மோனிஷா நாவல்கள்
Kadhalum Kabadamum - Episode 15

Quote from monisha on July 6, 2026, 6:51 PM15
யாத்ரா கிளம்பிப் போய் கிட்டத்தட்ட ஒரு நாள் முடியப் போகிறது. வீட்டில் பதற்றம் அதிகரித்திருந்தது. இந்திரன் கிடைத்த பேருந்தைப் பிடித்து சென்னையிலிருந்து ஓடி வந்திருந்தான். அவன் வீட்டினுள் நுழைந்ததும் பிரியா ஓவென்று அழ ஆரம்பித்துவிட்டார்.
“ம்மா அழாதீங்க” என்று தேற்றிக் கொண்டிருக்கும் போதே குமார், “கார்த்திக் போன் ஏன் ஸ்விட்ச்ட் ஆஃப்லயே இருக்கு... நான் நிறைய தடவை கால் பண்ணிட்டேன்” என்று படபடப்புடன் சொல்ல,
“ஷூட்டிங்காக பொள்ளாச்சி போயிருக்காருனு சௌந்தர்யா சொன்னா... சம்டைம்ஸ் போற இடத்துல சிக்னல் கிடைக்காதாம்” என்று விளக்கினான் இந்திரன்.
“யாத்ரா போனும் ஸ்விட்ச்ட் ஆஃப்லதான் இருக்கு... அவளும் அங்கேதான் இருப்பாளோ?” என்று குமார் கேட்க, பிரியா ஆர்வமாக நிமிர்ந்தார்.
“தெரியல இருக்கலாம்... கார்த்திக் போன் பண்ணாத்தான் தெரியும்” என்றவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கேட் திறக்கும் சத்தம் கேட்டது. அவன் எட்டிப் பார்க்க யாத்ராதான் நடந்து வந்து கொண்டிருந்தாள்.
“ம்மா யாத்ரா வந்துட்டா” என்று உற்சாகமாக கத்தினான் இந்திரன். அந்த நொடியே மூவரும் வாசலுக்கு ஓட, அவள் அப்படியே ஓய்ந்து களைத்துப் போய் நின்றிருந்தாள். யார் முகத்தையும் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.
“அறிவில்ல உனக்கு... இப்படிதான் சொல்லாம கொள்ளாம போவியா... எவ்வளவு பயந்துட்டாங்க தெரியுமா எல்லோரும்” என்று ஒரு பக்கம் இந்திரன் அக்கறையுடன் அதட்ட, மறுபக்கம் பிரியா மகளின் முகத்தைப் பார்த்து வாஞ்சையுடன், “ஏன் டி சொல்லாம போன” என்று வருந்தினார்.
அவர்களை எல்லாம் நிதானமாக ஏறிட்டவள், “சாரி ம்மா சாரி பா” என்றாள். அவள் குரல் மிகவும் மெலிந்து ஒலித்தது.
“சாரி கேட்டா சரியாகிடுமா... முதல எங்க போன நீ” என்று இந்திரன் வாசலில் வைத்தே அவளை உலுக்கினான்.
“அப்புறம் பேசிக்கலாம் விடு” என்ற குமார் மகள் தலையைத் தடவிக் கொடுத்து, “நீ உள்ளே போம்மா” என்றார். அவள் எதுவும் பேசாமல் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொள்ள, இந்திரன்தான் கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தான்.
“அவ செஞ்ச வேலைக்கு நாலு அறை கொடுக்காம கொஞ்சிட்டு இருக்கீங்க இன்னுமும்”
“அடிக்கணும்னா நான் உன்னைத்தான் அடிக்கணும்”
“ஆமா உங்களுக்கு உங்க செல்ல மக பண்ற தப்பெல்லாம் தெரியாது இல்ல... அவ பாட்டுக்கு சொல்லாம கொள்ளாம போயிருக்கா... எங்கேயாவது போய் ஏதாவது பிரச்னைல மாட்டுனா... ஏன் அந்த கார்த்திக் நல்லவனா இல்லாம இருந்திருந்தா” என்றவன் கடுப்பில் புலம்பிக் கொண்டிருக்க, பதிலுக்கு குமார் அவனை சத்தமிட்டார். இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்றிவிடாமல் பிரியா அவர்கள் தடுத்து கொண்டிருந்தார்.
அந்தச் சம்பாஷணைகள் சுவர்களுக்குப் பின்னால் நின்ற யாத்ராவிற்கு ஈனஸ்வரத்தில் கேட்டன. “ஏதாவது பிரச்னைல மாட்டி இருந்தா...” என்று இந்திரன் சொன்ன வார்த்தை அவளை குத்திக் கிழித்தது. அப்படியே கை கால்களைக் குறுக்கிக் கொண்டு தரையில் சரிந்துவிட்டாள்.
வெகுநேரமாக அணை கட்டித் தடுத்திருந்த கோபம், அவமானம், பயம் அத்தனையும் ஒரு சேர உடைந்து கண்ணீராகக் கொட்டியது. விக்கலும், மூச்சுத் திணறலுமாக உடல் குலுங்க அழுது தீர்த்தவள் ஒரு நிலைக்கு மேல் உடல் மரத்துப் போக, ஒரு ஜடத்தைப் போல அப்படியே தரையோடு தரையாக ஒண்டிக் கொண்டாள்.
“யாத்ரா... சாப்பிட வா” என்று பிரியா கதவைத் தட்ட, அந்தச் சத்தம் அவளை நிகழ்காலத்திற்குச் இழுத்தது. சிதறிக் கிடந்த தன் சுயத்தை மெல்லத் திரட்டி எழுந்து உட்கார்ந்தாள். முகத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு, நடுக்கத்தை மறைத்த குரலில், “குளிச்சுட்டு வரேன் ம்மா,” என்றாள்.
“சரி சீக்கிரம் வா,” என்று அவர் நகரும் காலடிச் சத்தம் கேட்டதும், மெல்ல எழுந்து நின்றாள். தன் உடல் மீது சுற்றியிருந்த துப்பட்டாவை மெல்ல விலக்க, உள்ளே கிழிந்திருந்த மேலாடை வெளிப்பட்டது.
அதனை பார்க்கும் போது மீண்டும் நடந்த விஷயங்கள் நினைவுக்கு வந்தன. அவசரமாக அதை கழற்றி ஒரு பையில் போட்டுச் சுருட்டி, யாருடைய கண்ணிலும் படாதவாறு கட்டிலுக்கு அடியில் தள்ளினாள்.
குளித்துவிட்டு ஈரத்தலைமுடியுடன் கண்ணாடி முன்பாக வந்து நின்றவள், கழுத்துப் புறத்தில் பளிச்சென்று தெரிந்த சிவந்த நகக்கீறல்களை கண்டு உறைந்து போனாள்.
அதனை பார்த்ததும் அமரேஷின் வக்கிரம் நிறைந்த கைகள் இன்னும் தன்னை அழுத்துவது போன்ற பிரமையை ஏற்படுத்தின. அவன் வலுக்கட்டாயமாகத் தன்னை இழுத்து அணைத்தது, முத்தமிட நெருங்கியது, உடையைக் கிழித்தது என யோசிக்க யோசிக்க ஏதோ அசிங்கத்தை மிதித்தது போல அவ்வளவு அருவருப்பாக உணர்ந்தாள்.
கழுத்து ஒட்டிய நைட்டி ஒன்றை போட்டு அந்தக் காயத்தை மறைத்துக் கொண்டாள். ஆனால் கண்ணாடியில் தெரிந்த பிம்பம் அவளது உண்மை மனநிலையை அப்படியே வெட்ட வெளிச்சமாகக் காட்டிக் கொடுத்தது.
அந்தச் சமயம் குமார், “யாத்ரா” என்று அழைக்கவும், "தோ வர்றேன் பா” என்று அவசரமாக முகத்தைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்து எல்லோருடனும் சாப்பிட உட்கார்ந்தாள். ஆனாலும் யார் முகத்தையும் ஏறிட்டு பார்க்க முடியாத ஒரு தவிப்பு!
பிரியா தட்டில் இட்லிகளை வைத்தார். அதனை கண்டதும்தான் தனக்குள் இருந்த பசி என்ற உணர்வே அவளுக்கு உரைத்தது. ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அதனைச் சாப்பிட்டு முடித்து எழவும்,
“யாத்ரா” என்று நிறுத்தினார் குமார். அவள் தயக்கத்துடன் அவரை நோக்க,
“எங்க போயிருந்த நீ” என்று வினவ,
“வேற எங்க, அந்த கார்த்திக்கைப் பார்க்கத்தான் போயிருக்கா” என்று இந்திரன் முந்திக் கொண்டு பதிலுரைத்தான்.
“நீ கொஞ்சம் அமைதியா இருக்கியா?” என்று மகனை அடக்கிவிட்டு அவர் மீண்டும் மகளை நோக்க, “நான் கார்த்திக்கைப் பார்க்கல” என்றாள் உடனே.
“என்னம்மா சொல்ற?”
“பார்க்கணும்னு போனேன், ஆனா பார்க்கல” என்றவள் சொன்னதைக் கேட்டு குமார் குழம்ப, “எதுவும் பிரச்னையா உங்களுக்குள்ள?” என்று பிரியா மகள் தோளைத் தொடவும், “எனக்கு எந்தப் பிரச்னையும் இல்ல, இதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க” என்று மீண்டும் அறைக்குள் சென்று முடங்கிவிட்டாள்.
என்னவோ சரியில்லை என்று மட்டும் பிரியாவிற்குப் புரிந்தது. அதேநேரம் குமாருக்கு மகளின் காதலால் படும் வேதனையைத் தாங்க முடியவில்லை. இதற்கு மேல் பொறுமையாக இருப்பது சரி வராது என்று அவர் கார்த்திக்கிற்கு அழைக்க, “அப்பா நான் சொல்றதைக் கேளுங்க” என்று இந்திரன் அவரைத் தடுக்கப் பார்த்தான்.
“நீ கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு இரு” என்றவருக்கு இம்முறை இணைப்பு கிடைத்துவிட, “சொல்லுங்க மாமா” என்றான் கார்த்திக்.
“உங்களை நேர்ல பார்த்து ஒரு முக்கியமான விஷயம் பேசணும் தம்பி” என்றதும் அவனைப் பதற்றம் தொற்றிக் கொண்டது.
“என்ன ஏதாவது பிரச்னையா?” என்றவன் கேட்க, “பிரச்னை எல்லாம் இல்ல தம்பி, யாத்ராவைப் பத்திதான்” என்றதும் அவன் சட்டென்று மௌனமாகிவிட்டான்.
“நீங்க எங்க இருப்பீங்கன்னு சொன்னா நானே நேர்ல வந்து உங்களைப் பார்க்குறேன்”
“இல்ல நான் வேறொரு பிரச்னைல இருக்கேன், ஒரு நாள் டைம் கொடுங்க நானே வீட்டுக்கு வரேன்”
“அப்படின்னா நீங்க ஏற்காடுக்கு வர வேண்டாம், நாங்களே சென்னைக்கு வரோம்” என்றதும் அவன், “சரி ஓகே” என்று அழைப்பைத் துண்டித்தான்.
அவன் குரலில் ஏதொவொரு பதற்றமும் அவசரமும் தெரிந்தது. ஆதலால் எதையும் அவனிடம் விளக்கமாகச் சொல்லவில்லை. அதேநேரம், இந்திரன் எரிச்சலுடன் தந்தையைப் பார்த்து, “அவன்கிட்ட என்ன பேசப் போறீங்க” என்றான்.
“வேற என்ன, யாத்ரா கல்யாண விஷயமாத்தான்” என்றவர் அதன் பிறகு அவனுக்கு வேற எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை.
குமார் முடிவின்படி அன்று மாலையே அவர்கள் குடும்பத்துடன் சென்னைக்குக் கிளம்பிவிட்ட நிலையில், ஊடகம் முழுக்கவும் வேறொரு செய்தி காட்டுத்தீயாகப் பரவிக் கொண்டிருந்தது.
‘படப்பிடிப்பு தளத்தில் அமரேஷிற்கு நேர்ந்த விபத்து... அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்’
அந்தச் செய்தியைச் செல்பேசியில் பார்த்த யாத்ராவிற்கு நெஞ்சை அடைத்தது.
சில மணி நேரங்களுக்கு முன்பு...
அமரேஷின் கரங்கள் அவளைச் சிறைபிடித்தன. அவள் திமிறத் திமிற, அவனது பிடி இன்னும் இறுகியது. ஒரு கட்டத்தில் ஆவேசமான அவன், அவள் மேலாடையைப் பற்றி இழுக்க, யாத்ராவுக்குள் இருந்த அச்சத்தை அது ஆத்திரமாக மாற்றியது.
அந்த கணமே மேஜை மீது இருந்த மது பாட்டிலால் அவன் தலையில் ஓங்கி அடித்தாள். நிலைகுலைந்து அவன் கீழே விழ, அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாதவள், கிழிந்த உடையைச் சரி செய்தபடி அங்கிருந்து தப்பித்து ஓடி வந்தாள்.
மகனின் நிலைமை அறிந்த கஜேந்திரன் அடித்துப் பிடித்து மருத்துவமனைக்கு ஓட, அவருக்கு முன்பாக பத்திரிக்கையாளர்கள் அவ்விடத்தை சூழ்ந்து கொண்டிருந்தனர். அவர்களை கடந்து உள்ளே வந்தவரின் விழிகள் முதலில் கார்த்திக்கைத் தான் தேடியது. அவனை பார்த்ததும், “எப்படி நடந்துச்சு இது, எப்பவும் நீ அமரேஷ் கூடத்தானே இருப்ப” என்று சத்தமிட, அவன் தலையை குனிந்து கொண்டான்.
அதேநேரம் சிகிச்சையளித்த மருத்துவர் வெளியே வர,
“என் பையன் எப்படி இருக்கான் டாக்டர்?” என்று கஜேந்திரன் பதைபதைத்தார்.
“பாட்டிலை வைச்சு யாரோ பலமா அடிச்சுருக்காங்க” என்றதும் அவர் சீற்றத்துடன் கார்த்திக்கின் புறம் திரும்ப, அவனுக்குமே அந்தத் தகவல் அதிர்ச்சியைக் கொடுத்தது.
ஓட்டுநர் அவசரமாக அழைத்து விஷயத்தைச் சொன்ன போது அவன்தான் முதல் ஆளாக அங்கே ஓடிச் சென்று பார்த்தான். குடித்து விட்டுத் தவறி விழுந்து அடிபட்டுப் கிடந்தது போலத்தான் இருந்தது அந்தத் தோற்றம். அவன் வேறு எதையும் யோசிக்கவில்லை. உடனடியாக அமரேஷை மருத்துவமனையில் சேர்த்துவிட்டான்.
இந்த நிலையில் மருத்துவர் தொடர்ந்து, “தலையில காயம் கொஞ்சம் பலமாத்தான் இருக்கு... ட்ரீட்மென்ட் கொடுத்திருக்கோம்... கண் முழிச்சாதான் எதுவும் சொல்ல முடியும்” என்று விட்டுச் செல்ல, கஜேந்திரனின் மீண்டும் அவனிடம் வந்தார்.
“யார் என் பையனை அடிச்சது?” என்றவர் கொதிப்புடன் வினவ, “எனக்கும் தெரியல... நான் விசாரிச்சுட்டுச் சொல்றேன்” என்றான்.
“உனக்கு என்னதான் தெரியுது... உன்னை நம்புனேன் பாரு” என்று அவர் தலையிலடித்து கொண்டு செல்ல, கார்த்திக் பயங்கர கடுப்பிலிருந்தான். அப்போதுதான் குமார் அவனை அழைத்து பேசியது எல்லாம் நடந்தது.
அப்போதிருந்த மனநிலையில் அவர் பேசிய எதை பற்றியும் அவன் சிந்திக்கவில்லை.
'யார் அமரேஷை அடித்திருப்பார்' என்று குழப்பதில் இருந்தவன் அவன் ஓட்டுநரை அணுகி விசாரித்தான்.
“அங்கே அமரேஷ் கூட யார் யார் இருந்தது?”
“சார் மட்டும்தான் இருந்தாரு... அப்புறம் அந்தப் பொண்ணு...” என்று இழுக்க, அவன் புருவங்களௌ சுருங்கின.
“நான் வந்த போது எந்தப் பொண்ணுமே இல்லையே” என்று கார்த்திக் சந்தேகிக்க, “தெரியல சார்... அந்தப் பொண்ணை நான்தான் பஸ் ஸ்டாண்ட்ல இருந்து கூட்டிட்டு வந்தேன்... ஆனா நான் போய் பார்த்த போது வீட்டு உள்ள சார் மட்டும்தான் விழுந்து கிடந்தாரு... அவர் இருந்த கோலத்தைப் பார்த்து பதறிப் போய் உங்களுக்குக் கூப்பிட்டேன்” என்றான்.
“அந்தப் பொண்ணு யாரு என்னனு தெரியுமா?”
“இல்ல நான் முன்ன பின்ன பார்த்த மாதிரி ஞாபகம் இல்ல சார், ஆனா பேர் என்னவோ சொன்னாரு” என்றவன் நிறுத்தி ஒரு நொடி யோசித்துவிட்டு, “யாத்ரா” என்றான்.
அந்தப் பெயரைக் கேட்டதுமே அவனை பேரதிர்ச்சி தாக்கியது. சில நொடிகளில் தன்னை சமன்படுத்தி கொண்டவன் செல்பேசியைத் திறந்து அவள் படத்தை ஓட்டுநரிடம் காட்டினான்.
“இதே பொண்ணுதான் சார்” என்று அவர் ஊர்ஜிதப்படுத்திய நொடி கார்த்திக் துடிதுடித்துப் போனான். இதயத்தை யாரோ இரண்டாக பிளந்துவிட்டது போல ஒரு பயங்கர வலி அவனை ஆட்கொண்டது.
15