மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Naan aval illaiNaan Aval Illai - 52Post ReplyPost Reply: Naan Aval Illai - 52

Quote from monisha on November 29, 2020, 9:06 PM

52

காதலாக உருமாறியது
ஜென்னி யோசனையோடு அறைவாசலிலேயே நின்றிருக்க, அவனோ அவள் வந்து நின்றதைக் கவனிக்காதவனாய் பழைய நினைவுகளில் ஆழ்ந்துகிடந்தான். அவனின் யோசனையைத் தடை செய்ய மனமில்லாமல் அவள் அசைவின்றி நிற்க, டேவிட் தன் சிந்தனையிலிருந்து மீண்டு தலையை நிமிர்த்த, அவன் விழிகள் அவளைப் பார்த்தது. அவள் அறைக்கதவருகே மௌனமாய் நடந்து வந்தாள். அவன் தன் உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கரத்தில் இருந்த சட்டையை பெட்டிக்குள் வைத்தபடி, "எப்போ வந்த ஜென்னி?" என்று ரொம்பவும் இயல்பாய் கேட்க, அவள் பதில் பேசாமல் அவனையே பார்த்திருந்தாள். அவன் புன்முறுவலோடு, "கிளம்பறதுக்கு முன்னாடி உன்னைப் பார்க்கணும்னு நினைச்சேன்... எப்படியோ நீயே வந்துட்ட" என்க, அவள் அப்போதும் அவனிடம் பேச்சு கொடுக்கவில்லை. அவன் துணிகளை அடுக்கிக் கொண்டிருக்கும் பெட்டியைப் பார்த்தவள் அருகில் இருந்த ஃப்ளைட் டிக்கெட்டையும் பாஸ்போர்ட்டையும் கவனிக்கலானாள். அவள் மனமோ வேதனையில் திளைத்திருக்க, அவன் தன் பெட்டியை மூடியபடி, "நான் லண்டன் போறேன் ஜென்னி... எப்போ வருவேன்னு எனக்குத் தெரியல... திரும்பியும் மீட் பண்ணுவோமான்னு கூட தெரியல" என்று அவன் சொல்ல, அத்தனை நேரம் அவள் கொண்டிருந்த வருத்தமெல்லாம் கோபமாய் துளிர்விட்டது. "நிறுத்துங்க டேவிட்... இவ்வளவு இமோஷனல் சீனெல்லாம் இங்க கிடையாது... நீங்க எங்கேயும் போகல" என்றவள் தடலாடியாய் உரைத்தபடி உள்ளே நுழைந்தாள். அவளைப் பார்த்து புன்னகைத்தவன், "ஏன் போகக் கூடாது?" என்று கேட்க, "இப்போ நீங்க ஏன் போகணும்?" என்று கோபமான தொனியில் கேட்டாள். "இப்படி கேட்டா நான் என்ன சொல்ல?" என்றவன் யோசிக்க, "போகுறதுக்கான காரணத்தைச் சொல்லுங்க... இல்லாட்டி எங்கேயும் போக வேண்டாம்" என்று அவனை வழிமறித்தபடி நின்றாள். அவன் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு, "எனக்கு இங்க இருக்கப் பிடிக்கல ஜென்னி... என் தாட்டும் இந்த லைஃப் ஸ்டைலும் சுத்தமா ஓத்துப் போகல... டேடோட ஹெல்த் இஷ்யூனாலதான் அட்மினிஸ்டிரேஷனை நான் பார்த்துகிட்டேன்... இல்லைன்னா எனக்கு இதுல எல்லாம் கொஞ்சம் கூட இன்ட்ரஸ்ட் இல்லை... போர்ட் மீட்டிங் வைச்சு வேற எம்.டி சூஸ் பண்ணி அப்பாயின்ட் பண்ணிட்டு நான் மொத்தமா ரிலீவாயிடலாம்னு இருக்கேன்" என்றவன் சொல்லி முடிக்க, "ரிலீவாயிட்டு" அவள் புருவங்களை சுருக்கி அவனைப் பார்த்தாள். "ரீலவாயிட்டு நிம்மதியா சுதந்திரமா இருக்கணும்னு நினைக்கிறேன்" என்றான். "அவ்வளவுதானா?!" என்றவள் பார்வை அவனைக் கூர்மையாய் நோக்கியது. "அவ்வளவுதானா ன்னா?! நான் இப்போ என்ன சொல்லணும்னு நீ எதிர்பார்க்கிற" என்று கேட்டு அவனும் அவளை ஆழமாய் நோக்கினான். "நீங்க போறதுக்கான உண்மையான காரணத்தை சொல்லுங்க" என்றாள். அவன் மௌனமாக நின்றுவிட... அவன் அருகாமையில் வந்தவள், "நீங்க போக நான்தான் காரணம் ரைட்" என்றவள் கேட்க, அவன் பெருமூச்செறிந்தவாறு தன் மௌனத்தைக் கலைக்காமல் நின்றிருந்தான். "உங்க விருப்பத்தை பத்தி கேட்காம தியாவை நான்... உங்களை மீட் பண்ண வைச்சது... ஃபோன்ல நான் பேச மாட்டேன்னு சொன்னது... இதெல்லாமா?" அவன் அப்போது தன் மௌனத்தைக் கலைத்து, "அப்படி எல்லாம் எதுவும் இல்ல ஜென்னி... சீரியஸா நான் அதையெல்லாம் பெரிசாவும் எடுத்துக்கல.. அதுவும் இல்லாம உன் கோபம் பொய்யின்னு எனக்கு நல்லா தெரியும்" என்றவனை அவள் ஆழ்ந்து பார்த்து, "எப்படித் தெரியும்?" என்றவள் வியப்படைந்தாள். "உன்னால என்கிட்ட கோபப்பட எல்லாம் முடியாது" அவனை நேர்கொண்டு பார்க்க முடியாமல் அவள் தலைகவிழ்ந்து நின்றபடி, "யூ ஆர் ரைட்... என்னால உங்ககிட்ட கோபப்பட முடியாது... ஆனா உங்ககிட்ட இருந்து விலகி நிற்க எனக்கு வேறவழி தெரியல" என்றாள். "உனக்கு அந்த கஷ்டம் வேண்டாம்னுதானே நானே போறேன்" என்று சொல்லியவன் அதற்கு மேல் தாமதிக்காமல் தன் அறையிலிருந்து ஃபோனை எடுத்து வேலையாட்களை அழைக்க, அவர்கள் வந்து அவன் முன்னிலையில் நின்றனர். "பெட்டியை கார்ல வைங்க" என்றவன் பணிக்க, அதே போல் அவன் பெட்டியை அவர்கள் அறையிலிருந்து எடுத்துக் கொண்டு செல்ல, அவளுக்குப் படபடப்பானது. உண்மையிலேயே சென்றுவிடப் போகிறானா என்ற பதட்டம் அதிகரிக்க தன் மனவுணர்வுகளை அவள் வெளிப்படுத்த முடியாத ஊமையைப் போல் கிடந்தாள். அவன் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, "சரி ஜென்னி... டைமாச்சு... நான் கிளம்பறேன்?!" என்றவன் தலையசைத்து சொல்ல, அவள் மனமோ, 'போகாதீங்க டேவிட்' என்று அவதியுற, ஏனோ அந்த வார்த்தைகள் வெளிவராமல் அவளுக்குள் சிக்குண்டது. அவன் தன் டிக்கெட்டையும் பாஸ்போர்ட்டையும் எடுத்துக் கொள்ள எத்தனித்த போது, அவள் உடனடியாக அதனைக் கைப்பற்றிக் கொண்டாள். "ஜென்னி என்ன பண்ற? டிக்கெடையும் பாஸ்போர்ட்டையும் கொடு" என்றவன் கேட்க, அவள் அதனை தன் பின்புற கரத்தில் மறைத்தபடி "மாட்டேன்" என்றாள். அவள் செய்கையை நம்ப முடியாமல் பார்த்தவன், "என்னாச்சு ஜென்னி உனக்கு ?" என்று புரியாமல் அவன் கேட்க, "நீங்க போகக் கூடாது" என்றாள் அழுத்தமாக! "புரிஞ்சுக்கோ ஜென்னி... நான் போகணும்... டிக்கெட்ஸை கொடு" என்றவன் அமர்த்தலாகவே உரைத்தபடி அதனை வாங்க வர, அவள் பதட்டத்தில் பின்னோடு சென்றாள். "கொடு ஜென்னி" என்றவன் அவள் கரத்திலிருந்த பயணச்சீட்டை வாங்க முற்பட, அவள் பின்னங்கால் இடிபட்டு படுக்கையில் சரிந்து விழப் போனாள். "ஜென்னி பாத்து" என்று அவளைத் தாங்கி கொள்ள முயன்றவன் அவனும் தன்னிலை தடுமாறி அவள் மீதே விழப் பார்க்க, அதனை உணர்ந்தவள் அச்சத்தில் விழிகளை மூடிக் கொண்டாள். அவன் சற்று சுதாரித்து தன் கரங்களை ஊன்றி அவள் மீது விழாமல் நிலைநிறுத்திக் கொண்டுவிட, அவள் விழிகளைத் திறந்த நொடி அவன் தன்மேல் விழாததை எண்ணி பெருமூச்செறிந்தாள். ஆனால் அவன் மனமோ அந்த நொடி தன்நிலைப்பாட்டில் இருந்து வெகுவாய் நழுவிக் கொண்டிருந்தது. வானமும் கடலும் எப்படி ஒன்றை ஒன்று பார்த்தபடி இருக்குமோ அப்படி இருந்தனர் இருவரும். ஆகாயம் போல மெய்மறந்த வண்ணம் அவள் மீது அவன் லயித்திருக்க, அவனின் நெருக்கம் அலைகடல் போல அவளின் உணர்வுகளைப் பொங்கி எழச் செய்தன. தனக்கும் அவளுக்குமான அந்த சிறு தூரத்தைக் கடந்து அவளை நெருங்கிவிட மாட்டோமா என்று ஏங்கி அவன் பார்த்த பார்வையில், அவளை அச்சம் தொற்றிக் கொள்ள ஆரம்பிக்க, அவளோ மலங்க மலங்க விழித்திருந்தாள். எந்தப் பெண்ணையும் பார்வையால் கூட தீண்டிடாத அவனின் ஆண்மையும் கண்ணியமும் அவளிடம் மட்டும் தோற்றுவிட விழைய, அவனின் மனதின் ஏதோ ஒரு உணர்வு அந்த இடைவெளியைக் கடந்து செல்லச் சொன்னது. அவனோ தன் சுயநினைவிலிருந்து வெகுதூரம் பயணித்திருக்க, அவளோ காதலோடு அவளை வருடிய அவன் பார்வையை நிராகரிக்க முடியாமல் பேச்சற்று போயிருந்தாள். அவர்களுக்கு இடையில் இருந்த நட்பென்ற மெல்லிய கோட்டை அந்த நேரம் அவன் தாண்டியிருந்தான். அவன் தன்னை மறந்து அவளை நெருங்கி வரவும், உஷ்ணமாய் அவளைத் தீண்டிய அவனின் மூச்சுக்காற்று அவள் இதயத்தின் துடிப்பை அதிகரித்திருக்க செய்தது. அந்த நோடி அவள் மூச்சுக் காற்று ஏற்ற இறக்கமாய் மாற, அவள் நெற்றியில் வியர்வைத் துளிர்த்திருந்தது. அவள் நினைக்க விரும்பாதவை எல்லாம் அவள் மனம் நினைவூட்டியது. அதோடு அல்லாது தியா சொன்னதெல்லாம் அவள் காதில் ஒலிக்க, டேவிடின் விருப்பத்தை மீண்டும் மீண்டும் நிராகரிக்க அவளுக்குக் குற்றவுணர்வாய் இருந்தது. ஆதலால் அவனைத் தடுக்க முற்படாமல் அவள் விழிகளை மூடிக் கொள்ள, அவனோ அவளின் முகமாற்றத்தைப் பார்த்து துணுக்குற்று, எழுந்து நின்றவன் அவளையும் கரம் பிடித்துத் தூக்கி அமர வைத்து, "ஜென்னி" என்றழைக்க அவள் விழியோரம் நீர் கசிந்திருந்தது. "ஐம் ஸாரி... எக்ஸ்ட்ரீம்லி ஸாரி" என்று அவன் பதட்டமான குரலில் தலையிலடித்துக் கொண்டு கூற, அவள் பதில் பேசாமல் மௌனமாய் அமர்ந்திருந்தாள். டேவிட் தண்ணீரை எடுத்து வந்து அவளிடம் நீட்டவும் அவள் அதனை வாங்கிக் குடித்தாள். அவள் முகத்தில் வியர்வைப் படர்ந்திருக்க, அவன் குறுக்கும் நெடுக்கமாய் நடந்தபடி, "இதுக்குதான்... இந்த காரணத்துக்காகத்தான் உன்னை விட்டு நான் விலகியிருக்கணும்னு நினைக்கிறேன்" என்றவன் அவதியுற, அவளும் ஒருவாறு சுதாரித்துக் கொண்டு, "நானும் இதே காரணத்துக்காகத்தான் உங்களை விட்டு விலகி இருக்கணும்னு நினைக்கிறேன் டேவிட்" என்று வெறுமையான பார்வையோடு அவள் அவன் புரியாமல் பார்த்தான். அவள் எழுந்து நின்று கொண்டு, "ஒரு ஃப்ரெண்டா உங்க கூட வாழ்க்கை பூரா என்னால வர முடியும்.... பட் மனைவியா முடியாது... ஏன்னா நான் அதுக்குத் தகுதியானவ இல்லை. உங்களுக்கான அடிப்படை சந்தோஷத்தைக் கூட என்னால பூர்த்தி செய்ய முடியாது டேவிட்... வெளிப்படையா சொல்லணும்னா தாம்பத்திய வாழ்க்கையை என்னால வாழ முடியாது... அந்த நரகவேதனையைத் திரும்பவும் என்னால அனுபவிக்க முடியாது" என்றவளின் முகம் அவளின் பழைய நினைவுகளால் அசூயையாய் மாறியிருந்தது. சில நிமிடம் நிசப்தமாய் கிடந்தது அந்த அறை. டேவிட் வெகு நேர யோசனைக்குப் பின், "இந்த விஷயம் ராகவிற்குத் தெரியுமா?" என்று கேட்க, அந்தக் கேள்வியை அவள் எதிர்பார்க்கவில்லை. உணர்ச்சிவசத்தால் தான் சொல்ல கூடாதென்று நினைத்தவற்றை எல்லாம் உளறிவிட்டோமா என்று அவள் யோசித்திருக்க, அவன் மீண்டும், "உன்னைதான் கேட்கிறேன் ஜென்னி... ராகவுக்குத் தெரியுமா? தெரியாதா?" என்றவன் அழுத்தி கேட்க எந்த பதிலை சொன்னாலும் தான் சிக்கிக் கொண்டே தீருவோம் என்பது அவளுக்கு உறுதியாய் தெரிந்தது. ******** டிவியை பார்த்திருந்த ராகவின் முகம் குழப்பமாய் மாறியிருந்தது. கிட்டத்தட்ட மனோவும் அதே நிலையில் இருக்க,"என்ன பாஸ்? சையத் சார் இப்படி சொல்லிட்டாரு... கஷ்டப்பட்டு அந்த மதுவை மிரட்டி இவ்வளவு தூரம் பேச வைச்சா... அவர் அசலாட்டா உண்மைதான்டாரு... நம்ம பிளானெல்லாம் ஃப்ளாப் ஆயிடுச்சே" என்றவன் வருத்தப்பட, "விடு மனோ... இதுவும் ஒருவகையில நல்லதுக்குதான்... ஜென்னிக்கு அவன் மேல இருக்குற இமேஜ் உடைஞ்சு போயிருக்கும்ல" என்று சொல்லிக் குரூரமாய் புன்னகைத்தான் ராகவ். சையத் டிவியில் மது சொன்ன அத்தனையும் உண்மையென்று ஆமோதித்து அவளையே திருமணம் செய்து கொள்வதாக சொல்லிக் கொண்டிருக்க, அந்தக் காட்சியை அப்போது சாஜிம்மாவும் பார்த்து அதிர்ச்சியில் உறைந்திருந்தார். அஃப்சானா தன் அண்ணனிடம், "என்ன ண்ணா இப்படி சொல்லிட்டீங்க?" என்று கேட்க அதே கேள்விதான் சாஜியின் மனதையும் அழுத்தியது. "வேறென்ன செய்ய முடியும்?" சையத் விரக்தியான பார்வையோடு தங்கையைப் பார்க்க, சாஜிம்மா கோபம் பொங்க, "உன் பேர்ல தப்பா ஒருத்தி பழி போட்டிருக்கா? அவளை எதுக்குடா நீ கல்யாணம் பண்ணிக்கணும்?" என்று கேட்க, "எனக்கு மதுவை நல்லா தெரியும்மா... அவ நிச்சயம் தெரிஞ்சு பண்ணி இருக்க மாட்டா... பாவம் அவ சூழ்நிலை என்னவோ?!" என்றவன் உரைக்க சாஜிம்மா அவனை ஆச்சர்யமாய் பார்த்தார். அந்தக் கணம் எதிர்பாரா விதமாய் மது சையத்தின் கால்களைப் பிடித்துக் கொண்டு, "ஸாரி ஸார்... என்னை மன்னிச்சிடுங்க" என்று கண்ணீர் வடிக்க எல்லோருமே அதிர்ந்தனர். சையத் அவள் கரத்தைப் பிடித்துத் தூக்கியவன், "என்ன காரியம் பண்ற மது?" என்று அதிர்ச்சியாய் பார்க்க, அவள் கரத்தைக் குவித்தபடி அழுதவள், "என்னை மன்னிச்சிடுங்க சார்... எனக்கு வேற வழி தெரியல" என்றாள். சாஜிம்மா எரிச்சலோடு, "ஏன் மது? என் பையன் என்னைக்காச்சும் உன்கிட்ட அப்படி நடந்துக்கிட்டானா?" என்று கேட்க, அவள் பதறியபடி, "சத்தியமா இல்லம்மா... அவர் அப்படி ஒரு பார்வை கூட பார்த்தது கிடையாது" என்றாள். "அப்புறம் ஏன்டி என் பிள்ளை மானத்தை வாங்கின?... அவனை எல்லாரும் எப்படி பார்க்குறாங்க தெரியுமா? !" என்று அவர் உணர்ச்சி பொங்க குரலை உயர்த்த சையத் தன் அம்மாவை அணைத்துப் பிடித்தபடி, "வேண்டாம் ம்மா... விடுங்க" என்று சமாதானம் உரைக்க, அவர் தன் மகனின் தோளில் சாய்ந்தபடி அழத் தொடங்கினர். அஃப்சானாவும் அதே நேரம் அழத் தொடங்க, ஆஷிக் கோபத்தோடு மதுவைப் பார்த்து, "அப்படி என்னதான் உங்களுக்கு எங்க ண்ணன் மேல கோபம்" என்று கேட்க, அவள் தன் அழுகையை விழுங்கிக் கொண்டு, "நான் எதுவும் வேணும்னே செய்யல... எங்க வீட்டுல ரவுடிங்க சில பேர் வந்து மிரட்டுனாங்க... சையத் சாரை தப்பா சொல்லலன்னா தங்கச்சிங்ககிட்ட தப்பா நடந்துப்பேன்னு சொன்னாங்க... அப்பாவுக்கும் உடம்பு சரியில்லை... நான் அந்த நிமிஷம் ரொம்ப பயந்துட்டேன்" என்று சொல்லும் போதே அவள் கரமெல்லாம் உதறலெடுத்தது. அவளின் அழுகை மெல்ல மெல்ல அதிகரிக்க, சாஜி ஆஷிக் அஃப்சானா மூவரும் அதிர்ச்சியில் நின்றுவிட்டனர். சையத்திற்கு இதெல்லாம் ராகவின் வேலைதான் என்று தீர்க்கமாய் புரிந்தது. 'நீ செய்ற எல்லாத்துக்கும் ஒருநாள் அனுபவிப்ப ராகவ்' என்று மனதிற்குள் கொதித்தவன் அந்தக் கணம் மதுவின் நிலையைப் பார்த்து பரிதாபம் கொண்டான். அவளோ கதறி அழுதபடி தரையில் சரிய, சையத் அஃப்சானாவிடம் சமிஞ்சையால் அவளைத் தேற்ற சொன்னான். அஃப்சானா அவள் அருகில் அமர்ந்து, "அழாதீங்க க்கா" என்றுரைக்க அவளோ அமைதியடையவில்லை. சாஜி நடப்பதெல்லாம் என்னவென்று புரியாமல் மகனைப் பார்த்து, "அந்த பொண்ணு சொல்றதெல்லாம் என்ன சையத்?" என்றவர் சந்தேகமாய் வினவ, "நீங்க முதல்ல போய் கொஞ்சம் படுங்க... நைட்டெல்லாம் தூங்கல... நான் எல்லாத்தையும் அப்புறம் சொல்றேன்" என்றவன் ஆஷிக்கிடம் அம்மாவை உள்ளே அழைத்துப் போக சொன்னான். அவர் மகனை தவிப்போடு பார்த்துவிட்டு மறுப்பேதும் சொல்லாமல் ஆஷிக்கோடு உள்ளே செல்ல அப்போது சையத் தன் தங்கையை பார்த்து, "போய் மதுவுக்கு தண்ணி எடுத்துட்டு வந்து கொடு" என்க, அவளும் உள்ளே சென்றாள். சையத் தரையில் அமர்ந்திருப்பவளைப் பார்த்து, "மது" என்றழைக்க அவள் விசும்பலோடு அவனை நோக்கினாள். "எழுந்திரு... மேலே உட்காரு" என்று சொல்ல அவள் முகத்தைத் துடைத்தபடி எழுந்து கொண்டாள். அதற்குள் அஃப்சானா தண்ணி எடுத்து வந்து தரவும் அவள் அதை வாங்கி அருந்திய போதும் அவள் விசும்பல் நின்றபாடில்லை. அஃப்சானா தன் அண்ணனின் பார்வை புரிந்து உள்ளே செல்ல, மதுவை அமரச் சொன்னான். அவள் விசும்பிக் கொண்டே அமர்ந்து கொள்ள, சையத் அவளை நோக்கி, "அழாதே மது... விடு போகட்டும்" என்று உரைக்க அவள் உச்சபட்ச வியப்போடு அவனைப் பார்த்தாள். தான் செய்த செயலை அவன் இத்தனை நிதானமாய் எதிர்கொள்வதை அவளால் நம்பமுடியவில்லை. அவள் விசும்பல் கிட்டத்தட்ட நின்றிருக்க, அவள் அவனைக் குழப்பமாய் பார்த்து, "ஏன் சார்... நான் சொன்னது அத்தனையும் உண்மைன்னு ஒத்துக்கிட்டீங்க" என்றவள் கேட்க, "தப்பு எல்லாம் என் பேர்லதான்... உனக்கு இவ்வளவு பெரிய பிரச்சனை வந்ததுக்கும் ஒருவகையில நான்தான் காரணம்... அதனாலதான் நான் அப்படிச் சொன்னேன்" என்றவன் சொல்லி பெருமூச்செறிந்தான். அவள் யோசனைக் குறியோடு மௌனமாகிட சையத் அவளிடம், "நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னதுல உனக்கு சம்மதமா?!" தயக்கத்தோடு அவன் கேட்கவும் அவள் அதிர்ந்தாள். அவன் மேலும், "நான் முஸ்லீம்குறதால உங்க வீட்ல" என்று சொல்லும் போதே அவள் கண்ணீரோடு, "உங்க மதமெல்லாம் எனக்குத் தெரியல... நீங்க எனக்கு இப்போ கடவுளாதான் தெரியிறீங்க" என்றாள். "அப்படி எல்லாம் யாரும் அவ்வளவு சுலபமா கடவுளாகிட முடியாது மது" என்று தெளிவோடும் நிதானத்தோடும் உரைத்தவனை அடங்காத வியப்போடு பார்த்து, "உங்களுக்கு என் மேல கோபம் இல்லையா சார்?" என்று கேட்டு அவனை ஆழ்ந்து பார்த்தாள். அவன் உதடுகளில் லேசாய் புன்னகை எட்டிப் பார்த்தது. "நீ கொஞ்சங் கூட உன் வாழ்க்கை பாதிக்குமேன்னு கவலைப்படாம... உன் குடும்பத்துக்காக நீ எவ்வளவு தியாகம் பண்ணி இருக்கு மது... உன் மேல எனக்கு கோபம் வரல... அதுக்கு பதிலா மரியாதைதான் அதிகமாகுது" என்று உரைத்தவனைப் பார்த்து அதிசயத்துதான் போனாள். அவளுக்கு எப்போதும் அவன் மீது அளவுகடந்த மரியாதை உண்டு. ஆனால் அது இப்போது முற்றிலும் காதலாக உருமாறியிருந்தது.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா