மோனிஷா நாவல்கள்
Kadhalum Kabadamum - Episode 19

Quote from monisha on July 6, 2026, 6:55 PM19
அறை முழுவதும் இருள் கவிழ்ந்திருந்தது. படுக்கையின் அருகே இருந்த சிறிய அலங்கார மின்விளக்கின் மெல்லிய மஞ்சள் ஒளி மட்டுமே அந்த இருளைக் கீறிக்கொண்டு அந்த இடத்தை நிறைத்திருக்க, அவள் மெல்லத் திரும்பிப் பார்த்தாள்.
அங்கே, அவன் போர்வையை முழுவதுமாக இழுத்து மூடிக்கொண்டு எந்தச் சலனமும் இன்றிப் படுத்திருக்க... அதுவரை அவளுக்குள் கனன்று கொண்டிருந்த கோபம், தீயாகப் பற்றிக் கொண்டது.
அதுவும் அவன் அப்படி நிம்மதியாக உறங்குவதைப் பார்க்க அவளுக்கு வெறியானது. இரத்தமெல்லாம் கொதித்தது. எழுந்து உட்கார்ந்தவள் தடலாடியாக அவன் போர்வையை இழுத்துவிட்டாள்.
அவன் அதிர்ந்து விழிக்க, “என் வாழ்க்கையை அழிச்சுட்டு உனக்கு மட்டும் நிம்மதியான தூக்கம் கேக்குதா?” என்று கத்தினாள்.
அவன் சாவகாசமாக அவள் முகத்தைப் பார்த்து, “இப்போ யாரு உன் வாழ்க்கையை அழிச்சது?” என்று கேட்க,
“நீதான்... நீதான்டா என் வாழ்க்கையை அழிச்ச” என்றவன் சட்டையைப் பிடித்து உக்கிரமாக உலுக்கினாள்.
“யாத்ரா சட்டையை விடு... விடுன்னு சொன்னேன்” என்று சொல்லச் சொல்ல அவள் விடவில்லை.
அவன் பொறுமை கரைந்து போனது. அவள் தோள்களைப் பலமாகப் பிடித்துத் தள்ளிவிட, அவள் அப்படியே படுக்கையில் சாய்ந்துவிட்டாள்.
அவள் எழ முற்படவும், மீண்டும் அவன் தள்ளிவிட அவள் சாய்ந்தாள்.
“சைக்கோ” என்றவள் திட்டிக் கொண்டே மீண்டும் எழ, அவன் இம்முறை தள்ளவில்லை. அவள் தோள்களைப் பற்றிக் கொண்டு அவனும் அவள் மீது சாய, அவள் பதறிப் போனாள்.
“கிட்ட வராதே” என்று முரண்டி விலக முயன்றாள்.
“எது, நான் கிட்ட வந்தேனா? ஒழுங்கா படுத்துட்டு இருந்தவனைப் போட்டு உலுக்கி எழுப்பிவிட்டு... இப்போ கிட்ட வராதயாம்” என்றவன் கை விரல் அவள் கன்னங்களில் அலைந்து மெதுவாக இறங்கியது. அதனை அவசரமாகத் தட்டிவிட்டுத் துள்ளி எழுந்து உட்கார்ந்து, “தொட்டன்னா கொன்னுடுவேன் உன்னை” என்றவள் கைகளை நீட்டி எச்சரிக்கை செய்தாள்.
“பீர் பாட்டில் வேணுமா?” என்றவன் கிண்டலடிக்க, “உன்னை...” என்றவள் சகட்டு மேனிக்கு அவனை அடிக்க, “வலிக்குதுடி” என்ற அவளின் இரு கைகளையும் தடுத்துப் பிடித்துக் கொண்டு, “இப்போ என்னடி பிரச்சினை உனக்கு?” என்று கேட்டான்.
“உனக்குத் தெரியாது இல்ல?”
“எதுக்கு இப்போ இவ்வளவு கோபம்? கொஞ்சம் அமைதியாத்தான் பேசேன்.”
“நீ முதல்ல என் கையை விடு வலிக்குது” என்றதும் அவள் கைகளை விடுவித்தான்.
வலித்த மணிக்கட்டைத் தடவிக் கொண்டவள், “அமைதியா பேசணுமா... கல்யாணத்துக்கு முன்னாடி நான் உனக்கு எத்தனை கால் போட்டேன்... மெசேஜ் போட்டேன்... ஒண்ணுக்குக் கூட நீ ரிப்ளை பண்ணல” என்று முகத்தைப் பாராமலே சொல்ல,
“திரும்பவும் பேசிச் சண்டை வந்து... இந்த கல்யாணம் நின்னுட்டா?” என்றான் அவன்.
அவனை நிமிர்ந்து நேராகப் பார்த்தவள், “முதல்ல இந்த கல்யாணம் ஏன் நடக்கணும்?” என்று கேட்க, அவன் முகம் மாறியது.
“அந்த அமரேஷ்தான் சவால் விட்டான்.”
“என்ன, சவால் விட்டானா?”
“உன்னை விடமாட்டானாம்... எப்படியாச்சும் அடைஞ்சே தீர்வானாம்” என்று கார்த்திக் சொல்ல, அவள் முகம் உக்கிரமாக மாறியது.
“அவன் சொன்னா நடந்திடுமா? அடுத்த தடவை அவன் என்கிட்ட வரட்டும் அவனுக்கு சாவு உறுதி.”
“என்னதான் நீ தைரியமா இருந்தாலும் என்னால அப்படி எல்லாம் ரிஸ்க் கொடுக்க முடியாது... ஐ வான்ட் டு ப்ரொடெக்ட் யூ... அதனால்தான் இந்த கல்யாணத்துக்கு நான் அவசரப்படுத்தினேன்” என்றவன் கூற, அவள் முகம் யோசனையாக மாறியது.
அவன் மேலும், “ஐ லவ் யூ யாத்ரா” என்று சொல்ல,
“சாரி, அப்படி ஒரு விஷயம் நமக்குள்ள இல்ல” என்றுவிட்டுத் திரும்பிக் கொள்ள, அவன் அதிரடியாக அவள் முகவாயைப் பிடித்துத் தன்புறம் இழுத்தான்.
“எங்க என் கண்ணைப் பார்த்துச் சொல்லு... நமக்குள்ள காதல் இல்லைன்னு” என்று கேட்க, அவள் விழிகள் அவன் விழிகளை நேராகப் பார்த்துப் பொய் சொல்ல முடியாமல் திணறின.
“உன்னால சொல்ல முடியாது... நீ என்னை லவ் பண்ற, அதேபோல நானும் உன்னை லவ் பண்றேன்” என்றான். பட்டென்று அவன் கையைத் தட்டிவிட்டவள்,
“வெறும் காதல் மட்டும் இருந்தா போதுமா? அந்த உறவுல கொஞ்சமாச்சும் நம்பிக்கை, மரியாதை இருக்கணும்” என்று வினவ,
“நான் உன்னை நம்பலன்னு யார் இப்போ சொன்னது?” என்றான்.
“அன்னைக்கு நீதானே திரும்பத் திரும்பச் சொன்ன... நான் அவனைத் தேடிப் போனேன்னு... அப்படி நீ திரும்பத் திரும்பச் சொல்லும்போது நான் எப்படி ஃபீல் பண்ணிருப்பேன்னு கொஞ்சமாச்சும் யோசிச்சியா?” என்று கேட்க,
“ஓ பொண்ணுங்களுக்குத்தான் ஃபீலிங்... ஆம்பளைங்களுக்கு எல்லாம் அப்படி ஒண்ணு இருக்கவே கூடாது இல்ல?” என்றவன் கடுப்புடன் திருப்பிக் கேட்டான்.
“அப்படி என்ன சார் ஃபீலிங் உங்களுக்கு?” என்றவள் உதட்டைச் சுழித்தாள்.
“அன்னைக்கு அந்த டிரைவர், அமரேஷைத் தேடி வந்த பொண்ணு நீதான்னு சொன்ன நிமிஷம் அப்படியே என் மூளை வெடிச்சுச் சிதறின மாதிரி இருந்துச்சு... தெரியுமா உனக்கு?” என்றவன் உணர்ச்சி கொட்டிச் சொன்ன விதமே அவளை என்னவோ செய்தது.
அவன் தொடர்ந்து, “இதுக்குப் பேர் நீ பொஸஸிவ்னஸ், இன்செக்யூரிட்டி... என்ன வேணா பேர் வைச்சுக்கோ... பட் சாரி ஐ கான்ட் பேர் தட் எமோஷன்... அதான் அப்போ எனக்கு இருந்த மொத்த ஃபிரஸ்ட்ரேஷன், கோபம் எல்லாத்தையும் உன் மேல இறக்கிட்டேன்” என்றவன் பேசி முடித்த கணத்தில் அறை முழுவதும் ஓர் ஆழ்ந்த அமைதி சூழ்ந்து கொண்டது.
அவன் தான் செய்த செயலை நியாயப்படுத்துகிறானா இல்லை அதுதான் உண்மையா? எப்படி அவனது உணர்வுகளைப் புரிந்து கொள்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. அதேநேரம் அவனிடம் பேசப் பேச அவள் மனம் கரைந்து கொண்டே போவது போலிருந்தது.
அந்த நொடி, “யாத்ரா” என்று அழைத்தபடி அவன் பின்பக்கமாக நெருங்கவும் அவள் அசையவில்லை. அவள் கன்னங்களை உரசியபடி தன் கன்னத்தை வைக்க, அவள் அப்படியே சிலையாகச் சமைந்துவிட்டாள்.
மீசை ரோமங்கள் அவள் கன்னத்தைக் கிழிக்கவும்தான் உணர்வு பெற்றவள், “கார்த்திக் வேண்டாம்” என்றாள். ஆனால், அவள் குரல் அவளுக்கே மிகவும் பலவீனமாக ஒலித்தது.
அவன் மெதுவாக அவள் காதுமடலை உரசியபடி பேசினான். “நீ இறுக்கமா படுத்திருந்ததைப் பார்த்ததும் நானும் உன்னை வற்புறுத்த வேண்டான்னு நினைச்சுதான் வந்து படுத்துட்டேன், ஆனா இப்போ... முடியலடி” என்று அவள் இடையை அப்படியே தன்புறம் திருப்பி வளைத்தான்.
அவன் தீண்டலில் தன்னை மீறி அலையென எழும்பும் உணர்வுகளை என்ன செய்வது? இருவரின் கண்களும் ஒன்றை ஒன்று ஆக்கிரமித்துக் கொள்ள, அவன் தன் இதழ்களை அவள் இதழ்கள் அருகே கொண்டு வந்தான்.
உடனடியாக சுதாரித்துக் கொண்டவள் அவன் உதட்டில் கை வைத்துத் தடுத்துவிட, அவன் கடுப்பாகிவிட்டான்.
“ஏன் டி படுத்துற இப்படி?”
“நீ என் மேல அநியாயமா குற்றம் சுமத்தியிருக்க... போதாக்குறைக்குக் கட்டாயப்படுத்தி இந்த கல்யாணத்துக்குச் சம்மதிக்க வைச்சிருக்க... இது எதுக்கும் இப்ப வரைக்கும் நீ ஒரு சாரி கூடக் கேட்கல” என்றவள் முகத்தைச் சுருக்கிக் கொண்டு சொல்ல,
“சாரிதானே... கேட்டாப் போச்சு... உனக்கு எத்தனை சாரி வேணும்?” என்றவன் கல்மிஷத்துடன் அவளை நெருங்கி மூக்கில் முத்தமிட்டு ஒரு சாரியும் கன்னத்தை முத்தமிட்டு ஒரு சாரியும் நெற்றியை முத்தமிட்டு ஒரு சாரியும் என்று மேலும் முன்னேறி அவள் கழுத்தை முத்தமிட வரவும்,
“கார்த்திக்!” என்று அவனை இழுத்துத் தள்ளினாள்.
“சாரி சொல்றேண்டி.”
“போதும் உன் சாரி” என்றவள் முகம் நாணத்தில் சிவந்திருந்தது.
“இல்ல எனக்குப் போதலை” என்றவன் மீண்டும் நெருங்கி வர,
“என்னைப்படுத்தாதே... போ தள்ளி” என்றாள்.
“அப்போ சாரி வேணாமா?” என்றவன் புன்னகையில் அவள் தடுமாறினாள்.
‘இல்ல இது சரிவராது’ என்று மனதில் எண்ணியவள், “நான் தூங்கப் போறேன்” என்றுவிட்டு உடனடியாகப் படுத்துப் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொள்ள, “இவ்வளவுக்கு அப்புறமும் உனக்குத் தூக்கம் வருமா?” என்று கேட்டு வைத்தான்.
“எல்லாம் வரும்... நீயும் கம்முனு படு” என்றவள் சொல்ல, அவனும் தலையணையில் சாய்ந்தான்.
பின்னர் விட்டத்தைப் பார்த்தபடி, “நான் பாட்டுக்குத் படுத்துத் தூங்கியிருப்பேன்... சும்மா இருந்தவனை உலுக்கி எழுப்பிவிட்டு இப்ப இவ மட்டும் படுத்துட்டா” என்று புலம்பிக் கொண்டே நீண்டதாக ஒரு பெருமூச்சு விட, அவள் கண்களை இறுக மூடிக் கொண்டாள். அவன் பக்கம் திரும்பக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.
“தூங்கிட்டியா யாத்ரா?” அவன் கிசுகிசுப்பான குரலில் கேட்க, அவள் காதுகளின் இருபக்கமும் தன் தலையணையைப் போட்டு அமுக்கிக் கொண்டாள்.
அதற்குப் பிறகு சத்தமே இல்லை. ஒரு நீண்ட நெடிய அமைதி...
மெதுவாக அவள் அவன் புறம் திரும்பிப் படுக்க, அவனோ கண்கள் மூடி உறங்குவது போலக் கிடந்தான்.
அவள் விழிகள் அவன் மீது படர்ந்தன. அவனது விரிந்த மார்பும், கட்டுடலான தேகமும், கழுத்தின் மையத்தில் அசைந்தாடும் தொண்டைக்குழியும், கம்பீரமாய் நின்ற அடர்ந்த மீசையும், அதற்குச் சரியாய் அமைந்த தடித்த உதடுகளும் என அத்தனையும் அவனது கம்பீரமான ஆண்மையை அவளுக்குப் பறைசாற்றின.
அதுவும் எந்த அலட்டலும் இல்லாத அவனது அந்தத் திமிரான உடல்மொழியும், கைகளைத் தலைக்குக் கொடுத்து அவன் படுத்திருந்த விதமும் அவளுக்குள் ஏதோ ஒரு மயக்கத்தைக் கூட்டியது.
அதற்கு மேல் அவளால் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. “எழுந்திரு முதல்ல” என்று சற்றே அதட்டலாக அவனது சட்டையைக் கொத்தாகப் பிடித்து இழுத்தாள்.
திடுக்கிட்டுப் புரியாமல் விழித்தவன், “திரும்பியும் முதல்ல இருந்து சண்டை போடப் போறியா?” என்று சலிப்பான புன்னகையோடு கேட்க... “இல்ல, சாரி கேட்கப் போறேன்!” என்று கிசுகிசுத்தவள், அடுத்த கணமே அவனது அதரங்களைத் தனதாக்கிக் கொண்டாள்.
அந்தத் திடீர் முத்தத்தில் நிலைதடுமாறிப் போனவன், மறுநொடியே தன் பலமான கரங்களால் அவளது இடையைச் சுற்றி வளைத்து, காற்றுக்கூடப் புக முடியாதபடி அவளைத் தன்னோடு இறுக்கமாகப் பிணைத்துக் கொண்டான். அவனது அணைப்பின் சூட்டில், அதுவரை அவளுக்குள் இருந்த பிடிவாதமும் கோபமும் உருகி, அவளது தேகம் அவனுக்குள் முழுமையாக நெகிழ்ந்து வழிந்தது.
அத்தனை நேரமாகத் தகிக்கும் கோபத்தோடு நகர்ந்துகொண்டிருந்த அவர்களது இரவும் உறவும், அந்த ஒரே ஒரு நொடியில் முற்றிலும் உருகி, பேரன்பின் காதல் வசமானது.
19