மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Nijamo NizhaloNijamo Nizhalo - Episode 17Post ReplyPost Reply: Nijamo Nizhalo - Episode 17

Quote from monisha on June 6, 2023, 12:43 PM

17
பள்ளி கட்டிடங்கள் முழுக்க வெறிச்சோடி காணப்பட்டன. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு இன்று விடுப்பு தரப்பட்டிருந்தது. மற்ற மாணவர்கள் அனைவரும் அந்த பிரமாண்டான விளையாட்டு திடலில் திரண்டு இருந்தனர். ஒவ்வொரு வகுப்பு மாணவ மாணவிகளும் பல விதமான நிகழ்ச்சிகளுக்கு ஒத்திகை பார்த்து கொண்டிருந்தனர். பாராம்பரிய நடனங்களான ஒயிலாட்டம், மயிலாட்டம் மற்றும் சிலம்பாட்டம், மாஸ் டிரில், பிரமிடு டரில் போன்றவைக்கான ஒத்திகைகள் மற்றும் பயற்சிகள் மும்முரமாக நிகழ்ந்து கொண்டிருந்தன. மறுபுறம் பேஸ்கட் பால், புட் பால் போன்ற போட்டிகளின் இறுதி தேர்வுகள் நடந்தேறி கொண்டிருந்தன.  நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது, போட்டிகளை நடத்துவது, வெற்றியானவர்கள் பெயர்களை குறித்து கொள்வது என்று பெரும்பாலான ஆசிரியர்களும் அங்கேதான் குழுமியிருந்தனர்.  அந்த திடல் முழுக்க எங்கு பார்த்தாலும் மனித தலைகள். இது போன்ற போட்டிகள் நிகழ்ச்சிகளில் பங்கேற்காதவர்கள் எல்லாம் வாலன்டியராக அங்கே சுற்றி கொண்டிருந்தனர். அவர்களுள் பாவனாவும் ஒருத்தி. அவளுக்கு விளையாட்டு என்றாலே ஒவ்வாமைதான். ஆட்டம் பாட்டம் என்றால் முதல் ஆளாக இறங்கிவிடுவாள். ஆனால் அவள் நேரம். பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு நடன நிகழ்ச்சிகள் எதுவும் வழங்கப்படவில்லை. அவள் ஏற்கனவே அந்த கடுப்பில் இருந்தாள். இதில் வாலன்டியர் பேஜ்ஜை வேறு கொடுத்து கொளுத்தும் வெயிலில் நிறுத்திவிட்டார்கள். ஒரு நிலைக்கு மேல் பொறுமை இழந்தவள், “என்னால இதுக்கு மேல இங்கே நிற்க முடியாதுபா… நான் கிளேஸுக்கு போறேன்” என்று புறப்பட, அவளுடன் இருந்த இரு தோழிகளில் ஒருத்தி, “நம்ம கிளேஸ் பக்கம் போறதை டீச்சர்ஸ் பார்த்தா அவ்வளவுதான்” என்று எச்சிரிக்கை செய்ய, “அதெல்லாம் யாரும் பார்க்க மாட்டாங்க… எல்லாம் அவங்க அவங்க வேலையில பிஸியா இருக்காங்க… நம்ம போலாம்” என்றாள் பாவனா. “இல்ல பாவனா… மாட்டினோம் செத்தோம்” என்று ஒருத்தி பயபக்தியுடன் கூற, “ஆமான்டி” என்றாள் இன்னொருத்தி. “நீங்க வந்தா வாங்க… வராட்டி போங்க… என்னால இதுக்கு மேல வெயில நிற்க முடியாதுபா” என்று சொல்லிவிட்டு பாவனா முன்னே செல்ல, “இரு இரு நாங்களும் வரோம்” என்று அந்த இரு தோழிகளும் அவள் பின்னோடு ஓடினர். “எங்க அண்ணன் வீட்டுல இன்னைக்கு பந்தக்கால் நடுறாங்க… நான் பேசாம அங்கே போயிருக்கலாம்… இந்த அம்மாதான்… கல்யாணத்துக்கு எப்படி இருந்தாலும் லீவ் போட போறோம்… இதுக்கும் போட்டா… அட்டென்டஸ் போயிடும்னு என்னை அனுப்பி விட்டாங்க… இங்கே வந்தா வெயில வத்தல் மாதிரி காய வைக்கிறாங்க” என்றவள் தோழிகளிடம் புலம்பி தீர்த்து கொண்டே தன் வகுப்பிற்குள் நுழைந்தாள். ஏற்கனவே அவள் வகுப்பு மாணவர்கள் இருவர் ஒய்யாரமாக பெஞ்சில் படுத்திருந்தனர். “என்ன இரண்டு பேரும் இங்கே படுத்திருக்காங்க… உங்களுக்கு ஒன்னும் வேலை இல்லயா?” என்று பாவனா அவர்களை பார்த்து கேட்க, “நீங்க ஏன் இங்கே வந்தீங்க… உங்களுக்கு ஒன்னும் வேலை இல்லையா?” என்ற அவ்விருவர்களில் உயரமானவன் அவளை திருப்பி கேட்டான். “நாங்க மூணு பேரும் தண்ணி குடிக்க வந்தோம்” என்று பாவனா பதில் சொல்ல,  “நாங்க ரெஸ்ட் எடுக்க வந்தோம்” என்றவன் பதிலுக்கு கூறினான். “பாருங்கடி… இதுதான் ரெஸ்ட் எடுத்து டயர்டாகி ரெஸ்ட் எடுக்கிறது” என்று பாவனா அவர்களை கிண்டல் செய்ய, அந்த இரு தோழிகளும் பக்கென்று சிரித்துவிட்டனர்.  “கலாய்சசிட்டாங்களாமாம்… ஐயோ ஐயோ” என்று அந்த உயரமானவன் பதிலுக்கு இவர்களை பார்த்து இளக்காரமாக சிரித்தான். “பாவனா… அவனுங்க கிட்ட வேண்டாம்” என்று தோழி ஒருத்தி சொல்ல மூவரும் அமைதியாக தங்கள் இருக்கைக்கு வந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து போட்டி போட்டு குடித்து முடித்தனர். அதன் பின் பாவனா தன் கைகள் இரண்டையும் பார்த்து, “வெயில நின்னு எப்படி கருப்பாகிடுச்சு பாரேன்” என்று வருத்தப்பட, அது அந்த மாணவர்கள் காதில் விழுந்துவிட்டது. “பாவம்! வெயில நின்னதுல அடிச்ச பெயின்ட் எல்லாம் உருகி ஊத்திருச்சு போல” என்று அந்த உயராமானவன் நக்கல் செய்ய, பாவனா சீற்றமானாள். “யாருடா பெயின்ட் அடிச்சிட்டு இருக்கா” என்றவள் அவனிடம் எகிற, “வேறு யாரு நீதான்” என்றவன் பதில் கொடுக்க, “வேண்டாம் பாவனா… அவனுங்ககிட்ட சண்டைக்கு போகாதே” என்று தோழி ஒருத்தி அறிவுரை கூற, மற்றவளும் ஆமோதித்தாள். ஆனால் பாவனா அடங்குவதாக இல்லை. “ஒரு வேலையும் செய்யாம பெஞ்சில உருண்டிட்டு இருக்க… நீயெல்லாம் என்னை கிண்டல் பண்ற” என்று பாவனா அவனுக்கு திருப்பி கொடுக்க, “ஏய்… உனக்கு என்ன தெரியும்… நான் எத்தனை காம்பிட்டீஷ்ன்ல ப்ரைஸ் வாங்கி இருக்கேன் தெரியுமா?” என்றவன் பெருமையடித்தான். “கிழிச்ச… உன்னை பத்தி தெரியாது எனக்கு… ப்ரெக்டடிக்கல் கிளேஸ்ல நீதான் பேயை பார்த்து பயந்து மயக்கம் போட்டு விழுந்தவன்” என்றாள். அது முந்தைய வருடம் நடந்த சம்பவம். அவள் வந்த புதிதில் அவளிடம் இது பற்றி சில மாணவிகள் சொல்லி சிரித்தனர். அவள் அந்த விஷயத்தை அங்கே போட்டுவிட. அவன் முகம் கனலாக எறிய, அவள் பேசி பேசி இன்னும் கொஞ்சம் அதில் எண்ணெய்யை ஊற்றிவிட்டாள். “இதுக்கு பேர்தான் பாடி ஸ்ட்ராங் பேஸ்மென்ட் வீக்குன்னு சொல்வாங்க” என்றவள் நக்கலடிக்க, “ரொம்ப பேசாதே… பேயை பார்த்தா நீ பயப்பட மாட்டியா?” என்றவன் பதிலுக்கு கேட்க, “பேய்னு ஒன்னு இருந்தாதான் நான் அதை பார்த்து பயப்பட” என்றவள் அலட்சியமாக கூற, “அங்கே பேய் இல்லன்னு யார் சொன்னது உனக்கு” என்று கேட்டான் அவன். “நான் சொல்றேன்… அங்கே பேய் இல்ல” என்றாள் பாவனா. “அப்படியா… அப்போ அந்த வீட்டுக்குள்ள போயிட்டு வா… அப்புறம் நான் நம்புறேன்… அங்கே பேய் இல்லன்னு” என்றவர்கள் வாதம் இப்படி ஆபத்தான வகையில் வளர்ந்து கொண்டே போனது. “பாவனா நீ கொஞ்ச நேரம் சும்மா இரு” என்று அவள் தோழிகள் இருவரும் அடக்க அவனோ கிண்டலாக, “இதுக்கு பேர்தான் பாடி ஸ்ட்றாங்… பேஸ்மென்டு வீக்குன்னு சொல்வாங்க” என்று அவளை போலவே நக்கலடித்து சிரித்தான். “யாருக்குடா பேஸ்மென்ட் வீக்… எனக்கா உனக்கா? நான் அந்த வீட்டுக்குள்ள போக ரெடி… என்ன பெட்டு?” என்று கேட்டாள். தோழிகள் இருவரும் ஷாக்கடித்தது போல நின்றுவிட்டனர். அந்த மாணவர்கள் இருவர் முகத்திலும் கூட ஈயாடவில்லை. பாவனாவின் தோழிகளோ, “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் பாவனா… வா ஒழுங்கா கீழே போயிடலாம்” என்றார்கள். பாவனா கேட்பதாக இல்லை. தன்னை கிண்டல் செய்த உயராமானவனிடம் சொடுக்கிட்டு, “என்ன ஸ்டர்னாகி நிற்குற… டெவில் ஹவுஸ்க்கு நான் தனியா போய் காட்டினா நீ என்ன பண்ணுவ?” என்று கேட்க அவளை மேலும் கீழுமாக பார்த்து, “முதல நீ போய் காட்டு” என்றான். “போறேன்… இப்பவே போய் காட்டுறேன்… நான் அப்படி போயிட்டு பயப்படாம திரும்பி வந்துட்டா… என் மேக்ஸ் அசைன்மென்ட்டை நீ எழுதி தர்ற” என்று அவள் சவாலாக கூற அவன் முகம் யோசனையாக மாறியது. அருகிலிருந்த பாவனாவின் தோழி, “மேக்ஸ் அசைன்மென்ட் முடிச்சிட்டேன்னு சொன்ன… அப்போ அது பொய்யா?” என்று சம்பந்தமே இல்லாமல் அதிர்ச்சியானாள். “ஆமா… பொய்தான்… இப்ப அதுக்கு என்னங்குற” என்று பாவனா அவளை முறைக்க, “அடிப்பாவி” என்று அவள் தோழிகள் அதிர இடையில் அந்த உயரமானவன், “சரி எழுதி கொடுக்கிறேன்” என்று சம்மதம் சொல்லி தொலைத்துவிட்டான். அங்கே ஆரம்பித்தது முதல் பிரச்சனை. ரொம்ப நாட்களாகவே அந்த வீட்டிற்குள் சென்று பார்த்துவிட வேண்டுமென்று பாவனாவுக்குள் ஒரு எண்ணம். அவள் மனதில் எண்ணியிருந்த விஷயம் இன்று வார்த்தையாக வந்துவிட்டது. ஆனால் எத்தனை பெரிய ஆபத்தில் தான் சிக்க போகிறோம். அதனால் என்னவெல்லாம் பிரச்சனை உருவாக காத்திருக்கிறது என்பதை அவள் அறிந்திருக்கவில்லை. பாவனாவின் தோழிகள் எவ்வளவோ சொல்லியும் அவள் கேட்கவில்லை. டெவில் பிளாக்கின் பின்புறம்தான் அந்த எறிந்த வீடு இருந்தது. உள்ளே யாரும் சென்றதில்லை. சென்றவர்கள் யாரும் திரும்பியதும் இல்லை. இது வதந்தியா உண்மையா என்று யாரும் உள்ளே சென்று சோதித்து பார்த்ததுமில்லை. ஆனால் பாவனாவின் அசட்டு தைரியமும் கொஞ்சம் ஆர்வகோளாறும் அப்படியொரு காரியத்தை சோதனையை செய்ய வைத்தது. ஆசிரியர்கள் காவலர்கள் என்று எல்லோரும் மும்முரமாக ஸ்போர்ட்ஸ் டே ஆயத்த பணிகளில் இருந்தனர். ஆதலால் யாரும் அந்த பக்கமாக வரவில்லை. பாவனாவிற்கு அது இன்னும் வசதியாக போனது. அவளுக்கு அந்த வீட்டிற்கு செல்ல எந்த இடையூறும் இல்லை. ஆனால் அவளின் தோழிகள்தான், “இந்த மாதிரி ரிஸ்க் எல்லாம் தேவையா? ஏதாவது பிரச்சனை வந்துடுச்சுனா… வேண்டாம் பாவனா” என்று தடுத்து பார்த்தனர். அவள் கேட்பதாக இல்லை. அந்த மாணவர்கள் இவள் வேலி தாண்டி செல்வதை வியப்பாக பார்த்திருந்தனர். உடன் இருந்தவன், “நீயே எந்த அசைன்மென்டும் எழுத மாட்ட… இவ உன்னையே எழுத வைச்சிடுவா போல” என்று உரைக்க, “அவ முதல போயிட்டு திரும்பி வரட்டும் அப்புறம் பார்க்கலாம்” என்ற அந்த உயராமானவன் கூறினான். ஆனால் அவள் தைரியமாக செல்வதை பார்த்து உள்ளுர அவனுக்கே பயமாகத்தான் இருந்தது. ஒரு வேளை அவள் போய் விட்டு திரும்பி வந்துவிட்டால் என்ற கவலையும் கூட இருந்தது.  ஆனால் பாவனாவிடம் சிறுதும் பயமும் தயக்கமும் இல்லை. பாழடைந்த கட்டிடம், வெளிப்புறத்திலிருக்கும் அடர்ந்த கரிய நிறம், பாதி இடிந்திருந்த சில பகுதிகள் என பேய் வீட்டிற்கு உரித்தான அனைத்து தகுதிகளும் அந்த வீட்டிற்கு இருந்தது. சமீபமாக அவள் தேடி தேடி பார்த்த பேய் படங்கள் படித்த பேய் கதைகள் எல்லாவற்றிலும் பொதுவாக ஒரு விஷயம் இருந்தது. பெரும்பாலும் பேய் வீட்டிற்குள் செல்பவன்தான் பேயை கட்டவிழ்த்து விடுவது போல… ஆனால் பாவனாவிற்கு அதில் எல்லாம் சுத்தமாக நம்பிக்கை இல்லை. எனினும் அப்படி என்னதான் உள்ளே இருக்கும் என்ற ஆர்வமிகுதி.  பாவனா உறுதியாக அங்கே பேய் இல்லை என்று நம்பினாள். எனினும் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க வைக்க அவளுக்கும் உள்ளுர தடதடத்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவள் மனதை பயம் ஆக்கிரமித்தது. “பயப்பட கூடாது பயப்பட கூடாது… இங்கே பேயும் இல்ல… ஒன்னும் இல்ல” என்றவள் தனக்கு தானே சொல்லி கொண்டே நடந்தாள். அந்த வீட்டின் பாழடைந்த வாயிற்கதவை பார்க்கும் போது அவள் தொண்டை குழி அடைத்து கொண்டது.  இதயம் படபடவென அடித்து கொள்ள, “ஓவரா சீன் போட்டோம்… இனிமே திரும்பி போனா கலாய்ச்சு தள்ளிடுவானுங்க… எப்படியாச்சும் உள்ளே போயிட்டு வந்துடணும்” என்று மனஉறுதியுடன் மெல்ல உள்ளே எட்டி பார்த்தாள். அவள் கண்களுக்கு பயப்படும்படியான ஒன்றும் தெரியவில்லை. எச்சிலை விழுங்கி கொண்டவள் மெல்ல உள்ளே காலடி எடுத்து வைத்தாள். தும்பும் தூசுமாக இருந்த போதும் அவள் எதிர்பார்த்தளவுக்கு அல்லது சினிமாக்களில் காட்டியவளுக்கு ராட்சத சிலந்தி கூடுகள் எல்லாம் எதுவும் இல்லை. ஆனால் உள்ளே வந்ததும் ஒரு சில முறைகள் ஹச் ஹச் என்று தொடரந்து தும்பினாள். அவள் தும்மல் சத்தம் அங்கே கொஞ்சம் பயங்கரமாகவே எதிரொலித்தது. தன் பேக்கட்டிலிருந்த கைக்குட்டையால் வாயை பொத்தி கொண்டு இன்னும் கொஞ்சம் உள்ளே சென்றாள். அவள் மனதிலிருந்த பயம் இப்போது நீங்கிவிட்டது.  அந்த நொடி அவள் மனதில் ஒரு எண்ணம். ‘கொஞ்சம் கூட பேய் வீட்டுக்குள்ள போற எபெக்ட் வரலையே… படத்துல வர மாதிரி இந்த சீனுக்கு பேக் கிரவுண்ட் மியுசிக் கொடுத்திருந்தா எப்படி இருந்திருக்கும்’ என்று தானாக ஒரு கற்பனையை செய்து கொண்டாள். அவளுக்கு சிரிப்புதான் வந்தது. ‘மியுசிக் போட்டே நெஞ்சு வலி வர வைச்சுடுவாங்க… கடைசில பேயும் இருக்காது… ஒன்னும் இருக்காது’ என்று எண்ணி புன்னகைத்து கொண்டாள். அப்போது சரசரவென்று ஒரு சத்தம். அவள் இதயம் நின்றுவிட்டது. அவள் கண்முன்னே ஏதோ அவசர கெதியில் ஓடியது. உற்று பார்த்தவள் மூச்சை இழுத்து விட்டவள், “சை ஓணானா… அது நம்மல பார்த்து பயந்து ஓடுது… நம்ம அதை பார்த்து பயப்படுறோம்… இருந்தாலும் இந்த சீன்ல ஒரு கறுப்பு பூனை ஓடியிருந்தா எபெக்டிவா இருந்திருக்கும்” என்று தனக்கு தானே பேசி கொண்டே ஒரு முறை சுற்றும் முற்றும் பார்த்தாள். அவள் எதிர்பார்த்த அளவுக்கு அங்கே எதுவும் சுவாரசியமாக இல்லை. அழுக்கும் தூசும் தும்பும் தவிர அங்கே உறுப்படியாக சொல்லி கொள்ளுமளவுக்கு ஒன்றும் இல்லை. “இந்த பேய் படத்துல மட்டும் பேய் வீட்டை பர்னிஷ்டா காட்டுறாங்க… ஒரு பழைய சோபா, ப்ளேக் அன் ஒயிட் போட்டோ, பெரிய மான் தலை… நிஜத்துல அப்படி ஒன்னும் இல்ல… உள்ளே வந்ததே வேஸ்ட்… இங்கே பேய் இருக்கிறதுக்கான ஒரு அறிகுறி கூட இல்லை… எதுவும் உருப்படியா கிடைக்கவும் இல்ல… சரி திரும்பி போவோம்… அந்த நெட்டையனை இன்னைக்கு வைச்சு செய்வோம்” என்று சொல்லி கொண்டே அவள் வெளியே போக எத்தனித்த போது, ‘டம்’ என்று உள்ளிருந்து ஏதோ உருண்ட சத்தம். அந்த சத்தம் அந்த வீட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளில் எல்லாம் பயங்கரமாக எதிரொலித்ததில் அவள் மூச்சே நின்றுவிட்டது. பாவனா அப்படியே நெஞ்சில் கை வைத்து கொண்டாள். பந்தய குதிரை போல அவள் இதயம் துடிக்க, “திரும்பி பார்க்காம ஓடிடுவோம்” என்று எண்ணத்துடன் வாசல் வரை சென்றவள், அப்படியே தேங்கி நின்றாள். “பயந்து ஓடினோம்னா அந்த பயத்தோடவே இருப்போம்… இங்கேதான் பேய் இல்லையே… அப்புறம் என்ன விழுந்திருக்கும்” இந்த யோசனை வந்த மறுகணம் திரும்பி அந்த வீட்டை சுற்றிலும் பார்த்தாள். வலது புறத்திலிருந்த அறையில்தான் ஏதோ விழுந்த சத்தம் கேட்டதாக அவளுக்கு தோன்றியது. மெல்ல அந்த அறைக்கு சென்று எட்டி பார்த்தாள். எதிரே பார்த்த காட்சியில் அவள் உச்சபட்ச பயத்துடன், “ஆஆஆஆஆ” என்ற பயங்கரமாக அலறினாள். அவள் கால்கள் ஓட்டமெடுக்க தயாராக இருந்த நிலையில் ஏதோ ஒரு கரிய உருவம் அவளை அந்த அறைக்குள் இழுத்து கொண்டது. அந்த வீடு மீண்டும் நிசப்தமானது.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா