மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Solladi SivasakthiSolladi Sivasakthi - Episode 32Post ReplyPost Reply: Solladi Sivasakthi - Episode 32

Quote from monisha on February 3, 2025, 10:34 AM

32

இன்ப அதிர்ச்சி

சக்திக்கும் சிவசக்திக்கும் இடையிலான அந்தக் காதல் பரிமாற்றங்கள் நிகழ்ந்தப் பின்னர், இருவரும் நேரடியாகப் பேசிக் கொள்ளும் வாய்ப்பு கிட்டவேயில்லை. சிவசக்தி ஐ. ஏ. எஸ் தேர்வுப் படிநிலைகளைக் கடந்து நேர்முகத் தேர்விற்கு முன்னேறிவிட்டாள்.

சிவசக்தியின் வெற்றியை நோக்கிய அவளின் இலட்சியப் பயணம் முடிவுறும் வேளை நெருங்கிக் கொண்டிருந்தது. இதை அறிந்து கொண்டு சக்திசெல்வன் ரோஜாப் பூங்கொத்தை வீட்டிற்கு அனுப்பி வாழ்த்துத் தெரிவித்தான்.

ஆனால் நேரில் வரமுடியாத சூழல் ஏற்பட்டதை எண்ணி அலைபேசியில் தொடர்பு கொண்டு தன் காதலையும், வந்து வாழ்த்த முடியாத ஏக்கத்தையும் சிவசக்தியிடம் சொல்லி வருந்தினான். பிரிவினால் காதல் கறைந்துவிடப் போவதில்லை எனினும் ஏக்கம் அவளைக் கரைத்துக் கொண்டிருந்தது.

இதற்கிடையில் ஜெயாவின் திருமண வேலைகள் மும்முரமாய் நடக்கலாயின. நாளை திருமணம் என்ற தருவாயில் சிவசக்தி இல்லத்தில் ஜெயா சக்தியின் அறையில் கவலைத் தோய்ந்த முகத்தோடு அவள் மடியில் படுத்துக் கொண்டிருந்தாள்.

“ஜெயா... நாளைக்கு உனக்குக் கல்யாணம்... நீ ஏன்டி இப்படி மூஞ்சை தொங்கப் போட்டிட்டு இருக்க ?” என்று சக்தி கேட்க,

ஜெயா படுத்தபடியே, “மனசெல்லாம் ஏதோ பன்னுது சக்தி... சந்தோஷமா இருக்கத்தான் முயற்சி பன்றேன்... ஆனா என்னால முடியல... நான்தான் எங்க வீட்டில ஒரே பொண்ணு... நானும் போன பிறகு அம்மாவும் அப்பாவும் என்ன பண்ணுவாங்க...

அப்பாக்கிட்ட எனக்கு எப்பவுமே கோபம் இருக்கும்... எப்படியாவது எங்க அப்பாகிட்ட இருந்து தப்பிச்சி போயிடலாம்னு தோணும்... இப்போ அப்பாவை விட்டுவிட்டு போகிறதை நினைச்சா கவலையா இருக்கு... வாய் ஓயாம அட்வைஸ் பண்ணிக்கிட்டே இருப்பாரு... ரூல்ஸ் போட்டுக்கிட்டே இருப்பாரு... அதெல்லாம் நான் ரொம்ப மிஸ் பண்ணப் போறேன்...” என்று சொல்லி அவள் மடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டு கண்ணீர் வடித்தாள்.

“ஏ... ஜெயா... அழறியா... இதெல்லாம் நம்மோட விதிடி... இதை நாம மாற்ற முடியாது... மனசைப் போட்டு குழப்பிக்காம சந்தோஷமா இரு... அதுவும் இல்லாம நீ கல்யாணம் பண்ணிக்கப் போற ராம் ரொம்ப ரொம்ப நல்லவர்...

ஸோ உன்னோட கல்யாண வாழ்க்கை ரொம்பச் சந்தோஷமானதா இருக்கும்... எனக்கு நிறையவே நம்பிக்கை இருக்கு... நீ சந்தோஷமா இருந்தா ஜோதிப்பாவும் அம்மாவும் சந்தோஷமா இருப்பாங்க...

அப்புறம் வீட்டுக்கு நான் ஒரே பொண்ணுன்னு நீ எப்படிச் சொல்லலாம்... நான் ஒருத்தி இருக்கேன் இல்ல... ஸோ டோன்ட் வொர்ரி பேபி... பீ ஹேப்பி... எங்க சிரி பார்க்கலாம்...” என்று அவளுக்கு சக்தி சிரிப்பு மூட்டிவிட ஜெயா கண்கலங்கியபடியே சிரிக்கத் தொடங்கினாள்.

“போதும் விடு சக்தி” என்று எழுந்து கொண்டவள்,

“நாம இரண்டு பேரும் இப்ப போலவே எப்பவுமே இருக்க முடியுமா சக்தி?” என்று ஏக்கத்தோடு கேட்டாள்.

“உண்மையைச் சொல்லனும்னு அப்படி முடியாது... வாழ்க்கையில் நாம அடுத்தப் படிநிலைக்குப் போகும் போது சில விஷயங்களை நாம இழந்துதான் ஆகனும்...” என்றாள்.

“என்னடி இப்படிச் சொல்ற?” என்று ஜெயா அதிர்ச்சியோடு கேட்க,

“அதுதான் ஜெயா யதார்த்தம்... அதை நாம ஏத்துக்கிட்டே ஆகனும்... நாம கடந்து வந்த நாட்களை நினைச்சுதான் பார்க்கலாம்... அதே போல ஒரு நாள் வராது... நம்ம நட்பு அப்படியேதான் இருக்கும்... ஆனா இப்ப இருக்கிற மாதிரியே அப்புறமும் இருக்கனும்னு நினைக்கிறது சாத்தியமே இல்ல...

இந்த நிமிஷம் இந்த மொமன்ட் திரும்பக் கிடைக்கவே கிடைக்காது... அதனால் இந்த நிமிஷத்தை அனுபவிப்போம்... பின்னாடி திரும்பிப் பார்க்காலமே ஒழிய போக முடியாது... நம்ம வாழ்க்கையில வர மாற்றத்தை ஏத்துக்கிட்டு நாம முன்னேறி போய்க்கிட்டே இருக்கனும்” என்று சக்தி உரைத்த போது ஜெயா கண்ணீர் துளிகளுடன் தொலைந்துவிடப் போகும் அந்த நிமிடங்களை எண்ணி வருத்தம் கொண்டாள்.

இன்று சக்தி அவள் தோழியிடம் உரைத்தவை அத்தனையும் உண்மை. ஜெயாவின் திருமணத்திற்குப் பிறகு அவர்கள் நட்பின் பிணைப்பு இத்தனை நெருக்கமாய் இருக்காது.

இருவரின் வாழ்க்கையிலும் மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்பட்டு வேறுவேறு நிலையில் இருப்பர். அப்போது அவர்கள் சந்தித்துக் கொள்ளவே நேரம் கிட்டாது. அப்படியே அபூர்வமாய்ச் சந்தித்துக் கொண்டாலும் இத்தனை நெருக்கமாய்ப் பேசிக் கொள்ள முடியாது. ஜெயாவின் மனநிலையை மாற்ற சக்தி தன்னால் இயன்ற வரை முயன்று கொண்டிருந்தாள்.

ஜெயா கேள்வி குறியோடு, “சக்தி ப்ரோ கல்யாணத்துக்கு வருவாராடி?” என்றாள்.

சக்தி சலிப்பாய் புன்னகைப் புரிந்து,

“யாருக்கு தெரியும்... மிஸ்டர். சக்தியை நேர்ல பார்த்தே ரொம்ப நாளாச்சு... சாருக்கு டைமே இல்ல... போஃன் பண்ணி பிஸியா இருக்கேன்... சாரின்னு சொல்லி ஏதாச்சும் பொக்கே அனுப்புவாரு...

அவருக்குப் போன்ல உருகி உருகி காதலிக்கிறதோட கடமை முடிஞ்சிப் போகுது... நான் அந்த மனுஷனை கல்யாணம் பண்ணா... காத்திருந்து காத்திருந்தே கிழவியாயிடுவேன்...” என்று புலம்பித் தீர்த்தவளை உற்று நோக்கிய ஜெயா அவளின் ஏக்கத்தை நன்கு உணர்ந்து கொண்டாள்.

அந்தச் சமயத்தில் ஜெயாவின் போஃன் ஒலிக்க அவள் அந்த அழைப்பைப் பார்த்து, “சக்தி ப்ரோக்கு நூறு ஆயுசு” என்று சொல்லியபடி போஃன் ஸ்பீக்கரை ஆன் செய்தாள்.

சக்தியும் ஜெயாவுடன் ஆர்வமாய்க் கைப்பேசியை நோக்க, “ஹெலோ ஜெயா...” என்றான்.

“சக்தி ப்ரோ... எப்படி இருக்கீங்க?!”

“ஏதோ இருக்கேன் ஜெயா... உங்க எல்லோரையும் பார்க்க கூட வர முடியல...” என்று அவன் சொன்னதைக் கேட்டு சக்தி ஜெயாவிடம் கண்ணசைத்துச் சிரித்தாள்.

“எல்லாரையும் பார்க்க முடியலன்னு பொதுவா சொன்னா எப்படி? சக்தியை பார்க்க முடியல... அதானே உங்க வருத்தம்?!” என்று ஜெயா கேட்டதும் அவன் பதில்பேசாமல் மௌனமாயிருந்தான்.

அவனின் அமைதி அவனின் மனவேதனையை சக்திக்கு புரியவைக்க அவள் தன் விழியோரம் ஒதுங்கிய நீரைத் துடைத்துக் கொண்டாள். அங்கே அவனின் நிலைமையும் அவ்வாறே இருந்தது.

இருபக்கமும் நிலவிய அமைதியைஜெயா கலைத்தபடி,

“என்ன சக்தி ப்ரோ?” என்று கேட்டாள்.

உடனே எதிர்புறத்தில் அவள் குரலால் சிந்தனையிலிருந்து மீண்டு,

“நத்திங் ஜெயா... சரி அது போகட்டும்... கல்யாணம் வேலையெல்லாம் எப்படிப் போயிட்டிருக்கு... ஜோதி சார் பாவம் தனியா கஷ்டப்படறாரோ?!” என்று அக்கறையாகக் கேட்டான்.

“இல்ல... ஹெல்புக்கு ஸ்கூல் ஸ்டாப்ஸ் எல்லாம் இருக்காங்க... பாத்துக்கிறாங்க... அதை எல்லாம் விடுங்க... நீங்க எப்போ வர்றீங்க?!” என்று ஜெயா கேட்ட போது அவனின் பதிலுக்காகச் சிவசக்தி ஆர்வமாய்க் காத்திருந்தாள்.

அவர்களை ஏமாற்றும் விதமாய், “ஸாரி ஜெயா... நான் இப்போ டெல்லியில் இருக்கிறேன்... வொர்க் நிறைய இருக்கு... என்னால கல்யாணத்துக்கு வரமுடியாத சூழ்நிலை... கோபப்படாதே ப்ளீஸ்” என்று அவன் சொன்னதும் சக்தியின் எதிர்பார்ப்பு உடைந்து போனது.

“போங்க சக்தி ப்ரோ... நீங்க கல்யாணத்துக்கு வரலன்னா என்கிட்ட பேசவே வேண்டாம்” என்று ஜெயா உரைக்க,

“ப்ளீஸ் ஜெயா... புரிஞ்சிக்கோ... நீதான் சக்தியை எப்படியாச்சும் கன்வின்ஸ் பண்ணனும்... அவளுக்குத் தெரிஞ்சா கன்னாபின்னான்னு கத்துவா” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஜெயா சிவசக்தியின் முகத்தைக் கவனித்தாள்.

அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது. அவன் சொல்லும் காரணங்களைக் கேட்க விரும்பாமல் அவள் அங்கிருந்து வேகமாய் எழுந்து சென்று விட ஜெயா அவனிடம்,

“ப்ரோ... போன் ஸ்பீக்கர்ல இருந்தது... சக்தி நீங்க சொல்றதை கேட்டுக் கோபப்பட்டுப் போயிட்டா” என்று ஜெயா உரைத்தாள்.

“என்ன ஜெயா இப்படிப் பண்ணிட்ட?” என்று கேட்டு சக்திசெல்வன் வருத்தமுற்றான்.

“நான் என்ன பண்ணுவேன்... அவ ஏற்கனவே உங்க மேல கோபத்திலதான் இருந்தா... இப்போ நீங்க பேசினதை கேட்டு ரொம்ப டென்ஷனாயிட்டா”

“சரி ஜெயா... சக்திகிட்ட போஃனை கொடு” என்றான்.

“ட்ரை பண்றேன்... அவ பேசுவான்னு எனக்கு நம்பிக்கை இல்ல” என்று உரைத்துவிட்டு, “சக்தி” என்று அழைத்தபடி வீடு முழுவதும் தேடியவள்

பின்னர் மாடியில் சிவசக்தி தன் கண்களைத் துடைத்தபடி நின்றுக் கொண்டிருப்பதைக் கவனித்தாள். “சக்தி” என்று ஜெயா போஃனை அவளிடம் நீட்ட, “நான் பேசமாட்டேன்” என்றாள்.

“ப்ளீஸ் சக்தி... பேசு” என்று கெஞ்சியவளிடம் அவனுக்குக் கேட்கும் விதமாய், “எதுக்குப் பேசனும் நான் பேசமாட்டேன்... காதலிக்கிற வரைக்கும்தான் பின்னாடியே சுத்துவாங்க... அப்புறம் அவங்க எங்கன்னு நாம அவங்கள தேடிட்டு அலையனும்” என்று அவள் சொன்ன வார்த்தை சக்திசெல்வனின் செவிகளில் விழுந்தது.

சக்தியின் பிடிவாதத்தை மாற்ற முடியாது என ஜெயா எண்ணிவிட்டுக் காத்திருப்பில் இருந்த சக்திசெல்வனிடம்,

“சாரி ப்ரோ... சக்தி பேச மாட்டேன்னு சொல்லிட்டா... நீங்க முடிந்தளவுக்கு வர ட்ரை பண்ணுங்களேன்” என்று கேட்க, “ம்ம்ம்” என்று ஏமாற்றத்தோடு பதிலுரைத்து விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

அவன் திருமணத்திற்கு வந்துவிட மாட்டானா என்ற ஏக்கம் இப்போது கோபமாய் மாறி இருக்க அவன் எத்தனை முயன்றும் அவளிடம் பேசவே முடியவில்லை. அவனின் அழைப்பைப் பிடிவாதமாய் அவள் ஏற்க மறுத்தாள்.

ஜெயாவின் திருமண விழா வரவேற்பு ஆரம்பிக்க அரங்கம் முழுக்க உறவினர்களை விட ஆசிரியர்களின் கூட்டமும் மாணவர்களின் பட்டாளமும் திரண்டிருந்தது. அவர்களில் பலரும் விருந்தாளிகளாய் அமர்ந்தில்லாமல் எல்லோருமே தங்களுக்கென்ற ஒரு பொறுப்பை எடுத்துக் கவனித்துக் கொண்டனர்.

ராம் ஜெயாவின் ஜோடிப் பொருத்தம் அம்சமாய் இருக்க வந்தவர்கள் எல்லோருமே அதைப் பற்றிப் பாராட்டி பேசிக் கொண்டனர். விஜய் அன்றுநடந்த மோசமான அனுபவத்திற்குப் பிறகு மீண்டும் சிவசக்தியை சந்தித்தான். சிவசக்தி கோபமாய் இருப்பாளோ என்று விஜய் நினைக்க அவள் எல்லாவற்றையும் மறந்து இயல்பாய் பேசியது அவனுக்கு வியப்பாய் இருந்தது.

ஆனந்தி சக்திக்கு உதவியாக அவளுடனே இருந்தாள். இரவு வெகு நேரம் கழித்து வரவேற்பு முடிந்துவிட அப்போதும் சக்திசெல்வன் வரவில்லை. சக்தியின் முகத்தில் வேலை செய்த களைப்பை விட அவன் எப்படியாவது வந்துவிடுவான் என்ற எதிர்பார்ப்பின் ஏமாற்றம் அதிகமாயிருந்தது.

உண்மையிலேயே சக்திசெல்வன் வேலையில் சிக்கி கொண்டதால்தான் வரவில்லை என ஜெயா சொல்ல அதைச் சிவசக்தியின் மனம் சமாதானமடைய மறுத்தது.

காலையில் திருமணமும் முடிந்து சடங்குகள் நடந்த வண்ணம் இருக்க சக்தி மணமகள் அறையில் இருந்த பொருட்களை ஒழுங்குபடுத்தியபடி பரிசுப் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

அப்போது சிவசக்தியின் போஃன் ஓயாமல் ஒலிக்க சக்திசெல்வனின் அழைப்பைக் கவனித்து நிராகரித்தாள்.

அந்தச் சமயம் ஆனந்தி சிவசக்தியிடம், “அக்கா... சக்தி அண்ணா” என்று சொல்ல சிவசக்தி வேலையைக் கவனித்தபடி,

“இப்போ உங்க சக்தி அண்ணாவுக்கு என்னடி... போஃன் பண்ணினாராக்கும்... வேலையா இருக்கேன்னு போய்ச் சொல்லு...” என்று நின்றிருந்த ஆனந்தியிடம் உரைக்க அவள் பதில் பேசாமல் புறப்பட்டு விட்டாள்.

பின்னர்ச் சிவசக்தி தனக்குத்தானே புலம்பியபடி,

“வேலைதான் முக்கியம்னா எதுக்குத் துரத்தி துரத்திக் காதலிக்கனும்... இப்போ பிஸியா இருக்காராம்... இவங்களுக்கு எல்லாம் காதல் ஒரு கேடு” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சிவசக்தியை பின்னோடு ஒரு கரம் அணைத்துக் கொள்ள அப்படியே அதிர்ந்து போனாள்.

சக்திசெல்வனின் கரத்தில் சிக்கிக் கொண்ட சிவசக்தி அவனின் அணைப்பைத் திகைப்போடு பார்த்திருந்தாள்.

“என்ன சொன்ன... என்ன சொன்ன... இவங்களுக்கு எல்லாம் காதல் ஒரு கேடான்னா... உன்னைப் பார்க்க என் வேலை எல்லாம் விட்டுவிட்டு ஓடி வந்திருக்கேன்டி... இப்பவும் பேசமாட்டியா?” என்று சிவசக்தியை கேட்க நாம் அவனின் அணைப்பில் இருக்கிறோம் என்பதை அப்போதுதான் உணர்ந்தாள்.

அவனின் கரத்தை அவள் விலக்கிக் கொள்ள முயற்சி செய்யவே இல்லை. அன்று அவனிடம் தான் கண்ட காதல் அவனின் கூர்மையான விழிகளில் ஆழமாய் இருப்பதை மெய்மறந்து ரசித்தபடி அவள் லயித்திருக்க,

சக்திசெல்வன் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்தவளின் விவரிக்க முடியாத அழகை ரசித்தபடியே நின்றிருந்தான். அவர்கள் இந்த உலகையே மறந்து தங்கள் காதலில் மூழ்கித் திளைத்திருந்தனர் என்றே சொல்லலாம்.

Cancel “தூரமில்லை விடியல்” நாவல் முடிவுபெற்றது. விரைவில் “கண்ணாடி துண்டுகள்” மீண்டும் தளத்தில் பதியப்படும். வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா