மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Ongoing novels: Seethaigal Yaaro - From 30th episodeSeethaigal Yaaro - Episode 40(Pre …Post ReplyPost Reply: Seethaigal Yaaro - Episode 40(Pre-Final)

Quote from monisha on April 16, 2026, 6:38 PM

அத்தியாயம் 40

ரொம்ப நாட்களுக்குப் பிறகு சிந்து, அன்றுதான் நன்றாக உறங்கியிருந்தாள். ஆழ்ந்த நித்திரை. கண் விழித்தபோது எங்கும் ஒரு பேரமைதி!

அன்று அவளுக்குப் ட்யூட்டி இல்லை. ஆதலால் நிதானமாகக் காலைப் பணிகளை முடித்து, முகத்தைக் கழுவித் துடைத்துக்கொண்டு காபி போட வந்தவள், ஏதோ சந்தேகப்படும்படியாகச் சத்தம் கேட்டு எச்சரிக்கையுடன் சுற்றும் முற்றும் பார்த்தாள். பொறியில் மாட்டியிருந்த எலிதான் சத்தமிட்டுக் கொண்டிருந்தது. அதனை பார்த்தவள் இதழ்கள் விரிந்தன.

“நீதானா அந்த கல்ப்ரிட்... பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவாங்குறது சரியாதான் போச்சு” என்று சொல்லி அவள் அந்தப் பொறியைத் தூக்கிப் பார்த்தாள்.

“இன்னைக்கு நீதான் என்னோட கம்பெனி,” என்று அதனைத் தூக்கி மேடைக்கு அருகே இருந்த திண்டில் வைத்துவிட்டுப் பாலைக் காய்ச்சினாள். “இரு, உனக்கும் ஏதாவது வைக்கிறேன்” என்றவள் தேங்காய் துண்டு ஒன்றை வைக்க, அந்த எலி அவளை விசித்திரமாகப் பார்த்தது.

“என்ன சாப்பிட மாட்டியா? போட்டுத் தள்ளிடுவேன்னு பயமா இருக்கா? ஆமா, உன்னைப் பிடிக்கிறேன்னு ஒருத்தி இந்த வீட்டுல சுத்திட்டு இருந்தா... இப்போ யோசிச்சா அவ உன்னைப் பிடிக்கிற மாதிரி போக்கு காட்டிட்டு இருந்திருக்கா... துரோகி?” என்று பொறுமிக் கொண்டிருக்கும்போதே கதவு தட்டும் சத்தம் கேட்டது.

“இரு வந்துடுறேன்” என்று எட்டிப் பார்த்தவள், “பாரூக், உள்ளே வா,” என்று அவனை பார்த்ததும் உற்சாகமானாள்.

“நீ யார்கிட்டயோ பேசிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு,” என்று கேட்டுக்கொண்டே அவனும் உள்ளே நுழைந்தான்.

“ஆமா, ஒரு பிரண்ட் கிட்ட.”

“யாராவது வந்திருக்காங்களா?”

“இல்ல இல்ல, ரொம்ப நாளா இந்த வீட்டுலதான் இருக்கான்.”

பாரூக் முகம் மாறியது. “உள்ளே வா, உனக்கும் இன்ட்ரடியூஸ் பண்றேன்” என்று சமையலறைக்கு அழைத்துச் சென்று பொறியிலிருந்த எலியைக் காட்டவும், பாரூக் சத்தமாகச் சிரித்தான்.

“இதுகூடத்தான் பேசிட்டு இருந்தியா?” என்றவன் சிரித்துக்கொண்டே கேட்க, “ஆமா பின்ன... எனக்கு இருக்கிற ஒரே கம்பெனி இதுதான்” என்றாள். அவன் மெல்லிய நகைப்புடன், “அதுக்குத்தான் நான் வந்திருக்கேனே” என்றான்.

“உனக்கும் இன்னைக்கு ஆஃப்பா?”

“இல்ல போகணும்.”

“காபி போடவா?”

“ஷ்யூர்”

இருவரும் காபியுடன் வந்து வரவேற்பறையில் அமர்ந்தனர். “காபி நல்லா இருக்கு” என்றான் பாரூக்.

“இல்ல, சுமார்தான்... ஜோஸ் நல்லா காபி போடுவா” என்று சொன்ன சிந்துவை ஆழ்ந்து பார்த்தவன், “அந்த விஷயத்தை விட்டுரு சிந்து” என்றான்.

“எப்படி விடுறது? அவ எனக்குச் செஞ்சது பச்ச துரோகம்... நம்ப வைச்சு கழுத்தை அறுத்து இருக்கா” என்று புலம்பினாள் சிந்து. அதுவும் குற்றத்திற்கான ஆதாரங்கள் இல்லை என்று நீதிபதி கொடுத்த தீர்ப்பை நினைக்க நினைக்க அவளுக்குப் பற்றிக்கொண்டு வந்தது.

“எத்தனை கொலை பண்ணிட்டு இவங்க மூணு பேரும் தப்பிச்சுட்டாங்க... நம்ம கொடுத்த ஆதாரம் எதுவும் ஒண்ணுமே இல்லாமப் போச்சு... எல்லாத்துக்கும் மேல அந்தச் சுடர்... அவ நம்ம கண்ணுல மண்ணைத் தூவிட்டா”

“சிந்து விடு... இந்த கேஸ்ல நம்மால முடிஞ்ச அளவுக்கு எல்லாமே பண்ணோம்” என்று பாரூக் சொல்ல, “ஆனா அந்தச் சுடரைக் கடைசி வரைக்கும் பிடிக்க முடியலையே... அவளைப் பிடிச்சிருந்தா இந்த கேஸ் ‘சால்வ்’ ஆகி இருக்கும்” என்று தாங்க முடியாமல் புலம்பியவளின் கையைப் பாரூக் மென்மையாகத் தொட, அவள் பேச்சற்று அவனைப் பார்த்தாள்.

“எல்லா கேஸையும் நம்மால சால்வ் பண்ண முடியாது... இட்ஸ் ஓகே, லெட் இட் கோ,” என்றவன் நிதானமான குரலில், “காபியைக் குடி,” என்றான்.

அதன் பின் இருவரும் அமைதியாகக் காபியைப் பருகி முடிக்க, “நான் உன்கிட்ட வேற விஷயமா பேசலாம்னு வந்தேன்,” என்றான் பாரூக்.

“என்ன விஷயம்?”

சில நொடி மௌனத்திற்குப் பின், “சிந்து... உன் மேல எனக்கு இருக்க ஃபீலிங்ஸை எனக்கு எப்படி எக்ஸ்பிளைன் பண்ணத் தெரியல... ஆனா உன் கூட இருக்குறது பேசறது பிடிச்சு இருக்கு” என்றவன் நிறுத்தி, “நான் உன்னை லவ் பண்றேனு நினைக்குறேன்” என்று ஒரு வழியாக தன் மனதிலுள்ளதை சொல்லிவிட்டான்.

“பாரூக்” என்றவள் அதிர,

“ப்ளீஸ், உடனே ‘நோ’ சொல்லிடாதே... கொஞ்சம் யோசிச்சுட்டுச் சொல்லு,” என்றவன் குரல் கெஞ்சவும் அவள் அமைதியாகிவிட்டாள்.

“தேங்க்ஸ் ஃபார் தி காபி,” என்று விட்டு அவன் வாசலுக்குச் செல்ல,

“தேங்க்ஸ் ஃபார் தி கம்பெனி” என்று சொன்னாள் அவளும்.

“நீ விரும்பினா வாழ்க்கை முழுசுக்கும் கம்பெனி கொடுக்க நான் தயாரா இருக்கேன்,” என்ற பாரூக் பதிலை கேட்டு அவள் முகத்தில் புன்னகை அரும்பியது.

“யோசிச்சுச் சொல்லு,” என்று அவன் வாகனத்தில் கிளம்பிவிட, அவள் மனம் அவன் சொன்னதை பற்றி யோசித்தது. ஆனால் அப்போதைக்கு எந்த முடிவிற்கும் அவளால் வர முடியவில்லை.

கப்புகளை எடுத்துக்கொண்டு மீண்டும் சமையலறைக்கு வந்தாள். அந்த எலி அவள் வைத்த தேங்காய் துண்டைச் சாப்பிடாமல் தப்பிக்க முட்டி மோதிக்கொண்டிருந்தது.

எந்த உணவிற்காக அந்த ஆபத்தை நோக்கி வந்ததோ, இப்போது அந்த உணவு அதற்கு முக்கியமாகப் படவில்லை. சூழ்நிலைதான் நமக்கு எப்போது எது முக்கியமானது என்பதைத் தீர்மானிக்கிறது.

அந்த நொடி அவளுக்கு ரூபனின் நினைவு வந்தது. வீட்டிற்கு வந்த எழிலையும் ரூபனையும் பார்த்த இந்திரபாலா சீற்றமாகிவிட்டார்.

“அந்த கொலைகாரியை ஏன்டா வீட்டுக்குக் கூட்டிட்டு வந்த?”

“ம்மா போலீஸ் அவளுக்கு எதிரா எந்த ஆதாரமும் இல்லன்னு ரிலீஸ் பண்ணிட்டாங்க.”

“அதுக்காக அவ கொலைகாரி இல்லன்னு ஆகிடுமா?”

“ம்மா கொலைகாரி அது இதுன்னு எல்லாம் பேசாதீங்க”

“கொலைகாரிதான்டா அவ... உன்னை நல்லா ஏமாத்திட்டு இருக்கா... அப்பன் பொண்ணுன்னு எல்லோருமே கிரிமினலுங்க... இந்த மாதிரி கொலைகாரியோட நீ வாழக் கூடாது.. முதல வெளியே போ சொல்லுடா அவளை!”

“நான் யார் கூட வாழணும், யாரைத் தவிர்க்கணும்னு முடிவு பண்ற அதிகாரம் என்னோடது மட்டும்தான் ம்மா,” ரூபனின் குரலில் முன் எப்போதும் இல்லாத ஒரு உறுதி தெரிந்தது.

“அவ மேல உனக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்தா, தன் மேல தப்பில்லைன்னு அவளை நிரூபிக்கச் சொல்லு... பார்ப்போம்!” இந்திரபாலா சவாலாக எறிய, ரூபன் கிஞ்சித்தும் தயங்காமல் பதிலடி கொடுத்தான்.

“அதற்கான தேவையே இல்லை... என் பொண்டாட்டி எப்படிப்பட்டவன்னு எனக்குத் தெரியும். யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் அவளுக்கு இல்லை. எழில் இங்கே இருக்கக் கூடாதுன்னா, அந்த இடத்துல எனக்கும் வேலையில்லை.”

சொன்னதோடு நில்லாமல், எழிலின் கரம் பற்றி ரூபன் அந்த வீட்டை விட்டு வெளியேறிய நிகழ்வுகளைச் சொல்லி, சிந்துவிடம் விம்மித் தீர்த்தார் இந்திரபாலா.

சிந்துவிற்கு அதைக் கேட்டதும் உடல் ஒரு கணம் சிலிர்த்தது. ஏற்கெனவே கணவனை இழந்து, அந்தத் துயரத்திலிருந்து மீளாத ஒரு தாயை, ரூபனால் எப்படி இப்படி நோகடிக்க முடிந்தது?

உண்மையில், இந்தத் திருமணமே இந்திராவிற்காக ரூபன் செய்துகொண்ட ஒரு சமரசம் தானே! அப்படி இருக்கையில், நேற்று வந்த எழிலுக்காகப் பெற்று வளர்த்த தாயையே உதறித் தள்ளிவிட்டுப் போக அவனுக்கு எப்படி மனம் வந்தது?

அந்தத் தவிப்பான சூழலில் அவளுக்கு ரூபன் மேல் கோபம்தான் வந்தது. ஆனால், ஆத்திரம் தணிந்த பின் மெல்ல ஒரு வியப்பு அவளை ஆட்கொண்டது.

எப்படி இத்தனை குறுகிய காலத்தில் ரூபனின் வாழ்வில் எழில் பிரிக்க முடியாத அங்கமானாள்? இது வெறும் காதல்தானா அல்லது அதையும் தாண்டிய ஏதோ ஒன்றா?

சிந்துவிற்கு அது ஒரு விடுவிக்க முடியாத புதிராகவே நீடித்தது. அந்த நொடியே ரூபனை நேரில் சந்தித்து, அவன் மனதின் என்னதான் இருக்கிறது என்று கேட்டுவிட வேண்டும் என்ற துடிப்பு அவளுக்குள் எழுந்தது.

உடனடியாகக் குளித்து உடை மாற்றினாள். அவன் சென்னையின் புறநகர் பகுதியில் தனித்திருந்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பதாக கேள்விப்பட்டாள். அந்த இடத்தை தேடிக் கண்டுபிடிப்பதற்குள் அவளுக்கு போதும் போதுமென்று ஆகிவிட்டது.

“ஏன் இப்படி ஒரு இடத்துல வீடு பிடிச்சிருக்கான்?” என்று யோசித்துக்கொண்டே வந்தவள், கீழே நின்றவரிடம் “இங்கே ரூபன் எழில்மொழி?” என்று விசாரிக்க, “புதுசா குடி வந்தவங்கதானே... மேலே மூணாவது மாடி,” என்றார்.

மாடி ஏறி வந்தாள். அங்கே ஒரே ஒரு வீடு மட்டும்தான் இருந்தது. வாயிற்கதவு திறந்திருக்க, இருவரின் பேச்சு குரல் கேட்டது.

“நீ எப்படி இவ்வளவு நல்லா சமைக்கிற?”

“தெரியல... பழகிருச்சு... இதை டேஸ்ட் பண்ணு.”

“ம்ம்ம்... வேற மாதிரி... செமையா இருக்கு!”

“உண்மையாவா? நான் இந்த டிஷ் இதான் ஃபர்ஸ்ட் டைம் ட்ரை பண்றேன்.”

“நீ எதை பண்ணாலும் பெர்ஃபெக்ட்டா பண்ற.” என்று பாராட்டினான் ரூபன்.

அவர்கள் உரையாடல்களைக் கேட்ட சிந்து தயக்கத்துடன் அப்படியே நின்றுவிட்டாள். தான் இங்கே வந்திருக்கக் கூடாதோ என்ற ஒரு சின்ன கலக்கம். ஆனால் அதையும் மீறி இவர்களிடம் பேசியே ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்ற, அழைப்பு மணியை அடித்தாள்.

“நான் போய் பார்க்கிறேன்,” என்று புன்னகையுடன் வந்து பார்த்த ரூபன் முகம், சிந்துவைக் கண்டதும் காற்று போன பலூன் போலச் சுண்டிவிட்டது.

அவனின் அந்த முகமாற்றத்தைப் பார்த்த சிந்துவிற்கு ஏமாற்றமாக இருந்தது. ஒரு காலத்தில் தன்னைப் பார்ப்பதற்காகவே அவன் ஓடி வருவான். இப்போது அவன் தன் முகத்தைப் பார்க்கக் கூட விருப்பப்படவில்லை என்பதை ஏற்க முடியாமல் மனம் உள்ளூரப் புழுங்கினாலும், அதனைத் காட்டிக்கொள்ளாமல், “உள்ளே வரலாமா?” என்று கேட்டாள்.

தன்னுடைய முகத்தை இயல்பாக மாற்றிக்கொண்டு, “வா சிந்து,” என்றான்.

அப்போது சமையலறையிலிருந்து வெளியே வந்தவள், “யார் வந்திருக்கா?” என்று கேட்டுவிட்டுச் சிந்துவைப் பார்த்ததும் அப்படியே திகைத்து நின்றுவிட்டாள்.

“ஹாய், நான் டியூட்டியில எல்லாம் வரல... சாதாரணமா உங்களைப் பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன்,” என்றாள் சிந்து. இருவர் முகத்திலிருந்த கலக்கம் அப்போதும் மாறவில்லை. அந்த நொடி வாசலில் மீண்டும் சத்தம் கேட்டது.

“நான் கறி வாங்கிட்டு வந்துட்டேன்,” என்று அறிவித்தபடி உள்ளே வந்த ஜோஸ், முகப்பறையில் நின்ற சிந்துவை கண்டு அதிர்ந்தாள்.

“ஓ... எல்லோரும் ஒண்ணாதான் இருக்கீங்க போல!” என்றாள் சிந்து.

“அது நாங்க...” என்று ரூபன் பேச வர, “பரவாயில்லை, உங்க எல்லோரையும் ஒண்ணா பார்த்தது சந்தோஷமா இருக்கு,” என்ற சிந்து, ஜோஸ் பக்கம் திரும்பி, “ஏன் அங்கேயே நிற்கிற? உள்ளே வா ஜோஸ்,” என்றாள்.

ஜோஸ் மெதுவாக நடந்து வந்து நிற்க, “என்னை ஏன்டா பார்த்தோம்கிற மாதிரி ஒரு ரியாக்ஷன் கொடுக்கிற?” எனவும், ஜோஸ் “அப்படி எல்லாம் இல்ல மேடம்,” என்றாள்.

“உன்னோட இந்த பவ்யமான மேடம்லதான் நான் விழுந்துட்டேன்,” என்று சிந்து சொன்ன நொடி, “பழையதை எல்லாம் இப்போ பேச வேண்டாமே... வா ஏன் நின்னுட்டே இருக்கேன்... வந்து உட்காரு சிந்து” என்று சோபாவை காண்பித்தான் ரூபன்.

“ஆமா, நான் எல்லோருக்கும் காபி போட்டு எடுத்துட்டு வர்றேன்,”

“அதெல்லாம் வேண்டாம் எழில்... நான் சும்மா பார்த்துப் பேசிட்டுப் போலாம்னுதான் வந்தேன்.”

“அப்படியெல்லாம் இல்ல... நீங்க சாப்பிட்டுதான் போகணும்... ஜோஸ், அதைத் கொடு,” என்று அவள் கையிலிருந்த பையை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்.

“இரு நானும் வர்றேன்,” என்று ஜோஸும் அவளுடன் உள்ளே ஓடிவிட, ரூபன் சிந்துவை ஒரு மாதிரி சங்கடத்துடன் பார்த்தான்.

“திடீர்னு என்ன, எங்களைப் பார்க்க வந்திருக்க?”

“நான் கொஞ்சம் பெர்சனலா பேசலாம்னுதான் வந்தேன்,”

“கேஸ் விஷயமா இல்லையே?” என்று ரூபன் கேட்டான்.

சிந்து சில நொடி தயங்கிவிட்டு நிமிர்ந்து, “இல்ல, கேஸ் விஷயமா...” என்று தயக்கத்துடன் ஆரம்பிக்கும் போது எதிரே இருந்த படுக்கையறை கதவு திறந்தது.

முகத்தைத் துடைத்தபடி உள்ளே இருந்து வெளியே வந்து நின்றவள், “எனக்கு பயங்கரமா பசிக்குது... சமைச்சீங்களா” என, சிந்து அதிர்ச்சியில் எழுந்து நின்றுவிட்டாள்.

அவள் பார்வை அந்த நொடி ரூபனை நோக்க, அவன் தலையில் கை வைத்துக்கொண்டான்.

“இதுல யார் எழில் யார் சுடர்” என்று கேட்டவள் அந்த நொடியே சந்தேகத்துடன் சமையலறை நோக்கி விரைந்தாள்.

“சிந்து நில்லு” என்ற ரூபனின் அழைப்பை காதில் வாங்காமல் உள்ளே செல்ல, அங்கே ஜோஸ் மட்டும்தான் நின்றிருந்தாள். சமையலறையின் பின்பக்கக் கதவு திறந்திருந்தது.

“நோ... இந்தத் தடவை நான் உன்னை விடமாட்டேன் சுடர்” என்று உறுமியபடி ஓடினாள் சிந்து.

அது ஒரு சிறிய பால்கனி. கீழே எட்டிப் பார்த்தபோது, சுடர் ஒரு இயந்திரத்தைப் போலப் லாவகமாகப் பைப்லைனைப் பிடித்துக் கீழே இறங்கிக் கொண்டிருந்தாள். அவளது வேகத்தைப் பார்த்த சிந்துவிற்கு அவள்தான் சுடர் என்று உறுதியாகிவிட்டது.

“இந்தத் தடவை உன்னைத் தப்பிக்க விடமாட்டேன்!” என்று ஆத்திரத்தில் கத்திய சிந்து, தன் செல்பேசியை எடுத்து பேக்-அப்பிற்கு அழைக்க முயன்றாள். ஆனால் அதற்குள் ரூபன் குறுக்கே வந்து அவளது கையைப் பலமாகப் பற்றினான்.

“சிந்து, நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு...” என்று அவன் தடுக்க முயல, “யாருடைய பேச்சையும் கேட்க நான் தயாராக இல்லை, அவளை இன்னைக்கு நான் பிடிச்சே தீருவேன்” என்று அவனைத் தள்ளிவிட்டு, படிக்கட்டுகளில் மின்னல் வேகத்தில் இறங்கினாள்.

கீழே வந்தபோது, சுடர் காம்பவுண்ட் சுவரை ஒட்டியிருந்த ஒரு மரத்தைப் பிடித்துக் குரங்கைப் போலக் குதித்துத் தப்பிக் கொண்டிருந்தாள். அந்தப் பக்கம் வெறும் வெட்டவெளி. காற்றில் மண் புழுதி பறக்க, சுடர் ஓடிக்கொண்டிருந்தாள். சிந்துவும் அதே வேகத்துடன் சுவரில் எகிறிக் குதித்து அவளைத் துரத்தினாள்.

பிரதான சாலையை நோக்கி ஓடினால் தப்பித்துவிடலாம் என்ற கணக்கில் சுடர், அடர்ந்த தென்னந்தோப்புடன் கூடிய மற்றொரு காம்பவுண்ட் சுவரைத் தாண்ட எத்தனித்தாள்.

அவள் எகிறிச் சுவரைத் தொடப்போகும் சமயத்தில், பின்னிருந்து அசுர வேகத்தில் பாய்ந்த சிந்து, அவளின் காலைக் கவ்விப் பிடித்தாள்.

சுடர் போராடி இழுத்த போதும் சிந்துவின் பிடியை உதற முடியவில்லை.

"இந்த தடவை நீ என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாதுடி" என்று சொல்லி திடமாக அவள் காலை பிடித்து தரையோடு தரையாக இழுத்துப் போட்டாள் சிந்து.

Cancel “மதிப்புகுரியவள்” புத்தம் புது நாவல்… புது களம்… வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா