மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Rainbow kanavugalRainbow Kanavugal - 19Post ReplyPost Reply: Rainbow Kanavugal - 19

Quote from monisha on February 14, 2021, 5:43 PM

19
முதலிரவுக்கு பின் வந்த ஒவ்வொரு இரவுகளிலும் அந்த அறை சுமந்தது வெறும் மௌனத்தை மட்டும்தான். அவர்கள் இருவரும் பேசிப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியங்கள் நிறையவே இருந்த போதும் அவர்களுக்கு பேச எந்தக் காரணங்களும் இல்லை. உண்மையில் அப்படி எந்தவொரு காரண காரியத்தையும் அவர்கள் தங்களுக்காக உருவாக்கிக் கொள்ளவில்லை. இந்துமதி சொன்ன ஒரே காரணத்திற்காக சரவணன் அதன் பின் அவளை எந்தவிதத்திலும் தொல்லை செய்யவோ நெருங்கவோ முயற்சிக்கவில்லை. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் இருவரும் ஒரே அறையில் தனித்தனியாக இருந்தனர். அன்பும் பாசமும் நிறைக்க வேண்டிய அவர்களின் அறையை தனிமை நிறைத்திருக்க, காதலும் காமமும் புழங்க வேண்டிய அவர்களின் படுக்கையோ வெறுமையைத் தாங்கியிருந்தது.  காதல் என்பது அதிகாரம் செய்தோ அல்லது அடித்து கட்டாயப்படுத்தியோ வர வைக்க முடியாது. மனதளவில் பல காத தூரம் அவள் விலகி இருக்கும் போது உடலளவில் அவளை நெருங்கி அவள் உணர்வுகளைக் காயப்படுத்த அவன் விரும்பவில்லை. அவளாகத் தன்னைப் புரிந்து கொள்ளும் ஒரு நாள் வரும் என்று அவன் காத்திருந்தான். இந்துவும் அதைதானே விரும்பினாள். இருப்பினும் அவளுக்கு சரவணன் செய்கையில் இருக்கும் காதல் புரிபடவில்லை. அவனையும் கட்டாயப்படுத்திதான் இந்தத் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருப்பார்கள் என்று எண்ணிக்கொண்டாள். அவனுக்கு தன்னிடம் எந்த விருப்பமுமில்லை அல்லது அவனுக்கு தன் மீதே நல்ல அபிப்பிராயம் இல்லை என்ற எண்ணம் அவளுக்கு! ஒருவேளை சரவணனால் பேச முடிந்தால் இவர்களுக்கு இடையிலான இந்தப் பிரிவினை இத்தனை நாட்கள் நீட்டித்திருக்காது. இந்துமதி அவன் மன எண்ணங்களை அறிய முற்பட்டிருக்கக் கூடும். அவன் பேச வந்தாலே அவள் பார்வையைத் திருப்பி கொள்வதும், அவனிருக்கும் திசையில் கூட அவள் இருக்க விரும்பாததும் என்று அவள் நடந்து கொண்ட விதத்திற்கு அவள் மன இறுக்கமும் கோபமும்தான் காரணம் என்று எண்ணினான். ஆனால் அது மட்டும் காரணம் அல்ல. வீணாவும் ஒரு முக்கிய காரணம். வீணாவிற்கும் இந்துமதிக்கும் ஆரம்பத்திலிருந்தே ஒத்துப் போகவில்லை. ‘நீ என் தம்பிக்குத் தகுதியானவ இல்ல’ என்று அடிக்கடி இந்துவை வீணா குத்திக் காட்டிக் கொண்டேயிருந்தாள். ஒரு நிலைக்கு மேல் இந்து பொறுக்க முடியாமல் எதிர் வாதம் செய்ய, இடையில் மாட்டிக் கொண்டுத் தவித்தது என்னவோ துர்காதான். மகளிருக்கும் நிலையில் அவளை எதிர்த்துகொள்ள முடியாமல் துர்கா இந்துவைதான் பெரும்பாலும் அமைதியாக இருக்க சொல்வார். சரவணனுக்கு இந்த விஷயமெல்லாம் தெரிய வேண்டாமென்று இந்துவிடம் கண்டிப்போடுச் சொல்லியிருந்தார். அப்படியே சொன்னாலும் அவன் என்ன செய்து விட போகிறான் என்று இந்து அவனிடம் சொல்வதுமில்லை. சரவணன் கடையில் இருப்பதால் அவன் காதுக்கு இந்த விஷயமெல்லாம்போகவே போகாது. பாலாவும் கல்லூரியிலிருந்து திரும்ப மாலை ஆகிவிடும். அன்றும் அப்படிதான். துர்கா கோயிலுக்குப் போயிருந்தார். இந்து தனியாக பின்கட்டில் அமர்ந்து கையில் கிடைத்தப் பழைய புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தாள். இந்து வேலை எதுவும் செய்யாமல் அப்படி அமர்ந்திருப்பதைப் பார்த்து வீணா கடுப்பாகி, “வேலை ஒன்னும் செய்றதுல… கதை புஸ்தகத்தைப் படிச்சிட்டு உட்காதிருக்கா பாரு” என்று அவள் காதுபடவே சொல்லிச் சீண்ட, “நான் வேலையெல்லாம் முடிச்சிட்டுதான் உட்கார்ந்திருக்கேன்” என்று இந்து கடுப்பாகப் பதிலளித்தாள் “என்னத்த முடிச்ச? சமையல் கட்டுல இருக்கப் பாத்திரமெல்லாம் யார் விலக்கிப் போடுவா” “ஏன் நீங்கதான் செய்றது?” “யார்? நான் செய்யவா?” என்றுக் கேட்ட வீணாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, “ஏன்? உங்க மாமியார் வீட்டுல இருந்தா நீங்க செய்ய மாட்டீங்களா?” என்று எடுத்தெறிந்துப் பேசினாள் இந்து! இப்படி உப்புக்கு பெறாத விஷயத்திற்கு இருவரும் பயங்கரமாக வாக்குவாதம் நடத்தி கொண்டிருக்க வீணா மேலும், “ஒழுக்கங்கெட்டவ உனக்கென்னடி இவ்வளவு வாய்…” என்றுக் கேட்டதோடு அல்லாமல் இந்துவின் கையிலிருந்தப் புத்தகத்தைத் தூக்கி வீச எத்தனித்தாள். அப்போது இந்து புத்தகத்தைப் பிடுங்கிக் கொண்டு அவளைத் தள்ளிவிட்டுவிட வீணா பின்னோடு சாய்ந்து, “அம்ம்மம்ம்ம்ம்மா” என்றுக் கதறியபடி தரையில் விழுந்துவிட்டாள். இந்துவிற்கு ஒன்றுமே புரியவில்லை. இப்படியெல்லாம் நடக்குமென்று அவள் எதிர்பார்க்கவில்லை. இந்து உடனடியாக வீணாவின் கைப்பிடித்து தூக்க வர, “நான் செத்தாலும் நீ என்னைத் தூக்க வேண்டாம்” என்று அவள் கையை உதற, “இந்த நேரத்துல போய் இப்படியெல்லாம் பேசாதீங்க… நான் செஞ்சது தப்புதான் சாரி” என்று அவள் கேட்கும் போதே வீணா வலி தாங்க முடியாமல் கத்திக் கூப்பாடுப் போடத் தொடங்கினாள். இந்துவின் கை கால்களெல்லாம் வெடவெடத்தன. வீணாவை நெருங்கி இந்து தூக்க முயலும் போதே பனிக்குடம் உடைந்து விட்டது போன்று தோன்றியது. அவள் இந்தச் சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்று யோசித்திருக்கும் போதே சரவணன் கடையிலிருந்து தமக்கையின் கதறல் சத்தம் கேட்டு ஓடி வந்திருந்தான். இந்து அவனைப் பார்த்த நொடி படபடப்போடு பேச எத்தனிக்கும் போது வீணா அந்த உயிர் போற வலியிலும் அவளை முந்திக்கொண்டு, “உன் பொண்டாட்டி என்னைக் கீழே தள்ளி விட்டுட்டா சரவணா?!” என்றாள். சரவணன் பார்வை நொடிக்கும் குறைவாக இந்துமதியை நோக்கியது. பின் தமக்கையைக் காப்பாற்றுவதே பிரதான நோக்கமென்று அவளை மருத்துவமனை அழைத்து செல்வதில் மும்முரமாக இருந்தான். அதேநேரம் துர்காவும் வீட்டிற்கு வந்துவிட வீணாவை மருத்துவமனை அழைத்துச் சென்றனர். சரவணன் இந்துவை வீட்டிலிருக்கும்படி சைகை காட்டிவிட்டு செல்ல அந்த நிலையிலும் வீணா துவேஷத்தோடு, “என் குழந்தைக்கு மட்டும் ஏதாவது ஆச்சு உன்னை சும்மா விடமாட்டேன்டி” என்றுச் சூளுரைத்துவிட்டுதான் சென்றாள். இந்துமதியின் ஒவ்வொரு செல்களிலும் அச்சத்தின் சாயல் படிந்தது. வீணா நல்லபடியாக குழந்தைப் பெற்று வரவேண்டுமென்று அவள் வேண்டாத தெய்வங்களே இல்லை. அந்த வேண்டுதல்களை மனதில் சுமந்தபடித் தலையைப் பிடித்துக் கொண்டு வீட்டு வாசலைப் பார்த்து தரையில் அமர்நதவள்தான். அவர்கள் வரும் வரை தண்ணீர்கூடக் குடிக்காமல் தவிப்போடு கிடந்தாள். இரவு வெகுநேரம் கழித்து சரவணனும் பாலாவும் வீட்டிற்கு வந்து சேர, அவள் ஓடி சென்று அவர்கள் முன்னே நின்றாள். களைத்துப் போயிருந்த அவளின் பார்வையில் அந்தளவு பயமும் எதிர்பார்ப்பும் இருந்தது. அவர்கள் சொல்லப் போகும் ஒரு வார்த்தையில்! “பாலா… வீணா அண்ணிக்கு ஒன்னும் இல்லையே… நல்லா இருக்காங்க இல்ல… குழந்தை நல்லப்படியா பிறந்துடுச்சா?” என்றவள் கேள்விகளை அடுக்க, “அதெல்லாம் நல்லபடியா பிறந்துடுச்சு அண்ணி… ஆம்பள குழந்தை” என்றான். அப்போதுதான் அவளுக்கு மூச்சே வந்தது. அவள் நிம்மதி பெருமூச்செறிய சரவணன் தன் தம்பி பாலாவிடம் ஏதோ செய்கைச் செய்தான். மறுநொடியே அவன் இந்துவிடம், “அண்ணி வாங்க சாப்பிடலாம்… டிபன் வாங்கிட்டு வந்திருக்கேன்” என்றான். அவளுக்கு அதுவரை பசி உணர்வே இல்லை. பாலா கேட்கும் போதுதான் அவளுக்கு அந்த நினைவே வந்தது. பாலா கொடுத்தப் பார்சலை வாங்கிக் கொண்டவள், “நீ சாப்பிட்டியா பாலா?” என்று வினவ, “நான் சாப்பிட்டேன்… ஆனா அண்ணன்தான்” என்று தமையன் முகம் பார்த்தான். அத்தனை நேரம் அவன் அருகில் நிற்பதை கூட அவள் கவனித்ததாக தெரியவில்லை. எல்லா கேள்விகளையும் அவள் பாலாவைப் பார்த்துதான் எழுப்பினாள். அந்த ஒரு விஷயமே அவன் மனதை ஆழமாக குத்தியது. தன்னால் பேச முடியவில்லை என்பதால் தானே அவள் தன்னிடம் எதுவும் கேட்கவில்லை ஒரு விதமான தாழ்வு மனப்பான்மை அவன் மனதை வருத்த, 'எனக்கு வேண்டாம்’ என்பது போல தலையசைத்துவிட்டு அவன் அறைக்குள் சென்றுவிட, பாலாவிற்கு சங்கடமாகி போனது. “அண்ணன் மதியத்துல இருந்து சாப்பிடல… அவரைச் சாப்பிட சொல்லுங்க… நான் ட்ரஸ் மாத்திட்டு ஹாஸ்பெட்டில் கிளம்புறேன்” என்றவன் தன் அறை நோக்கி விரைந்துவிட்டான். கையிலிருந்த அந்த உணவுப் பொட்டலத்தைப் பார்த்தவளுக்கு உள்ளுர பசி இருந்தாலும் சரவணனைக் கூப்பிட வேண்டுமா என்றுத் தவிப்பாக இருந்தது. அதுவும் கூப்பிட சென்று அவன் பாட்டுக்கு தன் தமக்கையை நீதான் தள்ளி விட்டாயா? என்றுக் கேட்டால் என்ன பதில் சொல்வது? அந்த விஷயம் அவளை அணுஅணுவாகச் சித்ரவதை செய்தது. அறைக்குள் போகவும் பயந்து கொண்டு அப்படியே முகப்பறையில் அமர்ந்துக் கொண்டாள். ஆனால் சில நிமிடங்கள் கழித்து அவனே வந்து நின்றான். அவள் உணவு உண்ணாதிருப்பதைக் கவனித்தவன் உணவு பொட்டலத்தைப் பிரித்து அவள் அருகில் வைத்தான். அவனை நிமிர்ந்தும் பாராமல், “நீங்க” என்றுக் கேட்டாள். பின் அவனும் மௌனமாக அமர்ந்து உணவு உண்ணவும் அவளும் சாப்பிட்டாள். ஆனால் உள்ளே இதயம் படபடவென வேகமாக அடித்துக்கொண்டிருந்தது. இருவரும் உண்டு முடித்து அறைக்குள் வரவும் சரவணன் தன் கையில் கணக்கு புத்தகம் ஒன்றையும் பணக் கட்டையும் வைத்து கணக்குப் பார்த்து எண்ணி வைத்துக் கொண்டிருந்தான். அறைக்குள் நுழைந்தவள் அவனையே பார்த்தபடி நின்றிருந்தாள். அவள் பார்வையை உணர்ந்தவனாக தலையை நிமிர்த்தி என்ன என்பது போல் புருவத்தை உயரத்தவும், அவள் ஒன்றுமில்லை என்பது போல் படப்படபோடு தலையசைத்துவிட்டு அவசரமாக தன்னிடத்தில் எப்போதும் போல் போர்வையை விரித்துப் படுத்துக்கொண்டாள். சரவணனுக்கு அவள் செய்கையைப் பார்த்து மெல்லிய புன்னகைத் தவழ்ந்தது. பின் அவன் மீண்டும் கணக்கு பார்ப்பதில் மும்முரமானான். அவனாக அது குறித்து எதுவும் கேட்கவில்லை. அவளும் எதுவும் சொல்லவில்லை. மௌனமாக கழிந்தது அவர்களின் அந்த இரவும்!  ஆனால் முந்தைய நாளுக்கும் சேர்த்து அடுத்த நாள் அனைத்து களேபரங்களும் நடந்தேறின. அன்றைய தினம் விடிந்ததும் வந்திறங்கியிருந்தார் இந்துவின் அம்மா. அவர் ஊரிலிருந்து புறபட்டு மருத்துவமனைக்கு வீணாவைப் பார்க்க செல்ல, துர்கா ஒன்று விடாமல் நடந்த அனைத்து விஷயங்களையும் விவரித்துவிட்டார். செல்விக்கு கோபம் கனலாக ஏற, வீணாவும் சேர்ந்துக் கொண்டு அந்த நெருப்பை நன்றாகப் பற்றி எரியும்படிச் செய்துவிட்டாள். அதோடு அவள் முடிக்கவில்லை. “இனிமே இந்து அந்த வீட்டுல இருந்தா நான் அங்கே வரவேமாட்டேன்” என்று ஒரே போடாக போட, துர்காவிற்குமே மகள் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சிதான். இந்துவைப் பழித் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்பதே வீணாவின் நோக்கமாக இருந்ததே ஒழிய இதில் தன் தம்பியின் வாழ்க்கை அடங்கியிருக்கிறது என்பதை அவள் ஒரு நொடி கூட யோசிக்கவில்லை. துர்காவும் மருமகளா மகளா என்று வந்தாள் மகள்தான் என்று யோசித்தார். இடையில் மகன் என்ற உறவின் நிலைமையைப் பற்றி யோசிக்கவே இல்லை. அவர் செல்வியிடம், “உங்கப் பொண்ண அழைச்சிட்டுப் போயிடுங்க… ஒரு மூணு மாசம் கழிச்சு வீணாவை அவ புகுந்த வீட்டுக்கு அனுப்பின பிறகு சரவணனை அனுப்பி அழைச்சிக்கிறோம்” என்று அவரும் மனசாட்சியே இல்லாமல் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். செல்வியால் ஒன்றுமே பேச முடியவில்லை. மொத்த கோபமும் மகளின் மீதுதான் திரும்பியது. இது வரை செய்ததெல்லாம் போதாதென்று சம்பந்தம் செய்த வீட்டில் இப்படித் தன்னை அவமானப்படுத்திவிட்டாளே என்றவர் உள்ளம் எரிமலையாகத் தகித்தது. உள்ளூர குமுறிக் கொண்டே வீட்டிற்கு வந்தவர், வந்ததுமே மகளைப் பிடித்து வெளுத்து வாங்கிவிட்டார்.  “உனக்கு எங்கிருந்துடி அவ்வளவு கோபம் வரும்… அதுவும் நிறை மாச புள்ளதாச்சியைத் தள்ளிவிடுற அளவுக்கு” என்று ஆரம்பித்து அவளைத் திட்டித் தீர்த்துவிட்டு, “ஒழுங்கா கிளம்பு போகலாம்” என்று அவளை துணிகள் எடுத்து வைக்க சொன்னார். இந்துவின் மனதில் அந்த நொடி கொஞ்சம் நிம்மதியாகவே இருந்தது. தன் ஊருக்கே போய்விடலாம் என்ற மனநிலைக்கு வந்திருந்தவள் ஒரு பையை எடுத்து தம் துணிகளை நிரப்பி வைத்தாள். அப்போது கடையிலிருந்து சரவணன் வரவும் செல்வி அவனிடம் சொல்லிவிட்டு மகளை அழைத்து செல்ல தயார் நிலையிலிருந்தார்.  “நடந்தெல்லாம் அம்மா சொன்னாங்க… இவ ஏதோ கோபத்துல பண்ணிட்டாளே ஒழிய தெரிஞ்சுச் எதுவும் பண்ணல” என்று மகளுக்காக பரிந்து பேசியவர், “துர்கா சொல்ற மாதிரி வீணாவும் இவளும் ஒண்ணா இருந்தா பிரச்சனைதான் வரும்… அதான் வீணா இருக்கிற வரைக்கும் நான் இந்துவை அழைச்சிட்டுப் போய் ஊர்ல வைச்சுக்கிறேன்… அப்புறம் வீணா அவங்கப் புகுந்த வீட்டுக்கு போன பிறகு வந்து நீங்க இந்துவை அழைச்சிட்டுப் போங்க” என்று சொல்ல சரவணன் முகம் வெளிறி போனது.  “மாப்ள கிட்ட சொல்லிட்டு வா… இந்து” என்றுச் செல்வி சொல்ல அவன் தவிப்போடு தன் மனைவியைப் பார்த்தான்.  அவள் அவனை நிமிர்ந்துப் பார்த்து புறப்படுவதாகத் தலையசைத்தாள். அது கூட வேண்டா வெறுப்பாகதான்! சரவணன் பார்வையிலிருந்த வலியை அவள் உணரவேயில்லை. அவன் வேண்டாமென்று கண்ணசைத்ததையும் அவள் பார்க்கவேயில்லை. அப்போதைக்கு அவள் அந்த வீட்டை விட்டுக் கிளம்பி போனால் போதும் என்ற மனநிலையிலிருந்தாள். செல்வி சரவணனிடம் சொல்லிவிட்டு முன்னே செல்ல அவரைப் பின்தொடர்ந்த இந்துவின் பேகை சரவணன் பறித்துக் கொண்டான்.  அதோடு அவளை போக வேண்டாமென்று திட்டவட்டமாக தலையசைத்து மறுத்துவிட்டு அவள் பையைச் சென்று அறைக்குள் வைத்துவிட்டான். இந்தக் காட்சியைப் பார்த்த செல்விக்கு உள்ளுர சந்தோஷமாக இருந்தது. யாராவது இப்படி சொல்ல மாட்டார்களா என்றவர் ஏக்கத்தோடு எதிர்ப்பார்த்திருக்க, சரவணன் அதைச் சொன்னது அவருக்குள் ஆழ்ந்த நிம்மதியைப் பரவ செய்தது. ஆனால் அதற்கு நேர்மாறாக இந்துவின் முகத்தில் அதிர்ச்சி, கோபம், வெறுப்பு என்று அத்தனை உணர்ச்சிகளும் ஒரு சேர பிரதிபலித்தன. சரவணன் இப்படிச் செய்தது அவளுக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. தன்னை நிம்மதியாக இருக்க விடக்கூடாதென்று செய்கிறான் என்றே தோன்றியது அவளுக்கு! அவள் மனதில் வெறுப்புணர்வு பொங்கிப் பெருக செல்வி அதுபுரியாமல் சரவணனைப் பற்றி மகளிடம் புகழ்ந்து தள்ளி மகளின் கோபத்தை அதிகப்படுத்தினார். “நான் கூட ஆரம்பத்துல மாப்பிள்ளையைப் பத்தி தப்பா நினைச்சேன்… ஆனா அவர் அப்படியெல்லாம் இல்ல… ரொம்ப நல்லவரு” என்றுப் பாராட்டியதோடு நிறுத்திக் கொள்ளாமல், “நீ அதிர்ஷ்டகாரிதான்… கண்டிப்பா மாப்பிள்ளை உன்னை எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்கமாட்டாரு” என்றுச் சொல்லிவிட்டு அவர் சென்றுவிட்டார். அந்த வார்த்தைகளின் ஆழம் அப்போதைக்கு இந்துவிற்கு புரியவில்லை. ஆனால் அனுபவபூர்வமாக அதை அவளே உணரும் ஒரு நாள் வருமென்று அவள் யோசித்திருக்கவில்லை. அவனின் தூய்மையான அன்பையும் காதலையும் அன்றே உணர்ந்திருந்தால் இன்று தனக்கு இப்படி ஒரு கெதி நேரிட்டிருக்காது என்று கணவனின் கடிதத்தை அணைத்தபடி கண்ணீரில் கரைந்திருந்தாள் அந்தக் காரிகை! அருகிலிருக்கும் போதெல்லாம் வராத இந்த காதல் இப்போது வந்து தொலைப்பானேன்! மனம் முழுக்க நிறைந்துவிட்ட அவன் பிம்பத்தை நேரில் பார்க்க அவள் உள்ளம் தவித்தது.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா