மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumContest: Ungalil enaku pidithathu Contestஆத்தரின் படைப்பில் எனக்கு பிடித்த …Post ReplyPost Reply: ஆத்தரின் படைப்பில் எனக்கு பிடித்தது <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-default" href="#">jeyalakshmigomathi</a> on January 5, 2020, 8:41 AM</div>ஹாய்... கதை படிக்கும் போது ஹீரோ, ஹரோயினைத் தாண்டி ஒரு கதாப்பாத்திரம் (supportive character) நம்ம மனதில், இடம் பிடிக்குதுனா? அது சாதாரணமான விஷயம் இல்ல.. மொத்த கதைக்கும் ஆத்தரோட உழைப்பு இருந்தாலும் ஒரு சில கதாபாத்திரங்களை ஹீரோவத்தாண்டி ஹீரோயினைத்தாண்டி வாசகர்களை ஈர்க்க வைக்கிறது. அதுவும் வில்லனையும் தாண்டினா அது மிகப் பெரிய சவால்.. அந்த சவால்ல ஜெயிச்சுடீங்க மோனி. இந்த கதையில இரு ஹீரோக்கள் ஹீரோயின்கள்.. ஆனா அவங்கள விட இவ(வா)னைத்தான் எனக்கு பிடித்தது. யாருனு தெரிஞ்சுதா? Yess... U r correct... (ஆத்தர் மைண்ட் வாய்ஸ் இவ(வா)னா.. கதை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை இவ(வா)ன திட்டிடுதான இருந்தா?) i catch ur mind voice moni.. கதையின் தொடக்கத்தில் ஹீரோ, இல்லனா ஹீரோயின் அறிமுகத்தோட ஆரம்பிக்கும்.. ஆனா நம்ம மோனி என் வழி தனி வழினு.. இவ(வா)னை தான் அறிமுகப்படுத்தினாங்க... அட இந்த வெள்ளக்கார தொரை ஹீரோனு நனைச்சா.. பயபுள்ள பலே கில்லாடி நம்ம நாட்டு கோயில்களைப் பார்க்க வந்தவன் (அப்படினு தான் ஆரம்பத்தில நினைச்சோம்) friend வீட்டுல தங்கி அவன் தங்கச்சிக்கே ரூட் விட்டான் அதுவும் கல்யாணம் ஆனா பொண்ணுக்கு.. இங்கதாங்க.. வெள்ள கலர பார்த்து அவன் மேலே மயங்கி போயிருந்த என் மயக்கம் தெளிஞ்சு இவ(வா)னை திட்ட ஆரம்பிச்சேன்.. அடேய் லெகான் கோழி உனக்கு நாட்டுகோழி கேட்க்குதா? அது ஏற்கனைவே எங்க ஊர் சேவல் அடைகாத்த பெட்ட கோழி டானு.. எவ்வளவோ சொன்னேன்.. கேட்க்கலயே.. இவ(வா)ன் என்னடானா ஆத்தர்ஜி சப்போர்ட் இருக்குனு ரொம்ப ஆடினான்.. Bike chasing பண்ணுறது என்ன? அதேயே சாக்கா வச்சி, அவளையே இவ(வா)னை கட்டிபிடிக்க வைக்கிறது என்ன? னு என்ன? என்ன? னு.. ஹீரோயிசம் காட்டி எங்களை தலையால தண்ணி குடிக்க வச்சான்... தனி த்ரெட் போட்டு அவ்வுளவு திட்டு.. அப்படியும் இவ(வா)ன் அடங்குனானா? இல்லயே... ஆத்தர் ஜி சப்போர்ட்ல குதி குதினு குதிச்சான்.. நாங்களும் சொன்னோம் அடேய் ஆத்தர நம்பி ஆடதாடானு.. கொடுக்கிற மாதிரி கொடுத்து.. பிடிங்கிருவங்கனு.. கேட்க்கல.. அவன் நம்ம பேச்சை கேட்காததுக்கு கிடைச்ச பல்ப பின்னாடி சொல்லுறேன்.. இப்படியே எங்கள்ட திட்டு வாங்கிட்டு இருந்தவன ஊர் சுத்த வந்த ஜாங்கிரினு நனைச்சா? இறக்கினாங்க பாரு (இல்ல இல்ல இந்த இடத்தில உசத்தி தான் சரியா வரும் சோ உயர்த்தினாங்க பாரு) இ(வா)னை வெள்ள தோலு அவன் நாட்டு போலீஸ்னு.. அட நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்.. கதையின் மையக் கருவாய் இ(வா)னே.. அவனது நேர்மை முயற்சி நமது நாட்டு பொக்கிஷம் நமது கையில்னு ரசிக்க வச்சான்.. கதையோட ஒரு ஒரு முக்கிய நிகழ்வுலயும் முக்கியமானவனா இருந்தான்.. கைதட்டும் வாங்கினான்.. ஹீரோ ரேஞ்ச்க்கு பறந்தான் லெகான் கோழி இங்க தான் இவ(வா)னுக்கு முக்கியமான ட்விஸ்ட் ஆத்தர நம்பினதுக்கு அவனுக்கு கிடைச்ச பல்பு.. ஹா ஹா.. நாடு விட்டு நாடு வந்த லெகான் கோழி வந்த வேலைய முடிச்சுட்டு கையோட நாட்டு கோழியையும் கூட்டிட்டு போயிரலாம்னு நினைச்சா.. ஹீ ஹீ.. நாட்டு கோழிய கை பிடிச்சு கொடுக்க வேண்டிய ஆத்தர் வெறும் கையோட ஏர்போர்ட்ல அவனுக்கு டாட்டா காட்டுது... நாட்டு கோழியோட பறந்து (ஆத்தர்ஜி சப்போர்ட்ல) போகலாம்னு பார்த்துச்சு.. நம்ம ஆத்தர்ஜி விடுவாங்களா.. நீ ஸ்டேட்ஸ் இருந்தாலும் உன் ஸ்டேடஸ் சிங்கிள் தான் வந்த மாதிரியே போடா வெள்ளைகார துரையேனு தொரத்திடாங்க.. இந்த இடத்தில நியாயபடி நாங்க சந்தோஷப்படும் அதான் இல்ல.. பிடிக்கல பிடிக்கல இவ(வா)ன எனக்கு பிடிக்கலனு சுத்திட்டு இருந்த எங்கள feelingla விட்டுடான்.. Singleahvey போறானேனு.. மறுபடியும் நம்ம நாட்டுக்கு நண்பனோட கல்யாணத்துக்கு வந்தான்.. ஆத்தர்ஜிய முறைச்சுட்டு திரிஞ்சான் ஆத்தர்ஜியும் இவ(வா)ன்ட உனக்கு எங்க ஊர் நாட்டு கோழி நானே பார்த்து தாரேன்.. கொஞ்சம் பொறுத்தக்க ராசானு சொன்னாங்க அத நம்பி பறந்து போயிட்டான்.. அவன் போயி ஒரு வருஷம் ஆகுது.. இவ(வா)ன் சார்பா நான் கேட்க்கிறேன் லெக்கான் கோழிக்கான தனிக்கதை எப்போது? ஆத்தர்ஜி.. (குறிப்பு: கதை பெயரையோ கதை மாந்தர் பெயரையோ சொல்லவில்லை அட யாருக்கு எழுதினனோ அந்த கதாபாத்திரம் பெயரையும் சொல்லல.. ஆனா யாருனு உங்களுக்கு புரிஞ்சிருக்கும் இந்த ஐடியா வர காரணம் காவ்யா புள்ளதான் ஒரு முயற்சி சரியா பண்ணிருக்கனானு சொல்லுங்க)</blockquote><br> Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா