மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: AmaraAmara - Final EpisodePost ReplyPost Reply: Amara - Final Episode

Quote from monisha on September 24, 2024, 11:37 AM

33

ஹரீஷும் தேவாவும் பங்களாவின் பின்புறம் செல்ல அமிர்தா முன் வாயில் வழியாக மெதுவாக உள்ளே எட்டிப் பார்த்துக் கொண்டே நுழைந்தாள். முகப்பறையில் யாரும் இல்லையென்று அறிந்தவள் மெல்ல நடந்து முன்னேறினாள். விசாலமான அந்த முகப்பறையைக் கடந்து அவள் உள்ளே சென்ற போது யாரோ இரு ஆண்கள் பேசிக் கொள்வது போன்று கேட்டது.

மெல்ல சத்தம் வந்த அறை கதவு வழியாக எட்டிப் பார்த்தாள். உள்ளே இருந்து மருந்து நெடி பலமாக வீசியது. அந்த அறையும் கூட ஒரு மருத்துவமனை அறை போலவே காட்சியளித்தன.

உள்ளே இருவர் நின்று பேசிக் கொண்டிருந்தனர். ஒருவன் ஆல்வின் என்றும் எதிரே படுக்கையில் இருந்த நபர் அருள்ராஜ் என்றும் அவள் அறிந்து கொண்டாள்.

அவள் தேடி வந்த இரை அவள் கண்ணெதிரே நிற்கிறது. அமிர்தாவின் கண்கள் ஆழமான வெறியுடனும் வஞ்சத்துடனும் ஒளிர்ந்தன. தன் ஜெர்க்கினில் இருந்த துப்பாக்கியை வெளியே எடுத்தாள்.

அதனை எடுத்த மாத்திரத்தில் கண நேரம் கூட யோசிக்காமல் அருள்ராஜின் நெற்றிப் பொட்டிற்குக் குறி வைத்துச் சுட்டுவிட அவர் மடிந்து வீழ்ந்தார்.

ஆல்வினால் நடந்ததை நம்பவே முடியவில்லை. தன் சித்தப்பாதான் அவனுக்கு எல்லாமுமாக இருந்தவர். அவர் இறந்துவிட்டதை ஏற்க முடியாத அதேநேரம் யார் இப்படி செய்தார்கள் என்று அவன் அதிர்ந்து திரும்பினான்.

அவள் அப்படியே அச்சு அசலாக அமராவின் தோற்றத்திலிருக்க அவர் திடுக்கிட்டு, “அமரா” என்று சீற்றமாகக் கத்த,

அவள் நிதானமாக சுவரில் சாய்ந்தபடி, “நோ… அமிர்தா” என்றபடி துப்பாக்கியை உயர்த்தி, “மரணத்தை எல்லோரும் பார்த்திர முடியாது ஆல்வின்… யார் கண்ணுக்கும் அது சீக்கிரத்துல தெரியாது… அது திடீர்னு வந்துபோயிடும்… வந்தவனும் போய் சேர்ந்திடுவான்…”

”ஆனா உனக்கு உன் மரணத்தைப் பார்க்க வாய்ப்பு கிடைச்சிருக்கு… லுக் அட் மீ… ஐம் யூர் டெத்” என்றவள் சொல்லி ட்ரிகரை இரு முறை அழுத்தினாள்.

“ஏ ஏ நோ” என்று பயந்து பின்வாங்கியவன் அதேநேரம் மின்னல் வேகத்தில் செயல்ப்பட்டுத் தப்பித்துக் கொண்டவன் தன் அருகே இருந்த மருந்து குடுவையை அவள் மீது வீசினான்.

அவள் சற்றுத் தடுமாறி நகர்ந்த கணத்தில் அவர் அவளை நெருங்கி கைகளைப் பிடித்துத் தடுக்க முற்பட்டான். அவள் ட்ரிகரை அழுத்தப் போக அவன் அவள் கரத்திலிருந்த துப்பாக்கியை அவள் வயிற்றின் புறம் திருப்பி ட்ரிகரை அழுத்திவிட்டான்.

“ஆஆ…” என்று வலியில் தடுமாறிய போதும் அவள் கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் துப்பாக்கியைத் திருப்பி அவன் இதயத்திற்கு நேராக ட்ரிகரை அழுத்திவிட்டாள். அவன் தரையில் வீழ்ந்து இறப்பதைப் பார்த்து வஞ்சத்துடன் புன்னகைத்தப் பின்னே அவள் சரிந்தாள்.

துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டு ஓடி வந்தவர்கள் அமிர்தா காயப்பட்டிருப்பதைக் கண்டதும் பதறிவிட்டனர். ஹரீஷ் அவளை தம் கைகளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு, “ஏன் அமிர்து அவசரப்பட்ட?” என்று கேட்டு அழ,

“இட்ஸ் மை ரிவஞ்ச்” என்றாள் அழுத்தம் திருத்தமாக.

ஹரீஷ் அவளை தன் கரங்களில் தூக்கிக் கொள்ள எத்தனிக்க அவள் வலியால் துடித்தாள்.

“உனக்கு ஒன்னும் ஆகாது… நம்ம ஹாஸ்பிட்டல் போலாம்” என,

“முதல… அமராவைத்… தேடிக் கூட்டிட்டு வாங்க” என்றவள் கூற,

தேவா உடனடியாக அமரா அடைத்து வைக்கப்பட்டிருந்த அறையை தேடிக் கண்டுபிடித்து உள்ளே நுழைந்தான். அவள் துப்பாக்கி வெடித்த சத்தத்தில் மிரண்டு காதுகளை மூடிக் கொண்டு ஒடுங்கிப் போய் அமர்ந்திருக்க, “அமி” என்று ஒரு குரல்தான் கொடுத்தான்.

அமராவின் இருண்ட உலகத்தில் கோடி மின்னல் வீசியது போன்றதொரு வெளிச்சம். அவள் உடலில் புது இரத்தம் பாய்ந்தது. துவண்டிருந்த அவள் உணர்வுகளும் நம்பிக்கையும் புத்துயிர் பெற்றன. இதெல்லாம் நொடிக்குக் குறைவான நேரத்தில் அவளுக்குள் அரங்கேறிவிட,

மறுகணமே, “தேவா… தேவா நீ வந்துட்டியா?” என்று அவசர அவசரமாக எழுந்து தட்டுத் தடுமாறி விழப் போகும் போது அவன் அவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான்.

“அமி… உன் கண்ணுக்கு என்னாச்சு?” என்று அவன் அதிர்வுடன் கேட்க, அவள் பதில் சொல்லாமல் அவனை அணைத்துக் கொண்டு அழுதாள். அத்தனை நாட்களாக அவள் மனதில் தேக்கி வைத்திருந்த வலிகள் யாவும் கண்ணீராகப் பெருகின. அவனும் அதனை உணர்ந்து அவள் முதுகைத் தடவிக் கொடுத்து,

“அமி… போலாம்… மேடமுக்கு அடிப்பட்டு இருக்கு ஹாஸ்பிட்டல சேர்க்கணும்” என்று பரபரப்புடன் கூறி அவளை அணைத்துப் பிடித்து அழைத்து வந்தான்.

“யாரு மேடம்?” என்று அவள் புரியாமல் கேட்க,

“அதெல்லாம் நான் அப்பால சொல்றேன்” என்றவன் அவளை வெளியே அழைத்து வந்தான். ஹரீஷோ அமிர்தாவைத் தூக்கிக் கொண்டு கடற்கரை நோக்கி ஓடினான்.

தேவாவும் அமராவை அழைத்துக் கொண்டு பின்னே செல்ல, அந்த மீனவனோ அமிர்தாவின் இரத்தக் காயங்களைப் பார்த்து,

“ஐய்யய்யோ சார்… சுறா மீனு இரத்த வாடைப் பிடிச்சு வந்திடும்… நம்ம எல்லோரும் கூண்டோட கைலாசம் போயிடுவோம்… நான் இந்த விளையாட்டுக்கு வரல” என்றவன் அந்த நொடியை தன் போட்டை ஒட்டிக் கொண்டு சென்றுவிட,

“டேய் டேய்... நில்லுடா... டேய்ய்ய்ய் பரதேசி” என்று ஹரீஷ் காட்டுக் கத்தலாகக் கத்தியும் அவன் திரும்பி வரவில்லை.

“ஐயோ கடவுளே!” என்று ஹரீஷ் அமிர்தாவை மடியில் கிடத்தியபடி மணலில் அமர்ந்துவிட,

“அழாதீங்க சார்… எதனாச்சும் வழி இருக்கும்… நாம பார்க்கலாம்” என்றான் தேவா.

ஆனால் ஹரீஷின் நம்பிக்கை தளர்ந்துவிட்டது. அந்தத் தீவிற்கு மனிதர்களே வர மாட்டார்கள் எனும் போது எப்படி அவளைக் காப்பாற்றுவது?

ஹரீஷின் கண்ணீர் அமிர்தாவின் முகத்தில்தான் விழுந்தது.

தன் நினைவுகளை இழக்க இருந்தவள் சட்டென்று விழித்துக் கொண்டு, “என் ஃபோ…ன் எடுத்து… என் அசிஸ்டென்டுக்கு இன்…ஃபார்ம் பண்ணு” என்றாள்.

அவள் சொன்னது போலவே ஹரீஷ் அவள் செல்பேசியின் மூலம் அவளின் உதவியாளனிடம் பேசினான்.

இருப்பினும் ஏனோ அவன் நம்பிக்கை தளர்ந்து போக கண்ணீருடன் அமிர்தாவிடம், “ப்ளீஸ் ஸ்டே வித் மீ… எனக்கு நீ வேணும்… நீ இல்லாம எனக்கு எதுவும் இல்ல” என,

“நி… ஜ மாவா?” என்று கேட்டு அந்த வலியிலும் புன்னகைக்க,

“எஸ்” என்றவன் கண்ணீருடன் ஆமோதித்தான்.

“உனக்…காகவாவது எனக்கு எதுவும் ஆகாம இருக்கணும்” என்று அமிர்தா சொல்லவும்,

“உனக்கு எதுவும் ஆகாது அமிர்தா” என்று ஹரீஷ் அழுத்தமாகக் கூற உடன் தேவாவும்,

“மேடம் உங்களுக்கு ஒன்னும் ஆகாது மேடம்” என்று தேவா சொல்ல அவனைப் பார்த்து அமைதியான புன்னகையை உதிர்த்துவிட்டு அவள் அமராவை நிமிர்ந்து பார்த்து,

“அ… ம… ரா” என்று அழைத்தாள். அமரா நடப்பது ஒன்றும் புரியாமல் நிற்க,

“மேடம்… கூப்பிடுறாங்க… அமி… இங்கே… இப்படி” என்றவள் கரத்தைப் பிடித்து அமிர்தாவின் கையினைத் தொட வைத்தான்.

அவள் கைகளில் இரத்தத்தின் பிசுபிசுப்பை உணர்ந்த அமரா என்னவோ ஏதோ என்று பதற அமிர்தா அவள் விழிகளைப் பார்த்து, “அமரா… உன் கண்ணுக்கு என்னாச்சு?” என்று விசாரித்தாள்.

“அந்த ஆல்வின் என்னைக் குருடாக்கிட்டான்…இரண்டு மூணு நாளா சுத்தமா என்னால எதுவும் பார்க்க முடியல” என்று அழுதுக் கொண்டே கூறியவள் சுருக்கமாக நடந்த சம்பவத்தையும் சொல்ல, அமிர்தாவிற்கு தன் வலி உண்டாக்கிய வேதனையை விட அமராவின் நிலை அதிக வேதனையைக் கொடுத்தது.

“ச…ரி… பண்ணிடலாம்… நான் இருக்…கேன்” என்று அவளுக்கு ஆறுதல் கூறி தம் கைகளை எட்டி அவள் கன்னத்தைத் தட்ட,

தேவா தவிப்புடன், “பண்ணிடலாம் மேடம்… இப்போ நீங்க நல்லாயிட்டா போதும்” என்றான்.

அவள் அதன் பின் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அமிர்தாவின் உடலின் இரத்தங்கள் யாவும் வடிந்து கொண்டிருந்தன. அவள் முகம் வெளுத்துப் போனது.

அடுத்த அரைமணி நேரத்தில் ஒரு ஹெலிக்காப்டர் வானத்திலிருந்து இறக்கைகளைச் சுழற்றிக் கொண்டு வந்து அங்கே நின்றது.

அடுத்த நாள் மாலை…

பாலமுருகன் கைப்பேசிக்கு ஹரீஷின் பேசியில் இருந்து அழைப்பு வந்தது. அவர் எடுத்து, “ஹரீஷ் எங்கே இருக்க? உன் ஃபோன்ல சிக்னல் இல்லன்னு வருது… இல்ல ஸ்விட்ச் ஆஃப்னு வருது… எங்கடா இருக்க? போகும் போது சொல்லிட்டுப் போகமாட்டியா? உங்க அம்மா எவ்வளவு பயந்துட்டா தெரியுமா?” என்று படபடத்தார்.

“சார்… நான் தேவா பேசுறேன்” என்றதும் அவர் கலவரத்துடன்,

“ஹரீஷுக்கு என்னாச்சு?” என்று கேட்க,

“சார் அவருக்கு ஒன்னும் இல்ல… நல்லாகிறாரு… ஆனா இப்போ நாங்க போலீஸ் ஸ்டேஷன்லகிறோம்” என்றவன் நடந்த விவரங்களை உரைக்கவும் அவர் அதிர்ந்தார்.

“என்ன சொல்ற தேவா?”

“ஆமா சார்” என்றவன் குரலில் ஸ்ருதி இறங்கியது.

“இப்போ இன்னா பண்றதுன்னு தெரியாம” என்றவன் சொல்லும் போதே, “நான் இதோ… உடனே கிளம்பி வரேன் நீங்க பயப்படாதீங்க” என்று தெரிவித்துவிட்டு அடுத்த சில மணி நேரங்களில் விமானம் பிடித்து போர்ட் ப்ளேயர் வந்து சேர்ந்தார்.

விஷயமறிந்த கீதாவும், “இல்லங்க… இந்த நிலைமைல நான் என் பையன் கூட இருக்கணும்” என்று பிடிவாதம் பிடிக்க வேறுவழியின்றி அவரையும் உடன் அழைத்துக் கொண்டு அவர்கள் இருக்கும் காவல் நிலையத்திற்கு தேடி வர, ஹரீஷ் சட்டை எல்லாம் இரத்தக் கரையுடன் அங்கிருந்த பலகைப் போன்ற இருக்கையில் அமர்ந்திருந்தான்.

அருகில் தேவா நின்றிருக்க, “ஹரீஷ் கண்ணா” என்று கீதா மகனின் தோளைப் பற்ற அவன் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தான்.

“ஹரீஷ் என்னாச்சு?” என்றவர் தந்தை கேட்ட போதும் அவன் அதே நிலையில்தான் இருந்தான்.

“ஏதாச்சும் பேசு ஹரீஷ்” என்று கீதா உலுக்கி எடுத்தப் போதும் அவன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

“அவர் எதுவும் பேச மாட்டிராரு… இப்படியேதான் உட்கார்ந்திருக்காரு… அழக் கூட இல்ல” என்று தேவா பேச இருவரின் முகமும் வேதனையுடன் மகனை ஏறிட்டது.

அவன் பிரமைப் பிடித்தவன் போல அமர்ந்திருக்க கீதா கலக்கத்துடன், “ஹரீஷ்… நீ அம்மாவைப் பாருடா” என்றவன் கன்னங்களைப் பற்றித் திருப்ப, அவன் எங்கேயோ தூரமாக வெறித்துக் கொண்டிருந்தான். அவன் கண்களில் அமிர்தா மட்டுமே நிலைக்கொண்டிருந்தாள்.

எல்லாமே அவனுக்குக் கனவு போல இருந்தது. அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு மலைப்பாதையில் நடந்தது, அவளுக்கு இதழ் முத்தம் கொடுத்தது எல்லாமே ஒரு அழகான கனவு போல களைந்து போனது.

அவன் கடந்து வந்த பெண்களில் அமிர்தா ஒரு தனிரகம். அவள் தைரியத்தைத் தெளிவைப் பார்த்து நிறையவே வியந்திருக்கிறான். அவள் அழகைப் பார்த்து மயங்கியிருக்கிறான்.

அவள் அன்பில் கரைந்திருக்கிறான். காதலில் உருகியிருக்கிறான். அவள் கோபத்தைச் சமாளிக்க முடியாமல் திணறியிருக்கிறான்.

பழகிய இந்த இரண்டு மாதங்களில் புதுப்புது அனுபவங்களை அவனுக்குக் காட்டியவள் மரணத்தை எதிர்கொள்ளும் அனுபவத்தையும் சேர்த்தே அவனுக்குக் காட்டிவிடுவாள் என்று அவன் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

இன்னும் அவளின் குருதியின் கோலங்கள் அவன் உடலோட ஒட்டிக் கொண்டிருந்தன. அவள் இறந்துவிடுவாள் என்று அவன் துளியளவு கூட நம்பவில்லை. அவள் மீண்டு வந்துவிடுவாள் என்று திடமாக நம்பினான்.

அந்தளவுக்குப் போராடி வெல்லும் மன தைரியம் கொண்டவள் எப்படி சாதாரணமாக இறந்து போக முடியும். அவள் அப்படியெல்லாம் மடிந்து போகக் கூடியவளா என்ன?

அவன் கண்களில் கண்ணீர் வரவில்லை. இன்னும் அதிர்ச்சி உணர்வில்தான் கிடந்தான்.

அவள் மரணித்துவிட்டாள் என்று அவன் மூளை நம்ப மறுக்கிறது.

அவளுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர், “அந்தக் குண்டு அவங்க அப்டோமன் வழியா உள்ளே துளைச்சுப் போய் ஸ்பெயினைத் தாக்கி இருக்கு… இது ரொம்ப ரிஸ்கான கேஸ்… அவங்களைப் காப்பாத்துறது கஷ்டம்” என்று கை விரித்துவிட,

“இல்ல இல்ல டாக்டர்… நீங்க ட்ரை பண்ணுங்க… அவளுக்கு ஒன்னும் ஆகாது… ஷி இஸ் வெரி ஸ்ட்ராங் கேர்ள்… அவ கிவ் அப் பண்ண மாட்டா…பண்ணவே மாட்டா… அவ வாழ்க்கையில எவ்வளவு மோசமான கஷ்டத்துல இருந்து கூட மீண்டு வந்திருக்கா” என்றவன் கெஞ்சியபடி அழ, சங்கடமாக அவனை ஏறிட்டவர் மீண்டும் அமிர்தாவின் அறைக்குச் சென்று தன்னால் இயன்ற எதையாவது செய்ய முடியுமா என்று பார்த்தார். ஆனால் பலனில்லை.

எது அவள் உயிரை இத்தனை மணிநேரம் பிடித்து வைத்திருக்கிறது என்று அவருக்குப் புரியவில்லை. அவள் திறக்க முடியாமல் தன் விழிகளைத் திறந்து அவரிடம் பேச முயல அவர் அவள் அருகே சென்று அவள் சொல்வதைக் கேட்டு முதலில் வியப்புற்று அவளைப் பார்க்க,

அடுத்து அவள், “எ… ன… க்கு அமராகிட்ட பேசணும்” என்று என்றாள்.

வெளியே வந்து, “அமரா யாரு” என்று கேட்டுவிட்டு, “அவங்ககிட்ட பேஷன்ட் பேசணுமா” என்று தெரிவிக்க, தேவா அவள் கைப் பிடித்து உள்ளே அழைத்து வந்தான்.

அமிர்தாவின் கரம் அமராவின் கரத்தைத் தொட்டது. அவள் அந்தத் தொடுகையை உணர்ந்த நொடி ஏதோ இனம் புரியாத நெருக்கத்தை உணர்ந்தாள்.

“அ…ம…ரா” என்றவள் சிரமப்பட்டுப் பேச குரல் வந்த திசையில் திரும்பி, “மேடம்… உங்களைப் பத்தி தேவா சொன்னான்… எங்களாலதான் உங்களுக்கு இப்படி அல்லாம்” என்று பேசவும்,

“இல்ல… அமரா… எ… ன்… னாலதான் உனக்கு… இ… ப்படி எல்லாம்” என்றவள் மேலும், “சா… ரி” என்று அவள் கரத்தை அழுத்த,

“என்ன மேடம் பேசுறீங்க?” என்று தேவா அதிர,

“அ…ம…ராவைப் பார்த்துக்கோ… அவளுக்கு… ஐ… ட்ரீ… ட்மெண்டுக்கு ஏற்பாடு ப…ண்ணு” என்று உரைத்தாள். அதன் பின் ஹரீஷ் உள்ளே நுழைந்து,

“உனக்கு ஒன்னும் ஆகாது அமிர்தா” என்று அவள் கைப் பிடித்துக் கூற,

“கி… ஸ் பண்ணு” என்றாள்.

“அமிர்து” என்றவன் அவளை யோசனையுடன் நோக்க,

“ம்ம்ம்” என்றவன் இமைகளை மூடி அழைக்க அவளை நெருங்கி அவன் முத்தமிட்டதுமே அவள் உயிர் பிரிந்துவிட்டது.

“இல்ல இல்ல” என்று ஹரீஷ் அதிர்ந்து பின்வாங்கி அப்படியே தரையில் சரிந்துவிட்டான். அந்த நொடியே அவன் உலகம் சுழலாமல் நின்றுவிட்டது.

விஷயமறிந்து தேவா கதறி அழுதுவிட்டான். அவனுக்கு அவள் ஒரு தேவதை. வரம் கொடுத்த தேவதை. அவனாலும் அவள் மரணத்தைத் தாங்க முடியவில்லை. இப்படி நடக்கும் என்று அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவன் அழுகுரல் கேட்டு அமரா எதுவும் புரியாமல், “என்னாச்சு தேவா?” என்று கேட்க,

“மேடம்” என்றவன் வார்த்தைகள் வராமல் அவன் இன்னும் உடைந்து அழ உள்ளே வந்து அமிர்தாவின் உடலைப் பார்த்த மருத்துவர், “அவங்க உங்களுக்கு அவங்க கண்களைப் பொருத்த சொல்லி இருக்காங்க” என, இதனைக் கேட்டு தேவா உறைந்து நின்றான். அமராவின் விழிகளில் தாரைத் தாரையாக நீர் வழிந்தோடியது.

அமிர்தா இறந்த சில மணிநேரங்களில் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்த காவலர்கள் தேவாவையும் ஹரீஷையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றுவிட்டனர். மேலும் அமிர்தாவின் தேகம் உடற்கூறாய்விற்கு அனுப்பப்பட்டது.

அதன் பின் நடந்தவற்றை விசாரித்து அறிந்த காவல்துறை அந்த தனி வீட்டிலிருந்த ஆல்வின் அருள்ராஜின் உடலையும் மீட்டு வந்தனர்.

அங்கிருந்த துப்பாக்கியைக் கைப்பற்றிக் கைரேகை சோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு சந்தேகத்தின் அடிப்படையில் ஹரீஷையும் தேவாவையும் கைது செய்து வைத்திருந்தனர். ஹரீஷ் ஒரு வார்த்தை கூட பேசாமல் அமர்ந்திருந்தான்.

அவர்கள் அங்கே வந்து ஒரு நாள் முழுவதுமாகக் கடந்திருந்தது.

பாலமுருகன் அந்தக் காவல் நிலைய ஆய்வாளரிடம் நிலைமையை விளக்கிப் புரிய வைத்த போதும் அவர், “ஒரே நேரத்துல மூணு மர்டர்… எப்படி சார் விட முடியும்? அதுவும் அமிர்தாங்கிறவங்க ஃபாரின் சிட்டிசன்” என,

இதனைக் கேட்ட தேவா, “நான் வோணா இங்கே இருக்கேன் சார்… நீங்க அவரை அனுப்பி விட்டுடுங்க” என்று அந்த அதிகாரியிடம் மன்றாட,

“அப்படி எல்லாம் பண்ண முடியாது” என்று அவர் கண்டிப்புடன் சொன்னார்.

பாலமுருகன் தேவாவின் தோளில் தட்டிக் கொடுத்து, “எதுவா இருந்தாலும் ஒன்னா சமாளிப்போம்… என்னால முடிஞ்சதை நான் செய்ய பார்க்கிறேன்” என்று தனக்குத் தெரிந்த அதிகாரிகளிடம் பேசினார்.

அந்தமான் யூனியன் பிரதேசம் என்பதால் அதன் அதிகார எல்லை என்பது தனிதான். ஆதலால் அப்போதைக்கு யாராலும் அவருக்கு உதவ முடியவில்லை.

அடுத்த நாள் காலை துப்பாக்கியில் ஆல்வின் மற்றும் அமிர்தாவின் ரேகைகள் பதிவாகி இருப்பதாக அறிக்கை வர, ஒருவாறு தேவாவையும் ஹரீஷையும் அனுப்பிவிட சம்மதித்தனர். இருப்பினும் அந்தமானை விட்டுச் செல்ல வேண்டாம் என்ற எச்சிரிக்கையுடனே அவர்களை அனுப்பி வைத்தார்.

அவர்கள் தங்கியிருந்த ரிஸார்டுக்குத் திரும்பியதும், “ஹரீஷ் போய் குளிச்சிட்டு வா… ஏதாவது சாப்பிடலாம்… இரண்டு நாளா சாப்பிடாம இப்படியே இருக்க” என, அவன் உணர்வற்ற பார்வையுடன் சோஃபாவில் அமர்ந்து கொண்டான்.

“ஹரீஷ் உன்னால அம்மா… நான் யாரும் சாப்பிடல டா” அப்போதும் அவனிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை.

“ஹரீஷ் மனசை விட்டு அழுதுடு” என்று கீதா கெஞ்சினார். அவனுக்கு அழுகை வரவில்லை. அவன் மனம்தான் அமிர்தாவின் இறப்பை நம்பவில்லையே.

அப்போது, “சார்” என்று அமிர்தாவின் உதவியாளர் அருகே வந்து ஹரீஷிடம் ஒரு பென்டிரைவையும் அவளின் லேப்டாப்பையும் நீட்டி, “அமிர்தா மேடம்… அவங்களுக்கு ஒரு வேளை ஏதாவது ஆகிட்டா உங்ககிட்ட இதெல்லாம் கொடுக்கச் சொன்னாங்க” என்று சொல்லும் போதே அவன் கண்களிலும் கண்ணீர் நிறைந்திருந்தது.

ஹரீஷ் அப்போதும் பதிலேதும் பேசவில்லை.

பாலமுருகன் வியப்புடன் அவளின் மடிக்கணினியில் விரலியைப் பொருத்தினார். அதில் சில கோப்புகள் இருந்தன. அதனுடன் ‘டு ஹரீஷ்’ என்று ஒரு ஒலிப்பதிவும் இருந்தது.

அதனை இயக்கிய மறுகணம் அமிர்தாவின் குரல் ஒலித்தது.

“ஹாய் ஹரீஷ்” என்றவள் சொன்னதைக் கேட்ட கணம் அத்தனை நேரம் அசையாத ஹரீஷின் கருவிழிகள் ஆவலுடன் அவள் குரல் வந்த திசையில் திரும்பின.

“அழுதிட்டு இருந்தன்னா… ப்ளீஸ் வேண்டாம்… கண்ணைத் துடைச்சுக்கோ. என்னால உன்னை அப்படி எல்லாம் அழுமூஞ்சியா யோசிக்கக் கூட முடியாது… உன் கூல் ஆட்டியூட்டும் ஸ்மையிலும்தான் எனக்கு உன்கிட்ட ரொம்ப பிடிச்சது. ஐ லவ் தட்” என்றவள் குரலில் லேசாகப் பிசிறு தட்டியது.

மீண்டும் ஒருவாறு தன் குரலை சரி செய்து கொண்டு தொடர்ந்தாள். “விடு ஹரீஷ்… உனக்கு எப்பவுமே லவ் செட்டாகல… நீ பேசாம அம்மா சொல்ற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ… ஓகே வா. அப்புறம் இந்த வருஷம் உன் முதல் படம் ரிலீஸாகி ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகும்… அதுல எனக்கு டவுட்டே இல்ல.”

”பின்ன… கதை என்னோடது இல்லயா? ஒரு வகையில நம்ம கதையோட நாயகன் நாயகி சேர்ற போல நம்ம வாழ்க்கையிலும் ஏதாச்சும் மிராக்கிள் நடந்தா நல்லா இருக்கும்… பட் அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பில்லை…”

”அதுவும் உனக்கும் எனக்கும் ஒரே மாதிரி ஏதோ தப்பா நடக்க போகுதுங்குற இன்ஸ்டிங்ட் தோணுச்சு… என்னோட கவலை என்னனா உனக்கு எதுவும் ஆகிட கூடாதுங்குறதுதான்… நேசிக்கிறவங்களோட மரணங்களை பார்க்கிறது கொடுமை…”

”ஆனா அந்தத் தண்டனையைதான் நான் உனக்குக் கொடுத்துட்டுப் போறேன்… ஐம் சாரிடா…. ப்ளீஸ் மூவ் ஆன் ஆகிடு ஹரீஷ்… சிக்ஸ்டீன் இல்லனா செவன்டீன்.”

“அப்புறம் உனக்கு ஆரம்பத்துல இருந்து நிறைய விஷயம் சொல்லணும்… எனக்கும் அமராவுக்கும் இருக்க தொடர்பு… ஆல்வின் செஞ்ச அக்கிரம்னு எல்லாத்தையும் சொல்லணும்… ஆனா இப்போதைக்கு உன்கிட்ட சொல்ல எனக்கு பொறுமை இல்ல…”

”நீ என் பென்ட்ரைவ்ல இருக்க அமராங்குற டாக்குமெண்ட்டைப் படிச்சுத் தெரிஞ்சிக்கோ… கூடவே அதுல உலகளவில் இருக்க என்னோட நிறைய பேங் அக்கௌன்ட் டீடையில்ஸ் இருக்க ஃபைலும் இருக்கு… இட்ஸ் கான்பிடென்ஷியல்… லாட்ஸ் ஆஃப் மணி.”

”அதுல இருக்க பணத்தை எல்லாம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வாழ்வாதரத்தை இழந்தப் பழங்குடியின மக்களுக்கு உதவுற மாதிரி பயன்படுத்திகோ… அதுல ஒரு ஷேரை நான் தேவா அமராவுக்காக ஒதுக்கி இருக்கேன்… அதை அவங்ககிட்ட சேர்த்துடு…”

”ஓகே… எல்லாமே சொல்லிட்டேன்னு நினைக்கிறேன். நான் இந்த ஆடியோவை முடிச்சுக்கிறேன். லவ் யூ… ஹரீஷ்” என்றவள் குரல் கடைசியாக உடைந்திருந்தது. நிச்சயமாக அவள் அழுதிருப்பாள்.

இவற்றை முழுவதுமாகக் கேட்ட கீதாவின் கண்களிலும் கண்ணீர் நிரம்பிவிட்டது.

எப்படி இந்தப் பெண் முன்கூட்டியே இப்படியோரு ஒலிப்பதிவைச் செய்துவிட்டுப் போயிருக்கிறாள். அவருக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. “நான் இந்தப் பொண்ணைத் தப்பா புரிஞ்சிக்கிட்டேங்க” என்று தன் கணவனிடம் அவர் அழுகையுடன் வருத்தப்பட்ட சொல்லும் போது காலதாமதமாகி இருந்தது.

அவள் காற்றோடு கரைந்திருந்தாள்.

அவள் இல்லை. இனி அவளைப் பார்க்க முடியாது… தற்சமயம் ஹரீஷின் மூளைக்கு அது ஆணித்தரமாக உரைத்தது. அந்த நொடி ‘அமிர்தா’ என்றவன் முகத்திலிறைந்து அழத் தொடங்கினான்.

கீதாவும் பாலமுருகனும் அவனை அணைத்துத் தேற்ற முற்பட்ட போதும் அது சாத்தியப்படவில்லை.

மரணங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எந்த மனிதனுக்கும் கிடையாது எனும் போது ஹரீஷ் போன்ற சாராசரி மனிதனுக்கு அது எவ்விதம் சாத்தியமாக முடியும்?

நொடிக்கு ஒரு தடவை பல்லாயிரம் மனித உயிர்கள் மடிகின்றன. விபத்திலோ நோயிலோ அல்லது சூழ்ச்சியிலோ மடிந்து வீழ்கின்றன.

அதுதான் இயற்கையின் நியதி. மனிதன் இயற்கையின் நியதிகளை வெல்ல நினைக்கிறான். மரணத்தைக் கொல்ல நினைக்கிறான்.

ஒரு வகையில் மரணத்தைப் பார்த்து பயந்த மனிதன்தான் கடவுளை உருவாக்கினான். தன்னைத் தற்காத்துக் கொள்ளும் புது புது ஆயுதங்களைப் படைத்தான். அந்த ஆயுதங்களைப் பின்னாளில் தன் ஈகோவை வஞ்சங்களை வனமங்களைத் தீர்த்துக் கொள்ளவும் திருப்தி செய்து கொள்ளவும் பயன்படுத்தினான்.

கூட்டம் கூட்டமாக எளிய மக்களைக் கொன்று ஒரு அதிபயங்கர இனமாக இன்று பூமியை ஆண்டு கொண்டிருக்கிறான்.

சமீப காலமாக இளமையை நீட்டித்து மரணத்தைத் தாமதிக்கும் அமரத்துவ ஆராய்ச்சியைத் தொடங்கி இருக்கிறான். ஒரு வேளை அதில் அவனுக்கு வெற்றிகிட்டிவிட்டால் இயற்கையின் சமநிலை குலைந்து போகும்.

மனிதனைப் போல பூமியை வாழ்விடமாகக் கொண்ட மற்ற உயிரினங்களின் வாழ்வாதாரம் சிதைந்துப் போகும்.

வாழும் காலம் வரை எல்லா உயிர்களின் மீதும் அன்பு கொண்டவர்களுக்கு எந்த வயதில் மரணம் வந்தாலும் அது முடிவு அல்ல. பூரணம்.

ஆனால் மருந்துகளின் மூலம் ஆயுட்காலத்தையும் இளமை காலத்தையும் நீட்டிக்கப் பேராசைப்படும் மனிதனுக்கு இதெல்லாம் புரிய வைப்பது சிரமம்தான். ஒரு வேளை அவனுக்கு அது புரிந்திருந்தால் பூமி செழித்திருக்குமே!

அந்த வகையில் பார்த்தால் அமிர்தா மறிக்கவில்லை.

அமரத்துவம் அடைந்தாள்.

மரணத்தை வெல்வது அமரத்துவம் அல்ல. மனங்களை வெல்வதுதான்.

********************நிறைவு****************

அமரா கதைக்கரு

இந்த கதை ஒரு fantasy களம் போலத் தோன்றினாலும் கதையின் நிறைய சம்பவம் நான் படித்து அறிந்த உண்மையான சம்பவங்களை ஆதாரமாகவே எழுதப்பட்டது.

அந்தமானில் வாழும் சென்ட்டினல் தீவு மக்கள் இன்னும் கற்கால முறைப்படி வாழ்கிறார்கள். அவர்கள் 60,000 ஆண்டு பழமையான தொல்குடி என்று கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் அபாரிஜன்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவர்களும் உலகின் மிகப் பழமையான திணைக்குடியினர். 60,000 ஆண்டுகால பழமையான தொல்குடியான அவர்களின் நிலங்களை ஆக்கிரமிக்க மூர்க்கமாக அவர்களை வேட்டையாடிக் கொன்ற சம்பவம் நிஜத்தில் அரங்கேறியது. பெருந்தொகையான மக்களைக் காணுமிடங்களில் எல்லாம் சுட்டுக் கொன்றனர். அவர்களின் நீர்நிலைகளில் நஞ்சைக் கலந்து கொன்றனர்.

இதே நிலை செவ்விந்தியர்களுக்கும் நிகழ்ந்தது. உலகின் மிகப் பெரிய சர்வாதிகார நாடு அமெரிக்கா. அவர்கள் செவ்விந்தியர்களின் நிலங்களை ஆக்கிரமிக்க இதே அளவு அக்கிரமங்களைச் செய்து அவர்களைக் குவியல் குவியலாகக் கொன்றனர்.

இன்னமும் அமேசான் காடுகளில் வாழும் பழங்குடியினரைத் துரத்திவிட்டு அந்த நிலங்களில் உள்ள அரிய வளங்களைத் திருடிக் கொள்ள வியாபார முதலைகள் முந்தியடித்துக் கொண்டிருக்கின்றன. இதனாலயே அடிக்கடிக் காடுகள் எல்லாம் தீப்பிடித்து எரிகின்றன.

ஏஜிங் ரிசர்ச் சமீப காலங்களில் சூடுப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. வயது மூப்பினை ஒரு நோயாக கருதி குணமாக்க ஆஸ்திரலியா ஜப்பான் நாடுகள் ஆய்வு மேற்கொண்டிருப்பதை இணையதளங்களில் மற்றும் சேப்பியனஸ் புத்தகத்தில் படித்து அறிந்து கொண்டேன்.

புத்தகங்கள்

சேப்பியனஸ் ஹோமோடியஸ்

திணைவெளி

ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்

இந்தப் புத்தகங்களின் சில பக்கங்கள் ஏற்படுத்திய தாக்கம் அமரா என்ற கதையை எழுத என்னைத் தூண்டியது.

தகவல் சேகரிக்கப்பட்ட இணையதளங்கள்

*https://www.youtube.com/watch?v=jMn4Q853Lqo&feature=youtu.be

*https://www.lifespan.io/

*https://www.nature.com/articles/s41514-021-00060-z

*https://www.britannica.com/science/human-aging

*http://www.longlonglife.org/en/transhumanism-longevity/anti-aging-supplements/senolytics-the-war-on-senescence-is-on/

*https://news.harvard.edu/gazette/story/2019/03/anti-aging-research-prime-time-for-an-impact-on-the-globe/

குறிப்பு;

நிறைய உண்மை சம்பவங்களைப் படித்து அதன் தாக்கத்தில் கதைக் கருவினை உருவாக்கியிருந்தாலும் கதையில் குறிப்பிடப்பட்ட கதாபாத்திரங்கள் புனையப்பட்ட சம்பவங்கள் இடங்கள் யாவும் எனது கற்பனையைக் கொண்டே எழுதப்பட்டன. கதையின் சில அறிவியல் தகவல்களும் கூட என்னுடைய கற்பனையுடன் இணைத்து எழுதப்பட்டவைதான்.

நன்றி.

மோனிஷா

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா