மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumTamil kavidhaigal: Monisha kavidhaigalசமையலறை சிறைPost ReplyPost Reply: சமையலறை சிறை <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-admin" href="#">monisha</a> on October 22, 2019, 4:10 PM</div>கணவனின் கை பற்றிய பின்புதான் கறண்டியையும் பிடித்து கொண்டேன்.. காலங்கள் கடந்துவிட்ட பின்பும் அவை எனக்கு கத்திமுனையாய் காட்சியளிக்கின்றன... ருசித்து பார்த்து சமைத்த எனக்கு புசித்து பார்க்க பற்றுவதேயில்லை.. போதும் என்று பரிமாறியபின்பு என் மனம் குளிர்கிறது எனினும் என் வயிறு வைது கொண்டே இருக்கிறதே கணவனுக்கு காரைக் குழம்பும் மகன்களுக்கு மாங்காய் பச்சிடியும் பார்த்து பார்த்து செய்துவிட்டு எனக்கு பிடித்ததை செய்ய எண்ணும் போது சலித்து போகிறதே.. மதிய வேலையில் களைப்பில் படுத்தாலும் மாலையில் என்ன செய்வது என மனம் விழித்திருக்கிறதே அடுப்பங்கறை அனலில் என் ஆசைகள் மொத்தமாய் கருகிப் போனதே.. சமையலறைக்குள் என் சகலமும் தொலைந்துபோனதே.. பல பெண்களுக்கு இன்னமும் சமையலறை சிறையில் ஆயுட்கால தண்டனை..</blockquote><br> Cancel “மதிப்புகுரியவள்” புத்தம் புது நாவல்… புது களம்… வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா