மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Nee enbathe naanagaNee Enbathe naanaga - 15Post ReplyPost Reply: Nee Enbathe naanaga - 15

Quote from monisha on November 12, 2020, 1:59 PM

15

கரிசனம்
கண்ணும் கருத்துமாக கடமை உணர்வோடு மூன்று நாட்கள் கழிந்து செல்ல, அதுவரை சுமுகமாகத்தான் அவர்கள் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் செழியனக்குத்தான் அவன் தந்தை தாய் இல்லாமல் வீடு என்னவோ போலிருந்தது. அன்புவுக்கும் மீனாவுக்கும் விடுமுறை அன்று. ஆனால் மேல் வகுப்புகளுக்கு பள்ளி இருந்ததால் அவன் மட்டும் பள்ளிக்கு சென்றுவிட்டு திரும்பினான். மாலை நேரம் வீட்டிற்கு திரும்பிய செழியன் தன் கைபேசியில் உரையாடி கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான். "என்ன நினைச்சிட்டு இருக்கீங்க மனசுல... இரண்டு நாள் மூணு நாள்னு ஒரெடியா நாளை கடத்திட்டு இருக்கீங்க... நீங்க சாமி எல்லாம் பார்த்தவரைக்கும் போதும் ஒழுங்கா வீடு வந்து சேர்ற வழியை பாருங்க... சொல்லிட்டேன்" என்று கண்டிப்பாக தன் தாயிடம் பேசி கொண்டே உள்ளே வந்தான். செழியனின் வருகையை பார்த்து அன்புவும் மீனாவும் உற்சாகமாய் துள்ளி குதித்து கொண்டு, "அப்பா" என்று அவன் காலை கட்டி கொண்டனர். வாஞ்சையாக தம் மகள்களை பார்த்து புன்னகை புரிந்தவன் இருவரின் தலையை கோதி கொண்டே, தன் பேசியில் உரையாடலை தொடர்ந்தான். "வீட்டுக்கு வந்துட்டேன் ம்மா... உங்க பேத்திங்க கிட்ட பேசுறீங்களா?" என்று கேட்டுவிட்டு, "இந்தாங்க... பாட்டி தாத்தா கிட்ட பேசுங்க" என்று தன் பேசியை அவர்களிடம் கொடுக்க இருவரும் ஆர்வம் பொங்க அதனை வாங்கி, நான் நீ என்று போட்டி போட்டு கொண்டு பேசினர். அதுவும் இவர்கள் பாட்டுக்கு நடந்த கதையெல்லாம் ஒன்றுவிடாமல் அளந்து கொண்டிருக்க, செழியன் அவர்கள் பேசுவதை பார்த்து சிரித்து கொண்டே தன் அறைக்கு போக ஜானவி டைனிங் ஹாலில் அமர்ந்திருந்தாள். ரேஷ்மாவும் சரவணனும் அவளிடம் சரமாரியாக திட்டு வாங்கி கொண்டிருந்தனர். அதிலும் சரவணனுக்குத்தான் அதிக பட்ச திட்டு! ஜானவி செழியன் உள்ளே வருவதை பார்த்து, "என்ன செழியன்... இன்னைக்கு ஸ்பெஷல் க்ளேஸா... ரொம்ப நேரம் ஆகிடுச்சு?" என்று கேட்க, "க்ளேஸ் இல்ல... டீச்சர்ஸ்கெல்லாம் மீட்டிங்" என்றான் அவன் சோர்வோடு! "உங்க பிரின்சிபால் ரம்பம் போட்டிருப்பாங்களே?" என்று கேட்க, "ஹ்ம்ம்... ஆமா ஹெட் ஹேக் வந்திருச்சு... ஒரு காபி கிடைக்குமா?" என்றான். "நீங்க போய் ஃப்ரெஷ் ஆகுங்க... நான் போய் எடுத்துட்டு வரேன்" என்று சொல்லி கொண்டே அவள் எழுந்து கொள்ள, ரேஷ்மாவும் சரவணனும் அவள் முகத்தையே பார்த்து கொண்டிருந்தனர். "என் மூஞ்சில என்ன இருக்கு... வேலையை பாருங்க" என்று அவள் சொல்ல, "இல்ல க்கா... சார் வந்ததும் உங்க சீரியஸ் பேஸ் ஸ்மைலிங் பேஸா மாறிடுச்சே... அதான் பார்க்கிறோம்" என்றான். சரவணனை பார்த்து முறைத்த ஜானவி, "என்ன... இப்படியெல்லாம் பேசி தப்பிச்சிக்கலாம்னு பார்க்குறியா... அதெல்லாம் என்கிட்ட நடக்காது... ஒழுங்கா வேலையை முடிசிட்டுத்தான் போகணும்" என்று கண்டிப்பாக சொல்லிவிட்டு சமையலறை நோக்கி விரைய, "இன்னைக்கு மார்க்கெட் ரொம்ப ஸ்லோவா இருக்கு இல்ல ரேஷு" என்றான். "ஆமா... உன்னை மாதிரியே படு மொக்கை போடுது" என்று அவனிடம் திரும்பி கூட பாராமல் ரேஷ்மா சொல்ல, "நான் மொக்கையா... இருக்கட்டும் உன்னை அப்புறமா வைச்சுக்கிறேன்" என்றான் சரவணன் கடுப்போடு! "அக்கா வரட்டும்... நீ பேசிகிட்டே இருக்கேன்னு சொல்றேன்" என்று ரேஷ்மா சொல்ல, "நர்ஸரி க்ளேஸ் படிக்கிற மாறி... மிஸ் மிஸ் இவன் பேசிக்கிட்டே இருக்கான்னு... சொல்ல போறியாக்கும்" என்று சரவணன் கிண்டலடித்து சிரிக்க ரேஷ்மா தன்னிடத்திலிருந்து கோபமாக எழுந்து கொண்டாள். "ஐயோ உட்காரும்மா தாயே! தெரியாம சொல்லிட்டேன்" என்று பயபக்தியோடு அவன் படுபவ்யமாக கெஞ்சிய பிறகு போனால் போகிறதென்று அவனை மன்னித்துவிட்டு மீண்டும் தன் வேலையை தொடர்ந்தாள் ரேஷ்மா. சரவணனும் முடிந்தும் முடியாமல் தன் வேலையை செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தான். அந்தச்சமயம் சமையலறை விட்டு காபி கோப்பையோடு வெளியே வந்த ஜானவி அன்புவும் மீனாவும் பேசியில் இன்னும் விடாமல் உரையாடி கொண்டிருப்பதை பார்த்தாள். "இன்னுமாடி ரெண்டு பேரும் ஃபோன் பேசிகிட்டு இருக்கீங்க... போதும் பேசினது... ஒழுங்கா ஃபோனை கொடுங்கடி இங்க" என்று அவர்களை மிரட்டி அந்த பேசியை வாங்கி கொண்டு அறை வாசலில் சென்று நின்றவள், "செழியன்" என்று அழைத்தாள். "உள்ளே வாங்க ஜானவி" என்று அவன் அழைக்கவும் அவள் உள்ளே நுழைந்தான். ஒன்றாக ஒரே அறையில் தங்கினாலும் அவன் இருக்கும் போது இவளும் இவன் இருக்கும் போது அவளும் அனுமதியின்றி உள்ளே நுழைவதில்லை. காபி கோப்பையோடு ஜானவி உள்ளே நுழைய செழியன் தன் முகத்தை துண்டால் துடைத்து கொண்டிருந்தான். அவள்,"காபியை இங்கே வைக்ககிறேன்" என்று சொல்லி அதனை படுக்கை அருகிலிருந்த மேஜை மீது வைக்க, "ஹம்ம் ஓகே" என்று தலையசைத்து படுக்கையில் அமர்ந்து காபியை எடுத்து பருக தொடங்கியவன் அதிர்ந்தான். "ஜானவி" என்ற அழைத்து கொண்டே காபியை மேஜையில் மீண்டும் வைத்துவிட்டு எழுந்திருக்க, "என்ன செழியன்?" என்று வெளியே போக இருந்தவள் திரும்பி வந்தாள். "ஏன் ஜானவி இப்படி பண்ணீங்க?" என்று அவன் அழுத்தமான சீற்றத்தோடு கேட்க, அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. "என்ன காபில எதாச்சும் கம்மியா இருக்கா? நான் எல்லாம் கரெக்டாதானே போட்டேன்" என்று புரியாமல் கேட்டாள். "அது இல்ல... ரஞ்சனி போட்டோஸ் எங்கே? எங்க கழட்டி வைச்சீங்க?" என்று அவன் அவளை முறைத்து கொண்டே கேட்க, அவளும் வெறுமையாக இருந்த சுவற்றை பார்த்து அதிர்ந்து நின்றாள். "ஜானவி... உங்களைத்தான் கேட்கிறேன்... போட்டோஸ் எங்கே? என்றவன் மீண்டும் அழுத்தமாக கேட்க அவள் தனக்கு தெரியாது என்று சொல்லி திரும்ப, அவனோ,"வாட்ஸ் ராங் வித் யு? ஏன் இப்படி பண்ணீங்க?" என்று கேட்டான். அவன் முகத்தில் அந்தளவு டென்ஷனை அவள் அப்போதுதான் பார்க்கிறாள். எந்த சூழ்நிலையிலும் அவன் நிதானமாக பேசியே பார்த்தவளுக்கு அவன் அப்படி கடுமையாக பேச அவள் அதிர்ச்சியோடும் கலக்கத்தோடும் நின்றாள். அதுவும் ரஞ்சனி படங்கள் அங்கே இல்லாமல் போனதற்கு அவள்தான் காரணம் என்று அவன் முடிவு செய்துவிட்டு பேசுவது அவளுக்கு ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. ஜானவி மெளனமாக நின்று யோசிக்க செழியன் கடுப்பாகி, "ஜானவி உங்ககிட்டதான் நான் கேட்கிறேன்" என்று அவன் வார்த்தைகளை கடித்து துப்பினான். "ப்ளீஸ்.... கொஞ்சம் அமைதியா இருங்க செழியன்" என்று அவனிடம் நிதானமாக சொல்லிவிட்டு, "ஏ ! அன்பு மீனா" என்று அங்கேயே நின்றபடி சத்தமாக அழைத்தாள். செழியன் குழப்பத்தோடு அவளை பார்க்கவும், "என்ன ம்மா... என்ன ஜானும்மா" என்று இருவரும் முந்தியடித்து கொண்டு அவள் அழைப்பிற்கு வந்து நின்றனர். அவர்கள் இருவரையும் ஆழமாக ஒரு பார்வை பார்த்தவள், "எங்க இங்கே இருந்த ரஞ்சு ம்மா போட்டோ?" என்று கேட்க அவர்கள் இருவரும் திருதிருவென்று விழித்து கொண்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர். "அன்பு மீனா... உங்ககிட்டதான் கேட்கிறேன்" என்று ஜானவி மிரட்டியதும், "மீனாதான் கழட்டினா" என்று அன்பு சொல்ல ஜானவியின் விழிகள் சீற்றமாக மாறி மீனாவை படையெடுத்தது. மீனா உடனே, "அன்புதான் கழட்ட சொல்லிச்சு" என்று இவள் அவளை போட்டு கொடுத்தாள். "அவ கழட்ட சொன்னா நீ உடனே கழட்டிடுவியா... அதுவும் உயரத்தில ஏறி... விழுந்து கிழுந்து வைச்சேனா... உன்னை" என்று ஜானவி மகளிடம் கை ஓங்க, "ஜானவி வேண்டாம்" என்று செழியன் பின்னிருந்து குரல் கொடுத்தான். மௌனமாக தன் கரத்தை இறக்கி கொண்டவள் நிதானமாக அவர்களிடம், "சரி ரஞ்சு ம்மா போட்டோஸ் கழட்டி எங்கே வைச்சீங்க?" என்று கேட்கவும் அன்பு ஓடிச்சென்று அங்கிருந்து கப்போர்ட் ஒன்றை காண்பித்தாள். செழியன் அப்போது இறங்கிய குரலில், "சாரி ஜானவி" என்று சொல்லவும், அவன் புறம் திரும்பியவள், "தப்பு என் பேர்லதான்... மதியம் ரெண்டு பேரும் உள்ளே விளையாடிட்டு இருந்தாங்க... நான்தான் என்ன செய்றாங்கன்னு கவனிக்காம கொஞ்சம் வேலையா இருந்துட்டேன்... சாரி" என்றாள் அவளும் பதிலுக்கு. செழியன் மனம் வேதனையுற்றது. விசாரிக்காமல் தான் அப்படி பேசி இருக்க கூடாது என்று அவன் உள்ளம் வருந்தி நின்றான். ஜானவி அப்போது குழந்தைகளிடம், "ரெண்டு பேரும் இந்த மாறி வேண்டாத வேலை செய்றது இதுவே லாஸ்ட்டா இருக்கட்டும்... அதுவுமில்லாம மேலே ஏறி விழுந்தா என்ன ஆகுறது... கை கால் அடிப்படாது" என்று கண்டிப்பாக சொல்லி அவர்களை எச்சரிக்கையும் செய்தாள். அதோடு அவள் மௌனமாக நின்ற செழியனிடம் திரும்பி, "கையால அடிச்சா கூட தாங்கிக்கலாம் செழியன்... ஆனா வார்த்தையால அடிச்சா அது தாங்கிக்க முடியாது... அது ரொம்ப பெரிய வலி... எனக்கு அதுல நிறைய அனுபவம் இருக்கு... ஆனா நீங்க இப்படி யோசிக்காம பேசனதுதான் என்னால தாங்கிக்க முடியல... ரொம்ப கஷ்டமா இருக்கு" என்று சொல்ல, "ஜானவி" என்று செழியன் அவளை குற்றவுணர்வோடு பார்த்தான். அவள் மீண்டும் அவன் முகத்தை நேர்கொண்டு பார்த்து, "கொஞ்சமாச்சும் யோசிச்சு பார்த்தீங்களா? நான் எதுக்கு செழியன் அவங்க போட்டோவை கழட்டனும்... அதுவும் உங்ககிட்ட கேட்காம" என்று அவள் நிறுத்த செழியனால் அவள் முகத்தை ஏறிட்டும் பார்க்க முடியவில்லை. ஜானவி அவனிடம் மேலே எதுவும் பேசாமல் அந்த அறையை விட்டு வெளியேறிவிட்டாள். ரஞ்சனியின் படங்கள் திடீரென்று இருந்த இடத்தில் இல்லாமல் போனதில் செழியன் ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டான். அந்த சூழ்நிலையில் அவனையும் அறியாமல் ஏதோ ஒரு வேகத்தில் அவளிடம் அப்படி கேட்டுவிட்டான். ஆனால் இப்போது நிதானமாக யோசிக்கும் போதுதான் அவன் செய்த தவறு அவனுக்கு புரிந்தது. எத்தனை பொறுமைசாலியாக இருந்தாலும் உணர்ச்சிவசப்படும் போது அவர்களின் நிதானமும் யோசிக்கும் திறனும் அடிப்பட்டு போகும். செழியன் மட்டும் அதில் விதிவிலக்கா என்ன? செழியன் ஜானவியிடம் அப்படி பேசியதை எண்ணி வருத்தப்பட்டு தலையை பிடித்து கொண்டு படுக்கையில் அமர்ந்திருக்க, அன்புவும் மீனாவும் மெளனமாக அவனையே பார்த்து கொண்டு நின்றிருந்தனர். அவர்கள் முகத்திலும் வருத்தம் குடிகொண்டிருந்தது. செழியன் அவர்கள் முகபாவத்தை பார்த்துவிட்டு மெளனமாக தலையசைத்து அருகில் அழைக்க, அவர்கள் அதே சோக உணர்வோடு அவன் அருகில் வந்தனர். "ஏன் நீங்க ரஞ்சும்மா போட்டோவை கழட்டி வைச்சீங்க?" என்று தம் மகள்களிடம் அவன் நிதானமாக கேட்க, "அன்புதான் ப்பா கழட்ட சொன்னா?" என்றாள் மீனா. செழியன் பார்வையை அன்புச்செல்வியின் புறம் திருப்பி, "ஏன் அன்பும்மா?" என்ற கேட்கவும் அவள் அவனை பார்த்து தயக்கத்தோடு, "இனிமே ஜானும்மாதானே எங்களுக்கு அம்மா... அப்போ அவங்க போட்டோதானே மாட்டனும் இங்கே" என்று குழந்தைத்தனத்தோடு அவள் சொன்ன பதிலில் அவனுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. ஜானும்மாதான் அம்மா என்று அன்புச்செல்வி முழுமனதாக ஏற்று கொண்டதை எண்ணி சந்தோஷம் கொள்வதா இல்லை ரஞ்சனி தன் மகளின் நினைவிலிருந்து அகன்றுவிட்டதை எண்ணி வேதனை கொள்வதா என்று அவனுக்கு புரியவில்லை. அந்த நொடி செழியன் தம் மகள்கள் இருவரையும் சேர்த்து அணைத்து கொண்டான். ஜானவியை அவர்கள் ஏற்றுக்கொண்டாலும் அவன் மனம் ஏற்குமா? அவன் மனம் என்ன சுவரா? சுலபமாக ரஞ்சனியின் படத்தை எடுத்துவிட்டு அங்கே ஜானவியின் படத்தை மாட்ட? செழியனின் மனம் நடந்த விஷயங்களை எண்ணி கலக்கமுற்றிருந்தது. இரவு ஜானவி எல்லோருக்கும் உணவு தயார் செய்துவிட்டு செழியனை உணவு உண்ண அழைத்தாள். "சரவணனும் ரேஷ்மாவும் போயிட்டாங்களா?" என்று அவள் முகம் பார்த்து அவன் கேட்க அவள் ரொம்பவும் இயல்பாக, "இப்பதான் போனாங்க... சரி நீங்க வாங்க... சாப்பிடலாம்" என்றாள். அவளிடம் சற்று முன்பு நடந்த சம்பவத்தின் தாக்கம் என்று எதுவுமே இல்லை. ரொம்பவும் இயல்பாகத்தான் இருந்தாள். அவள் பேச்சிலும் பார்வையிலும் எதிலுமே அந்த கோபம் துளி கூட இல்லை. உண்மையில் அதுதான் அவனை ரொம்பவும் காயப்படுத்தியது. இரவு உணவு முடிந்து படுக்கையில் எல்லோரும் எப்போதும் போல் படுத்து கொண்டாலும் செழியனுக்கு உறக்கம் வரவில்லை. மீனாவும் அனபுவும் உறங்கியதும் அவன் எழுந்து பால்கனி கதவை திறந்து வெளியே சென்று நின்று கொண்டான். ஜானவி அவன் எழுந்து செல்வதை பார்த்து பின்னோடு வந்து, "இன்னும் அந்த விஷயத்தையே நினைச்சிட்டு இருக்கீங்களாக்கும்" என்றவள் கேட்க அவன் முகத்தில் அழுத்தமான குற்றவுணர்வு! "விடுங்க செழியன்... நான் அதை அப்பவே மறந்திட்டேன்... வாங்க வந்து படுங்க" என்றாள் ஜானவி! " என்னை கோபமா இரண்டு வார்த்தையாச்சும் திட்டிடுங்க ஜானவி ப்ளீஸ்... நீங்க எதுவுமே நடக்காத மாதிரி என்கிட்ட பேசறது எனக்கு ரொம்ப ஹர்டிங்கா இருக்கு" என்று வருந்தி சொல்ல, "திட்டவா? எதுக்கு ... அப்படி என்ன நீங்க தப்பு செஞ்சிட்டீங்க" என்று இயல்பாக புன்னகைத்து கேட்டாள். "கொஞ்சமும் யோசிக்காம நான் உங்ககிட்ட அப்படி பேசி இருக்க கூடாது" "பேசி இருக்க கூடாதுதான்... ஆனா உங்க பாயின்ட் ஆஃப் வியுல இருந்து பார்த்தா உங்க கோபம் ஒன்னும் தப்பில்ல... அந்த நேரம் டென்ஷன்ல யாருக்கா இருந்தாலும் அப்படிதான் கேட்க தோணும்... ஐ அண்டர்ஸ்ட்டேண்ட... விடுங்க செழியன்" என்று சுலபமாக சொல்லி முடித்தாள். செழியன் அவளை ஆழ்ந்து பார்த்து, "நம்பமுடியல... நான் முதல் முதல பார்த்த ஜானவியா இது... நம்ம பர்ஸ்ட் மீட்ல நடந்த மாறி இன்னைக்கும் பெருசா எதாச்சும் சண்டை நடக்கும்னு எதிர்பார்த்தேன்" என்று மிதமான புன்னகையோடு சொல்ல, அவள் சிரித்து விட்டு, "அப்போ செழியன் எப்படின்னு தெரியாது... ஆனா இப்ப தெரியுமே... அப்புறம் எப்படி கோபப்படுறது" என்று சொன்னவளை இமைக்காமல் சில நொடிகள் அப்படியே பார்த்து கொண்டு நின்றான். "தேங்க்ஸ் ஜானவி" என்று மனம் நிறைந்து அவன் சொல்ல அவள் அவனை நக்கலாக பார்த்து, "என்ன சொன்னீங்க என்ன சொன்னீங்க? திரும்ப சொல்லுங்க" என்றாள். "நான் ஒன்னும் சொல்லல" என்று அவன் உதட்டை கடித்து கொள்ள, "அது" என்று ஜானவி புன்னகைத்து கொண்டே அவனை எச்சரிக்கை பார்வை பார்த்தாள். "சரி வந்து படுங்க செழியன்... லேட்டாயிடுச்சு" என்றவள் சொல்லவும் அவன் உள்ளே வந்து கதவை மூட ஜானவி வெறுமையாக இருந்த சுவற்றை பார்த்து, "நான் நாளைக்கு அந்த போட்டோஸ் எல்லாம் மாட்டி வைச்சிடுறேன்" என்றாள். "வேண்டாம் ஜானவி" என்று செழியன் சொல்ல அவனை ஜானவி அதிர்ச்சியாக திரும்பி நோக்கி, "ஏன் அப்படி சொல்றீங்க?" என்று கேட்டாள். "இல்ல... ஏதோ ஒரு வகையில அன்புக்குட்டி மனசுல நீங்கதான் அவ அம்மான்னு ஆழமா பதிவாயிட்டீங்க... அது அப்படியே இருக்கட்டும்... ரஞ்சனியோட பிம்பம் எந்த விதத்திலயும் அவ மனசுல இனி பதிவாக வேண்டாம்... அது இன்னைக்கு இல்லனாலும் என்னைகாச்சும் அவ மனசுல குழப்பத்தை உண்டாக்கலாம்" என்று அவன் தீர்க்கமாக யோசித்து பேச, "ஏன் அப்படியெல்லாம் யோசிக்கிறீங்க... அதெல்லாம் ஆகாது" என்றாள். "இல்ல ஜானவி... நான் தெளிவா யோசிச்சுத்தான் சொல்றேன்" "குழந்தைகளுக்காகன்னா கூட உங்களுக்கு கஷ்டமா இருக்காதா?" "அந்த போட்டோ அங்க மாட்டி இருந்தாத்தான்... என் ரஞ்சனியோட நினைவு எனக்குள்ள இருக்கும்னு அர்த்தமா என்ன? அவ முகம் எனக்குள்ள எப்பவும் இருக்கும்... அது போதும்" என்றவன் தெளிவோடு சொல்ல ஜானவி வியப்போடு அவனை பார்த்தாள். அதன் பின் இருவரும் அமைதியாக அவரவர்கள் இடத்தில் படுத்து கொள்ள ஜானவி அவள் இடத்தில் படுத்து கொண்டாள். ஆனால் அவள் மனம் உறங்காமல் செழியன் தன் மனைவி பற்றி பேசியே வார்த்தைகளுக்குள்ளேயே சுற்றி சுழன்று கொண்டிருந்தது. அவளையே அறியாமல் அவள் மனம் அவன் தூய்மையான காதல் மீது காதல் கொண்டது. ****** இருள் மெல்ல மெல்ல விலகி ஆதவன் தலையெடுத்தான். எப்போதும் போல் பொழுது புலர்ந்து அவர்கள் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அன்று மாலை பாண்டியனும் சந்தானலட்சுமியும் வீடு வந்து சேர்ந்தனர். அவர்கள் வந்த சில நொடிகளில் மீனாவும் அன்புவும் பள்ளியில் இருந்து செழியனோடு வந்துவிட, அவர்களுக்கோ பாட்டி தாத்தாவை பார்த்த மாத்திரத்தில் அத்தனை குதூகலம். அவர்கள் எடுத்து வந்த பையில் கோவில் பிரசாதங்களோடு சேர்ந்து விதவிதமாக விளையாட்டு பொருள்கள். அதனை எடுத்து அன்றே சோதித்து பார்த்தால்தான் அன்புவிற்கும் மீனாவிற்கும் நிம்மதி. ஆதலால் உடனடியாக அந்த விளையாட்டு பொருள்களையும் எடுத்து கொண்டு விளையாட துவங்கிவிட்டனர். சந்தானலட்சுமி கோவிலில் வாங்கி வந்த பிரசாதகங்களை மகனுக்கும் மருமகளுக்கும் தந்தவர் ஆசையாக பேத்திகளுக்கும் வைத்துவிட்டார். செழியனுக்கு தன் பெற்றோர்களை பார்த்து அளப்பரிய சந்தோஷம். மூன்று நாட்கள் என்பதே அவனுக்கு ரொம்பவும் சிரமமாக இருந்தது. அவன் அவர்களை விட்டு வெளியூர் வேலை மற்றும் நண்பர்களுடன் சுற்றுலா என்றெல்லாம் சென்றிருக்கிறான்தான். ஆனால் அவர்கள் அவனை விட்டு எங்கேயும் இதுவரை சென்றதே இல்லை. அதுதான் அவன் மனதை ரொம்பவும் அழுத்தியது. அவன் தன் தவிப்பை வெளிப்படையாக காட்டி கொள்ளவில்லை என்றாலும் அவர்கள் இல்லாத ஒரு வெறுமையை அவன் உணர்ந்தான். இன்று அவர்கள் திரும்பி வந்த பின்தான் அவன் மனம் ஒருவாறு அமைதி பெற்றது. மீனாவும் அன்புவும் அந்த விளையாட்டு பொருள்களோடு மொத்தமாக ஐக்கியமாகிவிட,   இரவு தன் பெற்றோரின் அறையில் அம்மாவின் மடியில் தலைசாய்த்து படுத்து கொண்டிருந்தான் செழியன். "என்னை விட்டுட்டு போய் நிம்மதியா எல்லா சாமியும் தரிசனம் செஞ்சிட்டு வந்துட்டீங்களா?" என்று அவன் வருத்தமாக பேசி கொண்டிருந்தான். அப்போது சந்தானலட்சுமி பின்னோடு கணவன் செய்த செய்கையை பார்த்து ஏதோ கண்ணசைத்து மறித்து பேசினார். செழியன் அதை கவனித்துவிட்டு தன் அப்பாவின் புறம் திரும்ப, அவரோ சமாளிக்க வேண்டி காற்றில் படம் வரைந்து கொண்டிருந்தார். உடனடியாக பார்வையை தன் அம்மாவின் புறம் திருப்பியவன், "என்னவாம் அவருக்கு... ஏதோ உன்கிட்ட அக்ஷன்லயே சொல்றாரு?" என்று தன் புருவத்தை உயர்த்தி கேட்க, சந்தானலட்சுமி மகனிடம், "உங்க அப்பா ஒரு இடத்தில கூட என்னை நிம்மதியா சாமி கும்பிட விடலடா... பையன் வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்... பேத்தி வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்னு புலம்பி தீர்த்துட்டாரு... ப்பா முடியல... ஏன் டா இந்த மனுஷனோட தனியா போணோம்னு ஆகிடுச்சு" என்று அப்படியே கணவனை போட்டு கொடுத்து கோவிலுக்கு போன தன் அனுபவத்தை அத்தனை கடுப்பாக கூறினார். செழியன் சிரித்து கொண்டே தன் தந்தையை பார்க்க, "என்ன லட்சு நீ? என் இமேஜை இப்படி டேமேஜ் பண்ணிட்டியே" என்றவர் மனைவியை பார்த்து சொல்ல செழியன் சத்தமாக சிரித்து கொண்டே, "உங்களுக்கு எதுக்கு இந்த வீணான வீராப்பு... நானும் கூட வரேன்னுதானே சொன்னேன்" என்று சொல்ல, சந்தானலட்சுமி அப்போது, "அவருக்கும் மட்டும் என்னடா உன்னை விட்டு போகணும்னா... ஏதோ இந்த மூணு நாள் நீயும் ஜானவி ஒண்ணா ஒரே வீட்டில இருக்க போறீங்க... நாங்க இல்லன்னா சங்கடம் இல்லாம நீங்க தனியா பேசிக்கவும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கவும் சந்தர்ப்பம் கிடைக்கும்னுதான்" என்று உரைக்க செழியன் அதிர்ச்சியாய் பார்த்தான். சந்தானலட்சுமி மேலும், "எப்படியிருந்தாலும் நீயும் ஜானவியும் கண்டிப்பா வேறெந்த சடங்குக்கும் ஒத்துக்கவும் மாட்டீங்க... அதுவும் இந்த கல்யாணத்தை நீங்க இரண்டு பேரும் மனசார ஏத்துக்கிட்டும் பண்ணல" என்று சொல்லி அவர் தயக்கத்தோடு தன் பேச்சை நிறுத்தினார். செழியன் மௌனமாக அமர்ந்திருந்தான். ஜானவியும் மீனாவையும் விட்டு கொடுக்க மனமில்லாமல் இந்த திருமணத்தை செய்து கொண்டான். அவ்வளவுதான். அதேநேரம் இந்த நொடி வரை ஜானவியிடம் நட்பை தாண்டி வேறு எந்தவித உணர்வும் அவனுக்கு தோன்றவில்லை. தோன்றவும் தோன்றாது. அப்படியிருக்க இவர்களின் இந்த முயற்சி வீண்தான் என்று அவன் எண்ணி கொண்டிருக்கும் போதே, "நம்ம நினைச்சது ஓரளவு நடந்திருக்கு" என்றார் பாண்டியன். செழியன் அவரை புரியாமல் நிமிர்ந்து பார்க்க அவரோ, "நானே சொல்லணும்னு நினைச்சேன்... பரவாயில்ல ரஞ்சனி போட்டோஸ் எல்லாம் நீயே புரிஞ்சிக்கிட்டு கழடிட்ட" என்றதும் அவனுக்கு கோபமேறியது. "ப்பா என்ன நடந்ததுன்னு புரியாம நீங்க பாட்டுக்கு எதாச்சும் கற்பனை பண்ணிக்காதீங்க" என்றவன் நடந்தவற்றை மறைக்காமல் அனைத்தையும் உரைத்தான். ஜானவியிடம் கோபப்பட்டதையும் சேர்த்து. அவர்கள் இருவர் முகம் வேதனையாக மாற, "என்ன இருந்தாலும் நான் ஜானவி மேல யோசிக்காம கோபப்பட்டிருக்க கூடாது" என்று குற்றவுண்ர்வோடு சொல்லி முடித்தான். "என்ன காரியம் பண்ணி வைச்சிருக்க அன்பு... பாவம்டா அந்த பொண்ணு" என்று ஜானவிக்காக வருந்தி சந்தானலட்சுமி கண்கள் கலங்கிவிட்டார். "அப்போ உன் சுயநலத்துக்காகதான் அந்த பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட" என்று பாண்டியன் கோபத்தோடு சற்றே அழுத்தமாக மகனிடம் கேட்க, "என்னப்பா பேசுறீங்க? அப்படி எல்லாம் இல்ல" என்று மறுத்தான் செழியன். "பொய் சொல்லாதே அன்பு... ஜானவியும் மீனாவும் அவங்க வீட்டை விட்டு போயிட்டா உன் பொண்ணு மனசொடைஞ்சி போயிடுவா... இன்னொரு இழப்பை நம்ம அன்புக்குட்டியால தாங்கிக்க முடியாது... அதனாலதான் நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்க" என்று சொல்லி மகனை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தார். "ஐயோ! சத்தியமா இல்லப்பா... நான் அன்புக்குட்டி மாதிரி மீனாவையும் என்னோட பொண்ணாத்தான் பார்க்கிறேன்... அதேபோல ஜானவியை ஒரு நல்ல ப்ரெண்டாத்தான் பார்க்கிறேன்... அதை தாண்டி" என்றவன் நிறுத்தி கொள்ள பாண்டியன் அவன் முன் வந்து நின்று, "நல்ல நட்போட பார்க்கிறன்னா எப்படிறா அவ ரஞ்சனி போட்டோவை கழட்டி இருப்பேன்னு சந்தேகப்பட்ட" என்றதும் செழியனை அந்த வார்த்தை ஆழமாக குத்தி கிழித்தது. மௌனமாக பதில் பேச முடியாமல் அவன் தலையை கவிழ்ந்து கொள்ள, செழியனின் தோளை ஆதரவாக தொட்ட சந்தானலட்சுமி, "உனக்கு தெரியுமா அன்பு? ஜானவி அன்னைக்கு ரஞ்சனி போட்டோ பார்த்து என்ன சொன்னானு" என்று ஆரம்பித்து வார்த்தை மாறாமல் ஜானவி அன்று ரஞ்சனியின் புகைப்படம் பார்த்து வேதனையோடு சொன்னவற்றை அப்படியே உரைக்க அவன் அதிர்ந்து தன் அம்மாவின் முகத்தை பார்த்தான். அவர் சொன்னவற்றை கேட்டு அவன் விழிகளில் நீர் கோர்த்து நின்றது. "எந்தளவு மனசு வெறுத்து போயிருந்தா ரஞ்சனி போட்டோ பார்த்து அப்படி ஒரு வார்த்தையை அந்த பொண்ணு சொல்லியிருப்பா... அதுவும் அவ குடும்பமே அந்த பொண்ணுக்கு துணையா நிற்கல... புருஷனும் சரியில்ல... தனியா ஒரு பொம்பள புள்ளையோட... பாவம்டா அந்த பொண்ணு... இந்த சின்ன வயசுல வாழ்க்கையில எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்காம போராடிட்டே இருக்கா" என்று தன் குரல் இறங்கி அவர் மகனிடம் சொல்லி கொண்டிருக்க தன் தாயின் முகத்தை பார்க்க முடியாமல் அவன் மனவேதனையோடு அவர் சொல்வதை கேட்டு கொண்டிருந்தான். ஜானவியின் நிலைமை அவனுக்கு தெரியும். அவள் வாழ்க்கையையும் அதன் வலியையும் அவன் அறிந்ததுதான். ஆனால் அதெல்லாம் தாண்டி நம்பிக்கைக்கும் தைரியத்திற்கும் உதாரணமாகத்தான் அவளை பார்க்கிறான். ஆனால் தன் தாய் சொல்லும் போதுதான் அவளின் மனவலி புரிந்தது. மனதளவில் அவள் ரொம்பவும் உடைந்திருக்கிறாள் என்று உணர்ந்தான். அந்த நொடியும் அவள் மீது அவனுக்கு வந்தது கரிசனம் மட்டுமே. மனைவி என்ற ஸ்தானத்திற்கு கரிசனம் மட்டும் போதாதே. இன்னும் கேட்டால் அந்த கரிசனம் கொண்டு அவளை ஏற்று கொள்வது நியாமான ஒன்றாகவும் இருக்காது. செழியன் குழம்ப சந்தானலட்சுமி மகனின் கன்னங்களை தாங்கி, "ஜானவிகிட்ட நீ அவளை நல்லா பார்த்துப்பன்னு அவகிட்ட நம்பிகையா சொல்லி இருக்கேன் டா" என்று சொல்ல, "கண்டிப்பா நான் ஜானவியை நல்லா பார்த்துப்பேன் ம்மா... அதுல உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்" என்று உறுதி கூறினான். ஆனால் அப்போதும் ஜானவியை மனைவியாக ஏற்க முடியுமா என்ற மனதில் கேள்வியும் குழப்பமும் எழுந்தது. இவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே தடதடவென கதவு தட்டும் சத்தம் கேட்டது. அத்தனை சுவாரசியமாக வெளியே விளையாடி கொண்டிருந்த மீனாவும் அன்புவும், ஜானவி அதட்டி தூங்க வேண்டுமென்று அழைக்கவும் அவளிடமிருந்து தப்பிக்க வேண்டி அவர்கள் ஓடி வந்து தன் தாத்தா பாட்டியின் அறையை தட்டினர். பாண்டியன் கதவை திறந்துவிட்டு, "இப்பதான் நினைச்சேன் எங்கடான்னு.... என் பேத்திங்களுக்கு ஆயுசு நூறு" என்றார். அவர்கள் இருவரும் துள்ளி குதித்து தன் தாத்தா பாட்டியின் படுக்கையில் வந்து படுத்து கொள்ள, "நாளைக்கு காலையில ஸ்கூல் இருக்கு... தூங்கனும்... பாட்டி தாத்தாவோட நாளைக்கு ஈவனிங் வந்து விளையாடலாம்" என்று அவள் சொல்ல, "நாங்க இங்கதான் படுத்துக்க போறோம்" என்று கோரஸாக பதிலளித்தனர் இருவரும்! இதனை கேட்டு ஜானவிக்கு தூக்கிவாரிப்போட்டது. "ஒன்னும் வேண்டாம்... நீங்க அவங்கள தொந்தரவு பண்ணுவீங்க... அதுவும் இன்னிக்குத்தான் அவங்களே பாவம் ஊர்ல இருந்து வந்திருக்காங்க... ரெஸ்ட் எடுக்கட்டும்" என்றவள் குரல் படபடக்க அழைக்க அவர்களா கேட்பார்கள். முயலுக்கு மூன்று கால் என்று தாங்கள் பிடித்த பிடியில் அழுத்தமாக நிற்க ஜானவியின் கெஞ்சலும் மிஞ்சலும் அங்கே ஒன்றும் பலிக்கவில்லை. இதற்கிடையில் சந்தானலட்சுமி வேறு, "படுத்துக்கட்டுமே ம்மா... எங்களுக்கு என்ன தொந்தரவு... என்னங்க?" என்று அவர் கணவனை பார்க்க, "எங்களுக்கு பேத்திங்களை கூட படுக்க வைசுக்கணும்னு ஆசையா இருக்கு" என்று பாண்டியன் இறக்கமாக கேட்க ஜானவியால் அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் போனது. அவள் பாவமாகவும் தவிப்பாகவும் செழியன் முகம் பார்க்க அவனோ தான் என்ன செய்வது என்பது போல் அசட்டையாக ஒரு பார்வை பார்த்தான். அந்த நொடி அவன் மீதுதான் அவளின் மொத்த கோபமும் திரும்பியது. விடுவிடுவென எதுவும் பேசாமல் அங்கிருந்து வெளியேறி தன் அறையினுள்ளே நுழைந்துவிட்டாள். செழியன் அவள் பின்னோடு நுழைந்தான். ஜானவியின் மனமோ குழந்தைகள் இல்லாத வெறுமையாக இருந்த படுக்கையை தவிப்போடு பார்த்தது. "பசங்க இல்லாம இந்த ரூமே என்னவோ போல இருக்கு இல்ல... சத்தம் போடாதீங்கன்னு அதட்டுவேன்... ஆனா இப்ப அவங்களோட அந்த கலாட்டாவும் சத்தமும் இல்லாம" என்றவள் வருத்தப்பட்டு கொண்டிருக்க அவன் அவள் தவிப்பை பார்த்து லேசாக நகைத்து கொண்டான். அதுவும் அவர்கள் பக்கத்து அறையில்தான் இருக்கிறார்கள். எனினும் அவள் இந்தளவு சஞ்சலப்படுகிறாள். தன்னுடைய வேதனை வலி என எல்லாவற்றையும் மனதில் புதைத்து கொள்ளும் ஜானவி குழந்தைங்கள் என்று வந்துவிட்டால் மட்டும் ரொம்பவும் உணர்வுப்பூர்வமாக நடந்து கொள்கிறாள். இப்படி அவன் ஜானவியை பற்றி யோசித்து கொண்டிருக்கும் போதே அவள் செழியனை தயக்கமாக பார்த்து, "இப்போ எப்படி படுத்துக்கிறது?" என்று கேட்க, அவன் முகம் மலர்ந்தான். "இத்தனை நாளா எப்படி படுத்தோமோ அப்படித்தான்... நான் அந்தப்பக்கம் நீங்க இந்தப்பக்கம்... நடுவுல இந்த தலகாணியை வைச்சிடுவோம்" என்றான் இயல்பாக! தயங்கியபடி அவள் ஏதோ சொல்ல வாயெடுக்கவும், "நம்பிக்கை இல்லன்னா நான் வேணா கீழ படுத்துக்கிறேன்" என்றான். "நம்பிக்கை இல்லன்னு நான் சொன்னேனா... கொஞ்சம் அன் ஈசியா இருக்கும்" என்றவள் சொல்லி கொண்டிருக்கும் போதே, "அதனாலதான் நான் கீழே படுத்துக்கிறேன்" என்றான். "நீங்க மேல படுங்க... நான் கீழ படுத்துக்கிறேன்" "இல்ல ஜானவி... நான் கீழ படுத்துக்கிறேன்" "உங்களுக்கு கஷ்டமா இருக்கும் வேண்டாம் நான் கீழ படுத்துக்கிறேன்" "அதெல்லாம் ஒரு கஷ்டமா இல்ல... நான் கீழ படுத்துக்கிறேன்" "செழியன் ப்ளீஸ்" "நீங்க மேலே படுங்க ஜானவி" என்றவன் மிரட்டலாக கூற, "யாரும் கீழ படுத்துக்க வேண்டாம்... நீங்க முதல சொன்ன மாறியே இரண்டு பேரும் படுத்துக்கலாம்" "உங்களுக்கு அன் ஈசியா" என்றவன் ஆரம்பிக்க, "இப்ப நீங்க படுக்க போறீங்களா இல்லையா?" என்று அவள் கண்டிப்பாக கூற, அதற்கு பின் அவர்களுக்கு இடையில் வாக்குவாதம் நடக்கவில்லை. இருவரும் அவரவர்கள் இடத்தில் மௌனமாக படுத்து கொண்டனர். செழியனுக்கு ஏனோ உறக்கமே வரவில்லை. அவன் புரண்டு புரண்டு படுக்க ஜானவியோ சில நிமிடங்களில் சத்தமில்லாமல் உறங்கி போனாள். அவன் திரும்பி படுக்கும் போதே உறக்கத்திலேயே அவள் அவன் புறம் திரும்பி படுத்திருக்க, அவளை இறக்க உணர்வோடு பார்த்தான். அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்திருக்க கூடாதா என்று உறங்குபளை பார்த்து அவன் பரிதாபமாகப்பட்டு கொண்டிருக்க, அந்த அறையின் மங்கலான வெளிச்சத்திலும் அவள் முகமும் அவன் கட்டிய தாலியும் அவளின் கழுத்தில் சரிந்து தொங்கி கொண்டிருந்தது. இனி அவள் வாழ்க்கைக்கு நீதான் பொறுப்பு என்று சொல்லாமல் சொல்லி காட்டி கொண்டிருந்தது அவன் கட்டிய தாலி! அதனை பார்த்த நொடி குற்றவுணர்வு பற்றி கொள்ள தன் சுயநலத்திற்காக அவளை பயன்படுத்தி கொண்டுவிட்டோமோ என்ற அவன் அப்பாவின் வார்த்தைகள் காதில் ஒலித்தது. ஆனால் எந்தவித சலனமுமின்றி அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். தன் அறையில் தன் படுக்கையில் அதுவும் தன் அருகாமையில் அவளால் எப்படி இத்தனை இயல்பாக உறங்க முடிகிறது. வெறும் தன் மீது அவள் கொண்ட நம்பிக்கையும் நட்பும் மட்டும்தான் காரணமா? பதில் தெரியாத கேள்வியோடு அவள் முகம் பார்த்தான். கணவனிடம் ஒரு பெண் உணரும் பாதுக்காப்பு உணர்வு! அது அவனிடம் அவளுக்கு நிரம்ப இருந்தது. ஆதலாலேயே அவனருகில் அவள் நிம்மதியாக உறங்கி கொண்டிருந்தாள். அது போதாதா? மனதளவில் அவளை கணவனாக அவள் ஏற்று கொண்டால் என்பதற்கு! ஆனால் அந்த விஷயம் ஜானவிக்கே புரியாத போது செழியனுக்கு எங்கனம் புரியும்? அவள் உறங்குவதை விழி எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தான். அவள் முகம் மட்டுமே அவன் கண்களுக்கு தெரிந்தது. அவனேயே அறியாமல் ஜானவியின் உதட்டின் மீதிருந்த மச்சத்தை ரஞ்சனியின் மச்சதோடு ஒப்பிட்டு பார்த்தான். கொஞ்சமும் வித்தியாசம் இல்லாமல் அப்படியே அச்சிட்டு வைத்தார் போல அதே அளவில் இருந்தது. ரஞ்சனியின் அந்த மச்சத்தின் மீது அவனுக்கு தனிப்பட்ட ஓர் ஈர்ப்பு. அந்த அழகை கண்கொட்டாமல் ரசித்திருக்கிறான். பல முறை அவள் உறங்கும் போது தொட்டு பார்த்திருக்கிறான். கணக்கில் அடங்கா முறை அந்த மச்சத்தை தம் இதழ்களால் ரசித்து ருசித்தும் இருக்கிறான். இந்த எண்ணமெல்லாம் வரிசையாக தோன்ற அவன் அப்போதே உணர்ந்தான். ரஞ்சனியை எண்ணி கொண்டே ஜானவியின் இதழின் மீதான மச்சத்தை தன் கரம் கொண்டு தீண்ட பார்க்க விழைந்ததை. அந்த நொடியே பதறி துடித்து எழுந்து கொண்டவன் ஜானவியை ரஞ்சனியாக எண்ணி கொண்ட தன் அறிவீனத்தை எண்ணி அசூயையாக உணர்ந்தான். ஒரு நொடி ஜானவியின் நம்பிக்கையை உடைக்க பார்த்தோமே என்று தவிப்புற்றவன் அதற்கு பிறகாக அவளருகில் படுக்கவில்லை. தன்னைதானே ஆசுவாசப்படுத்தி கொள்ள அறைக்குள் நடந்தவன் பின் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து படிக்கும் மேஜை மீது தன் தலையை தாங்கி பிடித்து கொண்டு அமர்ந்து கொண்டான். உறக்கம் வராமல் தவித்து கொண்டிருந்தவன் நடுநிசி கடந்த பின்னே அந்த மேஜை மீது தலை சாய்த்து உறங்கியும் போனான். நட்பு என்ற பிணைப்பு லேசாக அறந்து போன உணர்வு. ஆனால் அதற்கு பதிலாக வேறொரு பிணைப்பு அவளிடத்தில் அவனுக்கு உருவாகியிருந்தது. காதலும் அல்லாது காமமும் அல்லாது ஒரு ஆணாக ஒரு பெண்ணின் மீது உண்டாகும் ஈர்ப்பு. அதுவும் ஜானவியை ரஞ்சனியாக பார்த்த பிறகு அவனால் இனி இயல்பாக வெறும் நட்புணர்வோடு ஜானவியை பார்க்க முடியுமா?

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா