மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Nijamo NizhaloNijamo Nizhalo - Episode 22Post ReplyPost Reply: Nijamo Nizhalo - Episode 22

Quote from monisha on June 22, 2023, 10:24 AM

22
அந்த பாழடைந்த வீட்டை பயங்கரமான இருள் சூழ்ந்திருந்தது. நிர்சலனமான அந்த மாய இருள் அவ்விடத்தையே மிரட்டியது.  எங்கிருந்தோ ஒரு ஓணான் அந்த வீட்டிற்குள் ஓடி வந்து குதித்தது. அழுக்கும் தூசியமான அவ்விடத்தை சுற்றி சுற்றி அது ஓடி கொண்டிருக்கும் போதே ஒன்று பத்தாக… பத்து நூறாக என்று பெருகி பெருகி அவ்வீட்டை மொத்தமாக ஆக்கிரமித்து கொண்டது.  திடீரென்று இரத்தம் சிதறிய நிலையில் அங்கே ஒரு மனித உடல். அந்த ஓணான்கள் அனைத்தும் அந்த தேகத்தின் மீதேறி கொண்டு அதன் ரத்தத்தை ருசி பார்க்கக் தொடங்கியது போன்ற கோர காட்சி… அதற்கு மேல் அந்த குரூரமான காட்சியை காண முடியாமல் அருவருப்பும் பயமுமாக, “அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா” என்று பாவனா அலறி துடித்து எழுந்தாள். சித்ரா பதட்டத்துடன், “என்னடா என்னாச்சு?” என்று மகளின் தலையை வருடி கொடுக்க, அவள் பயம் நீங்கியதாக தெரியவில்லை.  அவள் அசையாமல் எங்கோ வெறித்து பார்த்து கொண்டிருந்தாள். அவள் கண்களில் ஒருவிதமான மரண பயம். “பாவனா” என்று சித்ரா மகளின் தோள்களை உலுக்கவும்தான் அவள் கொஞ்சம் இயல்பு நிலைக்கு மீண்டு வந்தாள். அவள் தன் பார்வையை சுழல விட்டு கொண்டே, “நான் எங்கே இருக்கேன்?” என்று கேட்க, “ஹம்ம் வாஷிங்டன் டிசி… வெள்ளை மாளிகைல இருக்க… உன்னை அமேரிக்கா பிரெஸிடென்டா பதவி ஏத்துக்க சொல்லி கூப்பிட்டுருக்காங்க” என்று கபில் நக்கலடிக்க, “ஏன் டா நீ வேற… அவளே எதையோ பார்த்து பயந்திருக்கா” என்றாள் சித்ரா. “யாரு அவ பயந்திருப்பாளா… அவ ஊரையே பயம் காட்டுவா… நம்மெல்லாம் நிம்மதியா தூங்கிட்டு இருந்தது அவளுக்கு பொறுக்கல… அதான் வேணும்டே கத்தி நம்மள எழுப்பி விட்டிருக்கா” என்றவன் தூக்கம் களைந்துவிட்ட கடுப்பில் பாவனாவை முறைத்து கொண்டே பேச, அவள் அவன் பேச்சையெல்லாம் பொருட்படுத்தவில்லை. அவள் எண்ணங்களில் மீண்டும் அந்த இரத்தம் சிதறிய மனித உடலும்… அந்த ரத்தத்தை ருசி பார்த்த ஓணான் கூட்டமும்தான் தெரிந்தது.  “ஏதோ கனவு கண்டுதான் பயந்திருக்கா அத்தை… நான் போய் குடிக்க தண்ணி எடுத்துட்டு வரேன்” என்று லல்லி எழுந்து சென்றாள். கபில் தன் கைபேசி எடுத்து நேரம் பார்த்துவிட்டு, “என்ன சித்தி… அம்மா இன்னும் ஃபோன் பண்ணல… எப்போ மண்டபத்துல இருந்து வருவாங்க” என்று கேட்க, “முதல் முதலா பொண்ணை வீட்டுக்கு அழைச்சிட்டு வராங்க… நல்ல நேரத்து பார்த்துதானே வரணும்… அதனால டைம் பார்த்துதான் கிளம்பி இருப்பாங்க” என்றாள் சித்ரா.  இவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே லல்லி தண்ணீர் எடுத்து வந்து பாவனாவிடம் கொடுக்க, அவள் மொத்த தண்ணீரையும் ஒரே மடக்கில் குடித்துவிட்டாள். “குழந்தை உண்மையிலேயே எதையோ பார்த்து பயந்திருக்கா… ஏதோ காத்து கருப்பு அடிச்ச மாதிரி அப்பப்ப இப்படிதான் பயந்து பயந்து அலறா… பேசாம ஏதாவது கோவிலுக்கு கூட்டிட்டு போய் மந்திருச்சிட்டு வந்திரணும்” என்று சித்ரா கவலையுடன் சொன்னதை கேட்ட கபில் சத்தமாக சிரித்துவிட்டு, “சான்ஸே இல்ல சித்தி… இவளை காத்து கருப்பெல்லாம் அடிக்காது… இவ வேணா காத்து கருப்பை அடிச்சிருப்பா” என்று எள்ளல் செய்தாள். “போடா டேய்… சும்மா குழந்தையை கலாய்ச்சிட்டு… போய் முதல மாப்பிளை பொண்ணை அழைச்சிட்டு எப்போ வராங்கன்னு ஃபோன் போட்டு கேளு” என்று சித்ரா அவனை விரட்டிவிட, அவன் தன் கைபேசியை எடுத்து கொண்டு வெளியே வரவும் கார் ஹாரன் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது. “சித்தி… வந்துட்டாங்க வந்துட்டாங்க… கார் வந்துடுச்சு” என்றவன்கத்தி கொண்டே வாயிற் கேட்டை திறக்க ஓட,  “இதோ ஆரத்தி தட்டு ரெடி பண்றேன்” என்று சித்ரா பரபரப்பாக உள்ளே ஓடினாள். இந்த பரபரப்பிலும் தூங்குவேன் என்று ஒரு ஜீவன் சோபாவில் சாய்ந்து குறட்டைவிட்டு உறங்கி கொண்டிருந்தது. “அப்பா எழுந்திருங்க… அவங்க வந்துட்டாங்க” என்று பாவனா தந்தையை உலுக்க, “கல்யாணம் முடிஞ்சிருச்சா… எனக்கு அட்சதை” என்று ஜெயந்தன் பரபரப்பாக ஆசீர்வாதம் செய்ய எழுந்து கொண்டார். “ஐயோ அப்பா… கல்யாணம் முடிஞ்சு அவங்க வீட்டுக்கே வந்தாச்சு” என்று பாவனா அவரை மீண்டும் இரண்டு முறை உலுக்கி தெளியவைத்தாள். இதற்கிடையில் சித்ரா ஆரத்தியை கரைத்து எடுத்து கொண்டு, “லல்லி வத்திபெட்டி கிடைக்கல… அக்கா லேட்டான டென்ஷனாகிடுவா” என்றதும், “இதோ இதோ” என்று லலிதா வத்திபெட்டியை எடுத்து கொண்டு அவள் பின்னே ஓடினாள். மணமக்களை வாயில் கேட்டிலேயே நிறுத்தி வைத்த மல்லி, “ஒரு ஆரத்தி கரைச்சிட்டு வர இவ்வளவு நேரமா? இதெல்லாம் முன்னாடியே ரெடி பண்ணி வைக்க சொல்லித்தானே உங்களை வீட்டுக்கு சீக்கிரம் அனுப்பினேன்” என்று கடுகடுக்க ஆரம்பித்துவிட்டாள். “ரெடி பண்ணிதான் வைச்சு இருந்தோம் க்கா” என்ற தங்கையின் சமாளிப்பை கேட்டு கொண்டே தட்டை வாங்கி கொண்டு ஆரத்தி எடுக்க எத்தனிக்க, ஸ்ரீயோ வெங்கட்டை விட்டு ஓரடி தள்ளி நின்று கொண்டிருந்தாள். “ஒண்ணா நில்லுங்க… ஆரத்தி சுத்தணும்” என்றதும் வெங்கட் அவள் அருகில் நிற்க, ஸ்ரீ விலகி வந்தாள்.  எல்லோரும் அவளை விசித்திரமாக பார்க்க, “ஸ்ரீ வெங்கட் பக்கத்துல நில்லு” என்றார் மல்லி. “ஏன்… இப்படி நின்னா சுத்த மாட்டீங்களா?” என்றவள் வெடுக்கென கேட்டுவிட, மல்லி அதிர்ந்து விழித்தார். “ஸ்ரீ” என்று வெங்கட் அழைக்க, “என்ன?” என்பது போல அவள் அவனையும் ஒரு திமிர் பார்வை பார்க்க, அவனுக்குமே அந்த நொடி என்ன பேசுவதென்று புரியவில்லை. அதுவும் மல்லியை யாரும் எதிர்த்து ஒரு வார்த்தை பேச மாட்டார்கள். பேசவும் கூடாது. ஆனால் ஸ்ரீ வந்த ஒரே நொடியில் இப்படி எடுத்தெறிந்து பேசியது…. அதுவும் மற்ற மருமகள்கள் முன்பாக… அவர் ரொம்பவும் அவமானமாக உணர்ந்தார். இதில் ஒரே நல்ல விஷயம். நந்தா இன்னும் மண்டபத்திலிருந்து வரவில்லை. அவர் இருந்திருந்தால், ‘இதுதான் நீ பார்த்து பார்த்து தேடி பிடித்த மருமகளின் இலட்சணமா’ என்று ஒட்டி எடுத்திருப்பார். இவ்வறாக மல்லி குழம்பியபடி ஆரத்தி எடுக்காமல் யோசித்திருக்க சித்ராதான் பின்னிருந்து, “அக்கா மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்… ஆரத்தி சுத்துங்க” என்றாள். மல்லி ஒருவாறு இயல்பு நிலைக்கு மீண்டு மணமக்களுக்கு ஆர்த்தி சுற்றிவிட்டு அவர்களை உள்ளே அழைத்துவிட்டு சென்றார். வெங்கட்டோ, ‘இவளுக்கு என்னவானது’ என்று புரியாமல் பார்க்க அவளோ யார் பார்வையையும் கண்டும் காணாமல் உள்ளே நடந்தாள். மண்டபத்திலிருந்து கிளம்பும் போதே திலகா மகளிடம், “மல்லி என்ன சொன்னாலும் வெங்கட் கேட்பான்… அப்படியொரு அம்மா பாசம்… நீ மல்லி கிட்ட மரியாதையா நடந்துக்கணும்” என்று அறிவுறுத்தியிருந்ததை எல்லாம் ஸ்ரீ வேறு மாதிரி எடுத்து கொண்டாள். மல்லியை மதிக்காமல் நடந்து கொண்டால் வெங்கட் தன் மீது கோபப்படுவான். அப்படியே இந்த திருமண உறவை முறித்து கொள்ளலாம் என்று மல்லிக்கே வில்லியாக இவள் விவகாரமாக திட்டம் தீட்டிய அதேநேரம் இவளை பார்த்ததும் வெறியோடு பழிதீர்க்க வேறொரு ஜீவன் திட்டமிட்டிருந்தது. அது வேறு யாரும் இல்லை. டைகர்தான். ஸ்ரீ உள்ளே அடி எடுத்து வைக்கவும் அவளை அடையாளம் கண்டு கொண்ட டைகர் படுபயங்கரமாக குறைத்து கொண்டு அவள் மீது பாய வந்தது. ஸ்ரீ பயந்து நடுங்கி வெங்கட்டின் தோளில் அபாயமாக ஒண்டி கொள்ள, டைகரின் கெட்ட நேரமோ அல்லது ஸ்ரீயின் நல்ல நேரமோ? அது கயிற்றில் பிணைக்கப்பட்டிருந்ததில் அவளை கடித்து குதறும் வாய்ப்பு மிஸ்ஸாகிவிட்டது. அவள் மீது எந்தளவு அது கொலைவெறியில் இருந்தது என்று அது தன் கோர பற்களுடன் கயிற்றை இழுத்து கொண்டு எகிறிய விதத்திலேயே தெரிந்தது. ஸ்ரீ நடுங்கி நிற்க வெங்கட் குரலை உயரத்தி, “டைகர் கோ பேக்…” என்றான். அந்த ஒரே குரலில் டைகர் அடங்கி கப்சிப்பென்று ஆகிவிட்டான். ஆனால் அப்போதும் கூட டைகரின் கோபம் தணிந்ததாக தெரியவில்லை. ஒரு வித வஞ்சமான உறுமலுடன் அது அவளை பார்த்து வைத்தது. “டைகர் ஷட் அப்… சிட் டவுன்” என்று வெங்கட் ஆணையிட அது மெல்ல தன் தோல்வியை ஒத்து கொண்டது போல பணிந்துவிட்டது.  ஸ்ரீக்கு அப்போதுதான் மூச்சே வந்தது. அதேநேரம் நடந்த காட்சியெல்லாம் பார்த்த லல்லி நக்கல் சிரிப்புடன், “ஒண்ணா நில்லுன்னு சொன்னதுக்கு அந்த பிகு பண்ணிக்கிட்ட… இப்போ என்ன? அப்படியே ஓட்டிட்டு நிற்குற” என்று கிண்டலடித்துவிட்டு செல்ல, ஸ்ரீக்கு அப்போதே நடந்த கலவரத்தின் நிலவரம் புரிந்தது. அவள் பட்டென்று அவனை விட்டு விலகி வர, அவன் உதடுகள் ஏளனமாக வளைந்தன. சற்று முன்பு அவள் செய்த அவமானத்திற்கான பதிலோ அவனது அந்த புன்னகை. அவளுக்கு கோபமேறியது. “வெறி பிடிச்ச நாயை வீட்டுல வளர்த்து… இப்படிதான் வரவங்க போறவங்களை எல்லாம் கடிக்க விடுவீங்களா?” என்று அவள் அவனிடம் எகிறினாள். “யாருக்கு வெறி பிடிச்சிருக்கு… டைகர் இதுவரைக்கும் யாரையும் கடிச்சதில்லை… ஏன் புதுசா வரவங்ககிட்ட கூட இப்படியெல்லாம் நடந்துக்க மாட்டான்… அவ்வளவு குட் பாய்… ஆனா அன்னைக்கு நீ செஞ்ச வேலைக்கு அவன் இப்போ கட்டி இல்லனா” என்றவன் பார்த்த பார்வையில் அவளுக்கு பக்கென்றானது. ‘என்ன செஞ்சான்னு தெரியலேயே’ என்று யோசித்தவள் மெல்ல, “அப்படி என்ன நான் தப்பு செஞ்சுட்டேன்” என்று போட்டு வாங்க, “தப்பா என்ன செஞ்சியா?” என்று ஆரம்பித்தவன் அவள் சுவரேறி குதித்த கதையெல்லாம் சொல்ல அவளுக்கு தலையிலடித்து கொள்ளலாம் போலிருந்தது. ‘என்னை வைச்சு காமெடி பண்ணி வைச்சு இருக்காளே… பாவி’ என்று அவள் மனதிற்குள் பொறும, “நீ செஞ்ச வேலைக்கு டைகர் உன் மேல பாயாம என்ன பண்ணுவானாம்” என்றான் வெங்கட் கடுப்புடன். ‘நான் என்னத்த செஞ்சேன்… அவதானே என்னை வைச்சு செஞ்சுட்டு போயிருக்கா’ அவள் மனதில் பொறுமி கொள்ள,  வெங்கட் மேலும், “நல்ல வேளை கட்டி வைச்சு இருந்ததால நீ தப்பிச்ச… இல்ல… அவன் இருந்த கோபத்துக்கு உன்னை பிரியாணி போட்டிருப்பான்” என்று சொல்ல, அந்த காட்சியை எண்ணும் போதே அவள் தொண்டைக்கும் வயிற்றுக்கும் இடையில் ஏதோ உருளையாக உருண்டது. ‘கிராதகி… இன்னும் என்னவெல்லாம் செய்து வைத்திருக்கிறாளோ’ என்ற கவலையுடன் அவள் வீட்டிற்குள் சென்றாள். அதன் பிறகு விளக்கேற்றுவது மணமக்களுக்கு பால் பழம் கொடுப்பது என்ற வழக்கமான சடங்குகள் முடிய, மல்லி ஸ்ரீயை தனியாக பேச வேண்டும் என்று அறைக்குள் அழைத்து சென்றார். “இனிமே இது உன் வீடுமா… நீ இங்கே உன் விருப்பம் போல உனக்கு பிடிச்ச மாதிரி இருக்கலாம்… உனக்கு என்ன மனசு கஷ்டம் வந்தாலும் நீ உங்க அம்மா மாதிரி நினைச்சு என்கிட்ட பேசலாம் இப்ப கூட உன் மனசுல ஏதாச்சும் வருத்தம் சங்கடம் இருந்தால் என்கிட்ட சொல்லு” என்றவர் மருமகளுக்கு மனத்தாங்கல் எதுவும் இருந்தால் தெரிந்து கொள்ளும் நோக்கில் இலகுவாக பேசினார். “எதுவானாலும் சொல்லலமா மேடம்?” என்றவள் சட்டென்று உதட்டை கடித்து கொண்டு, “சாரி இப்போ… நீங்க எனக்கு மேடம் இல்ல… என் மாமியார்… அப்படிதானே?” என்று கேட்க, அவருக்கு ஏனோ அவள் பேச்சு தொனியில் ஒருவித அலட்சியமும் அவமதிப்பும் இருப்பதாக தோன்றியது. “நீ என்னை… அத்தை ஆன்டி… எப்படி உனக்கு விருப்பமோ அப்படி கூப்பிடலாம்… அதே போல உனக்கு என்னை தோணுதோ அதை வெளிப்படையா சொல்லலாம்” “ஒகே அத்தை” என்றவள் மேலும், “இனிமே இது என் வீடுன்னு சொன்னீங்க இல்ல… அதெல்லாம் சும்மா பேச்சுக்குன்னு எனக்கு தெரியும்… அப்படியெல்லாம் இருக்க முடியாது… என்னதான் இருந்தாலும் இது உங்க வீடுதான்… என் வீடாகாது” என்று கூற, “ஸ்ரீ” என்று இடையில் பேச எத்னித்த மல்லியை கையமர்த்திய ஸ்ரீ, “நான் பேசி முடிச்சிடுறேன் அத்தை” என்றாள். மல்லி அவளை குழப்பமாக ஏறிட அவள் தொடர்ந்தாள். “உங்களை ஸ்கூலில இருந்தே நான் பார்க்கிறேன்… எனக்கு உங்களை நல்லா தெரியும்… நீங்க ரொம்ப ரொம்ப டாமினேடிங் பெர்சன்… வீட்டுலயும் நீங்க நிச்சயமா அப்படிதான் இருப்பீங்க எங்க வீட்டுல வேதவல்லி பாட்டியும் உங்களை மாதிரியேதான்… கல்யாணத்துக்கு பிறகும் திரும்பியும் அதே மாதிரியான டாமினேஷன்… உஹும் என்னால முடியாது… அதனால எங்களை நீங்க… தனிக்குடித்தனம் வைச்சிட்டா நல்லா இருக்கும்” என்றவள் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசி முடிக்க மல்லி விக்கித்து போய் நின்றார். “நீங்கதான் எதுவா இருந்தாலும் சொல்லுன்னு சொன்னீங்க… நான் சொல்லிட்டேன்… அதுக்கு மேல உங்க இஷ்டம்” என்று அவள் மல்லிக்கு பேசும் வாய்ப்பே கொடுக்காமல் விருட்டென் வெளியேறிவிட்டாள். மல்லி அப்படியே தளர்வாக படுக்கையில் அமர்ந்துவிட்டார். அவர் கண்களிலிருந்து துளி துளியாக கண்ணீர் வெளிவந்து கொண்டிருந்தது. லல்லி ஏதோ ஒரு ஆர்வத்தில் மாமியார் ஸ்ரீயிடம் என்ன பேசுகிறார் என்று ஒட்டு கேட்க வந்து, அவளும் கூட அதிர்ச்சியாகிவிட்டாள். அவள் உடனடியாக நடந்தவற்றை அர்ச்சனாவிடம் போட்டுவிட, “நிஜமாவா” என்று அவள் நம்பாமல் கேட்டாள். ஆமோதித்த லல்லி, “இவ நம்ம மாமியாருக்கே வில்லியா இருப்பா போல… பாவம் எம் எல்… அப்படியே உடைஞ்சு உட்கார்ந்துட்டாங்க… இதை பத்தி மாமா வந்ததும் சொல்லிடணும்” என்று சொல்ல, மௌனமாக யோசித்த அர்ச்சனா, “நீ ஒட்டு கேட்டதே தப்பு… இதை மாமா கிட்ட சொல்லி எம் எல் கிட்ட வாங்கி கட்டிக்காதே… கம்னு இரு… என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்” என்றாள். இந்நிலையில் மல்லியிடம் பேசிவிட்டு அறையை விட்டு வெளியே வந்த ஸ்ரீ அமைதியாக வந்து சோபாவில் அமர்ந்துவிட்டாள். அவளுக்கு தெரியும். தான் பேசியது ரொம்பவே அதிகப்படி என்று. ஆனால் அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. திடீரென்று மாயமாகி போன மாயா வந்து நின்றுவிட்டால்… அவள் கெதி அதோ கெதிதான். நிச்சயம் மாயாவால் வெங்கட்டுடன் அவள் வாழ்வதை ஏற்கவே முடியாது. அவள் இவ்வித யோசனையகளுடன் அமர்ந்திருக்க வெங்கட் அவள் அருகில் வந்தமர்ந்து, “சித்தி உன்னை ரூம்ல ரெஸ்ட் எடுத்துக் சொன்னாங்க ஸ்ரீ” என்றான். “இல்ல வேண்டாம்… நான் இங்கேயே இருக்கேன்” என்றவள் அவன் முகம் கூட பார்க்காமல் பதில் சொல்ல, “எப்படி இருந்தாலும் ஈவனிங்தானே உன் வீட்டுக்கு போக போறோம்… அதுவரைக்கும் இப்படியே உட்கார்ந்து இருப்பியா… ஆளே பார்க்க ரொம்ப டயர்டா இருக்க பாரு… வா… என் ரூம்ல வந்து ரெஸ்ட் எடுத்துக்கோ” என்றவன் அழைக்க, “இல்ல வேண்டாம்… எனக்கு இங்கேயே கம்பர்டபிளா இருக்கு” என்றவள் மறுத்தாள்.  சட்டென்று அவள் காதோரம் ரகசியமாக இறங்கியவள், “பயமா இருக்கோ… ரூமுக்கு வந்தா நேத்து நைட் நடந்த மாதிரி ஏதாச்சும் பண்ணிடுவேன்னு” என, அவள் அதிர்வுடன் அவனை திரும்பி நோக்கினாள். அவளை பார்த்து நக்கலாக கண் சிமிட்டி புன்னகைத்தவன், “அப்படியெல்லாம் நான் பண்ணமாட்டேன்… நீ என்னை நம்பலாம்” என்று சொல்ல, அவளுக்கு தவிப்பாக இருந்தது. அவள் மனம் அவனிடம் அலைபாய்வதை தடுக்க இயலாமல் சட்டென்று பார்வையை திருப்பி கொண்டு, “ப்ளீஸ்… எனக்கு எப்படி இருக்க தோணுதோ நான் அப்படி இருக்கேன்… என்னை சும்மா கம்பெல் பண்ணாதீங்க வெங்கட்” என்றாள். அவளின் வெங்கட் என்ற அழைப்பில் விசித்திரமாக பார்த்தவன், “வெங்கட் டா… எப்பவும் நீ என்னை வெங்கின்னு தானே கூப்பிடுவ… என்ன திடீர்னு வெங்கட்னு கூப்பிடுற… அதுவும் மரியாதையா பேசுற… உன் பேச்சே கொஞ்சம் வித்தியாசமா இருக்கு” என்று சந்தேகமாக கேட்டான். “எனக்கு எப்பப்போ எப்படி எப்படி தோணுதோ நான் அப்பப்போ அப்படி அப்படி பேசுவேன்” என்று எரிச்சலாக மொழிந்தவள், “ப்ளீஸ்… என்னை கொஞ்ச நேரம் தனியா விடுங்களேன்” என்று முகத்திலறைந்தார் போல் பேச அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இவள் தன்னிடம் பேசி பழகிய ஸ்ரீயா? கொஞ்சம் கூட அவளிடம் அப்போதிருந்த குழந்தைத்தனம் இப்போது இல்லையே. ஒரு வேளை நண்பன் சொன்னதுதான் சரியோ? தான் அவன் வார்த்தையை கேட்டிருக்க வேண்டுமோ என்ற எண்ணமெல்லாம் நொடி நேரத்தில் அவனுக்கு தோன்றி மறைந்தது. உடனடியாக எந்த முடிவிற்கும் வர வேண்டாம் என்றவன் அதற்கு மேல் அந்த சூழ்நிலையை சிக்கலாக்காமல் எழுந்து அவளை விட்டு விலகி சென்றுவிட, அதன் பின்னரே அவள் கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தாள். சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டு மூச்சை இழுத்துவிட்டு கொண்டாள். அதுவும் அவன் அருகாமையில் அவளுக்கு ஏதோ மூச்சு முட்டுவது போலிருந்தது. அவள் மனம் தடுமாறியது. ‘ஐம் சாரி வெங்கட் எனக்கு வேற வழி தெரியல… மாயா நிச்சயம் இதை அக்ஸப்ட் பண்ணிக்க மாட்டா’ என்று அவள் மனதிற்குள் மானசீகமாக அவனிடம் மன்னிப்பு வேண்டி கொண்டாள். அப்பொது அவளருகில் வந்து உரிமையுடன் அமர்ந்த அமிர்தா, “சாக்லெட் எங்க பெரிம்மா?” என்று கேட்க அவளை புரியாமல் பார்த்த ஸ்ரீ, “சாக்லெட்டா… இப்போ நான் வாங்கிட்டு வரலையே” என்று தயக்கமாக சொல்ல, “அன்னைக்கு மட்டும் கொடுத்தீங்க… எனக்கு சவீதாவுக்கு சகாவுக்கு நகுலுக்கு அப்புறம் பெரிப்பாவுக்கு… இன்னைக்கு இல்லையா?” என்று சின்னவள் கோபத்துடன் முறைக்கவும், அவளுக்கு புரிந்து போனது. அதேநேரம் அமிர்தாவின் கொஞ்சும் தமிழில் கவரப்பட்டவள், “சாரி டா கண்ணா… நெக்ஸ்ட் டைம் பெரிம்மா கண்டிப்பா வாங்கி தரேன்” என்று அவளை மடியில் அமர்த்தி சமாதானம் செய்து கொண்டிருந்தாள். அடுத்த சில நொடிகளில் அமிர்தா சவீ நகுல் சகா நால்வரும் ஸ்ரீயுடன் ஒன்றாக அமர்ந்து சுவாரசியமாக ஏதோ கதை பேசி கொண்டிருந்தனர். அதிலும் நகுலும் சவீயும் ஸ்ரீயின் மடியில் அமர்ந்திருக்க, அந்த காட்சியை பார்க்க நேர்ந்த வெங்கட்டிற்கு அத்தனை ரசனையாகவும் அழகாகவும் இருந்தது. சற்று முன்பு அவன் பார்த்த ஸ்ரீக்கும் இப்போது அவன் பார்க்கும் ஸ்ரீக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். குழந்தைகளிடம் பெரும்பாலும் எல்லோரும் இலகுவாக மாறிவிடுவது இயல்புதான். ஆனால் இத்தனை இலகுவாக எல்லோராலும் இருக்கவும் முடியாது. குழந்தைகளை கவரவும் முடியாது. ஒவ்வொரு சமயங்களில் ஓவ்வொரு மாதிரியாக நடந்து கொள்வதும், முற்றிலும் முரண்பட்ட குணாதிசியங்களை காட்டுவதும் என்று ஸ்ரீ அவன் கண்களுக்கு மிகவும் வினோதமானவளாக தெரிந்தாள். இதில் எது அவள் நிஜ முகம்? எது அவள் நிஜ குணம்? அவனுக்கு உண்மையிலேயே புரியவில்லை. அவனுக்கு குழப்பமாகத்தான் இருந்தது.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா