மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Vilakilla Vithigal AVANVilakilla Vithigal Avan - E 49Post ReplyPost Reply: Vilakilla Vithigal Avan - E 49

Quote from monisha on August 14, 2023, 12:18 PM

49
சூரியன் உதிக்க இன்னும் சில மணி நேரங்களே இருந்தன. சேஷாத்திரியின் வீட்டின் அனைத்து வாயிற் கதவுகளும் மூடப்பட்டன. பாதணியின் கூர்மையான ‘ஹீல்ஸ்’ கத்தி போல நீட்டிக் கொண்டிருக்க, கால் மீது கால் போட்டு வீட்டின் முகப்பறையில் அமர்ந்திருந்தாள் துர்கா.  “உண்மையை சொல்லுடா” என்று கருணா முகுந்தனின் முகத்தில் ஓங்கி குத்துவிட, அவன் வாயிலிருந்து குருதி பெருக்கெடுத்தது. “ஐயோ! வேண்டாம் அடிக்காதீங்க… அவனை விட்டுடுங்க” என்று மதியழகியும் சேஷாத்திரியும் கெஞ்சிக் கதறி அழுதனர். “துர்கா ப்ளீஸ் அவனை அடிக்க வேண்டாம்னு சொல்லு” என்று சேஷாத்திரி மகனுக்காகக் கண்ணீர் விட்டு அழுதார்.  உடலெல்லாம் அடித்த இரத்த காயங்கள். முகுந்தன் மிகவும் பரிதாபகரமான நிலையிலிருந்தான்.  அவனுக்கு இந்நிலை நேர்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக…. பாரதி பின் வாசல் வழியாக வெளியேறப் போனான். “நானும் உன் கூட வரேன் பாரதி” என்று முகுந்தன் அவனைப் பின்தொடர்ந்து வர, “என் கூட வந்தன்னா… உனக்குதான் தேவையில்லாத பிரச்சனை… பேசாம உங்க அம்மா அப்பா உதவியோடு எங்கயாவது வெளியூருக்கு தப்பிச்சு போயிடு… முடிஞ்சா இந்த நாட்டை விட்டே போயிடு” என்று அறிவுறுத்திவிட்டு அவன் நடக்க, “உயிரே போற பிரச்சனை வந்தாலும் பரவாயில்ல… உனக்கு உதவியா இருந்தா நான் செஞ்ச பாவத்துக்கு எல்லாம் கொஞ்சமாச்சும் பிரயாச்சித்தம் கிடைச்ச மாதிரி இருக்கும்னு நான் நம்புறேன்… ப்ளீஸ் என்னையும் உன் கூட கூட்டிட்டு போ பாரதி” என்று அவனிடம் மன்றாடினான். “இந்த பாவம் பிரயாச்சித்தம்… இதுல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை… நீ மனசு திருந்திட்டன்னா இனிமேயாச்சும் உனக்கும் மத்தவங்களுக்கும் நல்லவனா வாழு… அதுவே பெரிய விஷயம்” என்று சொல்லிவிட்டு அவன் பின் வாயிலைத் திறந்து புறப்படவிருந்த சமயத்தில், வேறொரு விபரீதம் அவர்களைத் துரத்திக் கொண்டு வந்தது. இரு வாகனங்கள் தடாலடியாக அவர்கள் பங்களாவிற்குள் நுழைந்தன. சத்தம் கேட்டதும் பாரதியும் முகுந்தனும் சுதாரித்துக் கொண்டு விரைவாக தப்பிக்க எண்ணி பின்புற மதில் நோக்கி வேகமாக ஓடிய அதேசமயத்தில் தடதடவென நிறைய ஆட்கள் அந்த வீட்டைச் சுற்றி வளைத்தனர். எந்தப்பக்கமும் தப்பிக்க முடியாத இக்கட்டான நிலையில் இருவரும் சிக்கிக் கொண்டனர். அந்த ஆட்களின் கண்களில் மாட்டிவிட்டால் அவ்வளவுதான்.  எப்படித் தப்பிப்பது என்று இருவரும் தீவிரமாக யோசித்த சமயத்தில் பாரதி மதிலின் பாதி உயர அளவுக்கு செங்கற்கள் அடுக்கப்பட்டிருந்ததை பார்த்தான். “அந்த செங்கல் மேலே ஏறிட்டா அந்தப்பக்கமா குதிச்சு தப்பிச்சுடலாம்” என்றவன் சொல்ல, “அது மேல ஏறினாலே நம்ம அவங்க கண்ணுல மாட்டிப்போம்” என்றான் முகுந்தன். “அந்த தெருவுல என் பைக்கை நிறுத்தி வைச்சு இருக்கேன்… அந்தப்பக்கம் குதிச்சிட்டா போதும்… எப்படியாவது தப்பிச்சிடலாம்” என்றதும் முகுந்தனும் சரியென்றான். இருவரும் மெல்ல அந்த இருளில் மறைந்து மறைந்து அந்த செங்கற்கள் அருகில் வருவதற்குள் ஆட்களும் அந்த இடத்தை முழுவதுமாக சுற்றி வளைத்துவிட்டனர். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலைதான் அவர்களுக்கு. இந்த வழியை விட்டால் இருவரும் நிச்சயம் மாட்டிக் கொள்ளத்தான் வேண்டும். ஆட்கள் நெருங்கிவிட்டனர். “இரண்டு பேரும் ஒரே நேரத்துல ஏறி குத்திச்சிடுவோம்” என்று பாரதி சொல்ல முகுந்தனும் ஆமோதித்தான். அவர்கள் அந்த செங்கற்கள் மீது ஏறியதுமே ஆட்கள் அவர்களை கவனித்துவிட்டு, “டேய்… அங்கே பாரு… அவனுங்க தப்பிக்கிறாங்க… அவங்கள பிடிங்க டா” என்ற கத்தல்கள் கேட்க, அவர்கள் மொத்தமாகத் திரண்டு வந்தனர். கணநேரத்தில் பாரதி ஏறி குதித்துவிட்டு, “முகுந்தா குதி” என்று அழைக்க, “நானும் குதிச்சிட்டா… இவங்களும் நம்ம பின்னாடியே ஏறி குதிச்சு வந்திடுவாங்க… இவங்க யாரும் வராம நான் பார்த்துக்கிறேன்… நீ ஓடிடு” என்றவன் சொல்லிக் கொண்டே அங்கிருந்தவர்கள் மேல் செங்கற்களைத் தூக்கி அடித்து அவர்கள் யாரையும் மதில் சுவரை நெருங்கவிடாமல் பார்த்துக் கொண்டான்.  முகுந்தனை அப்படி ஆபத்தில் சிக்க வைத்துவிட்டுச் செல்வதற்கு பாரதியின் மனம் இடங்கொடுக்கவில்லை. “இல்ல முகுந்தா நீ வா” என்றவன் மீண்டும் அழைக்க, “ஆளுங்க நெருங்கிட்டாங்க… நீ தப்பிச்சு போயிடு… போ” என்றவன் பரபரப்பாக கையசைத்து போக சொன்ன அதேநேரம் அந்த ஆட்களில் இருவர் வேறொரு புறமாக எகிறி குதித்து பாரதியைப் பிடிக்க வர, அவன் அதற்கு மேலும் தாமதிக்காமல் அங்கிருந்த ஓட்டம் பிடித்தான். சில நேரங்களில் உணர்வுப்பூர்வமாக சிந்திப்பதை விட அறிவுப்பூர்வமாகச் சிந்திக்க வேண்டியிருந்தது. இந்த சமயத்தில் நியாய தர்மங்கள் எல்லாம் பார்த்தால் அவன் திட்டமிட்ட காரியம் நடக்காது. தன் தோளிலிருந்த பேகை பார்த்தான். அவனுடைய உயிரை விடவும் அந்த பையிலிருக்கும் பொருள் மிக முக்கியமாகப் பட்டது. முகுந்தன் தன்னால் முடிந்தளவு அவர்களைச் சமாளித்தான். ஆனால் சில நிமிடங்களில் ஆட்கள் அவனை சூழ்ந்து பிடித்துக் கொண்டனர். மறுகணமே கருணாவிற்குத் தகவல் அனுப்பப்பட்டது. “அண்ணன் முகுந்தனை பிடிச்சிட்டோம்… ஆனா அவன் கூட இருந்தவன் மட்டும் தப்பிச்சிட்டான்” என்று சொல்ல, “அவன் கூட யாருடா இருந்தா?” என்று கருணா குழப்பமாகக் கேட்க, “தெரில ண்ணா… அவன் பின்பக்கமா காம்பவுண்ட் சுவரு எகிறி குதிச்சு போயிட்டான்… நம்ம பையன் துரத்திட்டு போனா… ஆனா பிடிக்க முடியல” என்றான். கருணாவிற்கு ஒன்றும் விளங்கவில்லை. அவனுடன் யார் இருக்க முடியும்? சில நொடிகள் யோசித்தவன், “தப்பிச்சு போனவன் யாருன்னு வீட்டுலையே வைச்சு அவன்கிட்ட விசாரிங்க” என்றான். எனினும் கருணாவிற்கு இருப்புக் கொள்ளவில்லை. கிருஷின் ஓட்டுநர் அவர்கள் வைத்த ஆள். அவனிடமிருந்துதான் அவனுக்கு முதலில் தகவல் வந்தது. “டீ குடிக்கலாம்னு வெளியே வந்தேன் ண்ணா… யாருன்னே தெரியல… முகத்தில கட்சீப் வைச்சு அழுத்தினாங்க… கிறுகிறுன்னு வந்திருச்சு… நான் மயங்கிட்டேன் ண்ணா… காட்டுல விழுந்து கிடந்தேன்… அந்த வழியா வந்த ஒருத்தன்தான் தண்ணி தெளிச்சு எழுப்பி விட்டான்… அடிச்சு பிடிச்சு பாருக்கு வந்தா… சாரையும் காணோம்… காரையும் காணோம்” என்றான். ஓட்டுநர் சொன்னவற்றை கேட்ட கருணாவிற்கு சந்தேகமே இல்லாமல் அது முகுந்தன்தான் என்று தோன்ற, அவன் வீட்டிற்குச் சென்றிருப்பான் என முடிவெடுத்து அவனைப் பிடிக்க ஆட்களை அனுப்பிவைத்தான். ஆனால் கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதையாகிப் போனது. முகுந்தனுடன் இன்னொருவன்… அது யார்? பாரதியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்த போதும் அவனுக்கே அவன் கணிப்பு சற்று முன்னுக்கு பின் முரணாக இருந்தது. பாரதியின் வாழ்க்கையைத் திட்டமிட்டு நாசமாக்கியது முகுந்தன்தான். அவனும் இவனும் எப்படி ஒன்றாக இருக்க முடியும். அவன் இவ்விதம் குழம்பிக் கொண்டிருக்கும் போதே முகுந்தனை விசாரித்த அந்த கூட்டத்தின் தலைவன் தொடர்பில் வர,  “விசாரிச்சிடீங்களா… யாருன்னு தெரிஞ்சிருச்சா?” என்று பரபரப்பாகக் கேட்க, “ஐயோ!! இல்ல அண்ணா… இவன் பைத்தியம் மாதிரி பேசுறான்… நாங்க யாருன்னு கேட்டா… அவனும் பதிலுக்கு யாருன்னு கேட்கிறான்… நாங்க பேசுறதையே திரும்பத் திரும்ப பேசி கடுப்பேத்துறான்” என்று கூற, “நல்லா அடிச்சு கேட்க வேண்டியதுதானேடா” என்றான் கருணா கோபமாக! “எவ்வளவு அடிச்சாலும் பைத்தியம் மாதிரி சிரிக்கிறா ண்ணா” என்று அவன் சொல்ல கருணாவிற்குத் தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போலிருந்தது.  துர்காவிற்கு உடனடியாக இது பற்றி தகவல் சொல்ல வேண்டும். தாமதமாகச் சொன்னால் அவள் சாமியாடி விடுவாள் என்று அஞ்சியவன் அந்த நொடியே அவளுக்கு அழைத்தான். துர்கா பிரச்சார அட்டவணையைச் சரி பார்த்துக் கொண்டிருந்தாள். எந்தந்த தேதியில் எந்த மாவட்டத்தில் பிரச்சாரம் செய்ய வேண்டுமென்ற குறிப்புகளைப் பார்த்துக் கொண்டே கருணாவின் அழைப்பைப் பார்த்துவிட்டு ஏற்று பேசினாள். அவள் எடுத்ததும் கேட்ட கேள்வியே, “பாரதி கிடைச்சுட்டானா?” என்பதுதான். “அது இல்லம்மா” என்றவன் சொன்ன நொடி அவளுக்குச் சப்பென்றானது. “அப்புறம் எதுக்கு இந்த ராத்திரில ஃபோன் பண்ண” என்றவள் எரிந்துவிழ, “முகுந்தனை நம்மாளுங்க பிடிச்சிட்டாங்க ம்மா” என்றவன் கூற, அவளுக்கு எரிச்சலானது. “ரொம்ப முக்கியமா அது இப்போ… அவனை தூக்கிட்டு போய் மென்ட்ல ஹாஸ்பெட்டில போடுங்க… இதுக்கு போய் எனக்கு ஃபோன் பண்ணிக்கிட்டு” என்றவள் இணைப்பைத் துண்டிக்கப் போக, “இல்ல ம்மா… இன்னொரு முக்கியமான விஷயம்” என்றவன் அவசரமாக கூறவும் அவள் அமைதியாக கேட்டாள். அவன் நடந்தவற்றை எல்லாம் விளக்கமாக கூறினான். துர்கா தீவிரமாகச் சிந்திக்கத் துவங்கினாள்.  அவள் மௌனமாக இருப்பதை உணர்ந்து, “என்னாச்சும்மா” என்று கருணா கேட்க, “இல்ல… நீ சொல்றதை எல்லாம் பார்த்தா அந்த தப்பிச்சு போன ஆள் ஒரு வேளை பாரதியா இருக்குமோ” என்றவள் சந்தேகமாக வினவினாள்.  “எனக்கு அந்த சந்தேகம் இருக்கு… ஆனா… முகுந்தனுக்கு போய் பாரதி எப்படி” என்றவன் இழுக்க, “பாரதி உன்னையும் என்னையும் மாதிரி யோசிக்க மாட்டான் கருணா… அவன் வித்தியாசமானவன்… அதுக்கும் மேல அவன் ரொம்ப நல்லவன்” என்றவள் மனம் நிறைய கணக்குகளைப் போட்டது. அடுத்த நொடியே அவள், “நீ சேஷாத்ரி வீட்டுக்கு போயிட்டியா?” என்று கேட்டாள். “இப்பவா? இந்த ராத்திரிலயா?” என்றவன் தட்டுத்தடுமாற,  “ஏன்? நீ உன் பி.ஏ வீட்டுல ரொம்ப பிஸியா இருக்கியோ?” என்றவள் எள்ளலாக கேட்க, அவனுக்கு பகீரென்றது. தான் இருக்கும் இடத்தை அவள் சரியாக கணித்துவிட்டாளே. அவன் காரியதரிசியின் மனைவியோடு அவன் தொடர்பில் இருந்தான்.  அவனை ஏதாவது வேலையாக வெளியூருக்கு அனுப்பி விட்டு இவன் அங்கே சென்றுவிடுவான். அவன் ஆட்களுக்குக் கூட இது தெரியாது… அத்தனை ரகசியமாக வைத்திருந்தான். ஆனால் இது எப்படி அவளுக்கு? தன்னையே அவள் வேவு பார்க்கிறாளா என்று எண்ணிய போது அவனுக்கு உள்ளூர நடுங்கியது. “இப்போ உன்னால கிளம்பி அங்கே போக முடியுமா முடியாதோ?” என்றவள் மீண்டும் அழுத்தி கேட்டாள். “இதோ… கிளம்பிடுறேன் ம்மா” என்றவன் நடுக்கத்தோடு சொல்ல, “நீ அங்கே போயிடு… இன்னும் அரைமணிநேரத்துல நானும் அங்கே வரேன்” என்றவள் சொன்னதும் அவன் அதிர்ச்சியாக, “நீங்க போய் இந்த நேரத்துல… அதெல்லாம் வேண்டாம்மா… நான்… நான் பார்த்துக்கிறேன்… அந்த முகுந்தனை விசாரிச்சு நான் தகவல் சொல்றேன்” என்றான். “கிழிச்ச… கையில கிடைச்சவனையும் தப்பிக்க விட்டுட்டு… நேர்ல போகாம இன்னும் ஃபோன்லயே பேசிட்டு இருக்க… உங்களை எல்லாம் நம்பி எந்த பிரயோஜனும் இல்லை… நாளைக்கு விடிஞ்சதும் நான் திருச்சி மதுரைன்னு பிரச்சாரத்துக்குப் போக வேண்டி இருக்கும்… இன்னைக்கு நைட் மட்டும்தான் சென்னைல” என்றவள் மேலும், “முகுந்தனை ஹாஸ்பெட்டில இருந்து காப்பாத்தினதே பாரதிதான் எனக்கு தோணுது… ஏதோ ஒரு முக்கியமான விஷயம் இருக்கு… இல்லாட்டி பாரதி ஏன் சேஷாத்ரி வீட்டுக்கு போகணும்… அதுவும் முகுந்தனை அழைச்சிட்டு… எல்லாத்துக்கும் மேல முகுந்தன் பாரதியை காப்பாத்த ட்ரை பண்றான்னா… என்னவோ எனக்கு சரியா படல” என்றாள். கருணாவிற்கு அவள் எண்ணவோட்டத்தை பார்த்து வியப்பாக இருந்தது. “சரி வந்து சேர்ந்துடு” என்றவள் இணைப்பைத் துண்டித்த மறுகணம் அவன் அடித்துப் பிடித்து அங்கே சென்றிருந்தான். அடுத்த முப்பது நிமிடங்களில் துர்காவும் அங்கே இருந்தாள். நம்பகமான இருவரைத் தவிர மற்ற ஆட்களை எல்லாம் வெளியேற்றிவிட்டு கருணாவும் அவளும் மட்டும் உள்ளே வந்தனர். சேஷாத்திரியையும் மதியழகியையும் இருவர் எங்கும் நகரவிடாமல் பிடித்து வைத்திருந்தனர். அவர்களுக்குப் பதட்டமும் பயமும் கூடிக் கொண்டு போனது. அதுவும் அந்த இரவில் துர்கா அங்கே வந்ததில் அவர்களுக்கு என்ன நடக்கப் போகிறதோ என்று நடுக்கமாக இருந்தது. ஆனால் துர்காவோ அமைதியே ரூபமாக சோபாவில் அமர்ந்திருந்தாள். ஆழ் கடலின் அமைதி போல மிக ஆபத்தான அமைதி அவள் பார்வையில் புலப்பட்டது. கருணா அப்போது முகுந்தனிடம் விசாரித்து கொண்டிருந்தான். “யாருடா அவன்?” என்று கருணா கேட்க, “யாரு அவன்?” என்று இவனும் பதிலுக்கு கேட்டான். “டே வேண்டாம்” என்றவன் கடுப்பாக, அவனும் திருப்பி, “டே வேண்டாம்” என்றான். “என்னடா எங்ககிட்டயே பைத்தியம் மாதிரி நடிக்குறியா?” என்றவன் பளாரென்று முகுந்தன் முகத்தில் அறைய அவன் கொஞ்சமும் அசரவில்லை.  “போடா பைத்தியம்… நீதான் பைத்தியம்” என்றவனை பார்த்து கைதட்டி சிரிக்க, “பாருங்க ம்மா… இவன் இப்படித்தான் பண்றான்” என்று பொறுமையிழந்த கருணா, “உண்மையை சொல்லுடா?” என்று கருணா தன் பலத்தை எல்லாம் பிரயோகித்து முகுந்தனின் முகத்தில் ஓங்கி குத்துவிட, அவன் வாயில் குருதி பெருக்கெடுத்தது. மதியழகியும் சேஷாத்திரியும் வேதனையில் துடித்து அழ, கருணா அவனைச் சரமாரியாகத் தாக்கினான். “துர்கா ப்ளீஸ் அவனை அடிக்க வேண்டாம் சொல்லு” என்று சேஷாத்திரி கெஞ்ச, “அப்போ நீங்க பதில் சொல்லுங்க… இங்கே முகுந்தனோட வந்தது யாரு? பாரதியா” என்று அவர்களை வினவினாள். அவர்கள் பார்வை முகுந்தனை பார்க்க, அவன் சொல்ல வேண்டாமென்று தலையசைத்தான். துர்கா அதனைக் கவனித்துவிட்டாள். “உங்க கண்ணு முன்னாடியே உங்க மகன் அடி வாங்கி சாகிறதை பார்க்கணுமா?” என்றவள் மிரட்ட, “வேண்டாம் வேண்டாம்… அவனை எதுவும் பண்ணிடாதே” என்று மதியழகி அழுது அரற்ற, “அப்போ பதில் சொல்லுங்க” என்று துர்கா அழுத்தமாகக் கேட்க, அடிப்பட்டு விழுந்த கிடந்த முகுந்தனிடமிருந்து பதல் வந்தது. “அவ…ங்க சொல்ல மா… ட்டாங்க… நீ என்னை கொன்னு கூட போ… ட்டுக்கோ” என்றதும் அவன் புறம் வியப்பாகத் திரும்பியவள், “ஏய் வாவ்! இவ்வளவு நேரம் நீ பைத்தியம் மாதிரி நடிச்சியா? பாரேன்… நான் உண்மையிலேயே உனக்குப் பைத்தியம் பிடிச்சிருச்சுனு நம்பிட்டேன்” என்றாள்.  அவன் சிரமப்பட்டு எழுந்து கொண்டே பேசினான். “நடிப்பெல்லாம் உன் அளவுக்கு எனக்கு வராது து…ர்கா… நீதான்… கா…தலிக்கிற மாதிரி நடிக்கிறதுல எக்..ஸ்… பர்ட்… ஆச்சே” என்றவன் பேசும் போதே அவன் வாயிலிருந்து குருதி பெருக, மதியழகி அவளைப் பிடித்திருந்த ஆட்களை உதறித் தள்ளிவிட்டு ஓடி வந்து அவன் முகத்திலிருந்த வடிந்த இரத்தத்தைத் துடைத்துவிட்டார். மீண்டும் மதியழகியை ஆட்கள் பின்னோடு இழுத்து பிடிக்க,  “தாய் பாசம் துடிக்குது போல” என்று எள்ளல் பார்வையோடு சொன்ன துர்கா நிதானமாக இருக்கையிலிருந்து எழுந்து வந்து, “ஆமாம் நான் நடிச்சேன்தான்… ஆனா நீ மட்டும் என்ன ஒழுங்கா? மயக்க மருந்து கொடுத்து பொண்ணுங்களை கெடுக்கிற நீயெல்லாம் பேச கூடாது” என்று விட்டு அவனை இழிவாகப் பார்க்க, “நான் செஞ்சது எல்லாமே ... தப்… புத்தான்… இல்லன்னு நான் சொல்லவே இல்ல… ஆனா நீ இப் … போ செய்றது” என்றவன் கேட்ட நொடி, “ஆமா தப்புத்தான்… இங்கே தப்பு தப்பா வாழ்ந்தாதானே மேலே போக முடியும்… உங்களை எல்லாம் இப்படி ஏறி மிதிக்க முடியும்” என்றவள் கருணாவைப் பார்த்து, “என்ன கருணா நான் சொன்னது சரிதானே” என்றாள்.  “சரிதானுங்க ம்மா” என்றவன் ஜால்ரா தட்ட, முகுந்தனை அலட்சியமாகப் பார்த்தவள், “பழைய கதையெல்லாம் எதுக்கு… இந்த விஷயத்துக்கு வருவோம்… யாரு அவன்… ஒழுங்கா சொல்லிடு… இல்லனா” என்றவள் வாக்கியத்தை முடிப்பதற்கு முன்னதாக, “எ… ன்னை கொன்னுடுவ… அதானே… கொன்னுடு… பெத்த மகளுக்கு… செஞ்ச பாவத்துக்கு புள்ளயோட சா… வை பார்க்கிறதுதான் அவங்களுக்கும் சரியான தண்டனை” என்றதும் சேஷாத்திரி முகத்திலறைந்து கொண்டு அழுதார். “அப்படி சொல்லாதே முகுந்தா” என்று மதியழகி கண்ணீர் வடிக்க, முகுந்தன் அவர்களை பார்த்து, “எனக்காக அழாதீங்க… நான் என் கூட பிறந்தவளை இதை விட கொடூரமா கொன்னேன்” என்று சொல்ல, துர்காவிற்கு எரிச்சலாக இருந்தது. “ஏய் ஏய்… நான் ஒன்னும் உங்க ஃபேமிலி செண்டிமெண்ட் டிராமாவை பார்க்க என் வேலையெல்லாம் விட்டுட்டு இங்க வரல” என்று சொன்னவள் கருணாவிடம், “உஹும் ஒன்னும் வேலைக்கு ஆகாது போல” என்று உரைக்க. “ஆமாம்மா… முடிச்சுடலாம்” என்றவன் கத்தியை எடுத்து முகுந்தன் தொண்டைக் குழியில் வைத்து நொடி மதியழகி பதறிவிட்டு, “வேணாம் வேணாம்… அவனை ஒன்னும் செஞ்சுடாதீங்க” என்றவர், “முகுந்தனோட பாரதிதான் இங்கே வந்தான்… ஆனா ஏன் வந்தான் எதுக்கு வந்தான்னு எங்களுக்கு ஒன்னும் தெரியாது” என்று பிள்ளை பாசத்தில் உண்மையை போட்டு உடைத்தார். துர்காவின் முகம் யோசனையாக மாறியது.  “இப்போ என்ன பண்றது ம்மா” என்று கருணா துர்காவிடம் கேட்க, அவள் முகுந்தன் அருகில் வந்து நின்று,  “இதை பாரு முகுந்தா… கடைசி கடைசியா உனக்கு ஒரு வாய்ப்பு தரேன்… இனிமே நீ மெண்டல் ஹாஸ்பெட்டில் போக வேண்டாம்… நீ க்யூரானதா ஒரு செர்டிபிகேட் கொடுக்க சொல்றேன்… பேசாம வெளிநாட்டுக்கு போயிடு… உனக்கு தேவையான பணம் தரேன்… இஷ்டப்படி வாழு… ஆனா அதுக்கு பதிலா பாரதி உன்கிட்ட என்னவெல்லாம் சொன்னா… உன்னை எங்க கூட்டிட்டு போய் தங்க வைச்சான்… இங்கே எதுக்கு வந்தான்… இதெல்லாம் நீ எனக்கு விவரமா சொல்லணும்… அப்படி நீ சொன்னா நான் இப்ப சொன்னதெல்லாம் செய்வேன்… கண்டிப்பா செய்வேன்” என்று உறுதி கொடுக்க, அவளை ஏற இறங்க பார்த்தவன், “பயமா இருக்குதா .. து… ர் கா” என்றவன் அந்த நிலையிலும் ஒருவித அலட்சிய சிரிப்போடு கேட்டான். “எனக்கு எதுக்கு பயம்?” என்றவள் புரியாமல் பார்க்க, “உனக்கு… பார… தியை பார்த்து பயமா இருக்கு… அதான்” என்றவன் தடுமாற்றத்தோடு பேச, “அவனை எல்லாம் பார்த்து நான் ஏன் பயப்படணும்?” என்றாள் அலட்சியமாக! “உன்கிட்ட ப…தவி பலம் பணம் எல்லாம் இருக்கு … இருந்தும் இந்த… நேரத்துல நீ இங்கே பதறி அடிச்சு ஓடி வந்திருக்கன்னா அதுக்கு காரணம்? பா… ரதி ங்குற பேர்தானே” என்றவன் கேட்ட நொடி அவள் முகம் லேசாக சுணங்கியது. சட்டென்று அந்த சுணக்கத்தை மறைத்து கொண்டவள், “அதுக்கு பேர் ஒன்னும் பயம் இல்ல… முன்ஜாக்கிரதை… என்னை யாரும் எதிர்க்க இல்ல... எதிர்க்கணும்னு நினைக்க கூட கூடாது” என்றவள் பார்வையில் அப்போது உஷ்ணம் ஏறியிருந்தது. “ஆமா ஆமா இனிமே நீ ரொம்ப ரொம்ப ஜா… க்கிரதையா இருக்கணும்… ஏன் னா உன் ஆட்டம் முடிய போகுது” என்று சொல்லி அவனும் ஏளனமாக சிரித்தான். அந்த நொடியே அவள் உக்கிர பார்வை கருணாவை நோக்கியது. அவள் கண்ணசைவுக்கு ஆடும் பொம்மையாக முகுந்தனைஅடித்து கீழே தள்ளி அவன் வயிற்றில் ஓங்கி மிதி மிதியென்று மிதித்தான். மதியழகியும் சேஷாத்திரியும் வேண்டாமென்று கதறினர்.  துர்கா கை காட்டவும் கருணா அடிப்பதை நிறுத்த, முகுந்தன் வயிற்றை பிடித்தபடி வலியால் துடித்து கொண்டிருந்தான். அவனை கூர்மையாக பார்த்து, “பாரதியை பார்த்து நான் பயப்படல… ஆனா அதேசமயம் அவன் எனக்கு எதிரியா இருக்கிறதுல எனக்கு விருப்பம் இல்ல… அவ்வளவுதான்” என்றவள் அந்த நொடியே தன் முகபாவனையை மாற்றி கொண்டு இளக்காரமாக சிரித்து, “ஆனா உன்னை கொல்லணும்னு நான் நினைச்சதே இல்ல முகுந்தா.. ஏன் னா நீ ஒரு அரைகுறை… உனக்கு எதையும் தெளிவா யோசிச்சு செய்ற புத்தியே இல்ல… இல்லாட்டி போனா அந்த நந்தினியை அவ்வளவு பெருசா வளர விட்டிருப்பியா நீ… அதான் உனக்கு மெண்டல் ஹாஸ்பெட்டில்தான் லாய்க்கின்னு உன்னை அங்கே வைக்க சொன்னேன்... ஆனா இன்னைக்கு இவ்வளவு தெளிவா பேசுனதை பார்த்த பிறகு என் முடிவை மாத்திக்கிட்டேன்… நீ இனிமே மெண்டல் ஹாஸ்பெட்டில இருக்கக் கூடாது” என்றவள் அந்த நொடி செய்த காரியம் எல்லோரையும் அதிர்ச்சியில் உறையச் செய்தது.  மதியழகியும் சேஷாத்திரியும் தன் மகனுக்கு இப்படியொரு முடிவு நேரும் என்று எதிர்பார்க்கவே இல்லை. “முகுந்தா…ஆஆஆஆ” என்று அவர்கள் கத்தி கதறினர்.  "அடிப்பாவி என் பையனை கொன்னுட்டியே… நீ நல்லா இருப்பியா” என்றவர்கள் துர்காவை சபிக்க அவளோ அத்தனை சாதாரணமாக ஒரு கொலையை செய்துவிட்டு, அலட்டிக் கொள்ளாமல் நின்றாள். உயிரற்று கிடந்த முகுந்தனின் உடலை பார்த்து கருணாவின் முதுகுதண்டு சில்லிட்டது. என்ன நடந்தது என்பதை மீண்டும் ஒருமுறை யோசித்து பார்த்தான்.  துர்கா முகுந்தனிடம் சாதாரணமாக பேசி கொண்டே அவள் அவன் தொண்டைக் குழியில் ஓங்கி மிதித்துவிட்டாள். அவள் செருப்பிலிருந்த கத்தி போன்றிருந்த ஹீல்ஸ் குத்தி கிழித்து உள்ளே இறங்கிய நொடியே அவன் உயிர் பிரிந்துவிட்டது.  நினைத்து பார்க்கும் போதே அவனுக்கு உதறியது.  “கருணா” என்றவள் அழைக்கவும்தான் அவன் அதிர்ச்சியிலிருந்து ஒருவாறு மீண்டு,  “ஆ… சொல்லு ங்க ம்மா” என்று அவன் தட்டுத்தடுமாறிப் பேச, “இப்போதைக்கு இந்த விஷயம் வெளியே தெரிய வேண்டாம்… இவன் பாடியை டிஸ்போஸ் பண்ணிடு” என்றவள் உடனடியாக சேஷாத்திரி மதியழகியிடம் திரும்பி, “உங்களுக்கும் தான் சொல்றேன்… இதை பத்தி வெளியே சொன்னீங்க… ரூம்ல போதை மயக்கத்துல இருக்கான் இல்ல ஒருத்தன்… அவனும் உங்களுக்கு இல்லாம போயிடுவான்… பார்த்துக்கோங்க” என்று குரூரமாக மிரட்டிவிட்டு அங்கிருந்து அகன்றாள்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா