மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumTamil katooraigal: Vithai panthuVithai panthu-4Post ReplyPost Reply: Vithai panthu-4

Quote from monisha on January 9, 2020, 1:31 PM

4

மாற்றத்திற்கான விதை
EVERY WO(MAN) IS THE ARCHITECT OF HIS OWN FORTUNE  இந்த தடவையும் ஒரு கதை சொல்வோமா?. ஆனால் ரொம்பவும் சுவாரிசயமான சாதனை கதை என்றெல்லாம் சொல்ல முடியாது. அது ஒரு மாற்றத்திற்கான (வி)கதை.  ஒரு புத்தகம் எப்படி ஒரு மாற்றத்தை விளைவிக்கும் என்பதற்கான கதை. அதேநேரம் சீரியஸான கதையெல்லாம் இல்லை. சுமாரான கொஞ்சம் ஜாலியான கதை. அவ்வளவுதான்.  என்ன இத்தனை கதை சொல்றா? ஆனா கதையை மட்டும் சொல்ல மாற்றாளே!  உங்க மைன்ட் வாய்ஸ் நான் கேட்ச் பண்ணிட்டேன். ம்ம்ம் கதையை சொல்வோம்.  ஆனால் கதையை தொடங்கவதற்கு முன்பாக…  சமீபாமாக எனக்கு ஏற்பட்ட ஒரு ஆச்சரிய அனுபவம் பற்றி சொல்கிறேன். எனக்கு மிக நெருக்கமான தோழி என்று சொல்வதைவிட மரியாதைக்குரிய ஒரு எழுத்தாளினி தோழியிடம் பேசியில் உரையாடி கொண்டிருந்த போது,  “நீங்க ரொம்ப நல்லா எழுதுறீங்க… உங்க கதைகளெல்லாம் புத்தகமாக வரணும்” என்று நான் சொல்ல, “இல்ல மோனி… எனக்கு புத்தகமாக பிரிண்ட் செய்வதில் பெரிசாக உடன்பாடில்லை” என்பது போல சொன்னார்கள்.  அதற்கு அவர் சொன்ன காரணம்தான் மிக வியப்பு! மரங்களை நம் சுயநலத்திற்காக வெட்டுவதையும் வெட்டபடுவதையும் அவர் விரும்பவில்லை. சில நொடிகள் ஆச்சரியத்தில் என்ன பேசுவது என்றே எனக்கு புரியவில்லை.  அந்த உரையாடல்கள் முடிந்த பிறகும் நான் அவர் சொன்னது பற்றியே யோசித்து கொண்டிருந்தேன்.  மரங்களை காப்போம்! இயற்கையை காப்போம்!  அப்படின்னு இத்தனை நாளாக மரத்தை வெட்டிதான் சொல்லிட்டு இருந்தோமா? இப்படி ஒரு கோணத்தில் நான் ஏன் யோசிக்கவே இல்லை என்று தோன்றியது.  இருப்பினும் புத்தகங்கள் என்றுமே இயற்கைக்கும் மனிதனுக்கும் தீங்கு விளைவிக்கும் என்று என்னால் நினைக்க முடியவில்லை. அது ஒரு ஆக்கசக்தி. பெரிய பெரிய தலைவர்களை, விஞ்ஞானிகளை, கவிஞர்களை, புரட்சியாளர்களை இந்த பூமிக்கு தந்தது புத்தகம் என்ற அந்த ஆக்கசக்திதான் என்பதில் மாற்று கருத்தே இல்லை.  நம் எல்லோருக்கும் ஆதிகாலத்திலிருந்து சொல்லப்பட்ட ஒரு விஷயம். ‘நிறைய நல்லவர்கள் இருக்கிற இடத்தில் மழை பொழியுமாம்’ கேலியாக விளையாட்டாக கூட இந்த வாக்கியத்தை நாம் எல்லோரும் நம் நண்பர்களிடம் பயன்படுத்தி இருப்போம். எந்த அறிவியல் ஆதாரமுமில்லாவிட்டாலும் அந்த வாக்கியத்தை நம் மனம் நம்பவே செய்கிறது.  அது ஒரு ஆழமான ஆக்கபூரவ்மான நம்பிக்கை. ஆக்கப்பூரவ்மான சிந்தனைகள் அதிகம் இருக்கும் இடத்தில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை. அதே போல இங்கே இன்னொரு விஷயத்தை பதிவு செய்தே ஆக வேண்டும்.  நிறைய புதுமையான நற்சிந்தனைகள் கொண்ட எழுத்தாளர்கள் பலர் இருக்குமிடத்தில் எதை பற்றியுமே யோசிக்காமல் தன்னுடைய புகழ் பணம் என்று சமுகத்தை ஒட்டுமொத்தமாக சீரழிக்க புற்றீசல்கள் போல எழுத்தாளர்கள் என்ற பெயர்களில் இங்கே பலரும் உருவாகி இருக்கிறார்கள். உருவாக்கப்படுகிறார்கள். இதனால் எண்ணற்ற வகையில் . தரம்தாழ்ந்த படைப்புகள் புத்தகங்களாக பதிப்பிக்கப்படுகின்றன என்பதும் மறுக்க இயலாத ஒரு கசப்பான உண்மைதான்! இருப்பினும் அதனால் எல்லாம் புத்தகத்தின் தரமும் சிறப்பும் குறைந்துவிடாது. கடலில் சாக்கடைகள் கலந்தாலும் சமுத்திரம் சமுத்திரம்தான். அது அந்த சாக்கடைகளை தம்மகத்தே உள்ளிழுத்து கொண்டு தூய்மையான நீரை பூமிக்கு மழையாக வழங்குகிறது. பூமியை செழிப்படைய செய்கிறது. அது போலதான் நல்ல புத்தகங்கள் மனித மனங்களில் மாற்றங்களை உருவாக்கி இந்த சமுகத்தை செழிப்படைய செய்கிறது. அதேநேரம் ஒரு அளவுக்கு மேல் சாக்கடைகள் கலந்து கொண்டே போனால் சமுத்திரமும் பாழாகி போகும். இந்த சமுதாயமும் பாழாகி போகும் என்பதை சொல்லி கொண்டு…  நம்ம ஆரம்பத்தில் சொன்னது போல கதைக்குள் போகலாம்.  கதை என்றதும் கற்பனை கதையென்று எல்லாம் எண்ண வேண்டாம். இது ஒரு உண்மை கதை. என்னோட உண்மை கதை.  ‘ஆட்டோ பயோ எழுதுற அளவுக்கு நீ பெரிய அப்பாடக்கரான்னு எல்லாம் கேட்காதீங்க’ நிச்சயாக இல்லை. நான் அவ்வளவு பெரிய ஆளும் இல்லை. இது அவ்வளவு பெரிய கதையும் இல்லை.  ‘பின்ன எதுக்கு இதையெல்லாம் என்கிட்ட சொல்றன்னு கேட்குறீங்களா?’  ஏன்னா? என் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தின் விதையாக… என் முன்னேறத்தின் முதல் படியாக ஒரு புத்தகம் இருந்தது. எனக்கு இளம்வயதிலிருந்தே புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டு. கணக்கு வழக்கில்லாமல் நிறைய வகையறாக்களில் நிறைய நிறைய படித்து என் தேடலை நான் அதன் மூலமாக கொஞ்ச கொஞ்சமாக விரிவாக்கி கொண்ட போதும் ஒரே ஒரு புத்தகம் என் இலட்சியத்தை நான் எப்படி அடைவது என்ற கேள்விக்கும் விடை(தை)யாக எனக்கு கிட்டியது அந்த புத்தகம். அது என்ன புத்தகம் என்று கதை முடிவில் சொல்கிறேன்.  ஓகே… எங்கிருந்து நம்ம கதையை தொடங்குகிறது…  ம்ம்ம் நான் ஆறாவது படிக்கும்போதுதான் முதன்முதலாக நானே யோசிச்சு ஒரு மொக்கை கவிதை எழுதினேன். கவிதையோ கிறுக்கல்களோ? அங்கிருந்துதான் எனக்கு எழுத்தின் மீதான ஆர்வம் உண்டானது. இப்படியெல்லாம் கிறுக்குகிறதால நான் மேதாவித்தனமா படிப்பேன்னு எல்லாம் நினைக்க வேண்டாம்.  முதல் மதிப்பெண்ணும் எடுக்க மாட்டோம். கடைசி மதிப்பெண்ணும் எடுக்க மாட்டோம். நடுவாப்ல எடுத்துட்டு போயிடுவோம்.  அதேநேரம் என்னை யாரச்சும் demotivate பண்ணி பேசுனாலோ குறைவா பேசுனாலோ எனக்கு பிடிக்காது. அப்படி என்னோட கணக்கு ஆசிரியர் உமா மிஸ்  'உங்க அக்கா சென்டம் எடுக்குற நீ என்னடான்னா செவன்டி சிக்சிடிதான் எடுக்கிறேன்னு குத்தி காட்டினாங்க’ எனக்கு வந்துது பாருங்க கோபம். அடுத்த தேர்வில அவங்க கேட்ட சென்டம் எடுத்து காண்பிச்சிட்டேன். ஆனா அதுலதான் ஒரு ட்விஸ்ட்! நான் சென்டம் மார்க்குக்கு எழுதவே இல்லயே.  அதற்கு வாய்ய்பே இல்ல. ஏன்னா நான் ஒரு இரண்டு மார்க் கேள்வியை எழுதவே இல்லை. அது எழுதுன எனக்கு தெரியாதா?. பின்ன எப்படி சென்டம்? யோசிச்சு பேப்பரை செக் பண்ணா நைண்டி எய்ட்தான் வந்துச்சு.  இந்த நேரத்தில் நம்ம நேர்மை எருமை கருமைன்னு எல்லாம் யோசிக்கல. மிஸ்கிட்ட நல்ல பேரு வாங்க இது ஒரு நல்ல சான்ஸ்னு யோசிச்சு அவங்ககிட்ட சொன்னேன். அங்கேதான் அடுத்த ட்விஸ்ட். மிஸ் கவுன்ட் பண்ணி பார்த்துட்டு சரி பரவாயில்ல இந்த இரண்டு மார்க் உன் முயற்சிக்கும் நேர்மைக்கான பரிசு அப்படின்னு சொன்னாங்க,  முதல் முறையாக முயற்சிக்கான மதிப்பு என்னன்னு நான் உணர்ந்த நொடி அது. கஷ்டப்பட்டு முயற்சி செஞ்சா அதுக்கான மதிப்பையும் சிறப்பையும் நம்ம நேர்மையாகவே பெற முடியும். குறுக்கு வழியெல்லாம் தேவையே இல்லை.  இப்படிதான் வாழ்க்கை அடிக்காம உதைக்காம எனக்கு நிறையவே கற்று தந்துச்சு. தோளில் தட்டி கொடுத்து!  இந்த மாதிரி நிறைய அனுபவங்கள் யோசனைகள் என்னை நிறைய கிறுக்க வைச்சுது. அந்த கிறுக்கல்களின் உச்சபட்சமா ஒன்பதாவது படிக்கும் போது என் தமிழ் ஆசிரியருக்கு பக்கம் பக்கமா கவிதை என்கிற பெயரில் நிறைய கிறுக்கி கொடுத்தேன். ஏன்னா எனக்கு அவரை அவ்வளவு பிடிக்கும். இத்தனைக்கும் அந்த தமிழ் ஆசிரியர் ஒரே ஒரு வருடம்தான் என் வாழ்க்கை பயணத்தில என்னுடன் வந்திருந்தார்.  ஊடல் கதையில் ஒரு வரி நான் எழுதியிருப்பேன். ‘ஒரே நாளில் மாற்றங்கள் நடந்துவிடுவதில்லை. ஆனால் அது தொடங்க ஒரு கணம் போதும்.’ அப்படி நமக்குள் மாற்றங்கள் நிகழத்த இந்த மாதிரி மனிதர்கள் ரொம்ப வருடங்கள் நம்மோடு இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஒரு சில மணிநேரங்கள் கூட போதுமானது.  அப்படிதான் தமிழ் என்பது வெறும் மொழி அல்ல. ஒரு வாழ்வியல் அப்படின்னு எனக்கு புரிய வைத்தார். தமிழ் எனக்கு எப்பவுமே பிடிக்கும். ஆனால் அந்த பிடித்தம் மரியாதையாகவும் மதிப்பாகவும் நான் தமிழன் என்ற உணர்வில் தலை கால் புரியாத கரவ்மாகவும் மாறியிருந்தது. அந்த ஒரு வருட காலம் முடிந்த பின் நான் வேறு பள்ளிக்கு மாறிவிட்டேன். ஆனால் அவர் விதைத்த விதை எனக்குள்ளாக ஆழமாக இறங்கியிருந்தது. அதுவும் அவருக்கு நான் ஆசிரியர் தினம் அன்று கொடுத்த கிறுக்கல்களை பார்த்து பாராட்டிய அதேநேரம் எதுகை மோனையில் எழுதிட்டா மட்டும் அது கவிதை இல்லைன்னு சொன்னாரு.  அது மட்டுமே இல்லை. திடீரென்று ஒரு நாள் என்னை கூப்பிட்டு ஒரு பேப்பரை தந்து ஒரு அறைக்குள் அனுப்பிவிட்டாரு. அது ஒரு கவிதை போட்டிக்கான அறை.  அப்போது அங்கே கொடுக்கும் தலைப்பை வைத்து கவிதை எழுதணுமாம்.  மனுஷன் இப்படி சிக்க வைச்சுட்டாரேன்னு தோணுச்சு. தலைப்பு- பாரதி கண்ட புதுமை பெண். வாயில் வந்த ஏதோ எனக்கு தெரிஞ்சதை எழுதி வைச்சுட்டு வந்துட்டேன், அப்புறம் அந்த போட்டி எழுதியதையே நான் மறந்து போயிட்டேன்.  ஒரு நாள் அந்த போட்டிக்கு பரிசு அறிவிச்சாங்களாம். இது நான் செவி வாழியாக கேட்ட செய்தி. ஏன்னா அன்று பள்ளிக்கு போக முடியாத சூழ்நிலை. பூப்படைந்ததால்! அந்த வருடத்திற்கான Full attendance என் பெயரை செலெக்ட் பண்ணி இருந்தாங்க. அதுவும் போச்சு… இதுவும் போச்சு. மேடை ஏறி வாங்க rehersal எல்லாம் பார்த்து அது நடக்காமலே போச்சு! ஆனால் அதுவும் ஒரு அனுபவமாக என் வாழ்க்கையில் பதிவானது. அதற்கு பின் என் கல்வி பயணம் வேறு பள்ளியில் தொடர்ந்திருந்தது. என்னோட தமிழ் ஆசிரயரோட தொடர்பு விட்டு போனாலும் அவர் சொல்லி கொடுத்த எதுவும் என் சிந்தனையை விட்டு போகவில்லை. பின் எப்படி போகும். அவர் விதைத்த விதை அப்படி? என்னுடைய முதல் புத்தகம் வெளியான போது அவரிடம் சொல்லி சந்தோஷப்பட ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனா எப்படி? அவர் எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று எனக்கு தெரியாதே. சரியாக பதினைந்து வருடத்திற்கு பிறகு அவர் தொடர்பு எனக்கு திரும்பவும் கிடைச்சது. அது எப்படி கிடைச்சதுன்னு சொன்னா நீங்க எல்லாம் ஆச்சரியப்படுவீங்க.   என்னுடைய வாடி என் தமிழச்சி கதையை படித்து கொண்டிருந்த வாசகி என்னை பாராட்டி உள்பெட்டியில் தகவல் அனுப்பி இருந்தாங்க. நானும் பதிலளித்தேன். அந்த உரையாடலின் போதுதான் அவர் நான் படித்த பள்ளியில் நான் படித்த அதே வருடத்தில் ஆசிரியராக பணிபுரிந்தது தெரியவந்தது.  எங்க ஐயாவோட பெயரை சொல்லி அவரை உங்களுக்கு தெரியுமான்னு கேட்டேன்.  ஒ! நல்லாவே தெரியுமே அவர் எனக்கு நண்பர்னு சொன்னாங்க  இந்த வாழ்க்கை அமைக்கிற காட்சி அமைப்புகள் நம்ம எழுதுகிற கதைகளை விட மிகுந்த சுவாரசியமானது. என்ன ஒரு டிசைன்! என் வாசகர் மூலமாக அவரின் அறிமுகம் எனக்கு மீண்டுமே கிடைச்சது. அவரே எனக்கு தொடர்பு கொண்டு பேசினார். Best moment in my life. இப்படி நிறைய ஆச்சரியங்களும் அதற்கு பின்புலத்தில் நிறைய அனுபவங்களும் எனக்காக காத்திருந்தன.  என் தமிழ் ஐயாவோட அறிவுரையால் பள்ளி காலத்தில் என் கிறுக்கல்களும் சிந்தனைகளும் புது பரிமாணத்தை அடைந்தது. நிறைய எழுதுவேன். எழுதுனதும் தூக்கி போட்டுடுவேன். அப்படி ஒரு ஆகசிறந்த நல்ல பழக்கம் எனக்கு. தூக்கி போடாம தப்பிச்ச சில கவிதைகளில் ஒன்று. ‘கடவுள்’ அப்படிங்கிற கவிதை. அதை பள்ளி முதல்வர் கிட்ட காண்பிச்சிட்டா என்னோட அக்கா! என் எழுத்தை பார்த்து எனக்கு மதிப்பு இருக்கோ இல்லையோ? என் தங்கைக்கும் அக்காவுக்கும் இருந்துச்சு. அப்படி பெருமையா அவள் காட்ட போக பிரின்ஸி என்னை கூப்பிட்டு வைச்சு பாராட்டினாரு.  இந்த சின்ன வயசுல எப்படி நீ இப்படியெல்லாம் யோசிக்கிற அப்படின்னு கேட்டாரு.  ‘அவ்வளவு நல்ல்ல்ல்லாவா இருக்குன்னு’ எனக்கு நானே மனசுக்குள்ள் கவுண்டர் கொடுத்துக்கிட்டேன்.  அதெல்லாம் நம்பி நான் நிறைய எழுத ஆரம்பிச்ச போது எனக்கு எழுத்தின் மீதும் எழுத்தாளன் என்ற வாரத்தை மீதும் அபிரிமிதமான ஒரு மோகம். அதுவும் பொன்னியின் செல்வன் படிச்சு முடிச்ச பிறகு அந்த மோகம் தலை கால் புரியாம ஏறியிருந்தது.  ஆனாலும் paasion profession இந்த இரண்டு வார்த்தைக்குள்ள இருந்த வித்தியாசம் தெரியாம நிறைய குழும்பினேன். வழிக்காட்ட வேண்டியாங்களே நம்மை தெளிவா குழும்பினாங்க. சம்பாதிப்பதும் வேலைக்கு போவதும்தான் நம்ம வாழ்க்கையோட லட்சியம்னு கணிபொறி ஆசிரியர் விதைச்ச விதை என்னை தடம் மாறி போக வைச்சுது.  ட்விஸ்ட் இல்லன்னா வாழ்க்கை எப்படி சுவாரசியமா இருக்கும்.  அதுவும் நான் ஒரு பெரிய குழப்பவாதி! Archaeologist ஆகணும் lawyer ஆகணும் இப்படியெல்லாம் நிறைய வித்தியாசமா யோசிச்சேன். Lawyer entrance exam hall ticket வரைக்கும் வாங்கி வைச்சிருந்தேன். ஆனால் எழுத விட்டார்களா என்னைய? துரத்து துரத்துன்னு துரத்தி கொண்டு போய் bsc computer science சேர்த்துவிட்டாங்க. உண்மையில் என்னை துரத்துனது என் பேரன்ட்ஸ் இல்லை.  Education fair நடந்துச்சு. தெரியாம அதுக்கு போயிட்டேன்.!!! எதையெல்லாம் படித்தால் நம்ம எதிர்காலத்திற்கு நல்லது அப்படின்னு கன்வாஸ் பண்ணி நம்மை குழப்ப ஒரு கூட்டம் இருக்கும் இல்லையா? அதுதான்.  எப்பவுமே நம்ம எதிர்காலத்தை பற்றி அடுத்தவனிடம் அபிப்பிராயமே கேட்க கூடாது என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் நான்தான்.  Brain wash அப்படிங்கிற வாரத்தைக்கு அர்த்தம் அப்பத்தான் புரிந்தது. இதுதான் சரின்னு நம்ப வைக்கிறது இல்ல. இதுதான் உனக்கு சரின்னு நமக்கான முடிவை அவர்களே எடுப்பதுதான் பெரிய தந்திரம்.  உண்மையில் கல்வி நமக்கு சுயமாக சிந்திக்க கற்று கொடுக்கும். ஆனால் அந்த கல்வி என்ற கருவியின் மூலமாக வியாபாரம் செய்யும் ஒரு கூட்டம் நம்முடைய இலட்சியத்தை சிந்தனையை சுயத்தன்மையை அழிக்க கங்கணம் கட்டி கொண்டு காத்திருந்தது. அந்த வியாபார கூட்டத்திடம் சிக்கி கொண்டால் என்னை போல வாழ்க்கையே தடம் மாறி போக வாய்ப்பு உண்டு.  அனாலும் 12b பட கதை மாதிரி நான் விட்ட பஸ்சை திரும்ப பிடிச்சேன். அதுவும் விட்ட இடத்திலிருந்து! இருப்பினும் அதற்கு நான் காவு கொடுத்த வருடங்கள் கொஞ்சம் அதிகம். எத்தனை வருடங்கள் ஆன போதும் அந்த விதை மட்கி போகாம எனக்குள்ள உயிரோட்டமா இருந்ததுதான் ஆச்சரியம்.  அதற்கு பிறகு என்னோட கல்லூரி நாட்கள் கணிப்பொறியை கற்று கொடுத்ததைவிட நிறைய நிறைய புதுப்புது அனுபவங்களை கற்று கொடுத்தது.  நான் நம்ம வீரா மாதிரி எல்லாம் இல்லை. C++ java எல்லாம் எனக்கு நல்லாவே வரும். நல்லா வந்து என்ன செய்ய? என் ஆர்வமும் காதலும் அதன் மீது இல்லையே!  எனக்கு நாவல்கள் படிக்கிறது பொழுது போக்காக இல்லை. அது ஒரு போதை. அங்கேதான் என்னுடைய படிக்கும் ஆர்வம் கதை சொல்லும் ஆர்வமாக மாறியது. படிச்ச கதைகளை அப்படியே suspense maintain பண்ணி சொல்வது கூட ஒரு திறமை இல்லையா? அப்படிதான் கதை சொல்லியாக நான் மாறிய பின் எனக்குள் இருக்க படிக்கிற ஆர்வம் எழுதுற ஆர்வத்தை அதிகமாக தூண்டிவிட நானும் என் தோழி அப்சானாவும் நிறைய கவிதை போட்டிக்கு போவோம். எத்தனை கல்லூரியிலிருந்து வந்திருந்தாலும் முதல் பரிசு அவளுக்குதான் கிடைக்கும். அவள் வெற்றி பெறுவாள் நான் தோற்றுவிடுவேன். இது வழமையாக நடக்கும் காட்சிதான்!  என்னோட பிரச்சினையே எனக்கு நல்லா எழுத வரும். அந்த கவிதையை பத்து பேர் முன்னாடி படிக்க சொன்னா படிக்க வராது. திக்கி திணறும்.  ஆனால் அதுக்காக எல்லாம் துவண்டு போகாம நான் ஒவ்வொரு போட்டியிலும் போய் தோற்று போவேன்.  Failure is the stepping stone of success  அப்படின்னு நான் கற்று கொண்ட காலக்கட்டம் அது.  Failure மட்டும்தானே இருக்கு. எங்க successன்னு நீங்க கேட்கலாம். அதுவும் ஒரு நாள் கிடைச்சது. சென்னை துறைமுக தமிழ்சங்க கவிதை போட்டியில், ‘ஒசோனே இமைமூடு’ அப்படி ஒரு தலைப்பு கொடுத்து எழுத சொல்லி இருந்தாங்க. அதுல highlight ஆன விஷயம் என்னன்னா எழதி மட்டும் தந்தால் போதும். படிக்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அந்த போட்டி நடந்து முடிந்து ஒரு வருடமாகி நான் கல்லூரி காலங்களை முடித்து வந்த பின் ஒரு நாள் என் தோழி அப்சானா எனக்கு கால் பண்ணி உனக்கு இரண்டாவது பரிசு கிடைச்சிருக்குனு சொன்னா.  அதாவது முதல் பரிசு அவளுக்கு. இரண்டாம் பரிசு எனக்கு. பல கல்லூரிகள் கலந்து கொண்ட அந்த போட்டியில் முதல் இரண்டு பரிசுகள் எங்க கல்லூரிக்கு கிடைத்தது ஆச்சரியம்னா அந்த போட்டியில் பரிசு கிடைத்தது குறித்து எங்கள் கல்லூரி நிர்வாகம் எங்களிடம் சொல்லாமல் விட்டது அதிர்ச்சி. பரிசு கொடுத்து ஒரு வருடம் கழித்து அந்த ஷீல்ட் என் கைக்கு வந்துச்சு. என் பெயர் பொறிக்கப்பட்ட ஷீல்ட். மேடையில் ஏறி வாங்கும் கொடுப்பனை இல்லையென்ற போதும் அந்த பரிசை பார்க்க எனக்கு என் எழுத்தின் மீது கர்வமும் பெருமிதமும் உண்டாகும். இந்த மாதிரியான வெற்றிகள்தான் என்னை எழுத தூண்டிய உந்துசக்திகள்.  அதேநேரம் என்னுடைய கல்லூரி காலத்து கடைசி வருடத்தில் நான் ஒரு கதை எழுதினேன். தினமும் ஒரு பத்து பக்கம் எழுதுவேன். அதை என் நட்புங்க படிப்பாங்க. முதன்முதலாக நான் எழுதிய கதையை படிச்ச அந்த நட்பு இன்றும் என் கதையை படிச்சிட்டு இருக்கு. இன்னும் இன்னும் நல்லா எழுதுன்னு என்னை கொட்டிக்கிட்டே இருக்கு! அந்த நட்போட தொடர்பு கல்லூரிக்கு பின் அறுந்து போனது. ஆனால் அவளோட படிக்கும் ஆர்வம் குறையவில்லை. என்னோட எழுதும் ஆர்வமும் மறித்து போகவில்லை.  மீண்டும் எங்கள் நட்பின் தொடர்பு என் எழுத்தின் மூலமாக பிணைந்தது, என்னுடைய சொல்லடி சிவசக்தி கதையை நான் யாருன்னு தெரியாமலே smsiteலபடிச்சு வருடங்கள் கடந்து மீண்டும் தொடர்பு கொண்டு பாராட்டியதெல்லாம் என் வாழ்க்கை எனக்கு கொடுத்த மிக சுவாரிசியமான ஆச்சரியங்கள்தான். என்னதான் நான் bsc computer science படிச்சாலும் நம்ம மூளை எழுதுவதை மட்டுமே பிடிவாதமா பிடிச்சிக்கிட்டு இருந்துச்சு. எல்லோரும் IT company வேலைக்கு போகும் போது டீச்சர் வேலைக்கு போனேன். இதெல்லாம் என் வாழ்க்கையே எடுத்த முடிவுகள். நம்ம வாழ்க்கையை எந்த பாதையை கை காண்பிக்கிறதோ அந்த பாதையில் நாமும் அமைதியாக போயிடனும். தேவையில்லாத சில பேரோட வார்த்தைகளை கேட்டு ட்விஸ்ட் அன் டர்ன் பண்ணி திருப்பி சொதப்பி! எதுக்கு இந்த வேலை என்று அமைதியாக வாழ்க்கையின் நீரோட்டத்தில் கலந்து போனேன் நான்.  ஆசிரியர் என்ற அவதாரம் எடுத்த நான் Prekg முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை அந்த மூன்று வருட காலகட்டத்தில் பார்த்துவிட்டேன். அதுவும் நான் முதல் முதலாக ஆசிரியராக சேர்ந்த எடுத்துல நான் டீச்சரா ஸ்டுடண்டா அப்படின்னு எல்லோருக்கும் சந்தேகம் வரும்.  பசங்களை விட அதிகமா நான்தான் நிறைய சொதப்பினேன். சந்தோஷம் சுவாரசியம் கலாட்டா கடைசியா ஒரு ட்விஸ்ட், யாராச்சும் attendance register ink ஊத்துவாங்களான்னு கேட்டா?? நான் ஊத்துவேன். முடிஞ்சுது  முதல் வேலை வெற்றிகரமாக தோல்வியில் முடிந்தது. ஆனால் அதற்கு பிறகு அதை விட பெரிய பள்ளியில் இரண்டு மடங்கு சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்ததும் சேர்ந்த சில மாதங்களில் திருமணம் முடிந்ததும் குடும்ப வாழ்க்கை என்னை வெகுவாக உள்ளிழுத்து கொண்டதும் அதிவிரைவாக நடந்து முடிந்தது.  அவ்வளவுதானா? முடிஞ்சிடுச்சா? அப்படின்னு என்னை நானே கேட்டு கொண்ட நாட்களும் உண்டு. என் டைரியில் பக்கம் பக்கமா புலம்பி அது தீர்ந்து காலியாகியும் போனது. ஆனால் என் தேடலும் அதன் தாகமும் தீரவேயில்லை.  ஒரே இடத்தில தேங்கி இருக்கோம்னு மனசு சொல்லிகிட்டே இருக்கும். ஆனால் அதை கடந்து போகும் பாதை தெரியவில்லை.  புத்தகம் படிக்கிறது… அது மட்டுமே என்னையும் என் இலட்சியத்தையும் எக்ஸ்பயரி ஆகாம உயிர்ப்போடு வைத்திருந்தது.  கல்லூரி முடித்ததும் ஆதியே அந்தமாய் கதையை வேறு பெயரில் எழுத ஆரம்பித்து அதன் பின் வேலை கிடைத்து வேலை பளுவில் எழுதுவதை நிறுத்திவிட்டேன். அதை திருமணமாகி முதல் மகனுக்கு இரண்டு வயதை எட்டிய போது தொடரலாம்னு எடுத்து அப்பவும் முடிக்க முடியல!  குடும்பம் குழந்தை என்கிற சுழலுக்குள் சிக்கி கொண்டு மீண்டு வருவதும் மீட்டு வருவதும் அத்தனை சுலபமான காரியம் இல்லை. சுழற்றி சுழற்றி என்னை அடிச்சுது. என்னுடைய இலட்சியத்தை ஆசையை கனவை தற்கொலை செய்யவிடாமல் பிடிமானமாகவும் பற்றுகோலாகவும் தாங்கி பிடித்து கொண்டிருந்தது புத்தகங்கள் மட்டும்தான். நாவல்கள், சுயமுன்னேற்ற கட்டுரைகள், பரிணாம பாதைகள், ஓஷோ இப்படி புதிதாக புதிதாக அதுவும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத காம்பினேஷனாக நான் படித்து கொண்டிருந்தேன்.  எப்போதெல்லாம் என் குடும்பம் வாழ்க்கையில் எனக்கு மூச்சு முட்டுகிறதோ அப்போதெல்லாம் படித்தேன். எனக்குள் இருக்கும் என்னை தேடி கொள்ள படித்தேன். என் சிந்தனையை மழுங்கடிக்க பார்த்த சீரியல்களிலிருந்து தப்பி கொள்ள படித்தேன்.  எல்லோருக்கும் வருடத்தில் இந்தந்த பண்டிகை வந்தால் சந்தோஷம் என்று ஒரு பட்டியல் இருக்கும். எனக்கு சென்னை புத்தக திருவிழா வந்தாள் ஆகபெரிய சந்தோஷம். அவை வெறும் புத்தக குவியல் இல்லை. புத்தக புதையல். அதன் மதிப்பை எல்லோராலும் உணர்ந்துவிட முடியாது. அந்த புத்தக குவியலுக்குள் இருக்கும் நம் புதையல்களை!  அத்தனை அத்தனை ஸ்டால்களில் என் கண்களுக்கு கிட்டிய அந்த புத்தகம்…  மீண்டும் என்னுடைய எழுதும் ஆர்வத்தை தூண்டிவிட்டது. மீண்டும்  என்னை எழுத வைத்தது.  அடுத்த புத்தக கண்காட்சியில் என்னுடைய முதல் புத்தகம் வெளியானது.  நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய். வல்லமை தாராயோ, - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி, சிவசக்தி - நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? அந்த புத்தகத்தோட பெயர் ‘first book’ எழுதவும் எழுத்தாளனாகும் சூட்சமத்தின் ஒரு சின்ன ரகசியத்தை எனக்கு அந்த புத்தகம் கற்று கொடுத்தது. பல எழுதாளர்கள் எழுதிய அந்த புத்தகத்திலிருந்த ஒவ்வொரு வரிகளும் அறிவுரைகள் அல்ல. அனுபவங்கள்.  அனுபவங்கள் அறிவுரைகளை விட உரக்க பேசும். அது எனக்குள் பேசியது. அதில் சொல்லப்பட்ட விஷயத்தை நான் பின்பற்றினேன்.  எழுத்தின் மீதான என் ஆர்வத்திற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். அதற்கு தூண்டுகோலாக அமைந்தது அந்த புத்தகம்தான்.  அப்படி என்ன சொல்லி இருந்தது இந்த FIRST BOOKல????? அடுத்த அத்தியாயத்தில்…  விதைப்போம்… தொடர்ந்து நல்ல சிந்தனைகளை  உங்க வாழ்க்கையிலும் இப்படி நீங்க நிறைய ஆச்சரியங்களை அதிசயங்களை வெற்றிகளை கடந்து வந்திருக்கலாம். அது என் கதை மாதிரி சுமாரா இல்லாம ரொம்ப சூப்பரா இருக்கலாம்.  அதை நீங்க இங்கே நம்மோட விதைபந்து கட்டுரையில் ஒரு அத்தியாயமாக பகிர்ந்து கொள்ளுங்கள். எல்லோரோட வாழ்க்கையோட வெற்றி formula வேற வேற…  அது இங்க இருக்க யாருக்காவது பயன்படட்டுமே! நம் வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் போது அது மற்றவருக்கு மட்டும் இல்லை. நமக்குமே புதுநம்பிக்கையை உருவாக்குகிறது.  விதையின் மூலம் விருட்சம் உருவாகுகிறது. அந்த விருட்சங்கள் மூலம் பல்வேறு விதைகள் உருவாகின்றன. உங்களுக்குள்ளும் நிறைய விதைகள் உள்ளது.  வாருங்கள்…  தொடர்ந்து விதைப்போம்…  புதுப்புது நற்சிந்தனைகளை! -மோனிஷா & kpn

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா