மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Iru ThruvangalIru Thruvangal - Episode 43Post ReplyPost Reply: Iru Thruvangal - Episode 43

Quote from monisha on September 16, 2025, 11:02 AM

43

அனல் பறக்கும் விவாதம்

சுபாவின் நிதானமும் பொறுமையும் கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்து கொண்டே வந்தது. மனோஜிடம் சுபா கண்டிப்புடன் இன்னும் சில கேள்விகளைக் கேட்டாள்.

“இத பாருங்க மனோஜ்... இது வரையில் நீங்க சொன்ன கதை எல்லாம் சரி... இனிமே நீங்க சொல்ல போற ஒவ்வொரு பதிலும் உங்க விதியை தீர்மானிக்கப் போகுது... அதனால கொஞ்சம் ஜாக்கிரதையா பதில் சொல்லுங்க...” என்றாள்.

அதற்கு மனோஜ் 'தன்னை யாராலும் ஒண்ணும் செய்ய முடியாது' என்று மனதில் நினைத்தபடி ஏளனச் சிரிப்புச் சிரித்தான்.

சுபா தன் மனதில் நிரம்பிய கோபத்தை மறைத்தபடி மனோஜின் முன் நின்று கேள்விகள் கேட்டாள்.

“நாலு வருஷத்துக்கு முன்னாடி கேத்ரீன் ஆதித்தியா பிறந்த நாளுக்காக ஏற்பாடு பண்ண விருந்துக்கு நீங்க போனீங்களா?”

“ ஆமாம் போனேன்” என்றான் இயல்பாக

“கேத்ரீன் உங்களை அழைச்சாங்களா?”

“இல்லை”

“அப்புறம் ஏன் போனீங்க? அவங்க மேல உங்களுக்கு இருந்த வக்கிரத்தை தீத்துக்கவா?...”

“நோ... நான் மனசில இருந்த காதலை கேத்ரீனை பார்த்து சொல்லலாம்னு போனேன்... அதுல ஏதாவது தப்பு இருக்கா?” என்றான்

“ திஸ் இஸ் டிஸ்கஸ்டிங்” என்று சுபா மனதில் நினைத்துக்கொண்டு பல்லை கடித்துக் கொண்டாள்.

“நீங்க செய்த தப்பிற்குச் சாட்சிகள் இல்லைனு நினைச்சுக்கிட்டு பொய்களை அடுக்காதீங்க”

“நான் எந்தப் பொய்யும் சொல்லல. அன்னைக்கு நான் கேத்ரீனை சந்திக்கப் போனேன்... ஆனா கேத்ரீன் என் கண்முன்னாடியே அந்த ஆதித்தியாவை காதலிக்கிறேன்னு சொன்ன பிறகு என்னால ஒரு நிமிஷம் கூட அங்க இருக்க முடியாம நான் உடனே புறப்பட்டுட்டேன். ஆனா ஆதித்தியா தான் என்ன நினைச்சானோ அதை சாதிச்சிட்டான்”

“நீங்க செய்த குற்றத்தை ஆதித்தியா மேல போடாதீங்க”

உடனே சமுத்திரன் எழுந்து நின்று, “என் கட்சிகாரர்தான் தப்பு செய்தார்னு உங்களால நிரூபிக்க முடியுமா? அதே போல கேத்ரீன் சந்தேகப்பட்டது மாதிரி ஆதித்தியா தப்பு செய்யலனு உங்ககிட்ட ஆதாரம் இருக்கா?”

சுபா சிரித்தபடி, “இருக்கு சமுத்திரன்... ஆதித்தியா தப்பு செய்யலனும் என்னால நிரூபிக்க முடியும்... உங்க கட்சிக்கார்தான் எல்லாத்துக்கும் காரணம்னும் என்னால நிருபிக்க முடியும்” என்றாள்.

சமுத்திரன், “நிரூபிங்க மிஸஸ் சுபா... அதுக்காகத்தான் நானும் காத்திட்டிருக்கேன்”

சுபா நீதிபதியை பார்த்து, “கேத்ரீனிடம் பி. ஏ வாக இருந்த மிஸஸ். ஷபானாவை இந்த வழக்கு சம்பந்தமாய் விசாரிக்க அனுமதி வழங்கணும் யுவர் ஆனர்” என்றாள்.

“எஸ் ப்ரொசீட்” என்றார்.

“ஷபானா ஷபானா ஷபானா” என்று மும்முறை அழைத்ததும் ஷபானா கூண்டில் ஏறி நின்றாள்.

“நீங்கதானே ஷபானா?”

“ ஆமாம்”

“நீங்க அமரேஷ் லிக்கர் பாஃக்டரியில் கேத்ரீனிடம் பி. ஏவா வேலை பாத்துட்டு இருந்தீங்களா?”

“ஆமாம்”

“எத்தனை வருஷமா கேத்ரீன்கிட்ட வேலை பாத்திட்டிருந்தீங்க?”

“எட்டு வருஷமா” என்றாள்

“அப்போ ஆதித்தியாவை உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் தானே?”

“நல்லாவே தெரியும். கேத்ரீனோட கிளோஸ் ஃபிரண்ட்... அஸ் வெல் அஸ் மேடமோட ஃபிலாசஃபர், கைடுனு கூட சொல்லலாம்”

“சரி... கேத்ரீன் நடத்துகிற பார்ட்டி, மீட்டிங்னு எல்லாத்தோட ஏற்பாட்டையும் நீங்கதான் பண்ணுவீங்களாமே?”

“ஆமாம்... மேடம் அந்த மாதிரியான முக்கியமான பொறுப்புகளை என்னை நம்பித்தான் கொடுப்பாங்க”

“அப்படின்னா நாலு வருஷத்துக்கு முன்னாடி கேத்ரீன் ஆதித்தியா பிறந்த நாளுக்காக நீங்கதான் விருந்துக்கு ஏற்பாடு பண்ணி இருந்தீங்க... ஞாபகம் இருக்கா உங்களுக்கு?”

“அத்தனை சீக்கிரத்தில் அன்று நடந்ததை எல்லாம் மறக்க முடியாது... நான்தான் பார்ட்டிக்கு ஏற்பாடு பண்ணேன்... மேடம் ஆதித்தியா பேரில ஐம்பது பர்சன்ட் ஷேரை மாத்த சொன்னாங்க... அந்த டாக்குமென்ட்டையும் நான்தான் ரெடி பண்ணேன்...

பட் ஆதித்தியா சார் மேடமோட ப்ரப்போஸல், கிஃப்ட் இரண்டுத்தையும் ரிஜெக்ட் பண்ணிட்டாரு. அதுக்கப்புறம் மேடம் டிப்ரஸ் ஆகி ரொம்பவும் அதிகமாகக் குடிச்சி தடுமாறிட்டு இருந்தாங்க... ஆதித்தியா சார்தான் அவங்கள ரூமுக்கு அழைச்சிட்டு போய் படுக்க வைச்சாரு”

“ஆதித்தியா கேத்ரீன்கிட்ட தப்பா நடந்துக்கிட்டு இருப்பார் என்ற பழி உண்மையா இருக்குமா? ஏன்னா நீங்க அந்த இடத்தில இருந்திருக்கீங்க... உங்களுக்கு நிச்சயம் தெரிஞ்சிருக்கும்”

“அப்படி ஒரு செயலை ஆதித்தியா சார் செஞ்சிருக்க வாய்ப்பில்லை. மேடமோட ரூமுக்கு போன உடனே சார் திரும்பி வந்ததை நான் பார்த்தேன். பார்ட்டி முடிஞ்சு எல்லோரையும் அனுப்பிட்டு புறப்படும் போது ரொம்ப லேட்டாயிடுச்சு... அன்னைக்கு சார்தான் என்னை வீட்டில டிராப் பண்ணாரு”

“சரி... எதிர்க்கே நிற்கிறாரே மிஸ்டர் மனோஜ்… அவரை நீங்க அந்தப் பார்ட்டில பார்த்த மாதிரி ஞாபகம் இருக்கா?”

“நல்லா ஞாபகம் இருக்கு. பார்ட்டில மேடமும் இவரைப் பாத்து டென்ஷன் ஆனாங்க... அப்புறம் தேவையில்லாம பிரச்சினை வேண்டாம்னு அமைதியா இருந்துட்டாங்க”

“மனோஜ் பார்ட்டில இருந்து வெளியே கிளம்பும் போது நீங்க பார்த்தீங்களா?”

“இல்ல பார்க்கல”

“தட்ஸ் ஆல் யுவர் ஆனர்... ஆதித்தியா கேத்ரீன்கிட்ட தப்பா நடந்துக்கல என்பதற்கு இந்த ஆதாரமே போதுமானது”

உடனே சமுத்திரன் எழுந்து நின்று கொண்டு, “ஷபானாவை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் யுவர் ஆனர்” என்றான்.

“எஸ் ப்ரொசீட்” என்று அனுமதி வழங்க சமுத்திரன் ஷபானா நின்றிருந்த கூண்டிற்கு அருகில் வந்து நின்றான்.

“மிஸஸ் ஷபானா... ஆதித்தியா தப்பு செய்யலனு இவ்வளவு தெளிவா சொல்ற நீங்க, கேத்ரீனுக்கு ஆதித்தியா மீது ஏற்பட்ட தப்பான அபிப்ராயத்தை சரி செய்திருக்கலாமே”

“எனக்கு முன்னமே அவர்களுக்குள்ள இருந்த பிரச்சனை பத்தி தெரிஞ்சிருந்தா நான் நிச்சயம் சால்வ் பண்ணி இருப்பேன்... பட் கடைசி வரைக்கும் கேத்ரீன் மேடம் இத பத்தி என்கிட்ட சொல்லாத போது நான் என்ன பண்ண முடியும்?”

“சரி... மனோஜை நீங்க பார்ட்டில பாத்தீங்க... சரி... ஆனா கேத்ரீனோட அறைக்கு போன மாதிரியோ இல்ல திரும்ப வந்த மாதிரியோ பாத்தீங்களா?”

“இல்ல”

“சரி நீங்க போகலாம்” என்று சொல்லிவிட்டு,

நீதிபதியின் புறம் திரும்பிய சமுத்திரன், “ஆதித்தியா தப்பு செய்யலனு திட்டவட்டமா சொல்ற ஷபானா அதே நேரத்தில் மனோஜை தப்பு செய்தார்னு சுட்டி காட்ட முடியல. தேவையில்லாம இந்த வழக்கில் என் கட்சிக்காரர் மனோஜை இழுத்து விட்டிருக்காங்க. அதற்குக் காரணம் மனோஜின் மீது ஆதித்தியாவிற்கு இருக்கும் தனிப்பட்ட கோபமும் வஞ்சமும்தான்” என்றார்.

“அப்படி ஒரு எண்ணம் என் கட்சிக்காரருக்கு நிச்சயமா இல்லை... நீங்க இப்படி எல்லாம் பேசி மனோஜை இந்த வழக்கிலிருந்து தப்பிக்க வைக்கப் பார்க்கிறீர்கள்”

“அப்படின்னா தப்பு செய்தார் என்பதற்கான ஆதாரம் எங்கே?”

சுபா கொஞ்சம் தயங்கியபடி சிவாவின் முகத்தைப் பார்க்க, அவனின் கைகடிகாரத்தைக் காண்பித்து சைகையில் ஏதோ சொன்னான்.

சுபாவின் மெளனத்தைச் சாதகமாகக் கொண்டு சமூத்திரன் நீதிபதியின் பக்கம் திரும்பினான்.

“என் கட்சிக்காரருக்கு எதிரான ஆதாரம் என்று இதுவரை எதிர்கட்சி வக்கீல் எதையும் காண்பிக்கவில்லை. இதை கருத்தில் கொண்டு என் கட்சிக்காரருக்கும் இந்த வழக்கிற்கும் சம்பந்தமில்லை என கணம் நீதிபதி அவர்கள் அறிவிக்க வேண்டும்” என்றதும்…

சுபா பதட்டத்தோடு, “என் ஆதாரத்தை உங்கள் முன் நிறுத்த எனக்கு அரைமணி நேரம் அவகாசம் வேணும் யுவர் ஆனர்” என்றாள்

“இது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயல்“ என்றான் சமுத்திரன் .

“உங்கள் கட்சிக்காரர் குற்றவாளி இல்லாத பட்சத்தில் அரைமணி நேரத்தில் என்ன மாற்றம் நிகழ்ந்து விடப் போகிறது?”என்று சுபா சமுத்திரனை கேட்டாள்

“என் கட்சிக்காரர் தவறு செய்யாத போது அவர் எதற்காக காத்திருக்க வேண்டும்?”

“காத்திருப்பது அல்ல உங்கள் பிரச்சனை... மாட்டிக் கொள்வோமோ என்ற பயம்தான் பிரச்சனை”

“எங்களுக்கு எதைக் கண்டும் பயமில்லை”

இவ்வாறாகச் சமுத்திரனும் சுபாவும் அனல் பறக்க விவாதம் மேற்கொண்டிருக்க நீதிபதி, “ஆர்டர் ஆர்டர் ஆர்டர்” என்று கையில் உள்ள சுத்தியலால் அடித்தார்.

“இது உங்க வீடில்லை... இது கோர்ட்... அரைமணி நேரம் அவகாசம் கொடுக்கணுமா என்பதை ஒரு நீதிபதியாய் நான்தான் முடிவு பண்ணனும். நீங்க இரண்டு பேரும் உங்கள் இருக்கையில் அமருங்க...” என்றதும் இருவரும் அமைதியாய் தங்கள் தங்கள் இடத்தில் அமர்ந்தனர்.

“இத பாருங்க சுபா... நான் உங்களுக்கு நீங்க கேட்டது போல் அரைமணி நேரம் அவகாசம் தர்றேன்... அதற்குள் மனோஜ் மீது நீங்கள் சுமத்திய குற்றச்சாட்டை நிருபிக்கணும்... இல்லன்னா மனோஜ் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றதுனு அவரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டி வரும். இந்த வழக்கின் விசாரணை அரைமணி நேரம் கழித்து மீண்டும் நடைபெறும்” என்று சொல்லி நீதிபதி தம் இருக்கையில் இருந்து எழுந்து சென்றார்.

சுபா வேகமாக சிவாவின் அருகில் போய், “ ஃபாதர் அந்தோனி எப்போ வருவார் அண்ணா?”

“கண்டிப்பா வந்துருவாரு. டென்ஷன் ஆகாத சுபா... உன் நம்பிக்கையை விட்டு விடாதே. இப்ப நீ செய்ய வேண்டியதெல்லாம் சமுத்திரனை பேச விடாம பண்ணனும்... மனோஜுக்கும் சமுத்திரனுக்குமான பாண்டிங்கை பிரேக் பண்ணனும்” என்றான்.

“நான் எப்படி அண்ணா?”

“உன்னால மட்டும்தான் முடியும் சுபா” என்று சொல்ல… சுபா தான் செய்ய வேண்டியது என்னவென்று யோசித்து விட்டு சமுத்திரனிடம் சென்றாள்.

சமுத்திரனிடம் சுபா தனியாகப் பேச வேண்டும் என்று அழைத்துச் சென்றாள். அவளைப் பார்த்தும் ஏளனப் புன்னகை புரிந்தவன்… அவள் அவனிடம் பேச பேச கொஞ்சம் கொஞ்சமாய் டென்ஷனாக ஆரம்பித்தான்.

மனோஜ் சுபாவும் சமுத்திரனும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். அவன் பார்த்தான் என்பதை விட பார்க்கும் இடத்தில் அவர்கள் இருவரும் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

இவை எல்லாம் ஒரு புறமிருக்க நம் காதல் பறவைகள் எப்போதும் போல் தனியாக நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அரைமணி நேரம் அவகாசம் முடிய எல்லோரும் தங்கள் தங்கள் இடங்களில் அமர்ந்தனர். மனோஜின் முகத்தில் ஒரு விதமான குழப்பம் தென்பட்டது. சமுத்திரனின் கண்கள் ஒரே இடத்தில் நிலை கொண்டு ஏதோ ஒன்றை பற்றி ஆழமாய் யோசித்துக் கொண்டிருந்தன. சுபா இம்முறை ரொம்பவும் தெளிவாகவும் உற்சாகமாகவும் இருந்தாள்.

நீதிபதி தம் இருக்கையில் அமர்ந்து விட்டு சுபாவை பார்த்தார்.

சுபா எழுந்து நின்று கொண்டு, “யுவர் ஆனர்... கேத்ரீனுடன் கடைசி வரை துணையாயிருந்த ஃபாதர் அந்தோணியை விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் “ என்றாள்.

“எஸ் ப்ரொசீட்” என்றார்.

சமுத்திரன் எதைப்பற்றியும் கவனிக்காமல் இருக்க, மனோஜ் அவன் முகத்தைப் பார்த்து சலனமுற்றிருந்தான்.

“ஃபாதர் அந்தோணி… ஃபாதர் அந்தோணி” என்று அழைக்க ஃபாதர் அந்தோணி கூண்டில் ஏறி நின்றார்.

சுபா அவர் அருகில் போய் நின்று கேள்விகளைத் தொடுத்தாள். அந்தோணியின் முகத்தில் அமைதியும் நிதானமும் நிரம்பி இருந்தது.

“நீங்கதானே ஃபாதர் அந்தோணி?”

“ஆமாம்”

“கேத்ரீனை உங்களுக்குத் தெரியுமா?”

“நல்லாவே தெரியும்... ஏழைகள் ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்ய அந்த ஆண்டவன் அனுப்பிய தேவதை” என்றார்

“நீங்க கேத்ரீன் பற்றிய ஒரு ரகசியத்தை இந்த நீதிமன்றத்தில் மறைக்காம சொல்லணும்”

“அதுதான் கர்த்தரின் விருப்பம்னா... நான் நிச்சியமா சொல்றேன்”

Cancel “சூலி” புத்தம் புது நாவல்… புது களம்… புது தளம்… “கண்ணாடி துண்டுகள்” மீண்டும் தளத்தில் பதியப்படுகிறது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா