மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumTamil kavidhaigal: Monisha kavidhaigalபெண்மையேPost ReplyPost Reply: பெண்மையே <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-admin" href="#">monisha</a> on October 22, 2019, 3:59 PM</div>வெறும் சதைபிண்டங்களா பெண்கள்? அந்த உடலில் உணர்வில்லையா? கண்ணில் அகப்படாமல் மறைந்துள்ள உயிரில்லையா? எங்களின் அங்கங்கள்தானே வேறு ஆசைகள் அவைதாமே... தொலைகாட்சியிலும் நாயகனாய் வரும் ஆண்கள்... கவர்ச்சிக்காக கலையப்பட்ட பெண்கள்... சுகங்களில் பங்கெடுக்க நீங்கள் சுமைகள் மட்டும் எங்களின் சுழற்ச்சியில்தான்.. இலக்கியவாதிகள் கூட வானத்தை ஆண்மை என்றும் மிதிப்படும் பூமியை பெண்மை என்றும் பறைசாற்றியது ஏன்? பேருந்தில் ஊசாலாடும் ஆண்களுக்கு கருவினை சுமந்து ஈன்றெடுக்கும் வலியை உணர வைத்திருந்தால் அந்த உயிரின் மதிப்பை உணர்ந்திருப்பார்கள்... தர்மனும் துரியோதனனும் ஆடிய விளையாட்டில் பாஞ்சாலி பணையமாக்கப்பட்டது ஏன்? இராமனும் இராவணணும் எதிரிகளாய் மோத சீதை சிறையிலிடப்பட்டது ஏன்? காலங்கள் கடந்துவிட்டன காட்சிகள் மாறவில்லை... கனவுகள் வளர்ந்துவிட்டன இருப்பினும் கட்டுபாடுகள் தளரவில்லை... அறநெறி போதித்த திருவள்ளுவனும் கற்பினை கன்னிகளுக்கு மட்டுமே விட்டுச்சென்றான்... பயணத்திற்காக தேரில் பூட்டிய குதிரையும் சரி... மணமகளாய் மாங்கல்யம் பூட்டிய பெண்களும் சரி... வேறு வேறு அல்ல கடிவாளம் கட்டி காண்பிக்கும் திசையில் ஓடவேண்டியதுதான்.. திருமணத்திற்கு முன்பு தந்தையின் கைப்பிடியில்... பின்னர் கணவனின் காலடியில்.. அறுபது வயது நிரம்பிய முதுமையில் உன் கால ஏட்டை புரட்டிப் பார்த்தால் அவை வெள்ளை காகிதங்களாகவே இருக்கும்... நீ எழுதியவை மொத்தமும் பிறரின் ஏட்டிலே அல்லவா! சிறகுகள் இருந்தும் பறக்காத பெண்மை அதனை உணர்ந்து சிறகுகள் விரித்து வானில் பறக்க நினைக்கும் பறவைகளை கடிந்து கொள்ளத்தானே செய்யும்.. வழக்கங்கள் மாறினால் வழக்குகள் தோன்றும்... வானை நோக்கிய பறவைகளுக்கு வேடனின் வருகை தெரியுமோ... பலநேரங்களில் அவை தின்பண்டங்களாய் மாறிவிடவும் கூடும்... ஆபரணங்களும் ஆடை அலங்காரங்களும் பெண்மையின் அடையாமாய் மாறிப் போயின... அழிந்துவிடும் அழகிற்கு அவளை இலக்கணமாக்கிவிட்டு அழியாத அறிவிற்கு அவனே ஆதாரமாகிவிட்டான்... மையிட்டு கொண்டு கருக்க செய்தது உங்கள் விழிகளை மட்டுமல்ல உங்கள் வழிகளையும்தான்... சாயம் பூசியது உங்கள் இதழ்களுக்கென்றோ நினைத்தீர்களோ! உங்கள் வார்த்தைகளுக்கு... கழுத்தை இறுக்கும் ஆபரணங்களை உனக்கு கொடுத்துவிட்டு கீரடத்தை அவன்தானே சூட்டிக் கொண்டான்... பலியாடாய் உனக்கு மாலை சூட்டிவிட்டு புகழ் மாலையை அவனே சூட்டிக் கொள்வான்... புரிந்து கொள்ளடி பெண்மையே!</blockquote><br> Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா