மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Ongoing novels: Solladi Sivasakthi(Rerun)Solladi Sivasakthi - Episode 8Post ReplyPost Reply: Solladi Sivasakthi - Episode 8

Quote from monisha on December 28, 2024, 5:01 PM

8

அவனின் பெயர்

சக்தி அந்தக் காரை ஓட்டிக் கொண்டு வருவது நம் நாயகனென்று அறியாமல் வழியேற அவனைத் திட்டிக் கொண்டே வந்தாள். கார் மருத்துவமனையின் உள்ளே நுழைய அந்தக் காயம்பட்ட இளைஞன் அவசர சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட, சக்தியும் ஜெயாவும் பின்னோடு சென்றனர்.

ஜெயா அவளருகில் வந்து,

“நாம எப்படி ஹாஸ்டலுக்குப் போவது?” என்று கேட்க, அதைப் பற்றிக் கவலை இல்லாமல் சக்தி சிகிச்சை அறையைவிட்டு வெளியே வந்த டாக்டரிடம், “அவருக்கு எப்படி இருக்கு டாக்டர்?” என்று கேட்டாள்.

“ஹீ இஸ் இன் சீரியஸ் கண்டீஷன்... நீங்க இனிஷயல் பில் பே பண்ணுங்க... டீரிட்மன்ட் ஸ்டார்ட் பண்ணனும்” என்றார்.

“நாங்க அவரோட ரீலேஷன் இல்ல... ரோட்டில ஆக்ஸ்டென்ட்டாகி இருந்தாரு” என்றாள் சக்தி.

“அப்போ போலீஸுக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு டாக்டர் விறுவிறுவென நடந்து சென்றார்.

ஜெயா சக்தியின் அருகில் வந்து,

“நல்லா மாட்ட வைச்சுட்ட... இப்போ ஹாஸ்டல் போகக் கூடக் கையில காசு இல்ல... அதுவும் இல்லாம போலீஸ் வந்தா நீங்க யாரு... இந்த நேரத்தில எங்க போனிங்கன்னு கேட்டா என்னடி பதில் சொல்றது?” என்று பதட்டத்தோடு உரைத்தாள்.

இவ்வாறு ஜெயா சொன்னதும் சக்தி யோசிக்கத் தொடங்கினாள். அவள் அந்தப் பிரச்சனைக்கான தீர்வைக் குறித்துச் சிந்திக்க ஜெயாவோ,

“போச்சி... செத்தோம்... நீ பரவாயில்ல… உங்க அண்ணனுக்குச் செல்ல தங்கச்சி... எங்க அப்பா என்னை உயிரோட விடமாட்டாரு... அவரு அடிச்சாக்கூடப் பரவாயில்ல... மனுஷன் அட்வைஸ் பண்ணியே கொல்லுவாரே” என்று புலம்ப ஆரம்பித்தாள்.

“போதும் நிறுத்து ஜெயா” என்று சக்தி சொல்லிவிட்டு, ஜெயாவின் கையைப் பிடித்துக் கொண்டு மருத்துவமனை வாசலுக்கு வந்தாள். அவளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

தான் எத்தனை பெரிய தவறை செய்துட்டோம் என்று சிவசக்தி தாமதமாகவே உணர்ந்தாள். நேரம் கடந்து கொண்டே இருக்க ஜெயாவின் கவலை அதிகரித்துக் கொண்டே இருந்தது.

அந்த நேரத்தில் உள்ளே இருந்து வந்த நர்ஸ்,

“நீங்க அட்மிட் பண்ண பேஷன்ட் பிழைச்சிக்கிட்டார்“ என்றாள்.

சிவசக்தி அந்த இக்கட்டான சூழ்நிலையையும் மறந்து புன்னகை செய்தாள். பின்னர் ஏதோ யோசித்தவளாய்,

“ஏதோ ட்ரீட்மன்ட் பண்ண... பேமன்ட் பண்ணனும்னு டாக்டர் சொன்னாரே?” என்று கேட்டாள்.

“அதெல்லாம் கட்டியாச்சே” என்றாள் அந்த நர்ஸ்.

“யாரு... பேஷன்டோட ரிலேஷனா?!”

“இல்லை... உங்க கூட வந்தவர்தான்”

சக்தியும் ஜெயாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க,

“உங்க கிட்ட இந்த விஷயத்தைச் சொல்ல சொல்லி அவர்தான் சொன்னாரு” என்று சொல்லிவிட்டு அந்த நர்ஸு நகர்ந்துவிட்டாள்.

“நம்மல கார்ல கூட்டிட்டு வந்தவரோ?!” என்று கேட்டாள் ஜெயா.

“நிச்சயம் அவனாதான் இருக்கும்” என்று சக்தி யூகித்தாள்.

“அப்படி இருக்குமோ... நான் முகத்தைப் பார்க்கவேயில்லையே சக்தி... நீ பார்த்த?” என்று ஜெயா கேட்க சக்தி இல்லையெனத் தலையாட்டிவிட்டு,

“சே... மிஸ் பண்ணிட்டேன்” என்று அவதியுற்றாள்.

இத்தனை அருகிலிருந்தும் அவனைப் பார்க்க தவறி விட்டோமே என இரு தோழிகளின் முகத்திலும் ஏமாற்றம் வெளிப்பட்டது.

சட்டென்று சக்தி, “அந்த நர்ஸுக்குத் தெரிஞ்சிருக்கும் இல்ல” என்று சொல்லிவிட்டு, சக்தி மருத்துவமனைக்கு உள்ளே செல்ல ஜெயாவும் பின்னோடு சென்றாள்.

சக்தி அந்த நர்ஸை கேட்ட போது அவள் சுற்றிச்சுற்றி பார்த்துவிட்டு தெரியலயே என்று சுலபமாய்ச் சொல்லிவிட்டாள். அந்த ஒரு வார்த்தை சக்தியை எரிச்சல் அடையச் செய்தது.

ஜெயா சிரித்தபடி, ”ஏன் சக்தி... அந்தக் கார்ல அவன் இருந்திருந்தா... நீ அவனைத் திட்டின திட்டை எல்லாம் கேட்காமலா இருந்திருப்பான்” என்று ஜெயா சொல்லும் போதுதான் சக்திக்கு அவனைத் தான் கன்னாபின்னாவென்று வாயிற்கு வந்ததை எல்லாம் உரைத்துத் திட்டியது நினைவுக்கு வந்தது.

அந்த யோசனையில் அவள் அமர்ந்திருக்க ஜெயாவை நோக்கி வந்த நபர் ஒரு கடிதத்தை அவளிடம் நீட்டினார். அவள் சக்தியை பார்த்துவிட்டு,

“இந்த லெட்டர் எனகில்ல... அவங்களுக்கு” என்று சக்தியை சுட்டிகாட்டினாள்.

“நீங்கதானே ஜெயா?” என்று அவன் கேட்க ஜெயா புரியாமல், “ம்ம்ம்” என்று தலையசைத்தாள்.

“அப்போ இது உங்களுக்குதான்” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

சக்தியும் ஆச்சர்யத்தோடு பார்க்க ஜெயா குழப்பத்தோடு பிரித்தாள்.

“தோழி ஜெயா,

உங்க ப்ஃரண்டுக்கு என்னைப் பார்க்க, பேச விருப்பமில்லை. அதனாலதான் இந்த லெட்டரை உங்களுக்கு அனுப்பினேன்.

உங்க பிரண்டு சக்திக்கு, கோபம் வந்தா மூளை வேலை செய்யாதோ?” என்று படித்து விட்டு ஜெயா சிரிக்க சக்தி, “இடியட்” என்று சொல்லி அந்தக் கடிதத்தை அவள் பிடுங்க யத்தனிக்க ஜெயா மேலே படித்தாள்.

“இப்படிச் சொன்னா உங்க ப்ஃரண்டுக்குக் கோபம் வரும். பட் என்ன பண்றது. உண்மை அதுதான். இந்த நேரத்தில வர சொன்னதும் இல்லாம நான் என்ன சொல்ல வரன்னு கூட உங்க ப்ஃரண்டு கேட்காம போஃனை கட் பண்ணிட்டாங்க.

அது கூடப் பரவாயில்லை. இந்த நேரத்தில வர சொன்னது உங்க ப்ஃரண்டு. அப்புறம் என்னை இடியட் ராஸ்கல்னு திட்டினா அது என்ன நியாயம். எனக்குப் புரியல.

ஆனா ஒரு விஷயத்தில உங்க ப்ஃரண்டை பாராட்டனும். யாருன்னு தெரியாத ஒருத்தனோட உயிரை காப்பாத்த தன்னோட இக்கட்டான சூழ்நிலையைப் பத்தி கவலைபடாம செயல்பட்டாங்க.

அப்படி ஒரு சூழ்நிலையில் கார்ல ஏறின உங்ககிட்ட நான் என்னை எப்படி அறிமுகம் செய்து கொள்ள முடியும். அதான் நான் அமைதியா இருந்துட்டேன். அதுவும் இல்லாம இப்போதைக்கு சக்திக்கு என்னைப் பார்க்கிற விருப்பமும் ஆர்வமும் இல்லை. கோபம் மட்டும்தான் இருக்கு.

என்னைக்கு சக்தி என்னைப் பார்க்கனும்னு உண்மையிலேயே விருப்பப்படறாங்களோ அப்போ உங்க ப்ஃரண்டுகிட்ட நானே வந்து அறிமுகம் செஞ்சிப்பேன்.

இப்போ வெளியே கார் வெயிட் பண்ணுது. ஹாஸ்டல் போய்ச் சேர்கிற வழியைப் பாருங்க. முக்கியமான விஷயம்.

சுவறேறி குதிக்காம கேட் வழியா போங்க. எந்தப் பிரச்சனையும் வராது” என்று அவனின் புரியாத கையெழுத்தோடு முடிந்திருந்த அந்தக் கடிதத்தைப் படித்து இருவருமே அதிர்ச்சிக்குள்ளாயினர்.

ஜெயா சக்தியின் கையைப் பிடித்து வெளியே நின்றிருந்த கார் வரை அழைத்துச் சென்றாள். சக்தி தயங்கி நிற்க, “நான் காலேஜ்ல இருந்து டிஸ்மிஸ் ஆகனுமா சக்தி ?” என்று மிரட்டி உள்ளே ஏற வைத்தாள்.

அவர்கள் ஹாஸ்டலுக்குள் நுழைய வார்டன் சக்தியையும் ஜெயாவையும் எரித்து விடுவதைப் போல் பார்த்தாள். ஆனால் எதுவும் சொல்லாமல், “கோ டூ யுவர் ரூம்ஸ்” என்று சொல்ல இருவரும் தப்பிப் பிழைத்தோம் என்று அறைக்கு வந்து சேர்ந்தனர்.

அந்தத் தோழிகள் இருவரும் அறைக்குள் வந்து இயல்பான நிலைக்குத் திரும்பிய பின் ஜெயா சக்தியை நோக்கி,

“நீ உன் வாயை வைச்சிட்டு சும்மா இருந்திருந்தால் நாம ஹீரோ சாரை பார்த்திருக்கலாம் சக்தி”

“அதென்னடி ஹீரோ சார்?” என்று சக்தி வியப்பு குறியோடு பார்த்தாள்.

“நம்மை எவ்வளவு பெரிய பிரச்சனையிலிருந்து காப்பாத்தி இருக்காரு... அப்போ அவர் ஹீரோ சார்தானே” என்றாள்.

“எனக்குப் புரிய மாட்டேங்குது ஜெயா... அவன் யார்? நம்ம செய்றதெல்லாம் அவனுக்கு எப்படித் தெரியுது... பெரிய ஷாக்! அவன் எப்படி அந்த லேடி ஹிட்லரை சமாளிச்சான்? அவன் கண்டிப்பா நம்ம காலேஜ் ஸ்டூண்ட் இல்ல... அவன் நிச்சியமா ஏதாவது பெரிய பவர்ல இருக்கும்” என்று சக்தி ஆழமாய் யோசித்தாள்.

“அப்படின்னா நம்ம காலேஜ் கரஸ்பான்டென்டாதான் இருக்கனும்” என்று ஜெயா சொல்ல சக்தி அவளிடம்,

“உளராதே... நம்ம காலேஜ் கரஸ்பான்டென்ட் ஒரு லேடி... அவங்க பேர் மீனாக்ஷி வாசுதேவன்” என்றாள்.

அன்று அவர்களின் வாக்குவாதம் அப்படியே முடிவுற்றது. இன்று சக்திக்கு மீண்டும் அந்தச் சிந்தனை வந்தது. மீனாக்ஷி வாசுதேவனோ இன்று பெரிய அரசியல் புள்ளி.

அவள் கணவனோ வட இந்தியாவைத் தன்வசம் வைத்திருக்கும் தொழில் அதிபர் மோகன் ராம் என்பது அவள் கேள்விப்பட்ட ஒன்று.

இவர்களைப் பற்றிய விவரங்களை சக்தி தன் போஃனில் உள்ள இணையதளத்தில் தேட, அந்தச் சமயத்தில் கீதா எழுந்து அவள் அருகில் வந்தாள். கீதா அந்த நேரத்தில் உறங்காமல் குழப்பத்தோடு இருக்கும் சக்தியை நோக்கி,

“என்ன பிரச்சனை சக்தி? ஏன் தூங்காம இருக்க? என்கிட்ட சொல்ல கூடாதா?” என்று அவளைக் கூர்மையாய் நோக்கினாள்.

சக்தி ஏதேதோ காரணம் சொல்லிச் சமாளிக்க அதைக் கீதா நம்புவதாக இல்லை. இறுதியாய் சக்தி எல்லாவற்றையும் சொல்ல கீதாவின் முகத்தில் வியப்பின் குறி வெளிப்பட்டது.

“செம இன்டிரஸ்ட்டிங்கான ஆளா இருக்கான்”என்றாள் கீதா அதிசயித்தபடி!

“எனக்கு இரிட்டேட்டிங்கா இருக்கு... உனக்கு இன்ட்டிரஸ்ட்டிங்கா இருக்கா?!” என்றாள் சக்தி.

“சரி... இப்போ பேரை கண்டுபிடிச்சியா இல்லயா?” என்று கீதா வினவினாள்.

“ஒரு சின்ன க்ளு... அவன் காலேஜ் கரஸ்பான்டென்டுக்கு ரிலேட்டிவ்வா இருக்கலாம்னு தோணுது கீதா” என்றாள் சக்தி.

“நீ இப்படிச் சொன்ன பிறகு எனக்கு இன்னொரு விஷயம் தோணுது... அந்த மிஸ்டிரியான மேன்... ஏன் மீனாக்ஷி மேடமோட சன்னா இருக்கக் கூடாது” என்று கேட்டுவிட்டு கீதா சக்தியை நோக்க இருவருமே யோசனையில் ஆழ்ந்தனர்.

பின்னர்ச் சக்தி தெளிவுபெறாமல்,

“மீனாக்ஷி வாசுதேவன் சன்னா... உனக்குத் தெரியுமா?” என்று கேட்டுவிட்டு கீதாவின் பதிலை எதிர்நோக்கினாள்.

“நிறையத் தடவை அவர் காலேஜுக்கு வந்திருக்காரு... நம்ம இன்டர் காலேஜ் கல்சுரல்ஸ் பேஷன் ஷோல யாரும் கலந்துக்கப் போறதில்லைனு சொன்ன போது ஹீ இஸ் ஷவுடட் லைக் எனிதிங்...

தோற்றாலும் பரவாயில்ல... யாராச்சும் கலந்துக்கிட்டே ஆகனும்னு ஸ்டிரிட்டிக்கா சொல்லிட்டாரு... அதனாலதான் நான் உன்கிட்ட வந்து கெஞ்ச வேண்டியதா போச்சு... அவர் பார்க்கதான் ஆளு செம ஸ்மார்ட்... ஆனா கோபம் வந்தா பயங்கர அரங்கன்ட்” என்றாள் கீதா.

சக்தி யோசித்துவிட்டு,

“மீனாக்ஷி வாசுதேவன் சன் பேர் என்ன?” என்று கேட்டாள் ஆவலோடு!

“கண்டிப்பா சொல்லணுமா?” என்று குரும்புத்தனமான புன்னகையோடு கேட்டாள் கீதா.

“கீதா... ப்ளீஸ் சொல்லு” என்று கெஞ்சினாள் சக்தி.

“சொல்றேன்... சக்தி” என்று கீதா சொல்ல சக்தி பொறுமை இழந்தவளாய் அவள் கழுத்தை நெறித்து “டென்ஷன் படுத்தாதே சொல்லு” என்றாள்.

“சக்தீ” என்று கீதா இழுக்க,

“உன்னைக் கொல்லப் போறேன்” என்றாள்.

“அய்யோ விடு... அவர் பேரும் சக்திதான்... சக்திசெல்வன்... நம்ம காலேஜ் பேரு... எஸ். எஸ் அவர் பேரோட ஷார்ட் பாஃர்ம்” என்றாள்.

சக்தி அப்படியே திகைத்து போனாள். அப்போது அவன் கொடுத்த க்ளூவை சிந்தித்துப் பார்த்தாள். அன்று பெங்களூர் டிரெயினில் வரிசை பட்டியலை பார்க்கும் போது சக்தி என்றிருந்த அவன் முதல் பெயரை மட்டும் பார்த்து அவள் தன் பெயரோ எனக் குழப்பமடைந்தது நினைவுக்கு வந்தது.

அவன் கொடுத்த கடிதத்தில் இருந்த கையெழுத்தை உற்று பார்த்தாள். எஸ். எஸ் என்று வார்த்தையை அவன் புரியாத வண்ணம் சுழற்றிப் போட்டிருந்தான்.

சக்தி தன் மனதிற்குள் சிரித்தபடி,

“யூ... சக்திசெல்வன்... உன் கேம் ஓவர்... இட்ஸ் மை டர்ன்” என்று சிவசக்தி அவன் பெயரை கண்டுபிடித்துவிட்ட கர்வப் புன்னகையோடு எண்ணிக் கொண்டாள்

இவர்களின் இந்த விளையாட்டில் யார் வெற்றி பெறுவார்களோ என்பது இப்போதைக்கு விடை கணிக்கமுடியாத கேள்வி. சக்தியின் கணிப்புச் சரிதான். இனி நம் நாயகனையும் சக்தி என்று அழைப்போமே எனில் எத்தகைய குழப்பம் விளையுமோ?!

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா