மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumShamili Dev Novels: Shamili Dev's Ennai ma(r)nanthayoShamili Dev's Ennai ma(r)nanthayo …Post ReplyPost Reply: Shamili Dev's Ennai ma(r)nanthayo- 20

Quote from monisha on June 29, 2020, 12:22 PM

20
பாத்திமாவிடம் இருந்து எந்த பதிலும் வராததால் பிரபா வேறு வழியின்றி அந்த மரத்தின் மறுபக்கம் சென்றான். அங்கே அவள் தன் முழங்காலில் முகம் புதைத்தபடி இருப்பதைக் கண்டவன் அவளிடம் இருந்து எந்த விட அசைவும் இல்லாததால் அவளின் தோள் தொட்டு அழைத்தான். அப்பொழுதும் பதில் ஏதும் இல்லாததால் அவள் மயங்கி இருக்கக்கூடும் என்று யூகித்து அவளை நிமிர்த்தியவன் அவனது சட்டையை அவளுக்கு அணிவித்தான். ஆண் பெண் பேதமின்றி அவனின் செயல் ஒரு தாய் தன் குழந்தைக்கு ஆற்றும் பணிவிடை போன்றே இருந்தது.
இதற்குள் சரவணன் ராஜசேகரின் ஆட்களை அடித்து நொறுக்கிவிட்டு ராஜசேகரை உலுக்கி எடுத்துக் கொண்டிருந்தான். தன் கையில் துவண்டு கிடக்கிறவனின் உடலில் உயிர் இருக்கிறதா இல்லையா என்பதை பற்றியெல்லாம் ஆராயும் மன நிலையில் கூட அவன் இல்லை. அந்தளவு அவன் மனம் கொந்தளித்து கொண்டிருந்தது.
எரிமலையாக கொதித்தது அவன் உள்ளம். வெறிகொண்டவனாக அந்த கொடூரனை அடித்துத் துவைத்து எடுத்துக்கொண்டிருந்தான்.
பிரபா அவசரமாக அவனை விளக்கித் தள்ளினான்.

"டேய். அவன் உயிரோட இருக்கான்னா இல்லையான்னு தெரியல. அவனை விடுடா"

"சாகட்டும்டா. இந்த நாய் எல்லாம் உயிரோட இருந்து என்ன செய்ய போகுது. இன்னும் நாலு பொண்ணுங்க வாழ்க்கையைக் கெடுக்கும். செத்துத்தொலையட்டும்."

"இல்ல மச்சி. இது தப்பு. அவன் செத்தா நீ ஜெயிலுக்கு போயிடுவ."

"போறேன் டா. இவனை கொன்னுட்டு ஜெயிலுக்கு போனா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். என்ன காப்பாத்திக்க இவனை உயிரோட விட சொல்லுறியா? பாவம்டா பாத்திமா. அவ இவனுக்கு என்னடா கெடுதல் பண்ணா. அவ இன்னும் என்ன எல்லாம் கஷ்டத்தை அனுபவிக்கணும்னு அவ தலைல எழுதி இருக்கோ!! கடவுளே!!" என்று தலையில் அடித்துக்கொண்டு அழுது தீர்த்தது அந்த கம்பிரமான ஆண் மனம்.

பிரபா அவனுக்கு நிதானமாகப் பதில் உரைத்தான்.

"நீ அழறதாலயோ இல்ல இவன் மரணிக்குறதாலயோ பாத்திமா மாதிரி பொண்ணுங்களுக்கு நடக்குற கொடுமை தடுக்கப்படும்னா நீ என்ன நினைக்குறியோ அதைத் தாராளமா செய்"

"இப்போ என்னை என்னதான்டா பண்ண சொல்றா?"

"நான் த்ரிஷ்யாவுக்கு போன் பண்றேன். போன வாரம் ஊருக்கு போன அப்போ அவளோட கார்ல தான் மைசூர்க்கு வந்ததா பாத்திமா சொன்னா. சோ அவ காரை எடுத்துட்டு வரச்சொல்றேன். அப்போ தான் பாத்திமாவை சேஃபா கூட்டிட்டு போக முடியும். நீ இவனை கூட்டிட்டு நம்ம வீட்டுக்கு வா. அங்க சொல்றேன் இவனை என்ன பண்ணலாம்னு." என்று கூறினான் பிரபா.

இந்த நிலையில் அவர்கள் இருவருமே எதிர்பார்த்திராத ஒரு சம்பவம் நடந்தது. சுயநினைவின்றி அமர்ந்திருந்த பாத்திமா திடீரென்று வெறி பிடித்தவள் போல் எழுந்து ஓடத் தொடங்கினாள்.

"சரோ நீ இவன கூட்டிட்டு இங்க இருந்து போயிடு, எப்போ வேணாலும் இங்க போலீஸ் வந்துடுவாங்க நமக்கு உதவி பண்ண சரியான நேரத்துக்கு வராத போலீஸ் இதுக்கு மேல வர தேவை இல்ல." என்று கூறியவன் விரைந்து சென்று பாத்திமாவை துரத்தினான்.

ஆனால் பாத்திமா ஓடிக்கொண்டே இருந்தாள். ஒரு சமயம் சோர்வாகவும் மறு சமயம் ஆக்ரோஷமாகவும் நடந்துகொள்ளும் அவளின் நிலை பிரபாவிற்குள் பெரும் அச்சத்தை விதைத்தது.

வேகமாக ஓடியவள் காரைவிட்டு வெளியேறி சாலை பகுதியில் ஓடினாள். அந்நேரத்தில் சாலையில் யாரும் இல்லாமல் இருந்தது அவளது அதிர்ஷ்டமா துரதிஷ்டமா என்று சொல்லமுடியாத நிலையை உருவாக்கி இருந்தது. அவளில் உடலில் இருந்த பிரபாவின் சட்டை அவளது முட்டிவரையில் அவள் உடலை மறைத்திருக்க பிரபா அவளைத் துரத்திக்கொண்டு ஓடுவதை அங்கு எவரேனும் கண்டிருந்தால் நிச்சயம் தவறாகப் புரிந்துகொண்டு இருக்கக்கூடும்.

பாத்திமா இறுதியாக பயிற்சி வளாகத்தின் சாலையை அடைந்ததும் பிரபாவிற்கு மேலும் பதற்றம் அதிகரித்தது. இந்த நிலையில் அவளை யாரும் கண்டுவிடக்கூடாது என்று கவலை அதிகரித்த நிலையில் பாத்திமா திடீரென்று கால் தடுக்கி நட்ட நடு சாலையில் விழுந்தாள். வேகமாக பிரபா அவளது அருகில் சென்று அவளைத் தூக்கிக்கொண்டு அந்த சாலை மறைவில் ஓடி ஒரு மரத்தின் பின்புறம் சென்று அமர்ந்துகொண்டான்.

அவசரமாக த்ரிஷ்யாவின் எண்ணிற்கு அழைக்க உடனே அவனது அழைப்பினை ஏற்றாள் அவள்.

"ஹலோ. இப்போ உனக்கு என்ன வேணும், என்ன நிம்மதியா தூங்கக் கூட விடமாட்டியா பிரபா" என்று அவள் கோபமாக வினவ பிரபா அவளுக்கு அளித்த பதிலில் படபடத்து போனாள்.

"த்ரிஷ்யா. ப்ளீஸ்மா திட்டி போனை வைச்சுடாதே. எனக்கு உன்னோட உதவி வேணும், உன் காரை எடுத்துட்டு உடனே வர்றியா?"

இந்த வார்த்தைகளால் அவள் மனதில் பதற்றம் அதிகரித்தது. "என்ன பிரபா? என்ன ஆச்சு? ஏன் என்னவோ போல பேசுறீங்க? உங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லையே? பாத்திமா.. பாத்திமா உங்க கூட தானே...?" என்று கேட்டவளின் குரலில் இருந்த கவலையையும் பதட்டத்தையும் கூட அவன் கவனிக்கும் நிலையில் இல்லை.

"ப்ளீஸ் மா அப்புறம் எல்லாம் சொல்றேன். நான் சொல்ற இடத்துக்கு காரை எடுத்துட்டு வா" என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தவன் பாத்திமாவை பார்க்க அவள் முகம் பயத்தால் வெளிறிக் காணப்பட்டது.

சரியாக பத்து நிமிடங்களில் பிரபா சொன்ன இடத்தை அடைந்த த்ரிஷ்யா பாத்திமாவின் நிலையைக் கண்டு கலவரமானாள்.

அவசரமாக இருவரும் சேர்ந்து அவளை காரில் ஏற்ற காரை ஒட்டியபடி த்ரிஷ்யா பிரபாவிடம் விவரம் கேட்டறிந்தாள்.

ராஜசேகரை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்ற ஏற்பாட்டைத் தவிர்த்து மற்ற அனைத்து விவரங்களையும் பிரபா த்ரிஷ்யாவிடம் கூறினான்.

அனைத்தையும் பொறுமையாகக் கேட்டறிந்த த்ரிஷ்யாவின் உள்ளம் சீற்றமாக பொங்கியது.

"இங்க பாரு த்ரிஷ்யா. இந்த நிலையில பாத்திமாவை கூட்டிட்டு சென்டர்க்கு போறது அவ்வளவு நல்லதில்லை. நிறைய பேரோட கேள்விக்கு பதில் சொல்லவேண்டி இருக்கும். எங்க வீட்லயும் கூட்டிட்டு போக முடியாத சூழ்நிலை. உனக்கு ட்ரைனர் சுதா ஞாபகம் இருக்கு இல்ல. அவங்க வீட்டுக்கு கூட நாம ஒரு பார்ட்டிக்கு போனோமே. அவங்க வீட்டுக்கு நீங்கப் போங்க. நான் இங்க வழியில இறங்கி வீட்டுக்கு போறேன்." என்று பிரபா கூற த்ரிஷ்யா அவனை விசித்திரமாகப் பார்த்தாள்.

"இவ்வளவு மோசமான நிலைமைல நீ எங்களை விட்டுட்டு போறியா? எனக்கு புரியல. உங்க வீட்ல இருக்றதுல என்ன பிரச்சனை? நாங்க ஏற்கனவே உங்க வீட்ல இருந்து இருக்கோம்ல?" என்று அவள் கேட்க பிரபாவிற்கு எரிச்சல் அதிகரித்தது.

"ஒரு விஷயம் சொன்ன அதை அப்படியே கேட்டு நடக்க தெரியாதா உனக்கு? எப்பவும் உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்துட்டே தான் இருக்கு. ஆனா உனக்கு விளக்கம் கொடுக்குற மூட்ல நான் இப்போ இல்ல. எனக்கு நிறைய வேலை இருக்கு. வண்டியை நிறுத்து. வண்டியை நிறுத்துன்னு சொல்றேன்ல" என்று எரிச்சலும் கோபமும் நிறைந்த குரலில் அவன் கத்த, அவள் வாயடைத்து போனாள்.
அவன் கூறிய படி காரை நிறுத்த அவசரமாக வெளியேறிய பிரபாவை கண்டு த்ரிஷ்யா செய்வதறியாது திகைத்தாள்.
இதுநாள் வரை த்ரிஷ்யாதான் பிரபாவிடம் கோபமாகப் பேசி இருக்கிறாள். ஆனால் இன்று அவன் நடந்துகொண்ட விதம் அவளைப் பெரிதும் பாதித்தது. அனைத்திற்கும் மேலாக அவனது அவசரம் கோபம் அனைத்திலும் ஏதோ ஒரு ஓட்டா தன்மை இருந்தது.

எப்பொழுதும் அவளது கண்களை நேராகப் பார்த்து பதில் கூறும் அவனது கண்களில் இன்று தெரிந்த அலைபுறதலை காண அவளுக்கு குழப்பமே அதிகரித்தது.

இப்படி பலவாறு யோசித்துக்கொண்டிருந்த போதிலும் பிரபா கூறிய இடத்திற்குச் சென்று சரியாக வாகனத்தை நிறுத்தினாள்.

பிரபா ஏற்கனவே சுதாவிடம் பேசியில் அனைத்து விவரங்களையும் கூறி இருந்ததால் அவளுக்கு தனியாக பதில் சொல்லவேண்டிய தேவை ஏற்படவில்லை. பாத்திமாவை குளிக்கவைத்து அவளுக்கு தேவையான சுதாவின் உடையினை அவளுக்கு இருவருமாகச் சேர்ந்து அணிவிக்கும் வரை பாத்திமாவிடம் இருந்து எந்த எதிர்வினையும் இல்லை.

ஆனால் த்ரிஷ்யா இதைப் பெரிதாக கருதவில்லை. அவளுக்கு போதை மறந்து அளிக்கப்பட்டிருப்பதாக பிரபா ஏற்கனவே கூறி இருந்ததால் அதன் தாக்கம் தான் இதற்குக் காரணம் என்றே நினைத்திருந்தாள்.

"என்ன த்ரிஷ்யா? இவ கல்லு மாதிரி உட்கார்ந்துட்டு இருக்கா."

"ஒன்னும் இல்ல. நடந்த விஷயத்துனால ரொம்ப அதிர்ச்சில இருக்கா. தூங்கி எழுந்தா சரியாய் போய்டும்." என்று த்ரிஷ்யா சமாதானம் கூறினாள்.

அதே நேரம் பிரபாவும் சரவணனும் ராஜசேகரின் முன்னிலையில் நின்று கொண்டிருந்தனர். ராஜசேகர் அவர்களின் தரையில் ரத்தவெள்ளத்தில் கிடந்தான்.

"டேய் சரோ. இவனை தெளிய வைடா. மயக்கத்துல நாம இவனை என்ன பண்ணாலும் அவனுக்கு தெரியப்போறதில்ல." என்று கூற சரவணன் அவனது வாயில் சிறிது தண்ணீரை ஊற்ற லேசாக நினைவு வந்தவனாக அவன் கண்களை திறந்தான்.

"வேணாம் வேணாம். என்ன விட்டிருங்க. என்ன ஒன்னும் பண்ணிடாதீங்க." என்று அவன் கெஞ்ச பிரபாவும் சரவணனும் அவனை பாவமாக பார்ப்பது போல் பாவனை செய்தனர்.

"என்ன ஆச்சு அம்பள சிங்கமே. உங்க வீரத்தை எல்லாம் பத்து வயசு பொண்ணுகிட்ட தான் காட்டுவீங்களா? ஆம்பள கிட்டலாம் காட்டமாட்டீங்களா?" என்று பிரபா கேட்க,

"ஏன் பிரபா இவன் கிட்டலாம் பேசிட்டு இருக்க. எதை வைச்சுக்குட்டு இவன் ஆம்பளன்னு சொல்லிட்டு திரியுறானோ அதை கட் பண்ணிட்டா தானா இவன் அடக்கிட்டு போறான்."

"இல்ல சரோ. கட் பண்றதெல்லாம் பழைய பார்முலா. நாம என் புதுசா ஒன்னு பண்ண கூடாது" என்று சரவணனை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே கூற இருவரும் ராஜசேகரை பார்த்த பார்வையில் நடுநடுங்கி போனான். அவனது கண்களில் மரண பயம் தெரிந்தது.

அவன் தவழ்ந்து கொண்டே வந்து இருவரின் கால்களையும் பற்றி மன்றாடினான்.

"என்ன விட்டிடுங்க. ப்ளீஸ் நான் வயசானவன். உங்க அடிய தாங்குற சக்தி எனக்கு இல்ல. ப்ளீஸ்." என்று கெஞ்ச தொடங்க சரவணன் கை முஷ்டிகள் இறுகின.

"ஓஹோ. இப்போ தான் நீ வயசான கெழக் கட்டைன்னு தெரியுதா? ஒரு சின்ன பொண்ணை நாசம் பண்ண நினைக்கும் போது தெரியலையா? இதெல்லாம் சரி வராது பிரபா. இவன் பேசப் பேச எனக்கு வெறி அதிகமாகிட்டே போகுது. இவன் தலையை வெட்டி பாத்திமா காலடில போட்டா தான் என் வெறி அடங்கும்."

"டேய், அதை பண்ண எனக்கு தெரியாதா? இவன் கண்ணுல இனிமே அவ படவே கூடாதுனு நினைக்குறேன். அதுவும் இல்லாம இவன் சாககூடாது." என்று கூறியவன் அவசரமாகச் சென்று பிளக்குடன் கூடிய ஒரு ஓயரை கொண்டுவந்தான். அதனை அலுமினியத்தால் ஆனா கிளிப்பில் சுற்றிவிட்டவன் அதனைச் சரவணனிடம் கொடுத்து விட்டு அவன் அந்த பிளக்கை சுவிட்ச் பாக்ஸில் சொருகினான்.

அவனின் எண்ணம் புரிந்த சரவணன் ராஜசேகரின் சட்டையை பிடித்து அவனை தூக்கி நிறுத்தினான். பின் அவனின் மறுப்புகளைச் சட்டை செய்யாமல் அவனது ஆடைகளை முழுவதையும் கழற்றியவன் அவன் கையில் இருந்த கிளிப்பை அவனது கால்களுக்கு இடையில் உள்ள உறுப்பில் மாட்டிவிட்டான். அடுத்த நொடி பிரபா ஸ்விட்சை ஆன் செய்ய ராஜசேகர் மின்சார தாக்குதலினால் நெருப்பில் சிக்கிய பறவையாக துடிதுடித்தான். அவனது அலறல் சத்தம் பாத்திமா அன்று வரை அனுபவித்த வலிகளுக்கு முடிவுரையாக அமைந்தது.

ஒரு சிலவினாடிகளில் ஸ்விட்சை ஆப் செய்தவன் ராஜசேகர் அருகில் சென்று அவனுக்கு உயிர் இருக்கிறதா என்று பார்த்தான். உயிர் இருந்த போதிலும் அவனது நாடி மிகவும் பலவீனமாகத் துடித்தது.

பின் இருவருமாக அவனை அழைத்துக் கொண்டு எந்த காட்டில் பாத்திமாவை கண்டறிந்தார்களோ அதே காட்டில் அவனை உடலில் ஆடை ஏதுமின்றி கிடக்கும்படி செய்தனர்.

ராஜசேகர் முழுவதுமாக சுயநினைவை இழந்திருந்தான்.

"நீயெல்லாம் இந்த மாதிரி காட்டுல அனாதையா நாய் நரிக்கு இரையாகி சாகனும். அப்போ தான்டா. உன்னை மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் தப்பு பண்ண நினைச்சாலே பயம் வரும்." என்று கூறிவிட்டு அவ்விருவரும் அந்த இடத்தை விட்டு அகன்றனர்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா