மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumContest: Naanum Naavalum contestSrithi Srika- நானும் நாவலும்Post ReplyPost Reply: Srithi Srika- நானும் நாவலும்

Quote from monisha on October 27, 2020, 11:39 AM

Quote from Rithi on October 27, 2020, 9:09 AM
நானும் நாவலும்! 2014.. நான் காலேஜ் பைனல் இயர் பண்ணிட்டு இருந்தேன். அப்ப என்கிட்ட தனியாக மொபைல், லேப்டாப், கம்ப்யூட்டர் எதுவுமே கிடையாது. அது லேடீஸ் காலேஜ் தான். என்னோட பிரண்ட்ஸ் 10 பேர், அதுல 3 பேர் எப்பவும் கதை, கவிதை, நாவல்னு தான் பேசிட்டு இருப்பாங்க. அப்பல்லாம் பெருசா எனக்கு அதில் ஆர்வம் இல்லை. ஜனவரி பொங்கலுக்கு ஒரு வாரம் முன்னாடி கவெர்மென்ட் லேப்டாப் குடுத்தாங்க. அதை வாங்கினதுமே, என்னோட பிரண்ட்ஸ் சும்மா படிச்சு பாரு, சூப்பரா இருக்கும்னு சொல்லி ஒரு நாவல் லிங்க் குடுத்தாங்க. அப்பவும் சரி பிரண்ட்ஸ்காக இந்த ஒன்னை படிப்போம் அப்படினு நினச்சு தான் பொங்கல் லீவ்ல ஸ்டார்ட் பன்னினேன். அந்த ஒரு நாவலை ஒரே நைட்ல படிச்சு முடிச்சுட்டு 1 மாசம் அப்படியே கனவுல மிதந்துட்டு இருந்தேன். நான் படிச்ச முதல் நாவல். அவனுக்கு நான் அழகு ஒரு நைட்லேயே படிச்சுட்டேன். அடுத்த நாள் பிரண்ட்ஸ் கிட்ட போயிட்டு, "ஹேய் என்னடி இப்படி எழுதிருக்காங்க? என்னால இன்னும் கதையை விட்டு வெளியில் வரை முடியலை" அப்படினு . பேச ஆரம்பித்தேன். அப்படியே உதய் சௌமினு தான் கொஞ்ச நாள் அந்த கேரக்டர்ஸ் கூட சுத்திட்டு இருந்தேன். இது தான் நான் முதலில் நாவல் உலகத்துக்கு என்டர் ஆன மொமெண்ட். சிவகாமி சபதம், பொன்னியின் செல்வன் எல்லாம் அப்புறம் தான் படிச்சேன். நிறைய எழுத்தாளர்கள் புக் பிரண்ட்ஸ் கொண்டு வருவாங்க. காலேஜ்ல கிளாஸ் நடக்கும் போதும் நாங்கள் மறைத்து வைத்து நாவல் படித்த அனுபவம் நிறைய. அதிலும் காலேஜ் பைனல் இயர் வேற! ப்ராஜெக்ட் ஒர்க்னு சொல்லிட்டு, எதாவது மரத்தடியில் 4 பேரும் உக்காந்துக்குவோம். அந்த இடமே அமைதியா இருக்கும். ஆளுக்கு ஒரு லேப்டாப்.. வேற வேற கதை.. படிச்சு முடிச்சதும் இது நல்லார்க்கு இதை படி.. அப்படினு மாத்தி மாத்தி படிப்போம். ஏன் நைட் எல்லாம் கூட இதே தான் நடக்கும். நைட் 1 மணி 2 மணிக்கு எல்லாம் கதை படிச்சுட்டே மொபைல்ல பிரண்ட்ஸ்க்கு கமெண்ட் குடுத்துட்டு இருப்போம்..அப்ப எல்லாம் அம்மாகிட்ட நிறைய திட்டு வாங்கி துடைச்சி விட்டிட்டு போயிட்டே இருப்பேன். நிறைய கதைகள்.. நிறைய எழுத்தாளர்கள் தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன். வத்சலா மேடம் எழுத்து நடைக்கு நான் தீவிர ரசிகை. அடுத்து என்னோட மைண்ட்ல ஆணி அடிச்சா மாதிரி பதிஞ்ச கதைனா.. "நினைக்காத நேரமில்லை".. கௌதம் ப்ரியா, மது ஸ்ரீராம்.. கண்ணீரோட சில வரிகளை கணக்கில் வராத அளவுக்கு திருப்பி திருப்பி படித்தேன். எல்லா ஹீரோ மாதிரி இல்லாமல், 'உனக்காக் காத்துட்டு எல்லாம் இருக்க மாட்டேன். உன்னை விரும்புற அளவுக்கு ஏன் குடும்பத்தையும் விரும்புறேன்.. அவங்களுக்காக என்ன வேணா செய்வேன்' அப்டினு குடும்பத்தையும், காதலியையும் ஈகுவல்லா, ஒவ்வொரு வார்த்தையும் மனசுல பதியுற மாதிரி ஆழமா சொல்லி இருப்பாங்க ரைட்டர் அம்மு.. கதை மாந்தர்களோட சோகம் சிரிப்பு அழுகை வெட்கம் இதெல்லாம் நம்மை பாதிச்சு, நம் முகத்திலும் அதோட பிரதிபலிப்பு இருந்துச்சுண்ணா எனக்கு தெரிஞ்சு அங்கே தான் ஒரு எழுத்தாளர் அவங்க வெற்றியை பெறுகிறார். அடுத்ததா நான் உருகி, அழுது, மூழ்கி 1 வாராமா சாப்பிடாமல் தூங்காமல், படிச்ச இல்லை இல்லை வாழ்ந்த கதைனா, "நின்னை சரணடைந்தேன்". சித்தார்த், மது, அர்ஜுன்.. கதை முழுக்க நிறைய கேரக்டர்ஸ் இருகாங்க. ஆனால் ஒரே ஒரு நெகடிவ் கேரக்டர் கூட இல்லை. காதல், நட்பு, உறவு, இப்படி எல்லாத்தையும் அவ்வளவு அழகா சொல்லிருப்பாங்க ரைட்டர் ஷெண்பா மேடம்.. ஜீவா! தன் நண்பன் தான் விரும்புற பெண்ணை விரும்புறான்னு தெரிஞ்சதும், அழகா ஒரு வார்த்தை சொல்லுவான். என்னை விட இவன் மதுவை பத்திரமா பார்த்துப்பான்னு.. சித்தார்த், "மதுவை கஷ்டப்படுத்தி வரும் காதல், அதன் மூலமா வரும் கல்யாணம் எனக்கு வேண்டாம்" என்ன மனுஷங்க டா நீங்க? அப்படினு தான் தோணும். இப்படி சின்ன சின்ன வார்த்தைகள்ள அப்படியே நம்மை மெல்ட்டாக்கி, டச் பன்னிடுறாங்க.. அழுது, பீல் பண்ணி, காதலை உணர்ந்து உருகி படிக்கணும்னு நினச்சா கண்டிப்பா இந்த கதை பெஸ்ட்டு. இப்படி அழகா ஆரம்பிச்ச பயணம் 2016 ல ஸ்டாப் ஆயிடுச்சு.. கதை படிக்குறதையே 1வருடம் விட்டுட்டேன். சரியான வேலை கிடைக்காமல் திண்டாடிய கொடுமையான காலம். அடுத்து 2017 மறுபடியும் அடுத்த ரவுண்டு ஸ்டார்ட் பண்ணேன். இப்போது வரைக்கும் போயிட்டே இருக்கு. இனியும் போயிட்டே தான் இருக்கும். ஒரே ஒரு கதை கொஞ்சம் டல்லடிச்சா போதும் அடுத்த கதை படிக்க பயம் வந்துடும்.. ஆனாலும் படிக்கிறதை நிறுத்திட மாட்டேன்.. காதல் பயணம், எங்கே எனது கவிதை, இதற்கு பெயர் தான் காதலா, மனதிலே ஒரு பாட்டு, இப்படி எனக்கு புடிச்ச கதைக்கு லிஸ்ட் ரொம்ப ரொம்ப பெருசு. இப்போது வரைக்குமே எந்த கதை படிச்சு முடிச்சாலும் உடனே பிரண்ட்ஸ்க்கு போன் பண்ணி சொல்லிடுவேன். காதல் கலாட்டா.. ரிசென்டா படிச்ச 2 கதைகள்ல ரொம்ப பிடிச்ச ஒன்னு. வயிறு வலிக்க படிச்சு சிரிச்சேன். எனக்கு சிரிச்சுட்டே இருக்க ரொம்ப புடிக்கும். நான் கண்சீவா இருக்கும் போதும் தேடி தேடி படிச்சது இதை தான். ப்ரியா மோகன் சிஸ்டர் சூப்பரா குடுத்தாங்க. அட்லாஸ்ட் போன மாசம் நான் படிச்சு இன்னும் இப்பவும் டெய்லி ஒவ்வொரு சீன்னையும் தேடி தேடி அடிக்கடி படிக்குற கதை "காற்றில் எங்கும் உன் வாசம்". பார்த்தி, வாசு னு சொல்லவா! தீபா, தேவா னு சொல்லவா? எப்படி இப்படினு நினைக்கும் போதெல்லாம் வியந்து போறேன். அய்யோ அய்யோ அய்யோ!.. என்னமா எழுதிருக்காங்க இந்து சிஸ்டர். ஒவ்வொரு கேரக்ட்டரும் சும்மா சொல்லி அடிக்கறாங்க பா.. நம்ம பூவு தான் அல்ட்டிமேட்.. "கால் டாக்ஸில போறவன பார்த்தாலே காண்டாகுது".. பார்த்தி சொல்லும் போது அவ்ளோ அழகா இருக்கும்.. நாவலோட என் வாழ்க்கைனு, தினமும் அழகா அனுபவிச்சு வாழ்ந்துட்டு இருக்கேன். முகம் தெரியாத நாவல் ஹீரோவை நான் சினிமா ஹீரோவுடன் என்றும் சேர்த்து பார்த்ததில்லை. இந்த உலகத்தில் என் மனம் நிறைந்து உள்ளது. .. நிறைய கதை படிச்சுட்டு இந்த மாதிரி லைஃப் பார்ட்னர் இருந்தா நல்லாருக்கும்ல அப்டினு நினச்சுருக்கேன். காமெடியா இருக்குல்ல.. எனக்கும் அப்படி தான் இருந்துச்சு நாவல் பைத்தியத்துல.. இப்போது அவரின் துணை இல்லாமல் நானும் நாவலும் இல்லை .. நாவலோடு நான் ஆரம்பித்த காலத்தை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றிகள்... ..
Fantastic😍😍😍 நீங்க சொன்ன எழுத்து எழுத்தாளர்கள் கதைகள் அதை விடவும் உங்கள் அனுபவங்கள்னு எல்லாமே சூப்பர் பா கதை சொல்ற மாதிரி அழகா சொல்லிட்டீங்க... செம ரித்திகா

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா