மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumBhagya Novels: Kadhal Siraikadhal sirai -10Post ReplyPost Reply: kadhal sirai -10 <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-default" href="#">bhagyasivakumar</a> on May 7, 2021, 11:37 AM</div>நாட்கள் உருண்டோடியது. காயத்ரியை மாப்பிள்ளை சந்திக்க வருவதாக மாப்பிள்ளை வீட்டிலிருந்து தகவல் வந்தது. இதையறிந்த காயத்ரி எங்கே எப்படி சந்திக்க போறாருன்னு குடும்பத்தாரிடம் கேட்க அவர்களோ மாப்பிள்ளை காயத்ரியை ஒரு கோவிலில் வைத்து சந்திக்க போவதாக சொல்லவே அவளுக்கும் அது சரியென்று பட்டது. தனது பெட்டியிலிருந்து ஒரு நல்ல சேலையை எடுத்து உடுத்திக்கொண்டு தன்னை எவ்வளவு சிம்பிளாக காட்டிக்க முடியுமோ அந்த அளவு சிம்பிளாக தயார் ஆனாள். "ஏய் காயத்ரி சொன்னது நியாபகம் இருக்கட்டும். மாப்பிள்ளை கிட்ட எல்லா உண்மையும் சொல்லிடு" என்றாள் அருந்ததி. ",கண்டிப்பாக அண்ணி அதுக்கு தானே போறேன். இந்த கல்யாணத்துல துளிக்கூட விருப்பம் இல்லை நான் இன்னொருத்தர காதலிக்கிறேனு சொல்லத்தான் போறேன்" என்றாள் சற்று அழுத்தமாக. "எல்லாம் நல்லபடியா நடக்கும் நீ கிளம்பு " என்று அனுப்பி வைத்தாள். அவளும் அவன் வரச்சொன்ன கோவிலை வந்தடைந்தாள். வீட்டில் வீராப்பாக அருந்ததியிடம் சொல்லிவிட்டு வந்தாலும் இங்கு நேரில் அவனை பார்த்து எப்படி சொல்லப்போறோம் என்று டென்ஷன் தொற்றிக்கொண்டது. சன்னதியை வணங்கிவிட்டு வேப்பமரம் நிழலில் நின்றிருந்தாள். சற்று நேரத்தில் அவன் அங்கு வந்தான். அவன் அவள் முதுகு பின்னாடி நின்றவாரு இருக்க...அவனது நிழல் தென்படவே.. வந்துவிட்டான் என்று உணர்ந்த காயத்ரி... "சாரிங்க ,இதை நீங்க எப்படி எடுத்துக்கப்போறிங்க தெரியல ஆனால் நான் இதை சொல்லியே ஆகணும். எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை" என்று வெடுக்கென்று விஷயத்தை போட்டு உடைத்தாள். "என்னை உனக்கு பிடிக்காதா காயூ" என்றான் அவன். இந்த குரல் ப்ரவினோட குரல் என்று யூகித்தவள் திரும்பி நேருக்கு நேராக முகத்தை நோக்கினாள். ஆச்சரியத்தில் மிளிர்ந்தது அவளுடைய கண்கள். "நீ எப்படி ப்ரவின் இங்கே" என்றதும். "ஏய் லூசு உன்னை பார்க்க வந்த மாப்பிள்ளை நான் தான். பெண் பார்க்க வந்தது என் பேமிலி தான். தரகர் உன் ஜாதகத்தையும் போட்டோவையும் குடுத்தார். இதெல்லாம் கனவா நிஜமானு கூட நம்பமுடியவில்லை. ஆனால் நான் எதிர்பார்க்காத நேரத்தில் இதெல்லாம் நடந்தது. நம்ப காதலை சொல்ல கூட தேவையில்லை வீட்ல...அவங்கள பொறுத்தவரை இது அரேஞ்சுடு மேரேஜ் தான்." என்றான். "அப்படினா இதெல்லாம் தற்செயலாக நடந்துச்சா நம்பவே முடியல. சரி அதுபோகட்டும் நம்ம காதலை பத்தி சொல்லாமலே கல்யாணம் நடக்கட்டும் அப்டிங்கிறியா?" என்க "ஆமாம். தேவைப்படுறப்ப சொன்னால் போதும். இப்போதைக்கு இந்த கல்யாணத்துல பரிபூரண சம்மதம் னு வீட்ல சொல்லிடு" என்று அவன் சொல்வதற்கும் கோவில் மணி அடிப்பதற்கும் சரியாக இருந்தது. "அப்போ நான் கிளம்புறேன்" என்று விடைப்பெற்று கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள்... அவளது மலர்ந்த முகத்தினை கண்ட அருந்ததியோ. "என்ன நாத்தனாரே மாப்பிள்ளை கிட்ட கல்யாணத்துல விருப்பம் இல்லைனு சொல்லியாச்சா?"என்றதும். "இல்லையே கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டேன்" என்றாள் வெட்கப்பட்டுக்கொண்டு. "ம்ம்ம் நீ என்ன சொல்ற" ? "அதெல்லாம் அப்றம் சொல்றேன்" என்றபடி நகர்ந்தாள். வீட்டில் கல்யாணபேச்சு அவ்வப்போது அறங்கேறிக்கொண்டிருந்தது. எப்படி செய்யலாம் எவ்வளவு செலவு செய்யலாம் என்ற பட்ஜெட் எல்லாம் போடத்துவங்கினர். இதற்கிடையில் நம் கதிர் எடுக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. நல்ல வெற்றியை காணும் எனக்கதிர் நம்பினான். தயாரிப்பாளர் அவனுக்கு கிடைக்க வேண்டிய சன்மானத்தை கொடுத்தார். படம் வெற்றி வாகையை சூடியபின்பு மீதி பணத்தையும் தருவதாக கூறினார்.சொலையாக ஐந்து லட்சம். இதுவரை மொத்தமாக கதிர் இவ்வளவு பெரிய தொகையை கண்டதில்லை... இந்த பணத்தை முன்பணமாக வைத்து அப்பார்ட்மண்ட் ப்ளாட் வீடு வாங்கலாம் என்ற யோசனை வந்தது. இதையடுத்து அடுதடுத்த படத்திலும் கமிட் ஆகும் வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அலைந்து திரிந்து ஒரு அடுக்குமாடிகுடியிருப்பு வீட்டினை விலைபேசி வாங்கினான். ஒரே ஒரு படுக்கையறை கொண்ட வீடு என்றாலும் அவனுக்கு அந்த அமைப்பு பிடித்துபோனது. நானும் அருந்ததியும் மட்டும் தான் இருக்கப்போறோம் எனவே இது போதுமானது என்று தோன்றியது... இந்த சந்தோஷமான விஷயத்தை அவளிடம் பகிர்ந்து கொள்ள நினைத்து அவளுக்கு போன் செய்து அந்த இடத்திற்கு வரும்படி கூறினான். "என்ன விஷயம் ஏன் இப்படி அவசரமாக கூப்பிடுறீங்க " என்றாள். "சொன்னாதான் வருவியா. சொல்லிட்டா சர்ப்ரைஸ் போய்டும். உடனே ஒரு ஆட்டோ பிடிச்சு நான் சொல்ற இடத்துக்கு வா" என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான். இவளும் யாரிடமும் சொல்லாமல் அவன் சொன்ன விலாசத்தை தேடி வந்தடைந்தாள். உள்ளே நுழையும் போதே ஒரு பெரிய கேட்..நுழைந்ததும் வலதுபுரம் குழந்தைகள் விளையாட ஊஞ்சல் சறுக்குமரம் எல்லாம் இருந்தது வலது புரம் ப்ளாக் ப்ளாக்காக வீடுகள் இருந்தன... ஏ ப்ளாக் படியில் ஏறினாள். அவள் ஏறி வந்ததும் கையில் சாவியை வைத்துக்கொண்டு புன்னகையித்தபடி "இந்தாங்க மேடம் வீட்டு சாவி" என்றான் கதிர். "என்னங்க இதெல்லாம் திடிரென வீடெல்லாம்" என்றாள் குழம்பியபடி. "முதல்ல நீ உள்ளே போய் பாரு. வீடு உனக்கு ரொம்ப பிடிக்கும்" என்று அவளை அழைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான். விஸ்தாரமான முற்றத்தை கண்டதும் புது வீட்டின் வாசத்தை நுகர்ந்தவாறே... "ப்பா...ஹால் செம்மை பெருசா இருக்கு" என்றாள் அருந்ததி.. "ஆமாம் அருந்தி, இதோ இங்கே சோபா போட்டுக்கலாம் அதோ அங்க சுவற்றில் எல்.யி.டி டிவி ஃபிக்ஸ் பண்ணிக்கலாம்" என்றெல்லாம் அவளிடம் விளக்கியவாறு படுக்கையறை இருக்கும் திசையை காட்டினான். "படுக்கையறை ஒட்டினாப்புல பால்கனி எல்லாம் இருக்கு. நல்லாருக்கு. வாஷிங் மெஷின் ஃபிக்ஸ் பண்ற போர்ஷன் இங்கேயே இருக்கு" என்று வியந்தாள் அருந்ததி. "ஆமாம் அருந்ததி, வா சமையலறை காட்டுறேன்" என்று சமையலறையை காட்டினான். "வாவ் மாடுலர் கிட்சனா" என்று அசந்துப்போனாள் அருந்ததி. "சின்னதாக இருந்தாலும் சகல வசதியோட நல்லாருக்குல அருந்ததி" என்றதும். "ஆமாங்க, ஆனால் இப்படி நமக்குனு தனியா வீடு வாங்கின விஷயம் பெரியவங்க கேள்விபட்டா என்ன நினைப்பாங்களோ பயமா இருக்குங்க" என்று கவலை கொண்டவளை ஆசுவாசப்படுத்தி.. "அதெல்லாம் நான் பாத்துக்குறேன். நீ கவலையை விடு. சரி அதுபோகட்டும் பூஜையறைக்கு ரெடிமேட் வாங்கி மாட்டிக்கலாமா ? கிட்சன் பக்கத்தில்"என்று வினவியதும் அவளுடைய கவனம் மாறியது. "ஆமாங்க அப்டியே பண்ணிக்கலாம்" என்று ஆமோதித்துவிட்டு. இருவரும் சாவியை பில்டரிடம் ஒப்படைத்துவிட்டு. ரெஜிஸ்ட்ரேஷன் தேதியன்று வருவதாக கூறிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டனர். "ஏங்க ரெஜிஸ்ட்ரேஷனுக்கே ஒரு லட்சம் ஆகிடும்ல" என்று கேட்டுக்கொண்டே வந்தாள். "கண்டிப்பாக ஆகும். முன்பணமாக இப்போதைக்கு ஒருலட்சம் குடுத்து ப்ளாக் பண்ணி வச்சிருக்கேன் அப்றம் ரெஜிஸ்ட்ரேஷன் நடக்குறப்ப ஒரு நாலு லட்சம்... மீதி லோன் அப்ரூவல் ஆனவுடன் தரணும்" என்றவாறு விளக்கிக்கொண்டு வந்தான். ஒருவழியாக இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். ஆனால் இந்த விஷயத்தை எப்படி வீட்டில் ஆரம்பிக்க போகிறார்கள் அதற்கு குடும்பத்தினர் என்ன விவாதிக்க போகிறார்கள் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம். </blockquote><br> Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா