மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Ongoing novels: Thooramillai vidiyalThooramillai Vidiyal - PreFinal E …Post ReplyPost Reply: Thooramillai Vidiyal - PreFinal Episode

Quote from monisha on February 12, 2025, 9:02 PM

28

எங்கே இருக்கிறோம். என்ன செய்கிறோம் என்று எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் ஜீவிதா கவலை கொள்ளவில்லை.

அவன் மட்டுமே அவள் கண்களுக்குத் தெரிந்தான். மனதிலிருந்து கோபம், ஆற்றாமை, வேதனை, தவிப்பு அத்தனையும் அவன் தோளில் அழுகையாகக் கொட்டித் தீர்த்தாள்.

அவள் மேலும், “ஏன் டா என்னை போ ன்னு சொன்ன... ஏன் என்னை போ ன்னு சொன்ன... எதுக்கு அப்படி சொன்ன” என்று ஆவேசத்துடன் சட்டையைப் பிடித்து உலுக்கினாள். கோபமாக அடித்தாள்.

அவளின் அம்மா அப்பா தம்பி முன்னிலையில் இப்படி அவள் நடந்து கொள்வது சங்கடமாக இருந்த போதும் ஜீவிதாவின் அபரிமிதமான காதல், கோபம் இரண்டுக்கும் தடை போட அவன் விரும்பவில்லை.

ஆதலால் அவன் அவள் அணைப்பு அடி இரண்டையும் எந்தவித எதிர்வினையும் இல்லாமல் ஏற்றுக் கொண்டு,

“சாரி ஜீவி... ஐம் சாரி” என்று திரும்பத் திரும்ப அந்த வார்த்தையை ஜபித்தான்.

அந்த நொடி அவனை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

“நீ போ ன்னு சொன்னதும் நான் செத்து போயிடலாம்னு நினைச்சேன்” என்று கூற,

“ஜீவி என்ன சொல்ற” என்று அவன் அதிர்ந்த அதேநேரம் அங்கே நின்ற மற்றவர்களும் அதிர்ந்தார்கள்.

“அப்போ இருந்த சூழ்நிலைல அப்படி நடந்துக்கிட்டேன்... தப்புத்தான்... ஆனா அதுக்காக இப்படி எல்லாம் யோசிப்பியா நீ” என்று ஜீவா அவள் முகத்தை நிமிர்த்தி சீறலாக கேட்க,

“அப்போ எனக்கு அதுதான் தோணுச்சு” என்று ஜீவிதா பேசிக் கொண்டிருக்கும் போதே இடையிட்ட ஷீலா,

“உனக்கு அப்படிதான் தோணும்... உனக்குத்தான் யாரைப் பத்தியும் கவலை இல்லையே... மத்தவங்களோட வலி உனக்கு எப்பவுமே முக்கியம் இல்ல” என்று கூற,

“அப்படி ஒன்னும் இல்ல” என்று ஜீவாவின் மீதான கரத்தை எடுத்து விட்டு அவருக்குப் பதில் சொன்னாள்.

“அப்படியா... அப்போ என்னைக்காவது உங்க அப்பாவை பத்தி நீ யோசிச்சு இருக்கியா... கவலைப்பட்டு இருக்கியா... ஈஸியா செத்து போயிருப்பேன்னு பேசுற... நீ செத்து போயிருந்தா உங்க அப்பா என்ன ஆகி இருப்பாருனு யோசிச்சு பார்த்தியா” என ஜீவிதா பேச்சற்று நின்றாள்.

“ஷீலா போதும்” என்று பிரேம் மனைவியின் கையை பிடித்து கொள்ள,

“ஆமா நானும் எதுவும் பேச கூடாது... நீங்களும் எதுவும் சொல்ல மாட்டீங்க... ஆனா அவ நினைச்சதை எல்லாம் செய்வனு செஞ்சிக்கிட்டே இருப்பா... அந்த பழி எல்லாம் கடைசில என் மேலதான் விழும்... நான்தான் உங்க பொண்ணுக்கும் உங்களுக்கு இடைல வந்துட்டேனு ஆகும்” என்று ஷீலா ஆவேசமாகப் பேசியதைக் கேட்டு எல்லோரும் அதிர்ந்து நின்றனர்.

அப்போது ஜீவாவின் காலில் ஏதோ சொட்டியது போன்ற உணர்வு ஏற்பட அவன் கீழே குனிந்து பார்த்தான். ஜீவிதாவின் கையிலிருந்து வென்ப்லான் உடைந்து அதிலிருந்து இரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது.

“ஜீவி உன் கைல இரத்தம்” என்று ஜீவா பதற, பிரேம் உடனடியாக மகளின் கையை தூக்கிப் பிடித்தார்.

“மகேஷ் போய் பர்ஸ்ட் எய்ட் கிட எடுத்துட்டு வா” என்று ஷீலா அறிவுறுத்த, அத்தனை நேரம் ஒன்றும் புரியாமல் அதிர்ச்சியில் நின்ற மகேஷ் அடித்து பிடித்து கீழே ஓடி சென்று முதலுதவி பெட்டியை எடுத்து வந்து கொடுத்தான்.

பிரேம் மகளின் கையை பிடித்திருக்க, ஷீலா அவள் கரத்திலிருந்த இரத்தத்தைச் சுத்தம் செய்து மருந்து வைத்துக் கட்டிவிட்டார்.

ஜீவா படபடப்புடன் அவர்கள் செய்வதை எல்லாம் பார்த்துக் கொண்டு நின்றான்.

ஒரு வழியாக அவள் கரத்திலிருந்த இரத்தமும் நின்றது.

“கீழே போய் பேசுவோம்.... வாங்க” என்று பிரேம் அழைக்க, எல்லோரும் கீழே வந்தார்கள்.

மகேஷ் மட்டும் அந்த அறையின் அலங்காரங்களை ஏக்கமாகப் பார்த்துக் கொண்டே சென்றான்.

பிரேம் தன் கைகளில் இரத்தத்தை கழுவி துடைத்து கொண்டே வந்து சோபாவில் அமர்ந்தார்.

பின்னர், “உட்காருங்க ஜீவா” என, அவன் ஜீவிதாவை தயக்கத்துடன் பார்த்தான்.

“ஜீவி நீயும் உட்காரு” என்று அவர் சொல்ல அவள் அமைதியாக அமர்ந்து விட்டு அவனையும் கண்ணசைத்து அமர சொன்னாள்.

“நான் காபி எடுத்துட்டு வரேன்” என்று விட்டு ஷீலா உள்ளே செல்ல,

ஜீவாவையும் ஜீவியையும் மாறி மாறி பார்த்த பிரேம், “ஒரே பிளாட்ல இருந்ததால உங்களுக்கு பழக்கமா... அப்படிதான் உங்களுக்கு பழக்கம் எற்பட்டுச்சா” என்று விசாரிக்க,

“இல்ல டேடி... நாங்க பழகுனது ஒரு டேட்டிங் ஆப் மூலமா” என்றவள் செயலியில் அவர்கள் அறிமுகமான கதையை சொல்லி கொண்டிருக்கும் போது காபியுடன் வந்து நின்ற ஷீலா,

“அதெப்படி யாரு என்னனு தெரியாம ஒருத்தரோட பழக முடியுது உங்களால எல்லாம்?” என்று குற்றம் சாட்டும் விதமாக கேட்டு வைக்க அவர்கள் இருவர் முகுமும் இருண்டு விட்டது.

சட்டென்று பேச்சை மாற்றி, “சரி காபி எடுத்துக்கோங்க” என்று தட்டை நீட்டவும், எல்லோரும் எடுத்துக் கொண்டார்கள்.

அப்போது ஜீவிதா “நேரடியா பார்த்து பழகுனா மட்டும் நல்லவன் கெட்டவன் எல்லாம் நம்மால புரிஞ்சிக்க முடியுமா?” என்று காபியை பருகியபடி அவரை திருப்பி கேட்டாள்.

“ஆனா அந்த மாதிரி ஆப்ல பேசுறதுல ரிஸ்க் அதிகம் இருக்கு” என்று ஷீலா அழுத்தி சொல்ல,

“இப்போ அந்த டாபிக்குள்ள நம்ம போக வேண்டாமே” என்று பிரேம் அந்த பேச்சை அத்துடன் கத்த்ரித்துவிட்டார்.

அதன் பின் ஷீலாவை பார்த்து, “நீயும் உட்காரு” என்று அருகே உள்ள இருக்கையைக் காட்ட,

“இல்ல எனக்குக் கொஞ்சம் உள்ளே வேலை இருக்கு” என்று விட்டுச் செல்ல மனைவியைக் கவலையுடன் நோக்கிய பிரேம், மகேஷிடம் கண் காட்டினார்.

உடனே அவனும் அம்மாவின் பின்னோடு சென்றுவிட பிரேம் மீண்டும் ஜீவிதாவை பார்த்து, “சரி நீ சொல்லு... அப்புறம் எப்படி நீங்க ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சீங்க” என்று ஆர்வமாகக் கேட்க,

அவர்கள் சண்டைகளை எல்லாம் தவிர்த்துவிட்டு மேலோட்டமாக நடந்து விஷயங்களை மட்டும் சொல்லி முடித்தாள்.

அப்படி சொல்லி கொண்டிருக்கும் போதுதான் அவளுக்கு ஜீவா எப்படி இங்கே வந்திருப்பான் என்று கேள்வி எழ, “ஆமா உனக்கு எப்படி இந்த வீட்டு அட்ரஸ் தெரியும்” என்றாள்.

“நான்தான் மகேஷ்கிட்ட சொல்லி வாட்ஸப் பண்ணி அனுப்ப சொன்னேன்” என்று பிரேம் பதில் சொல்ல,

“ஆனா மகேஷுக்கு” என்று அவள் இன்னும் சந்தேகம் தீராமல் கேட்கவும் ஜீவா மகேஷின் எண்ணை தங்கள் அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியிடம் வாங்கியதை குறித்து தெரிவித்தான்.

“சரி பழைய விஷயத்தை விடுங்க... இப்போ உங்களுக்கு இடையில என்ன பிரச்னை” என்று பிரேம் கேட்கவும் இருவரும் மாறி மாறி பார்த்து கொண்டார்கள்.

அதன் பின் அவள் மெல்லிய குரலில், “பிரச்னை எனக்கும் ஜீவாவுக்கும் இல்ல... அவங்க அம்மாவுக்கும் எனக்கும்தான்” என்றாள்.

“என்ன பிரச்னை?” என்று அவர் கேட்டதுமே ஜீவி கடுப்புடன் செல்வி பேசியதை எல்லாம் கொட்டிவிட,

“இதெல்லாம் எனக்கு தெரியாதே” என்றான் ஜீவா.

“உனக்கு தெரியாதுனு இல்ல... நீ என்கிட்ட என்ன நடந்துச்சுன்னு எதுவும் கேட்கல” என்றவள் குரலில் கோபம் தொனித்தது.

அதற்கு ஜீவா, “தெரிஞ்சாலும் நான் கேட்டுருக்க மாட்டேன்... என்னால கேட்டிருக்கவும் முடியாது” என்று விட்டான்.

“அப்படினா” என்றவள் அவனை முறைக்க,

“அப்படிதான்” என்றான் ஜீவா அழுத்தமாக .

அவர்கள் மீண்டும் சண்டையிட்டு கொள்ள போகிறார்கள் என்று பயந்த பிரேம், “ஜீவிதா விடு... ஏதோ கோபத்துல பேசி இருப்பாங்க... நான் ஜீவா அம்மாகிட்ட பேசி உங்க கல்யாணத்துக்கு சம்மதம் வாங்குறேன்” என்றார்.

“அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல... எங்க அம்மா சம்மதிக்க மாட்டாங்க” என்று ஜீவா முடிவாக கூற,

“ஏன்?” என்று கேட்டார்.

“எனக்கு மனநிலை சரி இல்லாத ஒரு அக்கா இருக்கா” என்று சொல்ல பிரேம் குழப்பத்துடன்,

“மனநல சரி இல்லாத அக்காவா?” என்று கேட்க,

“ஆமா” என்றான்.

உடனே ஜீவிதா, “உங்க அக்காவுக்கும் உங்க அம்மா நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்குறதுக்கும் என்ன சம்பந்தம்” என்றாள்.

“நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா... நான் எங்க அக்காவை பார்த்துக்க மாட்டேன்... கை விட்டுடுவேனு பயப்படுறாங்க”

“நான் சென்ஸ்” என்று ஜீவி கடுகடுக்க,

“இப்போ அது உனக்கு நான் சென்ஸா தெரியலாம்... ஆனா எதிர்காலத்துல அவங்க சொன்ன மாதிரி நடக்கவும் வாய்ப்பு இருக்கு” என்றவன் சொன்னது ஜீவிதாவிற்கு சுருக்கென்றானது.

“நீ என்ன சொல்ல வர்ற... நான் உங்க அக்காவை விட்டுட்டு வா ன்னு சொல்வேணா”

“இன்னைக்கு சொல்ல மாட்ட... ஆனா எதிர்காலத்துல நீ சொல்ல மாட்டன்னு என்ன நிச்சயம்” என்று அவன் கேட்டதில் ஜீவிதா அதிர பிரேம் இடையில் குறுக்கிட்டு,

“நீ என்ன பேசிட்டு இருக்கனு தெரிஞ்சுதான் பேசுறியா” என்று சீறினார்.

“நான் என்ன பேசிட்டு இருக்கணு ஜீவிதாவுக்கு புரியலனாலும் உங்களுக்கு நிச்சயம் புரிஞ்சிருக்கும் சார்.... என்னை மாதிரி ஒருத்தனோட உங்க பொண்ணால சந்தோஷமா வாழவே முடியாதுனும் உங்களுக்கு நல்லா புரிஞ்சிருக்கும்” என்றான்.

“ஜீவா ஸ்டாப் இட்” என்று ஜீவிதா சத்தமிட, அவன் நிறுத்தவில்லை. “நீ என்கிட்ட காதலை சொல்லும் போதே நான் இதெல்லாம் உன்கிட்ட சொல்லி இருக்கணும்... ஆனா அன்னைக்கு சூழ்நிலை... உன்கிட்ட என்னால எதுவுமே பேச முடியல... எல்லாத்துக்கும் மேல நீ இவ்வளவு சென்ஸிட்டீவா இருக்குறது எனக்கு இப்போ ரொம்ப பயமா இருக்கு” என்றான்.

“நீ இப்போ என்ன சொல்ல வர்றனு முதல தெளிவா சொல்லு” என்று பிரேம் இறுக்கமான குரலில் கேட்டார்.

“என் கூட ஜீவிதா வாழ்ந்தா... அதுல அவளுக்கு மிஞ்ச போறது எல்லாம் வெறுப்பும் விரக்தியும் மட்டும்தான்... ஏன்னா என் வாழ்க்கைல எங்க அம்மாவும் எங்க க்காவும்தான் எனக்கு முதல... அவ எப்பவும் அவங்களுக்கு எல்லாம் அப்புறம்தான்” என்று சொல்லும் போது அவன் குரல் லேசாக உடைந்தது.

மறுகணமே தன்னை சமன்படுத்தி கொண்டு அவன் பேச்சைத் துவங்கினான்.

“ஒரு வேளை எங்களுக்கு கல்யாணமான பிறகு அவளுக்கும் அவங்களுக்கும் இடையில ஏதாவது பிரச்னை வந்துச்சுனா... நான் அவங்க பக்கம்தான் நிற்பேன்... என்னால ஜீவிதா பக்கம் நிற்கவே முடியாது” என்று அழுத்தமாகச் சொன்னான்.

ஆனால் இத்தனையும் அவன் ஜீவிதாவின் முகம் பார்க்காமலே கூற, அவள் முகம் வேதனையில் அப்படியே வாடிச் சுருங்கிப் போனது.

இதெல்லாம் கேட்டு கோபமான பிரேம், “இதுக்கு எதுக்கு நீ என் பொண்ணை லவ் பண்ண” என்றார்.

“நான் ஒன்னும் உங்க பொண்ணை லவ் பண்ணல... உங்க பொண்ணுதான் என்னை நேசிச்சா” என்றான்.

“எல்லாம் தெரிஞ்சும் நீ ஏன் அவ காதலை ஒத்துக்கிட்ட”

“என் வாழ்க்கைல எனக்கு கிடைச்ச ஒரே நல்ல விஷயம்... ஜீவிதாவோட காதல்தான் சார்” என்று விட்டு கண்களில் தேங்கிய நீரை துடைத்து கொள்ள, பிரேமிற்கு அவனை எப்படி எடுத்துக் கொள்வதென்று புரியவில்லை..

அதேநேரம் அவன் ஜீவிதாவின் பக்கம் திரும்பி, “ஆனா உனக்கு அப்படி இல்ல... உன்னை உயிருக்கு உயிரா நேசிக்குற அப்பா அம்மா தம்பின்னு எல்லோரும் இருக்காங்க

உனக்கு ஒண்ணுனா எல்லோரும் துடிச்சு போறாங்க... ஆனா நீதான் அவங்க யார் அன்பையும் புரிஞ்சிக்காம... உன்னை நீயே தனிமைப்படுத்திட்டு இருக்க... கஷ்டப்படுத்திட்டு இருக்க” என்று சொல்ல, அவள் கண்களில் கண்ணீர் நிறைந்தது.

“ஜீவா” என்று அவள் அவன் கரத்தை பிடித்துக் கொண்டாள்.

அவள் கண்களைப் பார்த்து அவன் தொடர்ந்து பேசினான்.

“உனக்கு தெரியும்தானே... எங்க அப்பா நான் பிறக்கும் போதே நான் என் அக்கா மாதிரி இருப்பனே நினைச்சுட்டு என்னை வேண்டாம்னு என்னை தூக்கி போட்டுட்டு போயிட்டாரு...

ஆனா உன் அப்பாவும் அம்மாவும் அப்படி இல்ல... அவங்க இரண்டு பேரும் பிரிஞ்சாலும் உன்னை அவங்க விட்டு கொடுக்கலதானே

நீ என்ன பண்ணாலும் உனக்காக அவங்க நிற்குறாங்கதானே...

அப்படி ஒரு அன்பை நீ ஏன் புரிஞ்சிக்க முயற்சி பண்ணவே இல்லன்னு எனக்கு புரியல... ஒரு வேளை நம்மகிட்ட இருக்க பொருளோட அருமை தெரியாதுன்னு சொல்வாங்களே அப்படியா?

ஆனா என் விஷயத்துல பாரு... அப்படி ஒரு அன்பை நான் அனுபவிச்சதே இல்ல... நான் எப்பவுமே ஒரு எக்ஸ்ட்ரா பீஸ் மாதிரிதான்” என்ற போது ஜீவிதாவின் கண்களில் கண்ணீர் பெருகியது.

“அப்படி எல்லாம் பேசாத ஜீவா”

“அதுதான் உண்மை ஜீவி... உன்னை பார்க்குற வரைக்கும்... உன் கூட பழகுற வரைக்கும் நான் அந்த மாதிரி அன்பை அனுபவிச்சதே இல்ல

என் வாழ்க்கை முழுக்கவும் அந்த நேசம் வேணும்னுதான் உன் காதலை கூட நான் ஒத்துக்கிட்டேன்... ஆனா இப்போயோசிச்சு பார்த்தா... நாம கல்யாணம் பண்ணிக்கிட்டா நான் முதல இழக்க போறது உன்னோட காதலாதான் இருக்கும்” என்றபடி அவன் கையை பிடித்திருந்த அவளது கையை எடுத்து தன் முகத்தில் ஒற்றி கொண்டு,

“ப்ளீஸ் என்னை கல்யாணம் பண்ணிக்காத... வேண்டாம்... நமக்குள்ள அப்படி ஒரு உறவு வேண்டாம்... அது உனக்கு எந்த வகையிலும் நல்லது இல்ல” என்றவள் அவன் கரத்தை பிடித்து கெஞ்சினான்.

“நீ ஏதோ யூகத்துல பேசிட்டு இருக்க... அப்படி எல்லாம் நடக்காது” என்றவள் சொன்னதைக் கேட்டு நிமிர்ந்தவன்,

“யூகம் எல்லாம் இல்ல... தெளிவா புரிஞ்சிட்டுதான் பேசுறேன்... உன்னால எங்க அம்மா அக்காவோட இருக்க முடியாது... என்னால அவங்கள விட்டு கொடுக்க முடியாது

அப்புறம் என்ன நடக்கும்... சண்டை சச்சரவு... டிவோர்ஸ்... அந்த சமயத்துல நமக்கு ஒரு குழந்தை இருந்துதுன்னு வைச்சுக்கோ... அது உங்க அப்பா அம்மாவை நீ வெறுக்குற மாதிரி அது நாளைக்கு என்னையும் உன்னையும் வெறுக்கும்...

தேவையா... அப்படி ஒரு வாழ்க்கை நமக்கு தேவையா” என்று சொல்லி ஆவேசமாக முடித்தவன் அவள் கரத்தை விடுத்து எழுந்து நின்று கொண்டான்.

“நான் கிளம்புறேன்” ஜீவா எழுந்து தன் பையை மாட்டிக் கொள்ள, அவள் அப்படியே அதிர்ச்சியில் உறைந்திருந்தாள்.

‘டிவோர்ஸ்’ என்றவன் சொன்ன வார்த்தை அவள் காதில் திரும்ப திரும்ப ஒலித்தது.

அங்கே நிகழ்ந்த உரையாடல்கள் மூலமாக அவர்கள் காதலின் ஆழத்தைப் புரிந்து கொண்ட பிரேம், “ஜீவா... இருங்க” என்று அவனைத் தடுக்க முற்பட்டார்.

“இல்ல நான் போகணும்... அம்மாவும் அக்காவும் வீட்டுல தனியா இருப்பாங்க... நான் அவங்கள விட்டுட்டு வெளியே ஸ்டே பண்ண முடியாது” என்று விட்டு விடுவிடுவென்று அவன் வாயிலை தாண்டி சென்றுவிட்டான்.

ஜீவிதா எதுவும் பேசாமல் அவன் செல்வதை உணர்ச்சியற்ற நிலையில் பார்த்திருக்க மகளை கவலையுடன் பார்த்த பிரேம், “நான் ஜீவாகிட்ட பேசுறேன்... எல்லாத்துக்கும் ஒரு சொல்யூஷன் கண்டிப்பா இருக்கும்... நீ கவலைப்படாத... நான் எல்லாத்தையும் சரி பண்றேன்” என்று தைரியம் உரைத்தார்.

தன் கண்களைத் துடைத்துக் கொண்டவள், “ஜீவாவோட முடிவுதான் சரி” என, “ஜீவிதா” என்றவர் ஏதோ பேச வர, அவள் தந்தையை அணைத்து பிடித்து கொண்டாள். ஒரு நொடி அவருக்கு ஒன்றுமே புரியவில்லை.

பல வருடங்களுக்கு முன்பு ஆசையுடன் அரவணைத்துக் கொண்ட போது மகளின் அந்த குழந்தை ஸ்பரிஸத்தை மீண்டும் அதே அன்புடன் உணர்வது போன்றிருந்தது. உள்ளம் நெகிழ்ந்தது.

அவரும் மகளை அணைத்துக் கொண்டுவிட, “ஐம் சாரி டேடி... ஐம் ஸோ சாரி... நான் உங்களை புரிஞ்சிக்கவே இல்ல... புரிஞ்சிக்க முயற்சி கூட பண்ணல” என்று சொல்லி அழுதாள்.

சந்தோஷத்தில் திளைத்த பிரேம் மகள் முகத்தைத் தூக்கிப் பிடித்து,

“எதுவுமே உன் தப்பு இல்லடா... உனக்கு எதையும் புரிஞ்சிக்கிற வயசு இல்ல அப்போ” என்றார்.

“அப்போ நான் புரிஞ்சிக்கல... ஓகே... ஆனா இப்பவும் நான் புரிஞ்சிக்காம நடந்துக்கிட்டு உங்களை ரொம்ப காயப்படுத்திட்டு இருக்கேன்... ஒரு வகைல ஜீவா சொன்ன மாதிரி எனக்கு கிடைச்ச அன்போட அருமை எனக்கு தெரியல” என்றாள்.

மகள் பேசுவதை ஆச்சரியமாக அவர் பார்த்திருக்க அவள், “நான் ஷீலாகிட்டயும் மன்னிப்பு கேட்கணும்” என்றாள்.

“வாங்க நீங்களும்” என்று அவரை அழைத்து கொண்டு ஷீலாவின் அறைக்குச் செல்ல,

“ஒழுங்கா மேல் ரூம்ல போட்டிருக்க குப்பை எல்லாம் எடுத்து போடு” என்று அங்கே அவர் மகேஷிடம் கண்டிப்புடன் சொல்லி கொண்டிருந்தார். அதனைக் கேட்ட ஜீவிதா,

“ஏன் எடுத்து போடணும்... அதெல்லாம் எடுத்து போட முடியாது” என்றபடி அதிரடியாக உள்ளே நுழைந்தாள்.

மேலும் ஷீலாவின் கையை பற்றி, “எழுந்து வாங்க... நீங்களும் டேடியும் வந்து கேக் வெட்டுங்க” என்றாள்.

அவளைக் குழப்பமாகப் பார்த்த ஷீலா பின், “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்” என்று மறுத்தார்.

“ப்ளீஸ்... எனக்காக வாங்க” என்றவள் அந்த நொடியே அவர் அமர்ந்திருந்த இருக்கையின் முன்னே மண்டியிட, அவர் திகைப்புற்றார்.

அவள் மேலும், “நான் செஞ்சுது எல்லாம் தப்புதான்... அப்பாவையும் உங்களையும் புரிஞ்சிக்காம ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்கேன்... நிறைய தப்பு செஞ்சிருக்கேன்... நிறையத் தடவ உங்களை எடுத்தெறிஞ்சு பேசி இருக்கேன்... ஆனா நீங்க எப்பவுமே எனக்கு நல்லது மட்டும்தான் செஞ்சி இருக்கீங்க

எனக்கு எது நல்லதோ அதை மட்டும்தான் நீங்க எனக்கு சொல்லியும் இருக்கீங்க

முதல் முறையா உங்களுக்கும் டேடிக்கும் நான் இதை செய்யணும்னு நினைக்குறேன்... ப்ளீஸ் வந்து கேக் வெட்டுங்க” என்று அவள் கெஞ்ச,

ஷீலா இறங்கிய குரலில், “இல்ல ஜீவி... வேண்டாம்... நாங்க கல்யாண நாளை எல்லாம் கொண்டாடுறது இல்ல” என்றார்.

“ஆனா... நான் உங்க கல்யாண நாளை கொண்டாடணும்னு நினைக்குறேன்... நீங்க என் அப்பா வாழ்க்கைல வந்த இந்த நாளை நான் கொண்டாட நினைக்குறேன்... ப்ளீஸ் எனக்காக... எனக்காக வாங்க” என்று ஜீவி அவர் கைகள் இரண்டையும் இறுக பற்றிக் கொண்டு வேண்டிய விதத்தில் அவரால் மறுக்க முடியவில்லை.

ஷீலா கணவனைப் பார்க்க அவரும் மனைவியைக் கெஞ்சலாகப் பார்த்தார். பார்வையாலேயே மன்னிப்பு வேண்ட அந்த நொடியே ஷீலாவின் தலை சம்மதமாக அசைந்தது.

அதன் பின் அந்த நாள் அவர்கள் வாழ்வின் மிகுந்த சந்தோஷமான நாளாகப் பதிவானது.

பிரேம் கேக்கை வெட்டி மகளுக்கு ஊட்ட, அவள் பதிலுக்கு அவர்கள் இருவருக்கும் ஊட்டி விட்டாள். அந்த அழகான தருணங்களை மகேஷ் தன் செல்பேசியில் அழகான வண்ணப் படங்களாகப் பதிவு செய்தான்.

அவனுக்குத்தான் இதில் அதிக ஆனந்தம்.

“மகேஷ் நீயும்வா” என்று ஜீவி அழைக்க, “தோ வரேன் சிஸ்” என்று அருகே வந்தவன் முகத்தில் கேக்கை ஊட்டுகிறேன் பேர்வழி என்று அவள் நன்றாக தேய்த்து விட்டாள். அதனையும் அவன் மகிழ்ச்சியுடன் தன் செல்பேசியில் பதிவு செய்தான்.

மேலும் அந்த படங்கள் அத்தனையும் அவன் நித்யாவிற்கு அனுப்பி வைக்க, அதனை கண்டு ஆச்சரியித்தவர் உடனடியாக அவனுடைய செல்பேசிக்கு காணொளி அழைப்பில் வந்து,

“ஜீவி அங்கே இருக்காளா?” என்று கேட்க,

“ஆமா ம்மா.. இங்கே தான் இருக்காங்க... இருங்க அவங்ககிட்ட போனை தரேன்” என்று செல்பேசியை அவளிடம் கொடுத்தான் மகேஷ்

“ஹெலோ மா” என்று மகளின் உற்சாகமான அழைப்பிலேயே திக்குமுக்காடிவிட்டார் நித்யா. அதன் பின் அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவர் மனதை நெகிழ்த்தியது.

“நீ இப்பயாச்சும் எங்களை புரிஞ்சிக்கிட்டியே” என்று விட்டு, “ஆமா அது என்னடி கைல ஏதோ கட்டு” என,

“அது ஒன்னும் இல்ல சின்ன காயம்தான்” என்றவள் மேலும், “சவீதா எங்கே?” என்று விசாரிக்க,

“அவ வெளியே போயிருக்கா” என்றார்.

“சரி வந்தா கால் பண்ணேனு சொல்லுங்க... நான் அவகிட்டயும் சாரி கேட்கணும்” என, அவரால் இன்னும் நம்ப முடியவில்லை. தன்னுடைய மகளிடம்தான் பேசி கொண்டிருக்கிறோமா என்று.

அவர் அதன் பின் பிரேமுக்கு அழைத்து நடந்தவற்றை எல்லாம் விசாரித்து அறிந்து கொண்டார்.

“அந்த ஜீவா நல்லவந்தானா... ஜீவி அவனை கல்யாணம் பண்ணிக்குறதுல தப்பு இல்ல” என்று கூற,

“அது ஜீவிதாவோட முடிவு... என்னதான் அப்பா அம்மாவா இருந்தாலும் அதுல நம்ம தலையிட முடியாது” என்றார்.

அன்று இரவு எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார்கள். அவர்களுடன் சந்தோஷமாகப் பேசி சிரித்த அந்த ஜீவிதா அவர்களுக்கு ரொம்பவும் புதிது. அவளை அப்படி யாருமே பார்த்ததில்லை.

அதேநேரம் அந்த சந்தோஷமான உணர்வு முழுக்க முழுக்க உண்மைதானா என்று பிரேமுக்கு ஒரு சின்ன சந்தேகமும் இருந்தது.

அன்று மட்டும் இல்லை. அதன் பிறகு அந்த வாரம் முழுக்க ஜீவிதா அவர்களுடனே தங்கி இருந்தாள். கடைகளுக்கு உணவகத்திற்கு என்று வெளியே சென்று சந்தோஷமாக நேரம் செலவழித்துவிட்டு வந்தார்கள்.

மகேஷ் தன் விடுப்பு முடிந்ததன் கிளம்பிவிட அப்போது பிரேம் ஜீவிதாவிடம், “உன் ஆபிஸ்ல இவ்வளவு லீவு போடுறது பிரச்னையாகாதா?” என்று கேட்டார்.

“யார் லீவு போட்டு வந்தா... எனக்கு வேலையே போயிடுச்சு” என்றவள் தன் அலுவலகத்தில் நடந்ததை எல்லாம் விவரிக்க பிரேம் சீற்றத்துடன்,

“பெரிய வேலை... அந்த வேலை போனா போகட்டும்... இவ்வளவு திறமையை வைச்சுக்கிட்டு நீ இனிமே எவன்கிட்டயும் கை கட்டி எல்லாம் வேலை செய்யணும்னு அவசியம் இல்ல... உனக்கு நான் சொந்தமா பிஸ்னஸ் வைச்சு தரேன்” என்று கூற புன்னகைத்த ஜீவிதா,

“தேங்க் யூ ஸோ மச் டேடி... ஆனா இப்போ நான் பிஸ்னஸ் பண்ற ஐடியால இல்ல” என்றாள்.

“.அப்போ உன் ஐடியா என்ன”

“சவீதா துபாய்ல ஒரு கம்பெனி ரெகமன்ட் பண்ணா... நான் அவங்களுக்கு என் ரெஸ்யூம் அனுப்பி வைச்சேன்... அப்புறம் என் பிராஜெக்டோட சேம்பிள்ஸ் அனுப்பி வைச்சேன்... அவங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்காம்... இம்பிரஸ் ஆகிட்டதான் சொல்லி அனுப்பி இருக்காங்க” என்றதும் அவர் முகம் வாடிவிட்டது.

“அப்படினா நீ என்னை விட்டு திரும்பவும் போக போறியா?”

“அப்போ போக வேண்டாமா... சரி போகல விடுங்க” என்ற மகளை பார்த்து முகம் மலர்ந்தவர்,

“இல்லடா நீ போயிட்டு வா... ஆனா தினமும் எனக்கு ஒரு தடவயாச்சும் கால் பண்ணி பேசு” என்றார்.

“டைம் கிடைக்கும் போதெல்லாம் பேசுறேன்” என்றாள்.

“சரி அப்போ உன்னோட ட்ரேவல் ப்ளேன் எப்போ”

“அதுக்கு இன்னும் ஒரு மாசம் ஆகும்... அப்புறம் நைனிம்மா வீட்டுல இருக்க என்னோட திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணி எடுத்துட்டு வரனும்” என்றதும் பிரேம் அவளை யோசனையாகப் பார்த்தார்.

இத்தனை நாளில் ஜீவாவை பற்றி ஒரு வார்த்தை கூட அவள் பேசவில்லை. அவனை அவளால் நிச்சயம் மறக்க முடியாது.

ஆனால் அவனை தன் வாழ்விலிருந்து நிராகரிக்க முடிவு செய்துவிட்டாளா? என்ற கேள்வி எழுந்த போதும் அதனை நேரடியாக மகளிடம் கேட்காமல்,

“அப்போ அந்த வீட்டை காலி பண்றதுன்னு முடிவு பண்ணிட்டியா” என்று வினவ,

“ஆமா முடிவு பண்ணிட்டேன்... நாளைக்கு போகலாம்னு இருக்கேன்” என்றவள் பெருமூச்செறிந்து சொல்ல, அவள் எதையோ மனதில் வைத்துக் கொண்டு தவிக்கிறாள் என்று அவருக்குப் புரிந்தது.

“நானும் உன் கூட சென்னைக்கு வரட்டுமா... இல்லனா மகேஷ் வேணா ஹெல்ப்புக்கு கூப்பிட்டுக்கோ”

“அதெல்லாம் வேண்டாம் டேடி... நானே பார்த்துக்கிறேன்” என்றவள் அடுத்த நாள் கிளம்பி சென்னைக்குப் பயணப்பட்டாள்.

Cancel “தூரமில்லை விடியல்” நாவல் முடிவுபெற்றது. விரைவில் “கண்ணாடி துண்டுகள்” மீண்டும் தளத்தில் பதியப்படும். வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா