You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Please or Register to create posts and topics.

Iru Thruvangal - Episode 17

17

வேல் விழிகளோ!

ஆதித்தியா எதிர்பாராமல் விந்தியாவின் மீது விழுந்துவிட, தூங்கி கொண்டிருந்தவள் பயந்து போனாள். ஆதித்தியா கொஞ்சம் சுதாரித்து எழுந்து கொண்டான். விந்தியா சோபாவிலிருந்து போர்வையை விலக்கி எதிர்பாராத அந்த அதிர்ச்சியைச் சமாளித்து எழுந்தாள்.

“அர் யூ மேட்?” என்று விந்தியா கேட்க ஆதித்தியா தன் செயலை நினைத்து தானே சிரித்துக் கொண்டான்.

“ஐம் சாரி” என்று சொல்லிக் கொண்டே சிரித்தான்.

விந்தியா கண் கொட்டாமல் அவன் சிரிப்பதையே பார்த்து கொண்டிருந்தாள். அவன் மீது அளவில்லாத எரிச்சல் ஏற்பட்டது.

“என்ன டிரை பண்றீங்க ஆதி? திடீர்னு அலறீங்க... திடீர்னு மேல விழறீங்க... என்னை டிஸ்டர்ப் பண்றதுதான் உங்க மோட்டிவா?”

“சத்தியமா இல்லை...” என்று விந்தியாவின் தலையில் கை வைத்தான் ஆதித்தியா. அவனின் கைகளைத் தட்டி விட்டாள்.

“ஏதோ தப்பா இருக்கு...” என்று கேட்டுவிட்டு விந்தியா கூர்மையாகப் பார்த்தாள்.

“நீ நினைக்கிற மாதிரி தப்பான எண்ணத்தில் எல்லாம் விழல... கால் தடுக்கிடுச்சு”

“அப்போ தப்பான எண்ணம் வேற இருக்கா?”

“நானே வாயக் கொடுத்து சிக்குறேன். இதப் பாரு… என்னோட பொருள் ஒண்ண இருட்டில தேடிட்டிருந்தேன். கால் தடுக்கி உன் மேல விழுந்துட்டேன்... தட்ஸ் இட். வேணும்டே பண்ணியிருந்தா ... இப்படி உன்கிட்ட பேசிட்டா இருந்திருப்பேன்?”

“ஹெலோ... எதை தேடுறுதுனாலும் லைட்ட போட்டு தேடுங்க... திரும்பியும் வேற ஏதாவது லூசு மாதிரி பண்ணாதீங்க” என்று சொல்லிக் கொண்டே தலையணையை எதிர்புறம் திருப்பி வைத்துக் கொண்டு படுத்துக் கொண்டாள்.

“இனிமே தூக்கம் எப்படி வரும்?” என்று விந்தியா புலம்ப, ஆதித்தியா அறையை வெளிச்சமாக்கி விட்டு மீண்டும் தேட ஆரம்பித்தான்.

 “நீ என்னோட சிகரெட் பாக்கெட்டை பார்த்தியா?” என்று கேட்டதும் விந்தியா திருதிருவென்று விழித்து விட்டு, “நான் எடுக்கலை...” என்று சொல்லியபடி போர்வையை எடுத்து முகத்தை மூடிக் கொண்டாள்.

விந்தியாவின் செயலைப் பார்த்துச் சந்தேகம் கொண்டவனாய், ‘எப்பவும் நான் வைக்கிற பொருள் இடம் மாறினதேயில்லை... இன்னைக்கு எப்படிக் காணோம்? இவள தவிர வேற யாரும் எடுத்திருக்க முடியாது’ என்று யோசித்துவிட்டு விந்தியாவின் போர்வையை முகத்திலிருந்து விலக்கினான்.

“எங்கடி என் சிகரெட் பேக்கெட்?”

விந்தியா சலித்துக் கொண்டு, “என்னதான் பிரச்சனை உங்களுக்கு? நான் எடுக்கலை”

“நீதான் எடுத்திருக்க”

“என்னைப் பார்த்தா சிகரெட் பிடிக்கிற மாதிரியா தெரியுது?”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது... என் சிகரெட் பேக்கெட் எங்கே?”

“நான் எடுக்கல”

“நிச்சியமா நீதான் எடுத்திருக்க“

“இல்லை ” என்று கத்தினாள்.

“அப்போ நீ எடுக்கலை?”

“அதைத்தானே திரும்பத் திரும்ப சொல்றேன்”

“சரி... நான் ரொம்ப டென்ஷனா இருந்தா மட்டும்தான் சிகரெட் பிடிப்பேன்... இப்போ சிகரெட் இல்லை. இப்ப என் டென்ஷன் குறையணும்”

“அதுக்கு...”

அவன் எதுவும் பேசாமல் அவளை நெருங்கி வந்தான். அவளுக்குப் பதட்டம் அதிகமானது.

“ஆதி... ஸ்டே அவே” என்றாள்.

ஆனால் ஆதி அவளின் இதழ்களைப் பார்த்தபடியே நெருங்கி வந்தான். அவனின் நோக்கத்தை விந்தியா புரிந்து கொண்டாள். அவளின் கைகளால் அவனைத் தடுக்க முயற்சி செய்து அதுவும் பலனளிக்கவில்லை.

அவளை மீறிக் கொண்டு அவனை நெருங்க அவனின் அருகாமை விந்தியாவிற்குப் படபடப்பு அளித்தது. அவளின் இதயத்துடிப்பு அவளின் காதுகளுக்கே ஒலித்தது.

“திஸ் இஸ் நாட் பேஃர்” என்றாள் படபடப்போடு.

“எவ்ரித்திங் இஸ் பேஃர் இன் லவ் அன் வார்... பேபி” என்று சொல்லிவிட்டு காதல் நிரம்பிய புன்னகையோடு அவளை நெருங்கினான்.

விந்தியா தன் கைகளால் உதட்டை மூடிக் கொண்டாள்.

“அந்த பேக்கெட் என் கண்ணில பட்டுச்சு. இது ஏன் இங்க இருக்குனு நான்தான் தூக்கிப்போட்டேன்...” என்றாள். இதைக் கேட்டதும் ஆதியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

ஆதி அவளை தொடவில்லை இருந்தும் அவனின் மூச்சுக் காற்றை விந்தியாவால் உணர முடிந்தது. தன் இமைகளை விரித்து அவனைப் பார்த்தாள். அந்தக் கண்களை நேருக்கு நேர் அத்தனை அருகில் பார்த்தபின் கொஞ்சம் அவன் நிலை தடுமாற அவனே அவளை விட்டு விலகினான்.

விந்தியா பெருமூச்சுவிட்டவளாய் படபடப்பு அடங்காமல் சோபாவில் சாய்ந்து கொண்டாள். எத்தனையோ ஆண்களின் முன்னிலையில் தலைவணங்காமல் இருந்தவள் முதன் முறையாக அவனின் அருகாமையில் பலவீனமாய் உணர்ந்தாள்.

அவனிடம் பெண்களை வசீகரிக்கும் ஏதோ ஒரு ஆற்றல் இருக்கிறது என்பது மட்டும் அவளுக்குப் புரிந்தது.

வேல் விழிகள் என்று சொல்வார்களே... அவை இதுதானா?

நேராக அந்தக் கூர்மையான பார்வை ஈட்டியைப் போல் அவன் இதயத்தில் பாய்ந்தது. ஆதி நிலைகுலைந்தவனாய் பால்கனி கதவை திறந்து கொண்டு வெளியேறினான். முதன் முறையாய் ஒரு பெண் தன்னைத் தடுமாறச் செய்துவிட்டதை உணர்ந்தான்.

தான் விந்தியாவிடம் விட்ட சவாலில் தோற்று விடுவோம் என்று ஆதிக்கு தோன்றிற்று. அழகைத் தாண்டி அவளிடம் ஏதோ இருக்கிறது என்று சிந்தித்தவன், அவளிடம் தானே சரணடைந்து விடுவோமோ என்று பயப்படலானான்.

“நோ இட்ஸ் இம்பாஸிபிள்” என்று அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டான்.

ஆதியிடம் யார் சொல்வது?

“எவ்ரித்திங் இஸ் பேஃர் இன் லவ் அன் வார்”

காதலிலும் போரிலும் யாராவது ஒருவருக்கு தோல்வி நிச்சியம்.

shanbagavalli has reacted to this post.
shanbagavalli

You cannot copy content