறான். அவர்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் சொல்லி இருக்கிறான். ஆனால் தன்னுடைய குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கே அவனால் இப்போது தீர்வைக் கண்டறிய முடியவில்லை. ரொம்பவும் குழப்பமாக இருந்தது. அதேநேரம் நடந்தவற்றை எல்லாம் வைத்து பார்க்கும் போது தன்னுடைய திருமண வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனை வந்துவிட்டால் அது தன்னுடைய அம்மா அப்பாவின் மண வாழ்க்கையையும் சேர்த்தே பாதித்துவிடும் என்பது மட்டும் அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா