You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

சமையலறை சிறை

Quote

கணவனின் கை பற்றிய பின்புதான்
கறண்டியையும் பிடித்து கொண்டேன்..

காலங்கள் கடந்துவிட்ட பின்பும்
அவை எனக்கு கத்திமுனையாய் காட்சியளிக்கின்றன...

ருசித்து பார்த்து சமைத்த எனக்கு
புசித்து பார்க்க பற்றுவதேயில்லை..

போதும் என்று பரிமாறியபின்பு
என் மனம் குளிர்கிறது
எனினும்
என் வயிறு வைது கொண்டே இருக்கிறதே

கணவனுக்கு காரைக் குழம்பும்
மகன்களுக்கு மாங்காய் பச்சிடியும்
பார்த்து பார்த்து செய்துவிட்டு
எனக்கு பிடித்ததை செய்ய
எண்ணும் போது சலித்து போகிறதே..

மதிய வேலையில் களைப்பில் படுத்தாலும்
மாலையில் என்ன செய்வது என மனம்
விழித்திருக்கிறதே

அடுப்பங்கறை அனலில் என் ஆசைகள்
மொத்தமாய் கருகிப் போனதே..

சமையலறைக்குள் என் சகலமும் தொலைந்துபோனதே..

பல பெண்களுக்கு இன்னமும் சமையலறை சிறையில்
ஆயுட்கால தண்டனை..

Shamili Selvaraj, Janani and 3 other users have reacted to this post.
Shamili SelvarajJananiSaDibhagyasivakumarakila kannan
Quote

ஹாஹா....

monisha has reacted to this post.
monisha
Quote

உண்மை உண்மை உண்மை உண்மை . எங்கள் அம்மா அப்படித்தானே இருக்கிறார்கள் இன்றைய நாள் வரை ..

Quote

Nice kavithai moni...  First time unga kavithai padikkaren...

Nijamave pengal samayalarai vittu veliyila vandhurundhalum samikira vithamum, atharkana yosanaikalum marave illa...  Innum hus ku pudikkum children ku pudikkumnu athe ninaippula than irukom

எல்லாம் நன்மைக்கே.... 🙂🙂😇

You cannot copy content