மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumBhagya Novels: Kadhal Siraikadhal sirai -7Post ReplyPost Reply: kadhal sirai -7 <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-default" href="#">bhagyasivakumar</a> on April 23, 2021, 12:50 PM</div>அருந்ததியின் நாட்கள் எல்லாம் லாக்டவுனிலே கழிந்தது. புதுமணத்தம்பதியர் என்றாலே அலங்கரித்துக்கொண்டு வெளியே நாலு இடங்களுக்கு சென்று வருவர். ஆனால் இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவர்களை வீட்டுக்குள்ளே முடக்கியது. "என்ன அருந்ததி,வீட்லயே இருக்க ஒரு மாதிரி இருக்கா?" என்றான் கதிர். "ஆமா மாமா என்ன செய்றது வேற வழியும் இல்லையே" என்று சலித்துக்கொண்டவளை தோளில் கைப்போட்டு "சரி வா நம்ம டெரஸ்க்கு போலாம்" என்றழைத்தவனை கவனித்தவள் அங்கு என்ன அப்படி இருக்கு என்று யோசித்துவிட்டு "சரி வாங்க போலாம்" என்று இருவரும் மொட்டை மாடியிற்கு சென்றனர். அது அழகிய மாலை நேரம் என்பதால் சூரியன் அஸ்தமிக்கும் அந்த அழகிய காட்சியை தரிசனம் செய்தனர் இருவரும். "என்னடா இங்கே என்ன இருக்குனு இங்கே கூட்டிட்டு வந்தனு யோசிக்கிறியா"என்றான் அவளை எதிர்நோக்கியபடி. "உண்மை தான் ஆனால் இங்கே வந்தப்றம் ரொம்ப பீஸ்ஃபுல்லா இருக்கு. எப்பவுமே நாலு செவுத்துக்குள்ள எவ்வளவு நேரம் தான் இருக்கிறது. அட்லீஸ்ட் இப்படி மாடிக்கு வந்தாளாவது கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கு." என்று அவள் சொன்னதும் அவள் மனதில் இருப்பதை புரிந்துக்கொண்டான். பொதுவாக பெண்கள் கணவனோடு தனிமையிலா இருப்பதற்கு எதிர்பார்ப்பார்கள். வெளியே செல்ல ஆசைப்படுவார்கள். ஆனால் இங்கோ எந்நேரமும் கூட்டம். பாவம் என்னிடம் தனிமையில் பேசக்கூட முடிவதில்லை அவளால். அது பற்றாக்குறைக்கு உறடங்கு வேறு. ஆனால் இதற்கெல்லாம் ஒரு விடிவுகாலம் வரும் என்று நினைத்தவன். "அருந்ததி....கீழே போலாமா நம்ம வந்து ரொம்ப நேரம் ஆயிடுச்சு" என்று அழைக்க அவளும் சரியென்று கீழே இறங்கி வந்தாள். கீழே வந்து பார்த்தால் அங்கு கவியரசியிற்கும் காயத்ரிக்கும் ஒரு பெரிய சண்டையே நடந்துக்கொண்டிருந்தது. "என் ரேக்கில் நீ ஏன் உன் துணி வைக்கிற" என்று காயத்ரியும்... "நான் அப்படித்தான் வைப்பேன்" என்று பிடிவாதமாய் கவியரசியும் வாதிட்டுக்கொண்டிருந்தனர். "ஏய் காயூ என்ன இதுக்கெல்லாம் சண்டை விடு" என்று அருந்ததி சொல்ல... "அட இல்லை அண்ணி இவ எப்பப்பாரு இதேபோல் தான் என்னோட ரேக்கில் எடுத்துட்டு வந்து ட்ரெஸ் வச்சிட்டு எனக்கு வைக்க இடமில்லாமல் பண்ணுவா" என்று கத்தவும். "இப்போ என்ன? உன் ட்ரெஸ் வைக்க இடம்வேணும் அதானே? இரு என்னோட சூட்கேஸ் எடுத்து தரேன் அதுல அடுக்கி வச்சிக்கோ". "இல்லை பரவாயில்லை அண்ணி" என்ற காயத்ரியை புன்னகையோடு அனுசரித்து "நான் கொடுத்தால் நீ வாங்கிக்க மாட்டியா" என்று தன் சூட்கேஸில் இருந்த தனது ஆடைகளை பீரோவில் நொந்திவிட்டு அந்த சூட்கேஸை அவளிடம் கொடுத்தாள். "ப்ச்ச் இவ்வளவு பெரிய வீட்டில் ட்ரெஸ் வைக்க கூட எடமில்லை பாரு" என்று சலித்துக்கொண்டான் கதிர். கூட்டுக்குடும்பம் என்றால் அப்படித்தான் எல்லாத்துக்கும் ஒரு அட்ஜஸட்மெண்ட் தேவைப்படுது. என்று நினைத்தவன். 'ஒரே ஒரு படம். நல்லா ஹிட் ஆச்சுனா போதும் தனியா ஒரு ப்ளாட் வாங்கிட்டு அருந்ததியை அழைச்சிட்டு அங்கு போயிடனும்.' என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான். நாட்கள் இப்படியே வெகுவாக கடந்தது. தளர்வுகள் எல்லாம் வந்துவிட்டது அன்றாட வாழ்க்கைக்கு மக்கள் திரும்ப ஆரம்பித்த காலம் அது. காயத்ரியின் திருமண பேச்சு அடிபட்டது. "அகிலாண்டேஷ்வரி, நம்ம மூத்தவளுக்கு வரன் பார்க்கணும் டி. இப்படியே இருந்தால் எப்படி. நமக்கும் வயசு ஆகுது சீக்கிரமே ஒரு நல்ல பையனை பார்த்து கல்யாணம் முடிச்சிடணும்" என்று விருதாச்சலம் சொன்னவுடன். "ஆமாங்க நானும் நினைச்சிட்டே இருந்தேன். கதிருக்கு கல்யாணம் முடிஞ்சது. அடுத்து காயத்ரிக்கும் முடிஞ்சிட்டா நல்லாருக்கும். முடிஞ்சவரைக்கும் நம்ம கடமையை சீக்கிரமே முடிக்க பார்க்கலாம்" என்றவுடன். அவளுக்கு வரம் தேடும் படலத்தை குடும்பத்தினர் ஆரம்பித்தனர். ப்ரவீன் மீது இருந்த காதலால் வரும் வரனை எல்லாம் வேண்டாம் என்று தட்டிக்கழித்தாள் காயத்ரி. "ஏய் காயூ ஏன் வர வரனெல்லாம் வேண்டாம் என்று சொல்ற" என்று கதிர் கேட்க. "அண்ணே நான் எதிர்பாக்குற மாப்பிள்ளை இன்னும் அமையல" என்று சொல்லிவிட்டு கடந்துச்செல்ல.. 'ம்ம்ம் இவ ப்ரவீனை லவ் பண்றது யாருக்கும் தெரியாது. சொல்லவும் வேணாம். நமக்கு ஏன் வம்பு' என்பதில் உறுதியாக இருந்தாள். வீட்டிற்கு தரகரை அழைத்து வந்தனர். நல்ல வரன்களை எல்லாம் விளக்கச்சொல்லி சொல்ல..தரகரோ. "விருதாச்சலம் ஐயா,கோவையில் ஒரு நல்ல வரன் இருக்கு. பையன் பி.பி.ஓ வில் வேலை பார்க்கிறான். கொஞ்சம் நார்மலான பேமிலி தான். அதுமட்டுமின்றி பையன் நல்லா ஹீரோ மாதிரி இருப்பான். காயத்ரிக்கு ஏத்த ஜோடி என்று சொல்லிவிட்டு அவனின் ஜாதகத்தை கொடுத்துவிட்டு சென்றார். "பொருத்தம் வந்தா கல்யாணம் பண்ணிடவேண்டியது தான். இந்தமுறை காயத்ரி அபிப்பிராயம் தேவையில்லை" என்றார் சண்முகம் தாத்தா. காயத்ரிக்கு உடம்பு வெடவெடுத்தது. 'என்னடா இது சத்திய சோதனை பேசாமல் நம்ம லவ் பண்ற விஷயத்தை சொல்லிடுவோமா. இல்லை அப்றம் பார்த்துப்போமா?' என்று யோசித்தவள்.. 'சரி அப்றம் பார்த்துப்போம் என்று விட்டுவிட்டாள்' இதற்கிடையில் பெண்பார்க்கும் நாளும் வந்தது. பெண்பார்க்கும் நாள் என்றாலே அருந்ததியிற்கு மறக்க முடியாதவை. தன்னை பெண்கேட்டு வந்தவன் தானே மணவறையில் விட்டுச்சென்றான். அவன் எங்கே விட்டுச்சென்றானோ அங்கே துவங்கி என்னை காதல் செய்கிறான் கதிர். "ஏய் காயத்ரி, இப்படி மூஞ்சியை தூக்கி வச்சிட்டு இருக்காதே நாளைக்கு பொண்ணு பார்த்து வராங்களாம்" என்று சந்திரலேகா சொல்ல... "அட போங்க அத்தை நீங்க வேற கடுப்பா இருக்கிறது" என்று நொந்துக்கொண்டாள் காயத்ரி. "ஹாஹா. என்ன காயூ ப்ரவினை மறக்க முடியலைனு கவலையோ" என்று நகைத்தாள் அருந்ததி. "அண்ணி இதெல்லாம் ரொம்ப ஓவர் ஆமாம். என்ன இது திடிரென பொண்ணு பார்க்க நாளைக்கு வராங்களாம். ச்ச பேசாமல் ப்ரவினோட ஓடிபோயிடலாம்னு பார்த்தால் அவன் என்னோட போனை அட்டண்டு கூட பண்ணவே மாட்டுறான்" என்க. "யம்மாடியோ ஓடிப்போற அளவு ப்ளானா" என்று அருந்ததி கண்ணத்தில் கை வைத்தப்படி கேட்க "ஏன் போகக்கூடாதா? கண்டிப்பாக போகத்தான் போறேன்" என்றதும். "இங்கே பாரு காயத்ரி ப்ரவினை மறந்துட்டு ஒழுங்காக வீட்டில் சொல்ற பையனை கட்டிக்க. ப்ரவின் மேல உனக்கிருந்த காதலை பாஸிங் க்ளவுட்ஸ் போல மறந்துடு" என்று அறிவுரை கூறியவளை முறைத்தபடி... "ஹலோ அண்ணியாரே ஒரு காலத்துல இந்த வீட்டை விட்டு போக மனசில்லாமல் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தவங்க தானே இப்ப என் விஷயத்தில் மட்டும் ப்ரவினை மறந்திடுனு சொன்னால் எப்படி?"என்றுரைத்தவளை கண்ணீரோடு எதிர்கொண்டவள். "இங்கே பாரு காயத்ரி நான் இந்த வீட்டை விட்டு போகக்கூடாதுனு தான் கல்யாணம் வேண்டாம்னு சொன்னேனே தவிர இந்த வீட்டை விட்டு போகணும்னு ஒரு நாளும் யோசிச்சதே இல்லை.. ஆனால் நீ என்ன வார்த்தை சொல்லிட்டு இருக்க? கல்யாணம் வேண்டாம் ஓடிப்போறேனு சொல்ற. அந்த அளவு உனக்கு காதல் முக்கியமா? இந்த வீட்டு ஆளுங்க உனக்கு முக்கியமே இல்லையா?" என்க... "வேற என்ன தான் பண்றது? ப்ரவினை நான் உண்மையா நேசிக்கிறேன். அவன் எனக்கு வேணும்." என்று அழத்துவங்கியவளை ஆசுவாசப்படுத்தியவள். "சரி அப்படினா ஒன்னு பண்ணு நாளைக்கு வரப்போகிற மாப்பிள்ளை கிட்ட தனியா பேசி இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைனு சொல்லிடு அதுகப்புறம் ப்ரவினை பற்றி வீட்டில் பொறுமையா பேசுவோம். "நான் சொல்றது சரிதானே" என்று அவளின் முகத்தாடையை பிடித்து கேட்டவளை செல்லமாக கோபித்துக்கொண்டு சரியென்று ஒப்புக்கொண்டாள் காயத்ரி. அடுத்து என்ன ? </blockquote><br> Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா