மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumBhagya Novels: Avalukaga AvanAvalukaga avan -3Post ReplyPost Reply: Avalukaga avan -3

Quote from bhagyasivakumar on November 11, 2020, 12:01 PM

அத்தியாயம் -3
நாட்களும் மெல்ல கடந்தது ,அந்த வருடமும் படிப்பு முடிந்தது. கார்த்திக் நீட் தேர்வு எழுதிவிட்டு அதன் முடிவுக்காக காத்திருந்தான். தமிழ் மீது இருந்த ஒருதலைக்காதலும் எள்ளளவும் குறையவில்லை. அவளை விட்டு மொத்தமாக பிரிந்த சோகத்தில் ஆழ்ந்திருந்தான். இனி பள்ளிக்கும் அவனுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை, இனி அவளது இனிமையான குரலை ப்ரேயர் மீட்டிங்கில் கேட்க இயலாது மற்றும் தூரத்தில் இருந்து அவளை பார்க்கவும் இயலாது. 'பேசாமல் தமிழு கிட்ட உண்மையை சொல்லிடுவோமா அவளை சந்திச்சு. எவ்வளவு நாள் தான் இப்படியே மனசுல போட்டு கஷ்டபட முடியும்' என்று நினைத்தவன்... அவளை சந்திக்க முற்பட்டான். பள்ளி முடிந்து எப்படியும் அவள் சைக்கிளில் வருவாள் எனவே பார்த்து விடலாம் அவளை என்று நினைத்தவன் பள்ளி வாசலில் தனது இருசக்கர வாகனத்தை ஓரங்கட்டிவிட்டு காத்துகிடக்க... அவளோ தனது தோழி வட்டாரங்கள் இடையே எதையோ பேசி சிரித்தபடி சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்தாள். "தமிழ்....தமிழ்ச்செல்வி" என்றான் அவள் பெயரை உரக்க உச்சரித்தப்படி. அதைக்கேட்டு திரும்பியவளுக்கோ ஆச்சரியம் என்னடா இவன் நம்ப சீனியர் ஆச்சே இவன் ஏன் நம்பளை கூப்பிடுறான். என்று யோசித்துவிட்டு அவனருகே சென்றாள். "ஹாய்" என்று கைகுலுக்கினான் கார்த்திக். "ம்ம்ம் ஹாய்...என்ன சீனியர் என்னை எதுக்கு கூப்பிட்டிங்க" என்றாள் கார்த்திக்கிடம். "சீனியர் னு கூப்பிடாத கார்த்திக் என்று கூப்பிடு உரிமையா" என்றான் வெடுக்கென்று. "என்ன உரிமையாகவா உங்களையா...அச்சோ இதுக்கு முன்னாடி உங்கள் கிட்ட நான் பேசினது கூட இல்லை " என்று தயங்கினாள். அவள் தயக்கம் அவனுக்கு ஒன்றும் புரியாமல் இல்லை. எனினும் எப்படியேனும் அவளுக்கு அவன் காதலை புரியவைக்க வேண்டும் என்று தோன்றியது. "தமிழு உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்" என்றான். "சொல்லுங்கள்" என்றாள் புருவத்தை சுருக்கியபடி. "அது வந்து.." என்று அவன் ஆரம்பிக்க அதற்குள் அவன் தாயிடம் இருந்து அழைப்பு வந்தது. "கார்த்தி...நீ என் புள்ளைனு நிருபிச்சிட்ட டா..நீ நீட் எக்ஸாம் பாஸ் ஆயிட்ட இன்பேக்ட் நல்ல ஸ்கோர் பண்ணியிருக்க..." என்று கூறவும் அவனுக்கு தலைகால் புரியவில்லை.. "வாவ் ரியலி..." என்று புன்னகையித்தான். ஆனால் அவளுக்கோ அங்கு என்ன நடந்துக்கொண்டிருக்கிறது என்று புரியவில்லை. "நான் போகலாமா கார்த்திக்... ஏதோ பேசணும் சொன்னிங்க" என்க அவனோ... " ஆமாம் தமிழு பேசணும் அதுக்கு முன்னாடி ஒரு நல்ல செய்தி நான் நீட் எக்ஸாம் தேர்ச்சி அடைஞ்சிட்டேன். டாக்டர் ஆகுற கனவு நிறைவேற போகுது" என்றான் மகிழ்ச்சியுடன். அவளோ அதே மகிழ்ச்சியில் மீண்டும் கை குலுக்கி "கங்க்ராட்ஸ்" என்றாள். அப்போதைக்கு காதலை சொல்ல வேண்டாம் என்று தோன்றியது அவனுக்கு. இந்த பரஸ்பரம் நட்பு தற்போதைக்கு போதும் என நினைத்தான். "அப்றம் தமிழு இதான் என் மொபைல் நம்பர் எப்பவாவது கால் பண்ணு வாட்ஸ்அப்பில் டெக்ஸ்ட் பண்ணு" என்றவன் அவளை ஏறிட்டு பார்த்துவிட்டு "ஓகே பை" என்க அவளும் கபடமில்லாத புன்னகை சிந்திவிட்டு "பை" என்றபடி சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றாள். வீட்டுக்குள் நுழைந்த கார்த்திகை அவனது பெற்றோர் கட்டியணைத்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். "கார்த்திக் உனக்கு எம்.பி.பி.எஸ் கன்பார்ம்" என்று தாய் புன்னகையித்தபடி கூற அவனும் பதிலுக்கு புன்னகையித்தபடி "எஸ் மாம் ஐயம் யுவர் சன்" என்று கூற அன்று அவன் வீடு மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. வகைவகையான சாப்பாடு எல்லாம் ஹோட்டல் சோழாவிலிருந்து ஆர்டர் செய்யப்பட்டு வரவழைத்து அவனுக்கு பரிமாற... அன்று ஒரு நாள் அவனுக்கு அதைத்தவிர வேறு எதுவும் சந்தோஷமாய் தெரியவில்லை. உறவினர்களிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்தன.... ஆனால் அவனால் தமிழின் அந்த பரஸ்பர நட்பினை மறக்க இயலவில்லை.. அவள் கைகுலுக்கி சொன்ன கங்க்ராட்ஸ் மட்டுமே அவன் செவிகளில் ஒலித்துக்கொண்டிருந்தது. என்னவோ தெரியவில்லை அவனால் அவளிடம் காதலை சொல்லவும் இயலவில்லை, அவளின் நட்பைபும் விடமனமில்லை. எந்த வகையிலும் அவனுக்கு கிடைத்த அந்த அழகான நட்பை முறித்துக்கொள்ள விரும்பவில்லை. காலப்போக்கில் சொல்லிக்கொள்ளலாம் தன் காதலை என்று விட்டுவிட்டான். .... தமிழ்ச்செல்வி அவன் தந்த அந்த அழைப்பேசி எண்ணை ஒருமுறை பார்த்தாள். அதை எடுத்து அழுத்தி அவனை தொடர்பு கொள்ளலாமா என்று யோசித்தவள்,காரணமின்றி என்ன பேசுவது,அதற்கான நேரம் இது இல்லை என்றும் நினைத்தவள் பேசாமலே விட்டுவிட்டாள். அதெல்லாம் சரிதான் இப்போதைக்கு அவனிடம் அவள் இடைவேளி விடுவதும் நல்லதே கார்த்திக்கின் கவனமும் தற்போது படிப்பின் மீது சற்று திசைமாறியது ஏனெனில் கல்லூரியில் சேரவேண்டும். மருத்துவ கல்லூரியின் சேர்க்கை துவங்கியது அதற்கான ஆலோசனைகளும் நடைப்பெற்றது இறுதியில் சென்னையிலேயே மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் அவனுக்கு அனுமதி கிடைத்தது. ஒருவகையில் சந்தோஷம் தான். இருக்கும் ஊரிலேயே கல்லூரியில் அனுமதி கிடைத்தது என்று . கல்லூரியின் முதல் நாளிற்காக அவனும் காத்துக்கிடந்தான். வழக்கம் போல் பன்னிரெண்டாம் வகுப்பில் படித்துக்கொண்டு இருந்தாள் அவள். அவளின் படிப்பும் இன்னும் கொஞ்சம் மாதங்களில் முடியப்போகும் நிலையில் கல்லூரி பற்றிய கனவுகளில் தானும் மிதக்க ஆரம்பித்தாள். சி.ஏ படிப்பின் தகவல்கள் எல்லாம் சேகரிக்க துவங்கினாள். சிபிடி எக்ஸாம் தேர்ச்சி பெற அப்போதிலிருந்தே பயிற்சி எடுக்க துவங்கினாள். இப்படியே நாட்கள் கழிந்தன... கனகவள்ளி தன் பேத்தி இன்னும் கொஞ்சம் நாளில் பன்னிரெண்டாம் வகுப்பு முடிக்க போகிறாள் அப்படியிருக்க அவளை பெண் கேட்டு தன் மகன் மகிழுக்கு மணம் முடித்து வைத்தால் நல்லாயிருக்கும் என்று தோன்றியது. "டேய் மகிழு உன் கிட்ட ஒன்று கேக்கணும்" என்றார் கனகவள்ளி. அவர் என்ன கேட்க நினைக்கிறார் என்பது புரியாமல் விழிக்க... "மகிழு நம்ப தமிழு இன்னும் கொஞ்சம் நாளில் பள்ளி பாடம் முடிச்சிருவா அதான் அவளை நம்ப பொண்ணு கேட்க போலாம் என்று இருக்கேன் நீ என்ன சொல்ற" .....என்று வினவ. "மா...நீ சொல்றது புரியுது எனக்கு தமிழை கட்டிக்க விருப்பம் தான் ஆனால் இவ்வளவு சீக்கிரம் பொண்ணு கேட்க போகக்கூடாது மா இரண்டு வருஷம் போகட்டும். அப்பதான் அவளுக்கும் வாழ்க்கை பற்றி புரிய ஆரம்பிக்கும். அவள் கனவு எல்லாத்தையும் இப்பவே சிதைக்க வேண்டாம் மா" என்க.... அவருக்கும் அது சரியென்று பட்டாலும் இந்த விஷயத்தில் ஏதெனும் ஒரு தெளிவாவது கிடைக்கவேண்டும். மகாலட்சுமி காதில் சும்மா ஆவது போட்டு வைக்கலாம் என்று நினைத்தார். மகனின் மனமும் புரிந்து போனது என்றாலும் இதற்கு தமிழ் என்ன பதிலளிக்க போகிறாள் என்பதும் தெரியவில்லை. முறைமாமனை மணந்து கொள்ளும் வழக்கம் காலங்காலமாக இருந்தாலும் தற்போது மறைந்து கொண்டு வருகிறது . எங்கோ யாரோ ஒரு சிலர் தான் மணந்து கொள்கின்றனர். மருத்துவ காரணங்கள் காட்டி சிலர் வேண்டாம் என்கின்றனர். ஆனால் முறைமாமனை மணந்து சந்தோஷமாக வாழ்ந்தவர்களும் உண்டு. ஆனால் மகிழ் தமிழ் விஷயத்தில் என்ன நடக்கபோது என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும். காலம் பதில் சொல்வது விட நம் தமிழின் மனதில் என்ன இருக்கிறது ? கல்யாணம் பற்றிய சிந்தனை முதலில் இருக்க வாய்ப்பில்லை. இதற்கிடையில் கார்த்திக் புகுந்து காதலை சொல்லிவிட்டாலும் ஒன்றும் செய்ய முடியாது. இந்த தர்மசங்கடமான சூழலில் என்ன நடக்கப்போகிறது. எல்லாம் நல்லதுக்கே என்று நினைத்துக்கொள்வோம். வாசகர்களாகிய நீங்களும் காத்திருங்கள். ...

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா