மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Ongoing novels: Kadhalum KabadamumKadhalum Kabadamum - Episode 41Post ReplyPost Reply: Kadhalum Kabadamum - Episode 41

Quote from monisha on July 6, 2026, 7:15 PM

41

முதல் நாளின் அந்த நெகிழ்ச்சியான பொழுதுகள் முடிந்து இரவு நேரத்தை எட்டியபோது, கார்த்திக் வரவேற்பறை சோஃபாவில் படுக்க ஆயத்தமானான். அதைப் பார்த்த யாத்ரா, "நீ பெட்லயே வந்து படுத்துக்கோ, எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை," என்றாள் எதார்த்தமாக.

"என்னால உன் பக்கத்துல இருந்தா... வேணாம்," என்று கார்த்திக் மென்னகையுடன் மறுக்க, அவள் உடனடியாக அறைக்குள் சென்று தலையணைகளும் போர்வைகளும் எடுத்து வந்தாள்.

“ஆமா, எதுக்கு இரண்டு?” என்று அவன் ஆச்சரியமாகக் கேட்க, “நீ அந்த சோபால படுத்துக்கோ... நான் இந்த சோபால படுத்துக்கிறேன்,” என்றாள்.

“ஏன் யாத்ரா?”

“நம்ம ஒண்ணா இருக்க போறது இந்த மூணு நாள்தான்... கார்த்திக்,” என்று ஒரு சோஃபாவில் அவனுக்கும், எதிர் சோஃபாவில் தனக்குமாகப் போர்வையை விரித்துத் தலையணையைப் போட்டுவிட்டாள்.

இருவரும் படுத்துக் கொள்ள, ஒரு மெல்லிய விளக்கு மட்டும் அந்த அறையில் எரிந்தது. பார்வைகள் இரண்டும் இருட்டில் மௌனமாகப் பேசிக் கொள்ள, அமைதியாகத் தங்களின் அந்த முதல் நாள் இரவு கழிந்தது.

மறுநாள் விடியலில் கார்த்திக் கண் விழித்த போது, அவன் பார்வை நேராக எதிரே இருந்த சோஃபாவைப் பார்த்தது. ஆனால், யாத்ரா அங்கே இல்லை. முகத்தைத் துடைத்துக் கொண்டே எழுந்தவன் காதில், அவளது கொலுசுச் சத்தமும் மெல்லிய குரலும் எங்கோ தூரமாக ஒலித்தது.

சுற்றுமுற்றும் பார்த்தபடியே மெல்ல நடந்து சமையலறைக்குள் சென்றான். அவள் காபி போட்டுக் கொண்டே போனில் யாருடனோ உரையாடிக் கொண்டிருந்தாள். கருப்பும் சிவப்பும் கலந்த ஒரு காட்டன் புடவையில் இருந்தாள் யாத்ரா.

கூந்தலில் இருந்து குளித்த ஈரம் வழிந்து கொண்டிருந்தது. அவள் தன் முந்தானையைச் சுற்றி இடுப்பில் சொருகியிருந்த அந்த ஒரு அழகைக் கண்டதும், கார்த்திக்கின் மனம் அவர்களின் தாம்பத்ய வாழ்க்கையை நினைத்துக் கொண்டது. அவளோ போனில் பேசிக் கொண்டே திரும்ப, அவன் ஒரு சிலையைப் போலச் சமைந்துவிட்டான். பேரழகு அல்லவா அது!

உள்ளூர ஒரு தீராத தாபத்தீ அவனுக்குள் பரவியது. அவளை அப்படியே தன் மார்போடு அணைத்துக் கொள்ள அவனது மனம் அல்லாடியது. அது புரியாத யாத்ரா தன் புருவத்தைச் சுருக்கி, ‘பிரஷ் பண்ணிட்டு வா’ என்று தன் கைகளால் சைகை செய்தாள். அவன் அப்போதும் நகரவே இல்லை.

போனை மியூட்டில் போட்டுவிட்டு, “ஒரு முக்கியமான கால் பேசிட்டு வரேன்... நீ போய் பிரஷாகிட்டு வா, காபி போட்டு வைக்கிறேன்,” என, அவன் ஒரு நீண்ட பெருமூச்சுடன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.

முகத்தைக் கழுவித் துடைத்துக் கொண்டே அவன் சமையலறை மேடைக்கு வரவும், அவள் கையில் காபியுடன் வந்தாள்.

“எடுத்துக்கோ,” என்றவள் கப்பை நீட்ட, அவளை ஆழமாகப் பார்த்தவன் நெஞ்சின் தவிப்புடன், “என்ன காலங்காத்தால புடவை எல்லாம்... எங்கயாச்சும் வெளியே போறியா?” என்று கேட்க, “வெளியே போறோம்,” என்றாள் புன்னகையுடன்.

“எங்க?”

“ஒரு ஆபீஸ் ஃபங்க்ஷன்... ஆரவ் சார்தான் கால் பண்ணாரு. நான் உன் கூட இருக்கேன் சொன்னேன்... இரண்டு பேரும் ஒண்ணா வாங்கன்னு சொன்னாரு. அதுவும் நீ நிகிதாகிட்ட பேசினதுக்கு ஒரு தேங்க்ஸ் லஞ்ச் மாதிரி இருக்கும்னு இன்வைட் பண்ணாரு... ஓகே போலாம்னு...” என்றவள் சட்டென்று தன் பேச்சை நிறுத்தி, “சாரி... நானே முடிவு பண்ணிட்டேன்... உனக்கு ஓகேதானே?” என்று தயக்கமாக இழுத்தாள்.

“ஓகேதான் போலாம்,” என்று சம்மதித்தவன், அதன் பின் அவளது அழகை அணுவணுவாக அளந்து கொண்டே காபியைப் பருகி முடித்தான். அவளும் காபி குடித்து முடித்து அவனது காலி கப்பையும் வாங்கப் போக, “யாத்ரா...” என்றான் கார்த்திக் மிகத் தாழ்ந்த குரலில்.

“என்ன கார்த்திக்?”

“நீ ரொம்ப அழகா இருக்க...” என்று அவன் சொல்லவும் யாத்ராவின் முகம் செவ்வானமாகச் சிவந்தது. ஓர் அழகான வெட்கப் புன்னகையுடன் அவனிடமிருந்து கப்பை வாங்கி கொண்டு அவள் உள்ளே சென்றாள்.

அதன் பின் அவனும் குளித்துத் தயாராக, இருவரும் கிளம்பினர். “நம்ம இன்னைக்கு கேப்ல போயிடலாம் கார்த்திக்,” என்று யாத்ரா சொல்ல, “வேணாம், பைக்ல போலாம்,” என்றான்.

“நம்ம ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்குப் போறோம் கார்த்திக்.”

“ஸோ வாட்?” என்று கேட்டவன், “இன்னைக்கு நீ பின்னாடி உட்காரு... நான் வண்டி ஓட்டுறேன்,” என்றான். அவளால் அவனது பிடிவாதத்திற்கு மறுப்பு தெரிவிக்க முடியவில்லை. அவனுக்குப் பின்னே அமர்ந்து கொள்ள அவன் வண்டியை இயக்கினான்.

அவர்கள் அந்த நட்சத்திர விடுதியில் வந்து இறங்கினர். முகப்பில் அவர்கள் நிறுவனத்தின் பதாகை ஒன்று பிரம்மாண்டமாக வைக்கப்பட்டிருந்தது. பெரிய ஹாலில் நிகழ்ச்சிக்கான சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. யாத்ரா உள்ளே வந்ததும் நிறைய அலுவலக நண்பர்கள் அவளை ஓடிவந்து வரவேற்றனர். அதுவும் அவளது மேலதிகாரிகள் மற்றும் தோழிகளிடம், கார்த்திக்கைத் தன் கணவன் என்று எவ்விதத் தயக்கமும் இல்லாமல் பெருமையோடு அறிமுகம் செய்தாள். அதனை கார்த்திக் ஒருவித வியப்புடனும் நெகிழ்ச்சியுடனும் பார்த்தான்.

ஆரவும் அவர்களிடம் வந்தான். கார்த்திக்கிற்கு அன்போடு கை கொடுத்து வரவேற்றவன், கட்டாயப்படுத்தி அவர்களை விஐபி-க்களுக்கான முன்னிருக்கையில் அமரச் சொன்னான்.

வேறு வழி இல்லாமல் கார்த்திக்குடன் முன்னே வந்து அமர்ந்தவள், அவனது காதோரம் ரகசியமாகச் சாய்ந்து, “பின்னாடி உட்காந்துட்டு அப்படியே கொஞ்ச நேரம் இருந்துட்டு ஓடிடலாம்னு பார்த்தேன் கார்த்திக்...” என்று சொல்ல, “அதுக்கு என்ன பரவாயில்ல... இருந்துட்டு போலாம்டி,” என்றான்.

“மொக்கை போடுவாங்க... உனக்கு ரொம்ப போரடிக்கும்,” என்றவள் சொன்ன நொடி, அவன் சட்டென்று திரும்பி அவளது விழிகளைப் பார்த்து, “நீ பக்கத்துல இருக்கும் போது எனக்கு வேற எதுவும் பிரச்சினை இல்லை யாத்ரா,” என்றான் காதலுடன்.

அவளது மனம் சட்டென்று நெகிழ்ந்து போக, அவன் கையின் மீது தன் மெல்லிய கையைத் தஞ்சமாக்கினாள். கார்த்திக்கும் அவளது அந்தப் பிடியை இறுகப் பற்றிக் கொண்டான்.

நிகழ்ச்சி தொடங்கியது. அவள் சொன்னது போல ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் காதில் இரத்தம் வரும் அளவுக்கு நீண்ட நேரம் பேசினார்கள். இறுதியாக ஆரவ் பேசும் போது, இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு ஒரு முக்கியமான நபரைப் பாராட்ட வேண்டுமென்று ஆரம்பித்தான்.

அவன் உரையை முடிக்கும் போது யாத்ராவின் பெயரைச் சொல்ல, அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று அவளைப் பாராட்டிக் கைதட்டினர். மேலும் அவளை மேடைக்கு அழைத்து ஒரு பெரிய பூங்கொத்து கொடுத்து வாழ்த்த, அந்தக் காட்சியைப் பார்த்துப் பூரித்துப் போன கார்த்திக், தன் செல்பேசியில் அதனைப் பெருமையுடன் படம் பிடித்து மகிழ்ந்தான்.

அதன் பின் எல்லோருக்கும் பஃபே முறையில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கார்த்திக்குடன் இணைந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த யாத்ராவின் அருகே வந்து நின்ற ஆரவ், “ஏதோ பெர்சனல் வொர்க்னு சொன்னீங்க... நான்தான் உங்களை இங்க வர வச்சுட்டேன்... சாரி கார்த்திக்,” என்று கூற, “அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்லை,” என்றான் கார்த்திக் நாகரிகமாக.

யாத்ரா உடனே, “பிரச்சினை அது இல்ல சார்... நீங்க மேடைல என் பேர் சொன்னதுதான்,” என்றாள் சிணுங்கலாக.

“யூ டிசர்வ் இட் யாத்ரா... அண்ட் அது மட்டும் இல்ல... உனக்காக வேறொரு சர்பிரைஸ் வச்சு இருக்கேன்,” என யாத்ரா அவனைப் புரியாமல் பார்த்து, “என்னது சார்?” என்று கேட்க, “உன்னை சென்னை பிரான்ச் மேனேஜரா புரொமோட் பண்றதைப் பத்தி டாடிகிட்ட பேசியிருக்கேன்,” என்று கூற, அவள் முகத்தில் பேரிடி விழுந்தது போல் அதிர்ச்சி பரவியது.

“என்னை சென்னை பிரான்சுக்கு மாத்தப் போறீங்களா?”

“உன் ஃபேமிலி எல்லாம் அங்கதான் இருக்காங்க... நீயும் இதைக் கேட்டா ஹாப்பி ஆவன்னுதான்... உனக்கு விருப்பம் இல்லையா?” என்று ஆரவ் சந்தேகமாகக் கேட்ட நொடி, அவளது பார்வை தன் அருகே நின்றுகொண்டிருந்த கார்த்திக்கின் பக்கம் நோக்கியது. அவனது முகம் மாறவும், “இதைப்பத்தி நம்ம ஆபீஸ்ல பேசுவோம் சார்,” என்றவள் அந்தப் பேச்சை அவசரமாகத் தவிர்த்துவிட்டாள்.

அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் ஆரவிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி வெளியே வந்த கணம், கார்த்திக் மெதுவாக, “உனக்கு சென்னை வர்றதுல விருப்பம் இல்ல போல?” என, அவள் பதில் சொல்லவில்லை.

“என்னை பார்க்கக் கூடாதுன்னுதான் சென்னை வர மாட்டுற?!” என்றவன் அடுத்த கேள்வி இன்னும் சீறலாக வர, “நம்ம வீட்டுக்கு போய் பேசிக்கலாமே கார்த்திக்...” என்றவள் தன் குரலைத் தாழ்த்திக் சொன்னாள்.

“வீட்டுக்கு போனா மட்டும் நீ என்ன உண்மையா சொல்லப் போற?” என்று கோபத்துடன் புலம்பிக் கொண்டே கார்த்திக் இருசக்கர வாகனத்தை இயக்க, யாத்ரா பின்னே அமர்ந்து அவனது தோள்களைப் பற்றிக் கொண்டாள். மும்பையின் அந்த நெரிசலான சாலைகளுக்கு இடையில், கார்த்திக் தன் ஆத்திரத்தையெல்லாம் வண்டியின் வேகத்தில் காட்ட, வண்டி பறந்தது. அதைப் பார்த்து யாத்ராவிற்குப் பயத்தில் உதறல் எடுத்தது.

“கார்த்திக்... பொறுமையா ஓட்டு கார்த்திக்,” என்றவள் கத்தியும் அவன் கேட்கவில்லை. நேரம் ஆக ஆக அவனது வேகம் இன்னும் இன்னும் அதிகரித்தது.

“கார்த்திக் ப்ளீஸ்...” என்றவள் கெஞ்சியபோதும் அவன் கண்டுகொள்ளவில்லை. வண்டியின் வேகப் பிடியை இன்னும் முறுக்கிக் கொண்டிருந்தான். “இங்கே பெரிய பெரிய வண்டி எல்லாம் வரும் கார்த்திக்...” என்றவள் சொல்லி முடிப்பதற்குள், அந்தச் சம்பவம் நடந்தது.

ஒரு பிரம்மாண்டமான கனரக வாகனம் இவர்களின் வண்டியின் மீது மோதுவது போல் மிக அருகில் பாய்ந்து வந்தது. "கார்த்திக்!" என்று அவள் அச்சத்தில் அலறவும், அவன் வண்டியைச் சாமர்த்தியமாகத் திருப்பி சாலையோரம் வெட்டினான். நூலிழையில் இருவரும் ஒரு பெரும் விபத்தில் இருந்து தப்பிவிட, யாத்ராவின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது.

அந்த அதீத தவிப்பில், யாத்ரா எவ்வித யோசனையுமின்றி அவனது அகன்ற மார்பைத் தன் இரு கரங்களால் மிக இறுக்கமாகக் கட்டியணைத்துக் கொண்டாள். அவளது நெஞ்சின் படபடப்பும், உடலின் நடுக்கமும் அவனது முதுகில் அப்பட்டமாகத் தைத்தது. அவளது அணைப்பின் வெப்பம் அவனது உயிரைத் தொட்டது. அவளது பயத்தை உணர்ந்த கார்த்திக்கின் கோபம் சட்டென்று கரைய, அதன் பின் அவன் வண்டியை மிக மிதமான வேகத்தில் ஓட்டினான். அவளும் அவனது பிடியைத் தளர்த்தாமல் அதே இறுக்கமான அணைப்போடவே வீடு வரை பயணம் செய்தாள்.

அபார்ட்மெண்டிற்குள் நுழையும் வரை அமைதி காத்தவள், உள்ளே வந்து கதவை மூடிய கணம்... கார்த்திக்கின் புறம் திரும்பி அவன் கன்னத்தில் ‘பளாரென்று’ அறைந்துவிட்டாள்.

எதிர்பாராத அந்த அறையை வாங்கிய கார்த்திக் அப்படியே அதிர்ச்சியில் நிற்க, “அறிவு இருக்கா உனக்கு?! கொஞ்சம் விட்டிருந்தாலும் இரண்டு பேரும் செத்துப் போயிருப்போம்!” என்று ஆவேசமாகக் கத்தினாள்.

“செத்துப் போகலாம்னுதான்டி அப்படி ஓட்டுனேன்!” என்ற அவனின் அலட்சியமான பதில் கேட்டு அவள் அப்படியே அதிர்ந்து உறைந்துவிட்டாள்.

அவன் தொடர்ந்து, “பின்ன என்னடி?! நீயும் நிம்மதியா வாழாம... என்னையும் நிம்மதியா வாழ விடாம தினம் தினம் சாகடிக்குறியேடி! அதான் இப்படி வாழுறதுக்கு இரண்டு பேரும் சேர்ந்து செத்துப் போகலாம்னு முடிவு பண்ணேன்... ஆனா கடைசியா அதுவுமே நடக்கல... சை!” என்று ஆத்திரத்துடனும் வேதனையுடனும் கூறிக்கொண்டே போய், அலமாரியிலிருந்து தன் துணிகளை எடுத்துப் பையில் வைக்கத் தொடங்கினான்.

“கார்த்திக்... என்ன பண்ற?” என்று பதறிப் போய் அவள் அவன் அருகே வந்து நின்று தோளைப் பிடித்தாள். ஆனால், அவனது தவிப்பும் கோபமும் அடங்குவது போலத் தெரியவில்லை.

“கார்த்திக் ப்ளீஸ்... நம்ம இந்த மூணு நாள் சந்தோஷமா இருக்கணும்னுதான் முடிவு பண்ணோம்,” என்றவள் அமைதியுடன் சொல்லிக் கொண்டே அவன் கையைப் பற்ற, அவன் திரும்பி அவள் முகம் பார்த்துப் பேசினான்.

“நான் இந்த மூணு நாளுக்காக வரல! வாழ்க்கை முழுக்கவும் உன் கூட இருக்கணும்... உன் கூட மட்டும்தான் இருக்கணும்னு வந்தேன்... ஆனா நான் இருக்குற ஊர்ல கூட நீ இருக்கமாட்டேன்னு பிடிவாதமா இருக்கும் போது... நான் என்ன பண்ணாலும் அது வீண்தான்,” என்று அவன் குரல் வலியுடன் ஒலித்தது. அவன் கண்களில் நிறைந்த நீரில் அந்த வலி அப்பட்டமாகத் தெரிந்தது.

“கார்த்திக்...”

அவன் மெதுவாக அவன் கையைப் பிடித்திருந்த அவள் கையை விடுவித்து விட்டு, பையைக் கையில் எடுத்துக் கொள்ளவும் அவள் பதற்றமானாள். அவன் வாசல் கதவை நோக்கிச் செல்ல, அவள் வேகமாக ஓடிச் சென்று அவனது முதுகுபுறமாக அவனைக் கட்டியணைத்துக் கொண்டாள்.

ஒரு நொடி ஸ்தம்பித்தவன், “விடு யாத்ரா,” என்றான்.

“இன்னைக்கு இரண்டாவது நாள்தான் கார்த்திக்...” என்றவள் சொல்ல, “இரண்டு, மூணு என்ன பெரிய வித்தியாசம்... நாளைக்கும் இதேதானே நடக்க போகுது,” என்றவன் கூறிய போதும் அவள் அவனை விடவில்லை. இன்னும் அவனைத் தன்னோடு இறுக்கிக் கொண்டவள், “மூணு நாள்... அதுதான் பிளான்!” என்று அழுத்தமாகக் கூற, அவன் பதில் பேசாமல் நின்றான்.

“கார்த்திக் ப்ளீஸ்...” என்றவள் குரல் கெஞ்சிய போதும் அவன் கல்லாக நின்றான்.

அவனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்பதை உணர்ந்தவள், மெதுவாகத் தன் கைகளைப் பிரித்துக் கொண்டு அவனது முன்பக்கமாக வந்து நின்றாள். இருவரின் விழிகளும் மாறி மாறிப் பார்த்துக்கொள்ள, அவளாகவே அவனை நெருங்கினாள்.

தன் இரு கரங்களால் அவனது அகன்ற தோள்களைச் சுற்றி கைபோட, கார்த்திக் முற்றிலும் திகைப்புற்றான். அப்போதும் அவன் அசைவற்று நிற்பதைக் கண்டவள், தன் சூடான மூச்சுக்காற்று அவனது முகத்தில் உரசும் விதமாக, தன் மலர் பாதங்களை அவனது பாதங்கள் இரண்டின் மீதும் பதித்து ஏறி நின்றாள்.

அவள் மேலும், “போகாத கார்த்திக்...” என்று அவனது செவியருகே மெதுவாகப் பேச, அந்த நொடி அவன் உடலில் மின்சாரம் பாய்ந்தது போலிருந்தது. அவனது விரல்களின் பிடி தளர, அவன் கையில் இருந்த அந்தத் துணிப் பை தானாகக் கீழே நழுவி விழுந்தது.

“கார்த்திக்...” என்று மேலும் அவள் கிசுகிசுப்பாக அழைக்க, அவனுக்கு இந்த உலகமே அடியோடு மறந்து போனது.

உள்ளூரத் தேங்கிக் கிடந்த தாபத்தீ உடலெங்கும் பற்றிக் கொள்ள, அதற்கு மேல் அவனால் பொறுக்க முடியவில்லை. தன் இரு பலமான கரங்களால் அவளது இடையை அவசரமாகத் தன் பக்கம் இழுத்து, அவளது இதழ்களைத் தன் இதழ்களால் சிறைபிடித்தான்.

வருடக்கணக்காக அவர்களுக்குள் தேங்கிக் கிடந்த அத்தனை பிடிவாதங்களும், கோபங்களும் அந்த அணைப்பிலும், இதழ்களின் தீராத வேட்கையிலும் அடியோடு உருகி வழிந்தன.

அதன் பின் மெதுவாக அவளை விட்டு விலகியவனுடைய விழிகள் அவளது சம்மதத்தை மௌனமாக நாட, யாத்ராவும் எவ்விதத் தயக்கமுமின்றி அவனது அகன்ற மார்பின் மீது முகம் புதைத்துத் தன் முழு இசைவையும் கொடுத்தாள். அதற்கு மேல் அவளைப் பிரிந்திருக்க அவனுக்கு எந்தக் காரணமும் கிடைக்கவில்லை.

அவளை அப்படியே தன் கைகளில் அள்ளியெடுத்துக்கொண்டு வந்து படுக்கையில் கிடத்தினான். அவளது ஆடைகளை மெல்லக் களைந்து... நெற்றி, கண்கள், கழுத்து எனத் தொடங்கி அவளது அங்கம் முழுக்கத் தன் காதலின் முத்தங்களால் அவன் ஆக்கிரமித்தான்.

காதலின் அந்த உன்னதமான தாம்பத்ய சங்கமத்தில், இரண்டு மனங்களும் தங்களின் ஈகோக்களைத் தொலைத்து, உடலாலும் மனதாலும் முழுமையாக ஒன்றிணைந்தன!

Cancel “மதிப்புகுரியவள்” புத்தம் புது நாவல்… புது களம்… வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா