You don't have javascript enabled
Monisha NovelsRomance

Virus Attack- 11(1)

காதல் அட்டாக் – 11(1)

அப்படியே உறங்கினான் உறங்கினான் உறங்கிக்கொண்டே இருந்தான் விஸ்வா அடுத்த இரண்டு நாட்கள் கழித்து
அவனுடைய அப்பா லண்டனிலிருந்து அங்கே வரும் வரையில்.

அதாவது அவனை அப்படி ஒரு உரக்க நிலையிலேயே வைத்திருந்தாள் மேனகா என்றுதான் சொல்லவேண்டும்.

அவனை எழுப்பி சரியான நேரத்துக்கு உணவை மட்டும் கொடுத்துவிடுவாள்.

ஒவ்வொரு முறை அவனுக்கு உணவளிக்கும் சமயத்தில், பாதி உறக்கத்திலேயே அவன் சாப்பிடுவதை பார்க்கும் பொழுதும்,
அவனுடைய அடர்ந்த நீளமான தாடி அவளை கடுப்பேற்ற, ‘போடா நீயும் உன் சாமியார் வேஷமும்” என்றுதான் தோன்றும்
அவளுக்கு.

ஆசிரமத்திலிருந்து வந்த அடுத்த நாள் விடியலிலேயே, அவனை அவனுடைய அப்பாவின் பீ ஏநேஹாவிடம் ஒப்படைத்துவிட்டு, தொல்லைநாயகியை கையுடன் அழைத்துக்கொண்டுபோய் அவளுடைய வீட்டின் வாயிலில் இறக்கிவிட்டுவிட்டு அந்த காரை ஓட்டிப் போய் ஆசிரமத்தின் அருகிலேயே நிறுத்தியவள், பேருந்துமூலம் அங்கே திரும்ப
வந்துவிட்டாள்.

ஆசிரமத்தில்தான் எல்லோரும் தன் தலையைப் பிய்த்துக்கொண்டிருந்தனர். குறிப்பாக நிர்மலானந்தா.

ஒரே இரவுக்குள் அவருடைய சாது வேஷம் கலைந்துபோனது என்பதுதான் உண்மை.

விஸ்வா தப்பித்துப் போனதில் மொத்தமாக வெறி பிடித்துப் போயிருந்தது அவருக்கு. ஆசிரம நிர்வாகிகள்
சிஷ்யர்கள் என அனைவரையும் குதறி எடுத்துவிட்டார்.

கிட்டத்தட்ட அவருடைய இருபத்தி இரண்டு வருடத் தவத்திற்குக் கிடைத்த வரம்தான் விஷ்வா.

அவனுடைய அப்பா செய்த பாவத்தின் பலனாகத்தான் உலக இன்பங்களைத் துறந்து இந்தத் துறவற வாழ்க்கை அவனை
பிடித்துக் கொண்டது. பிடித்துக் கொண்டது என்று சொல்வதைவிட அவனை அதற்குள் பிடித்து வைத்திருந்தார் முன்நாள் நிர்மல் இந்நாள் நிர்மலானந்தா.

அன்றைய காலகட்டத்தில் நிர்மல் ஒரு விஞ்ஞானி. அதாவது ஒரு மரபணு ஆராய்ச்சியாளர்.

அவர் வாழ்ந்த சமுதாயத்தில் அவர்தான் முதல் பட்டதாரி. அவரைத்தான் திருமணம் செய்வேன் என ஒற்றைக்காலில் நின்ற அவருடைய மாமன் மகளை மணந்து கொள்ள மனமில்லாமல் கல்லூரியில் உடன் படித்த சகுந்தலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார் நிர்மல்.
அவருக்குப் படிப்பு தண்ணீர் பட்ட பாடாக இருக்க மேலே மேலே படிக்க உதவித் தொகையும் கிடைக்கவும் தன் கல்வித்தகுதியை வளர்த்துக் கொண்டே போனார் நிர்மல்.

அதன் காரணமாக சகுந்தலா வேலைக்கு போய்தான் இருவருக்குமாகச் சம்பாதிக்கும் சூழ்நிலை உண்டாக,
அதுவே ஒரு கட்டத்தில் இருவருக்குள்ளும் கருத்துவேறுபாடு ஏற்படக் காரணமாகிப்போனது.

வயது முதிர்ச்சியும் மன முதிர்ச்சியும் இல்லாத காலகட்டத்தில் அவர்கள் செய்து கொண்ட அவசர திருமணம்
அவசரமாகவே முடிந்து போனது.

நிர்மல் மேல்படிப்பு ஆராய்ச்சி படிப்பு என முழுவதுமாக அதில் மூழ்கிப் போனார்.

நாட்கள் செல்ல செல்ல, அவருடைய கனவு லட்சியம் ஆசை வெறி என அனைத்துமே அவர் செய்துகொண்டிருந்த மரபணு ஆராய்ச்சியாக மாறிப் போக சகுந்தலா என்ற பெண்ணே அவர் நினைவில் இல்லை என்ற அளவுக்கு அந்த திருமணத்தையே
மறந்து போனார் அவர்.

அவர் எண்ணம் செயல் என அனைத்துமாக அவர் செய்துகொண்டிருந்த ஆராய்ச்சியில் மட்டுமே இருந்தது.

அப்பொழுது அவர் செய்துகொண்டிருந்த ஆராய்ச்சியை அடுத்த படி நிலைக்கு கொண்டு போக அவருக்கு ஒரு
ஸ்பான்சர் தேவைப்பட
,
அப்பொழுதுதான்
தொடங்கப்பட்டிருந்த ’விஸ் ஜெனிட்டிகல் ரிசர்ச் லேப்’ அவருடைய அறிவையும்
புத்திசாலித்தனத்தையும் பார்த்து அவரை தத்தெடுத்துக் கொண்டது.

அவருக்குக் கீழே பத்துக்கும் மேற்பட்ட உதவியாளர்களை நியமித்து அவருக்கென்று ஒரு தனிப்பட்ட குழுவை
உருவாக்கி
,
அவரது கண்டுபிடிப்புகள் மொத்த செலவையும் ஏற்றுக்கொண்டது அந்த நிறுவனம்.

அதன் பின் கிட்டத்தட்ட ஐந்து வருட காலம் போராடி, விலங்குகளிடமிருந்து பெறப்பட்ட ஸ்டெம்
செல்களை கொண்டு சோதனை கூடங்களில் அவற்றின் மாமிசத்தை செயற்கையாக உருவாக்கும்
தொழில் நுட்பத்தில் ஒரு புதிய யுக்தியைக் கண்டுபிடித்தார் நிர்மல்.

அதன் மூலம் சந்திரமௌலியின் மாமிச ஏற்றுமதி நிறுவனம் மிகப் பெரிய லாபத்தைச் சம்பாதிக்க இயலும்
என்ற நிலை உருவாக
,
அந்த கண்டுபிடிப்பின் மொத்த உரிமத்தையும் தன் பெயருக்கே கொடுக்கும்படி நிர்மலை
நிர்பந்தித்தார் சந்திரமௌலி.

அதற்கு நிர்மல் மறுக்கவும், அதன்
பிறகுதான் தொடங்கியது அவருக்கான உண்மையான சோதனை காலம்.

எவ்வளவு அறிவும் புத்திசாலித்தனமும் இருந்தாலும் கூட, பண பலமும் அதிகார பலமும், அநியாயத்திற்குத் துணை போய் அதற்கு ஜால்ரா தட்ட ஒரு கூட்டமும் இருக்கும் பொழுது, ஒரு தனி நபரின் திறமை சற்று அமிழ்ந்துதான் போகிறது.

அதற்கு விதிவிலக்கில்லாமல் சந்திரமௌலிக்கு முன் தனது அறிவுசார் சொத்துரிமை அனைத்தையும்
இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் நிர்மல்.

அதாவது அவருடைய கண்டுபிடிப்பை அப்படியே பறித்துக்கொண்டார் சந்திரமௌலி என்றுதான் சொல்ல வேண்டும்.

நிர்மலுடைய குழுவிலிருந்த ஒரு பெண்ணே அவர் மீது பாலியல் புகார் கொடுக்க, பெண் என்ற காரணத்தால் சட்டமும்
அவளுக்குச் சாதகமாகிப் போக
,
சில வருடம் சிறைத் தண்டனை அனுபவிக்கவேண்டிய கொடுமைக்கு ஆளானார் நிர்மல்.

நீதி மன்றத்தில் அவர் தன் பக்க நியாயத்தை எடுத்துச்சொல்ல, அவை கொஞ்சம் கூட எடுபடவில்லை அங்கே.

நீதிக்குத் தேவை சாட்சி. அப்படி ஒரு சாட்சியைத் தனி ஒருவராக, அதுவும் நீதிமன்ற காவலில்
இருப்பவராதலால் அவரால் கொண்டு வர இயலவில்லை.

செயற்கை முறையில் மாமிசம் என அவர் சொன்ன உண்மை அங்கே கேலிக்குரிய விஷயமாகப் பார்க்கப்பட்டது.
சோடிக்கப்பட்ட ஆதாரத்துடன் அந்த பெண் சொன்ன பொய் உண்மையாகிப்போனது.

அவரது தன்மானத்திற்கு விழுந்த அடியில் துவண்டு போனவர், தன்னை நிரூபிக்க இயலாமல் உடைந்தே போனார் நிர்மல். தண்டனை காலம் முடிந்து திரும்ப வந்து பார்க்க அவருடைய அடையாளம் மொத்தமும் அழிக்கப்பட்டிருந்தன.

ஏற்கனவே வாடகை வீட்டில்தான் இருந்தார் அவர். இப்பொழுது அதுவும் இல்லாமல் போயிருந்தது.

அவர் படித்து வாங்கிய சான்றிதழ்களெல்லாம் போன இடம் தெரியவில்லை. பிழைக்கவும் வழி தெரியவில்லை.

கையில் வைத்திருந்த சொற்ப பணத்துடன், இருந்த
ஒரு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் குடிபுகுந்தார் நிர்மல்.

அங்கே இருந்த ஆதி துலுக்கானத்தம்மன் கோயில்தான் அவருக்கு ஒரே புகலிடமாக இருந்தது.

அங்கே இருந்த வேப்ப மரத்தைச் சுற்றி ஒரு மேடை அமைக்கப்பட்டிருக்கும்,. தினமும் அதில் போய் உட்கார்ந்திருப்பார் அவர்.

அவர் அணிந்திருத்த பழுப்பாகிப் போன வெள்ளை உடையும், அவருடைய தாடியும், அவர் முகத்தில் ஒளிர்ந்த அறிவு களையும் அவருக்கு ஒரு தெய்வீக தோற்றத்தைக் கொடுக்க, ஏதோ சித்தர் என்கிற பார்வையில் அவரை
பார்க்க ஆரம்பித்தனர் அந்த கோவிலுக்கு வந்துபோகும் பாமர மக்கள்.

தானாகப் போய் ஏமாற்றவேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை அவர். அவர்களாகவே தேடிவந்து
தொடக்கத்தில் அவர் கையிலிருந்து குங்குமத்தை வாங்கி சென்ற மக்கள் அடுத்த நிலையாகக் காணிக்கை கொடுக்க ஆரம்பித்து தாங்களாகவே தங்களை ஏமாற்ற அவருக்கு ஒரு புதைய வழியை வகுத்துக் கொடுத்தனர்.

அப்பொழுதுதான் தன்னை வஞ்சித்த இந்த உலகத்தைப் பதிலுக்கு தானும் வஞ்சித்தால் என்ன என்ற கேள்வி உருவானது நிர்மலுக்கு.

நிர்மல் நிர்மலானந்தாவாக மாற தொடங்கினார்.

அவர் சொன்ன அறிவியலை நம்பாத கூட்டம், தனக்கென
ஒரு பாணியை வகுத்துக்கொண்டு அலங்காரமான பேச்சு சாதுரியத்துடன் அவர் சொன்ன ஆன்மிகத்தை நம்பியது.

தானே தன்னை கடவுள் என உருவாக்கப்படுத்திக்கொண்டார் நிர்மலானந்தா.

அதையும் நம்பியது அந்த கூட்டம்.

சில்லறையில் தொடங்கி கோடிகளில் கொட்ட தொடங்கியது பணம்.

கை தட்டவும், ஜால்ரா தட்டவும், ஆடச் சொன்னால் ஆடவும் பாடச் சொன்னால் பாடவும் குதிக்கச் சொன்னால் குதிக்கவும் ஏன் சாகச் சொன்னால் அவருக்காக உயிரை
விடவும் கூட ஒரு கூட்டம் உருவாகி இருந்தது.

அவர் செல்லும் இடங்களிலெல்லாம் அவருக்கு ஆசிரமங்கள் உருவாகிக்கொண்டே போனது.

ஆனாலும் அவருடைய மனதுக்கு மட்டும் அமைதியே கிட்டவில்லை.

காரணம் சகுந்தலா. சிறை கொடுத்த தனிமை அவளை அடிக்கடி நினைக்க வைக்க, மனம் அவளுக்காக ஏங்க ஆரம்பித்திருந்தது.

எங்குத் தேடியும் அவளைக் கண்டுபிடிக்கவே இயலவில்லை அவரால்.

அனைத்துமாக ஒன்று சேர்ந்து போக சந்திரமௌலியின் பால் தீராத வன்மம் மனதின் ஒரு மூலையில் செந்தணலாகக்
கனன்றுகொண்டே இருந்தது.

பல வருடங்கள் கழித்து அவரை பழிவாங்க ஒரு சந்தர்ப்பமாக நிலர்மலானந்தா என்கிற நிர்மலிடம் வந்து வகையாகச்
சிக்கினான் சந்திரமௌலியின் திரண்ட சொத்துக்களுக்கு ஏக போக வாரிசான அவருடைய ஒரே
மகன் விஸ்வா.

 

2 thoughts on “Virus Attack- 11(1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content