You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kalyanam@ - Episode 8

Quote

8

ரெஜினாவின் கண்களில் நிரம்பிய கண்ணீரைப் பார்த்து, “மேடம் என்னாச்சு?” என்று மதி பதற,

“மாமும் டேடும் சேர்ந்திருந்த டைம்ல அடிக்கடிக்கு நாங்க இங்க வருவோம் மதி... ஜாலியா டைம் ஸ்பென்ட் பண்ணுவோம்... காலேஜ் டைம்ல ஃப்ரண்ட்ஸ் கூட சில தடவை வந்திருக்கேன்... அரட்டை அடிசச்சு இருக்கேன்... ஸ்விம் பண்ணி இருக்கேன்... ஓடி இருக்கேன்... ஆடி இருக்கேன் விளையாடி இருக்கேன்.

“யூ நோ... இட்ஸ் மை ஃபேவரட் ஸ்பாட்” என்று ரெஜினா விழிகளில் நீர் திரள கூற, மதி அவள் தோளைத் தட்டிக் கொடுத்தாள். அவள் வருத்தத்துடன் பேசுவதை அமைதியாக கேட்டிருந்த ஆனந்தனுக்கும் மனம் சங்கடமாகிப் போனது.

இவர்கள் வாயிலில் நின்று பேசிக் கொண்டிருக்கும் போதே உற்சாகத்துடன் அந்தப் பங்களா உள்ளிருந்து வந்த ஜஸ்டின், “வாவ்... வந்துட்டீங்களா... ஏன் அங்கேயே நிற்குறீங்க... உள்ள வாங்க.” என்று அழைத்தார்.

“இங்க எதுக்கு வரச் சொன்னீங்க டேட்” என்றவள் கேட்க,

“கம்மான் உள்ள வா சொல்றேன்... வாங்க ஆனந்த்... வா மதி” என்று அழைத்துவிட்டுச் செல்ல, அவர்கள் எல்லோரும் உள்ளே சென்றனர்.

உள்ளே செல்லும் போது வாயிலிருந்த படிக்கட்டுகள் சக்கர நாற்காலிகள் ஏறும் வகையில் சரிவான மேடாக மாற்றப்பட்டிருப்பதைக் கவனித்தாள்.

அவர்கள் மூவரும் உள்ளே வந்து அந்த வீட்டின் அமைப்பைப் பார்த்து ஆச்சரியமுற்றனர்.

பரந்த முகப்பறை அவற்றுடன் இணைந்தார் போல டைனிங் அறை, திறந்தவெளி சமையலறை என அனைத்தும் கீழ் தளத்தில் சுவர்கள் இல்லாமல் இணைக்கப்பட்டிருந்தது.   

அவளுடைய சக்கர நாற்காலி எங்கு வேண்டுமானாலும் சுலபமாகச் சென்று வரும் விதமாக வடிவமைக்கப்பட்டிருந்தை பார்த்து, “நைஸ் டேடி” என,  

“இங்க இருக்க லைட்ஸ், ஃபேன்ஸ் சென்ஸார்ஸ் மூலமா ஆப்ரெட் ஆகும்... சேம் டைம் அலக்ஸா மூலமாவும் வேலை செய்யும்... ஆன் ஆஃப்னு இன்ஸ்டிரக்ஷன்ஸ்ல அது வொர்க் ஆகும்” என்றவர் விவரித்துக் கொண்டே சமையலறைக்கு அழைத்து வந்தார்.

“செர்வன்ட்ஸ் வொர்க் பண்றதுக்கு செபரெட் கிச்சன் உள்ளே இருக்கு... இது முழுக்க முழுக்க நீ மட்டுமே யூஸ் பன்றதுக்கு... ஸோ உனக்கு தேவையான அத்தியாவசியமான விஷயங்களை நீயே சமைச்சுக்கலாம்... யாரையும் எதிர்பார்க்க வேண்டாம்”

அவள் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி சிரமமில்லாமல் இயங்குவதற்கு ஏற்றார் போல மேடை அலமாரிகள் சிறிய குளிர்சாதனப்பெட்டி என்று அத்தனையும் கச்சிதமாகவும் முறையாகவும் வைக்கப்பட்டிருந்தது.

அதேநேரம் ஒவ்வொரு அறையிலும் நவீன பட்டன் லாக் சிஸ்டம் மற்றும் அதில் அவசர உதவி எண்களின் அத்தனை விதமான இணைப்புகளும் இருந்தன.

“இந்த ஸ்விட்சஸ்ல எமர்ஜென்ஸி நம்பர்ஸ் இருக்கு... முதல் பட்டனை அழுத்தினா செக்யூரிட்டிஸ்க்கு கால் போகும்... அடுத்தடுத்த பட்டன்ஸ் போலீஸ்... ஃபைர் ஸ்டேஷன்... ஆம்புலன்ஸ்... ஒரு பிரஸ்ல மெசேஜ் போகும்…”

”இது கூட அலாரம் சிஸ்டம்... நைட் விஷன் கேமராஸ் எல்லா விதமான பாதுகாப்பு உபகரணமும் உன்னோட ஒரு விரல் நுனில இருக்கு” என்றவர் சொன்னதைக் கேட்டு மதியும் ஆனந்தனும் வியப்புற,  

ரெஜினாவும் ஆச்சரியத்துடன் அவற்றை எல்லாம் பார்த்தாள். அந்த வீடே ஒரு தானியிங்கியாக இருந்தது. அவர் சொன்னது போல அத்தனையும் அவள் விரல் நுனியில் இருந்தன.

 பாதுக்காப்பான முறையில் அவள் வசிப்பதற்கும் அதேநேரம் யாரையும் சாராமல் தனித்து இயங்கும் வகையிலும் அந்த வீடு வடிவமைக்கப்பட்டிருந்ததைக் கண்டு மெச்சியவள்,

“டேடி திஸ் இஸ் ஆமேஸிங்” என்றாள்.  

“இதுக்கே ஆமேஸிங்னு சொல்லிட்டா எப்படி... வீட்டுல இதை விட அமேஸிங்கான ஸ்பாட் ஒன்னு இருக்கு” என்றவர் அந்த அறைகளின் மறு மூலையில் அமைக்கப்பட்டிருந்த லிஃப்டிற்கு அழைத்துச் சென்றார்.

அவள் தன் சக்கர நாற்காலியுடன் அந்த மின்தூக்கிக்குள் ஏற, அது மேலே சென்று திறந்ததும் முன்புறம் ஒரு பெரிய பால்கனி வியூ தெரிந்தது.

அங்கிருந்து காற்று வேகமாக வீசத் தூரத்தில் கடலலைகள் பாய்ந்து வரும் காட்சியைக் கண்டு நெகிழ்ந்து போனாள்.

“வாவ் டேடி” என்றவள் முகமெல்லாம் புன்னகையானது.

“திஸ் இஸ் ரியலி வாவ்” என்றவள் தன் கைகளை விரித்து அவரைப் பார்க்க ஆனந்தமாக மகளை அவர் அன்புடன் தழுவிக் கொண்டார்.

அவரைக் கட்டிக் கொண்டு, “லவ் யூ டேடி” என, 

அவரும் “மீ டூ” என்று பதிலுக்குக் கூறிவிட்டு நிமிர்ந்தவர்,

 “உங்களை மாதிரி ஒரு டேட் கிடைக்க நான் ரொம்ப கொடுத்து வைச்சு இருக்கணும்... ஐ லவ் யூ ஸோ மச்... ஐம் தி லக்கியஸ்ட் பெர்ஸன் இன் தி வொர்ல்ட்” என்றாள்.

“மீ டூ டியர்... யூ ஆர் மை க்யூட் லிட்டில் ப்ரின்ஸஸ் ஆல்வேஸ்... நானும் லக்கிதான்... பட் லக்கியஸட்னா ஆனந்த்தான்... உன்னோட ஹக், லவ், கிஸ் எல்லாத்துக்கும் முழு முதல் உரிமையாளன்” என்று ஜஸ்டின் சொன்ன நொடி

“டேடி” என்று அவரைச் செல்லமாக அடித்தாள். அதேநேரம் அவள் முகத்தில் பூத்திருந்த நாணப் புன்னகையைக் கவனித்த ஜஸ்டின், “தட்ஸ் ட்ரூ” என்று விட்டு,

“என்ன ஆனந்த்?” அவனுமே என்ன சொல்வதென்று புரியாமல்,

“சார் என்ன நீங்க?” என்று சங்கடப்பட்டான்.

“பார்த்தியா மதி... இரண்டு பேரும் ஒரே மாதிரி வெட்கப்படுறாங்க.” என்று கூற,

“டேடி போதும்.” என்றாள் ரெஜினா.

“ஓகே போதும்.” என்றவர் ஆனந்தன் புறம் திரும்பி, “உனக்கும் வீடு பிடிச்சிருக்கு இல்ல ஆனந்த்” என்று கேட்க,

“இட்ஸ் ரியலி வாவ்” என்றான்.

“நீயும் ரெஜியும் கல்யாணத்துக்கு அப்புறம் இங்கதான் இருக்கப் போறீங்க... மேலே மட்டும் மூணு பெட் ரூம் இருக்கு... ஸோ உன் பேரண்ட்ஸ் கூட நீ இங்க கூட்டிட்டு வந்துடலாம்...

 நம்ம ஈஸிஆர் ப்ரோஜக்ட்ஸ் எல்லாம் பார்த்துக்க நீ இங்க இருந்து போயிட்டு வர டென் மினிட்ஸ்தான் ஆகும்... நம்ம ஸ்கூலுக்குப் போகணும்னா ட்ராபிக் இல்லனா ட்வன்டி மினிட்ஸ்ல போயிடலாம்.. அதிகபட்சம் ஃபார்டி மினிட்ஸ்” என்றவர் சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தவள், “நீங்களும் இங்க எங்க கூடத்தானே ஸ்டே பண்ண போறீங்க” என்று சந்தேகத்துடன் கேட்க, அவர் முகம் மாறியது.

“அதெப்படி முடியும் ரெஜி... கல்யாணத்துக்கு அப்புறம் நீ உன் ஹஸ்பென்ட் ஃபேமிலி கூடத்தான் இருக்கணும்” என்றவர் சொல்ல,

“ஆனந்தும் ஆனந்த் ஃபேமிலியோட நான் ஒண்ணா இருக்குறது பத்தி எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல... ஆனா நீங்க என் கூட இருக்கணும்” என்றவள் அழுத்தமாகக் கூற,

“நான் ஈ ஸி ஆர் ப்ரோஜக்ட் விஷயமா அடிக்கடி இங்க வர வேண்டி இருக்கும்... வரும் போது எல்லாம் நான் இங்க வந்து உன்னைப் பார்த்துட்டுப் போறேன் ரெஜி” என்றார்.

“இந்தச் சமாளிப்பு எல்லாம் வேண்டாம்... கல்யாணத்துக்கு அப்புறமும் நீங்க என் கூடத்தான இருக்கணும்... ஆர் எல்ஸ்... நோ... மேரேஜ் நத்திங்” என்றவள் சீறலாகச் சொல்ல,

“என்ன பேசுற ரெஜி நீ” என்று ஜஸ்டின் அதிர்ச்சியாக,

“சாரி டூ இன்டரப்ட்... நான் கொஞ்சம் பேசலாமா?” என்று ஆனந்தன் சொல்லவும் இருவரும் அவனைப் பார்க்க,

“ரெஜினா சொல்றது சரிதான்னு எனக்கும் தோனுது... நீங்களும் இங்கேயே எங்க கூட இருங்க சார்.” என்றான்.

“நீயும் அவளை மாதிரியே பேசாதே... ப்ராக்டிக்கலா இட்ஸ் நாட் பாஸிப்பில்” என்று ஜஸ்டின் கூற,

“ஏன் பாஸிப்பில் இல்ல... எல்லாம் பாஸ்பில்தான்... நீங்களும் இங்க எங்க கூட இருக்குறதுல உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்று சீறலாகக் கேட்டாள்.  

ஆனந்த், மதி புறம் திரும்பிய ஜஸ்டின், “எக்ஸ்க்யூஸ் அஸ்... நான் ரெஜிகிட்ட கொஞ்சம் தனியா பேசணும்” என, அவர்கள் இருவரும் கீழ் தளத்திற்குச் சென்றுவிட்டனர்.

“ரெஜி... நான் சொல்றதைக் கொஞ்சம் பொறுமையா கேளு”

“முடியாது முடியாது முடியாது... நீங்க என்னை கன்வின்ஸ் பண்ண முடியாது.” என்று தம் காதுகளை மூடிக் கொள்ள,

“ரெஜி ப்ளீஸ்” என்றவர் இறங்கி மகள் முன்பாக மண்டியிட்டு அமர அவள் மனம் இறங்கியது. அவள் தன் காதுகளிலிருந்து விரல்களைப் பிரித்துவிட்டு, “நீங்க இல்லாம என்னால இருக்க முடியாது டேடி... ப்ளீஸ் டேடி” என்று கெஞ்சினாள்.

“நான் இல்லாம நீ இருந்ததே இல்லையா ரெஜி... டூர் ட்ரெக்கிங்ஸ்னு நீ உலகம் பூரா சுத்தி வந்தது இல்லையா... எல்லா டைமும் நான் உன் கூட வந்தது இல்லயே”

“அது எல்லாம் வேற டேடி... ஆனா இப்படி நீங்க வேற வீட்டுல நான் வேற வீட்டுலனு என்னால அப்படி யோசிச்சு பார்க்க முடியல”

“தினைக்கும் நம்ம இரண்டு பேரும் சேர்ந்து செலவு பண்றது அதிகபட்சம் ஒரு மணி நேரம்தான்... நான் ஆஃபிஸ் போயிடுவேன்... நீ ஸ்கூலுக்குப் போயிடுவ... சம் டைம்ஸ் ஒன்னா டின்னர் சாப்பிடுவோம்... சம் டைம்ஸ் அதுவும் முடியாது…”

”அப்படி இருக்கும் போது நீ வேற வீட்டுலயும் நான் வேற வீட்டுலயும் இருக்குறது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்திடாது... எல்லாத்துக்கும் மேல நான் உனக்கும் ஆனந்துக்கும் இடையில வர விரும்பல”

“என்ன சொல்ல வறீங்க?”

“நீங்க இரண்டு பேரும் உங்களுக்கு இடையில இருக்க ரிலேஷன்ஷிப்பை பில்ட் பண்றதுக்கான ஸ்பேஸ்... ப்ரைவஸிய நான் கொடுக்கணும்னு நினைக்குறேன்”

“என்ன லாஜிக் இது... ஆனந்தோட பேரண்ட்ஸ் எங்க கூடத்தானே இருக்க போறாங்க…? நீங்க இருந்தா என்ன?”

“தேர் இஸ் அ லாஜிக்... உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட பிறகு நம்ம கம்பனி சொத்து இது எல்லாத்தையும் ஆனந்த் மேனஜ் பண்ண ஆரம்பிக்கும் போது நான் அவனை வாட்ச் பண்ணிட்டு இருக்குற மாதிரி அவன் ஃபீல் பண்ண கூடாது…”

”இத்தனை வருஷமா அவன் என்னை ஒரு பாஸாதான் பார்க்குறான்... கல்யாணத்துக்கு அப்புறம் ஒரே வீட்டில ஒன்னா இருந்தாலும் அவன் என்னை பாஸாதான் பார்ப்பான்... அது அவனுக்குப் பழகிடுச்சு.”

”நான் இங்க இருந்தா அவனால் இயல்பா இருக்க முடியாது... சுதந்திரமா செயல்பட முடியாது... நீயே யோசிச்சு பாரு ரெஜி... 24 பார் 7 ஒரு பாஸ் கூடவே இருக்குற ஃபீல் எப்படி இருக்கும்.”

”உன் கூட ஒரு சின்ன சண்டைக் கூட அவனால போட முடியாது... அவனை நான் கன்டிரோல் பண்ணனும்னு நினைக்கலனாலும் அவனுக்கு அப்படி தோனலாம்...  எப்பயாச்சும் ஆஃபிஸ் விஷயமா கேட்குற சின்ன சின்ன கேள்விகள்... டிஸ்கஷன்ஸ்... இல்ல எங்களுக்குள்ள வர சிம்பிள் ஆர்கியூமென்ட்ஸ் கூட நான் அவனை கன்ட்ரோல் பண்ற மாதிரியா தெரியலாம்...எல்லா விஷயத்துலும் நான் அவனை வாட்ச் பண்ற மாதிரி அவன் ஃபீல் பண்ணலாம்.”

”அதெல்லாம் நேரடியாவோ மறைமுகமாகவோ உங்க கல்யாண வாழ்க்கையையும் சேர்த்து பாதிக்கும் ரெஜி”

“டேடி” என்றவள் முகம் சுருங்கிப் போக,

“நான் சொல்றதைக் கொஞ்சம் புரிஞ்சிக்கோ ரெஜி... நீயும் ஆனந்தும் சந்தோஷமா இருக்கணும்... உங்க உறவு லைஃப் லாங் நீடிக்கணும்.”

”எனக்கு ஆனந்த் மேல ரொம்ப பெரிய நம்பிக்கை இருக்கு... அவனால உன்னை நல்லா பார்த்துக்க முடியும்... என்னை விட பெட்டரா உன்னைப் பார்த்துக்க முடியும்” என்றார்.

“தட்ஸ் இம்பாஸிபள்... வாய்ப்பே இல்ல... நீங்கதான் பெஸ்ட்... பெஸ்ட் ஆஃப் பெஸ்ட்... என்னால நடக்க முடியாம போன பிறகும் இவ்வளவு நம்பிக்கையோடும் தைரியத்தோடும் நான் இருக்கேனா அதுக்கு நீங்க மட்டும்தான் காரணம் டேடி... நீங்க மட்டும்தான்.”

”ஒரு மாற்று திறனாளியா இந்த உலகத்துல வாழுறது எவ்வளவு சிரமம்னு இந்தக் கொஞ்ச காலத்துல நான் புரிஞ்சிக்கிட்டேன்... ஆனா அதெல்லாத்தையும் உடைச்சி எனக்காக நீங்க ஒரு புது உலகத்தையே உருவாக்கி தந்திருக்கீங்க... உங்களை மாதிரி ஒரு டேடி யாருக்கும் கிடைக்க மாட்டாங்க... நிச்சயமா கிடைக்க மாட்டாங்க”

“என்கிட்ட பணம் இருக்கு... வசதி இருக்கு... இதெல்லாம் நான் உனக்கு செய்றது பெரிய விஷயமே இல்ல ரெஜி... ஆனா இந்த மாதிரி எந்த வசதியும் இல்லாத மாற்று திறனாளிகள் என்ன பண்ணுவாங்க?”

“உண்மைதான் டேடி... சமீபமா நானும் அதைப் பத்தி நிறைய யோசிச்சு இருக்கேன்... நம்ம கிட்ட எல்லா வசதியும் இருக்கு... ஆனா வசதி, பணம் இது எதுவும் இல்லாதவங்களோட நிலைமை... யோசிச்சு பார்க்கவே ஹாரிப்பிளா இருக்கு”

“ஆமா... அதான் உன் பேர்ல ஒரு ட்ரஸ்ட் ஆரம்பிச்சு... அதுல ஒரு பெரிய தொகைய இன்வஸ்ட் பண்ணலாம்னு இருக்கேன்... மாற்று திறனாளிகளுக்கான பல விதமான உதவிகள்... அவங்க படிக்க ஸ்கூல்ஸ் இந்த மாதிரி நிறைய யோசிக்சு இருக்கேன்... உங்க கல்யாணத்துக்கு அப்புறம் நான் இந்த ட்ரஸ்ட்டை ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கேன்... முழுக்க முழுக்க இதை நீதான் நிர்வகிக்கணும் ரெஜி”

“நானா?”

“எஸ் நீதான்” என்றார்.

“இது பெரிய பொறுப்பு டேடி... யாராச்சும் அனுபவமானவங்க கிட்ட கொடுங்க... இல்ல நீங்களே பார்த்துக்கலாமே”

“அனுபவபூர்வமா அவங்களோட வலிகளை உணரக்கூடியவ நீதான் ரெஜினா... நீதான் இதைச் சரியா செய்ய முடியும்... ஐம் டேம் ஷுர் அபவுட் தட்”

தன் தந்தையின் கண்களில் ஒளிர்ந்த நம்பிக்கையை உள்வாங்கியவள், “ஓகே உங்க நம்பிக்கையை நான் காப்பாத்த ட்ரை பண்றேன்” என்றாள்.

“இதுல மட்டும் இல்ல ரெஜி... உன் கல்யாணம் வாழ்க்கைலயும் அந்த நம்பிக்கையை நீ காப்பாத்தணும்... ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிகுறது மட்டும் இல்ல... ஒருத்தரை ஒருத்தர் எந்தக் காரணம் கொண்டும் விட்டுக் கொடுத்துக்கவும் கூடாது” என்றவர் அவள் கையைப் பற்றி சொல்ல,

“கண்டிப்பா டேடி” என்றாள்.

“ஓகே இப்போ நம்ம கீழே போலாமா?” என்றவர்கள் இருவரும் கீழே சென்ற பிறகு ஜஸ்டின், “எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு ரெஜி... நீ எல்லா ரூம்ஸ்ஸையும் பார்த்துட்டு ஏதாச்சும் சஜஷன்ஸ் இருந்தா ஆனந்த் கிட்ட சொல்லு... இன்டிரியர் பர்னிஷிங்ல எல்லாம் ஆனந்த் எக்ஸ்பர்ட்” என்று சொல்ல,

“ஓகே டேடி, பை” என்றவள் கையசைத்துவிட்டு நிதானமாக வீட்டின் ஒவ்வொரு அறைகளையும் சுற்றிப் பார்த்துக் கொண்டே ஆனந்திடம் எங்கே எதை வைக்க வேண்டுமென்ற விவரங்களை உரைத்தாள்.

அவனும் தனக்கு தோன்றிய கருத்துக்களை அவளிடம் பகிர்ந்தான். மெல்ல மெல்ல இருவரும் தங்களை அறியாமலே இயல்பாக ஒருமையில் உரையாடிக் கொண்டனர்.

“இந்த இடத்துல ஃபோட்டோஸ் மாட்டுனா நல்லா இருக்கும் இல்ல” ஆனந்த்

“எக்ஸாக்ட்லி... நானும் அதான் யோசிச்சேன்... உன்னோட ஃபோட்டோ கலக்ஷேன்ஸ் எல்லாமே அமேசிங்கா இருக்கும்... எல்லாத்தையும் இங்க மாட்டலாம்”  என்றவன் சுவரின் வேறு புறமாகக் கைக் காட்டி,

“ஆனா இந்த இடத்துல... முழுசா கவர் பண்ண மாதிரி ஒரு சிங்கிள் ஃபோட்டோ வைக்கணும்” என,

“அதென்ன ஃபோட்டோ ஆனந்த்” என்றவள் கேட்க,

“நம்ம மேரேஜ்ல இருக்க ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான மொமன்டை காப்ச்சர் பண்ணி இங்க மாட்டனும்” என்றான்.

“ஸ்பெஷலான மொமன்ட்டா? அதென்ன” என்றவள் அவனை நிமிர்ந்து பார்த்துக் கேட்க,

“அந்த மொமன்ட் எப்படி என்ன மாதிரி இருக்கும்னு எல்லாம் எனக்கு சொல்ல தெரியல... பட் அது ரொம்ப ரொமென்டிக்கான பிக்சரா இருக்கணும்” என்றவன் சட்டென்று இறங்கி அவள் செவிக்கு அருகில் கிசுகிசுப்பாகச் சொல்ல அவள் கன்னங்கள் சிவந்தன. உதடுகள் வெட்க புன்னகைப் பூக்க,

“இந்த கன்வர்ஸேஷன் வேற திசைக்குப் போற மாதிரி இருக்கு” என்றாள்.

“இப்பதான் இது கரெக்டான திசைல போகுதுனு நினைக்குறேன்” என்றவன் பார்வை அவளுடைய உணர்வுகளைத் தூண்டிவிட்டன.

“பேசுன வரைக்கும் போதும்... கிளம்பலாமா?” என்றவள் அவனைத் திரும்பிப் பார்க்காமல் அந்த நொடியே தன் சக்கர நாற்காலியைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்துவிட்டு, “ஆமா மதி எங்க?” என்று சுற்றும் முற்றும் தேடிப் பார்க்க,

“ஜஸ்டின் சார் கிளம்பும் போதே மதியும் கிளம்பியாச்சு ரெஜினா” என்று சொல்லிக் கொண்டே பின்னே வந்தான் ஆனந்த்.

“அவ என்கிட்ட சொல்லவே இல்ல.” என்று அவள் அதிர்ச்சியாக அவன் புறம் திரும்ப அடக்கப்பட்ட புன்னகையுடன் அவள் அருகே வந்து நின்றவன், “அதான் நான் இருக்கேனே... உன்னைக் கூட்டிட்டுப் போக” என்றான்.

அவனைக் கடுப்புடன் ஏறிட்டவள் அவன் முகத்தில் ஒளிர்ந்த புன்னகையை பார்த்ததும், “அவங்க போனது உங்களுக்குத் தெரியும்தானே” என்று கேட்க,

“ம்ம்ம்... தெரியும்” இம்முறை அவனால் தன் புன்னகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

அவள் அவனைக் கோபமாக முறைத்துவிட்டு தன் சக்கர நாற்காலியின் வலது புறமிருந்த சிறிய பையிலிருந்த கைப்பேசியை எடுத்து அவர்களுக்கு அழைக்க முற்படும் போது, “நான் உன் கூட தனியா டைம் ஸ்பென்ட் பண்ணணும் நினைக்கிறேன்... ப்ளீஸ் கால் பண்ண வேண்டாம்... ப்ளீஸ்ஸ்” என்று அவன் ப்ளீஸ் என்று இழுத்துக் கொண்டே அவள் முன்னே வந்தான்.

அவளை எதிர்பார்ப்புடன் பார்த்த அந்த விழிகளின் வேண்டுதலை அவளால் ஏனோ மறுக்க முடியவில்லை. செல்பேசியை மீண்டும் பழைய இடத்தில் வைக்க அவன் கார் கதவைத் திறந்து விட்டு அவளைப் பார்த்து,

“வித் யுவர் பெர்மிஷன்” என, அவள் எதுவும் பேசாமல் மௌனமாக தலையைத் தாழ்த்திக் கொண்டாள். சம்மதத்திற்கான குறியாக அவள் மௌனத்தை எடுத்துக் கொண்டவன் அவளைத் தூக்கினான்.

அவனுடைய கரங்களின் பிடி அவள் உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்ய, அவள் மிகவும் சிரமப்பட்டு அந்த உணர்வுகள் எதுவும் தன் முகத்தில் வெளிப்பட்டு விடாமல் பார்த்துக் கொண்டாள்.

அதேநேரம் அவன் கைகளில் இருக்கும் போது அவன் முகத்தைப் பார்ப்பதை அவள் தவிர்க்க, அவனோ அவளை காரில் அமர்த்தாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் தவிப்புடன் அவனை நிமிர்ந்து பார்க்க அப்போதே சுயநினைவு பெற்றவன் போல, “ஒரு விஷயம் சொல்லட்டுமா?” என்று கேட்கவும்,  

“எதுவா இருந்தாலும் கார்ல உட்கார வைச்சுட்டுச் சொல்லு ஆனந்த்” என்றாள்.

“இல்ல இப்படியேதான் சொல்லணும்” அவன் குரல் அவள் காதிற்குள் அருகில் கூசியது. அவள் ஹார்மோன்களில் சதிராடியது.  

“என்ன சொல்லப் போற?” அவள் விழிகள் பதட்டத்துடன் நோக்க,

“நான்தான் மதியை அனுப்பிவிட்டேன்”

“எதுக்கு?” அவள் கண்கள் அகல விரிய, 

“இதுக்குதான்” என்றவன் மேலும் அவள் விழிகளைக் கூர்மையாகப் பார்த்து, “இப்படி தூக்குனதுக்குதான் பளார்னு நீ என்னை அடிச்ச” என,

“ஓ... ஓகே... எனக்குப் புரிஞ்சிடுச்சு... இது ரிவஞ்ச்” என்றவள் உதட்டைச் சுழித்தாள். 

அதனை இரசனையுடன் பார்த்தவன், “எஸ்” என்று விட்டு அவள் விழிகளைப் பார்த்து, “இனிமே காலம் முழுக்க உன்னை நான்தான் தூக்கிப்பேன்... அந்த உரிமை இனிமே எனக்கு மட்டும்தான்... இட்ஸ் ஒன்லி ஃபார் மீ” என்று அழுத்தமாகக் கூறி முடிக்க,   

“நானும் பதிலுக்கு ரிவஞ்ச் எடுப்பேன்” என்றாள் அலட்சிய புன்னகையுடன்.

“எப்படி?” என்று கேட்டான்.

“நீயே கடுப்பாகி டென்ஷனாகுறளவுக்கு உன்னைத் தூக்க வைப்பேன்... பார்த்துக்கோ” என்றதும் அவன் இதழ்கள் பெரிதாக விரிந்தன.

“தட்ஸ் ஸ்வீட்” என்று அவன் கண்ணடித்துவிட்டு அவளை கார் இருக்கையில் அமர்த்தி சீட் பெல்டைப் போட்டுவிடும் போது இருவரின் கண்களும் ஒன்றோடு ஒன்று கலந்தன. அவன் அவள் இதழ்களை நெருங்கி வந்தான்.

சட்டென்று அவள் உலகம் பனிபடர்ந்த மலைகளுக்கு இடையில்  சென்று நின்றது. ஆனந்த் நெருங்கி வர வர அவளுக்கு நிக்கின் நினைவு வந்தது. அவன் முதல் முறை முத்தமிட வந்த போது அவள் கை வைத்துத் தடுத்ததை நினைவுப்படுத்திக் கொண்டவள் இம்முறை அதைச் செய்யவில்லை. செய்ய விழையவில்லை.

கண்களை மூடிக் கொண்டாள். அந்த முத்தத்தை முழு மனதுடன் பெற்றுக் கொள்ள தயாரானாள்.

அவளது பரிபூரண சம்மதம் ஆனந்தின் விருப்பத்திற்கு உகந்ததாக இருக்க, அவன் அவள் கன்னங்கள் பற்றி அவள் இதழ்களை மெதுவாக ஸ்பரிஸித்தான்.

அவன் தந்த முத்தத்தில் தன்னை மறந்தவள் அவன் முத்தமிட்டு விலகும் போது, “லவ் யூ நிக்...லவ் யூ” என்று மெய் மறந்து கூற ஆனந்தின் முகம் வெளிறியது. பட்டென்று அவளை விட்டு விலகி வந்து,  

“ரெஜினா” என்றான். 

அவன் குரல் கேட்டதும் அந்தப் பனி படர்ந்த மலைகள் மறைந்து போனது. விழிகளை திறந்தவளுக்கு அந்த நொடியே தான் செய்த முட்டாள்தனம் உரைக்க, “ஆனந்த்... ஐம்... ஐம் ஸோ சாரி... ஐம் எக்ஸ்டிரிம்லி சாரி” என்றாள் படபடப்புடன்.

அவள் சொன்ன எதையும் காதில் வாங்காதவன் போல அந்த நொடியே அவள் பக்கம் இருந்த கதவை அறைந்து மூடிவிட்டு ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான்.

அவன் கண்களிலும் முன்பிருந்த காதலும் காமமும் எதுவும் இல்லை. அதில் கோபம் மின்னியது.

அவன் காரை இயக்கிக் கொண்டு வர, “ஆனந்த்” என்று அவள் பேச ஆரம்பித்தாள். 

“யாரு அந்த நிக்னு எனக்குத் தெரிஞ்சுக்க வேண்டாம்... நீயும் சொல்ல வேண்டாம்” என்றவன் அதன் பின் அவள் புறம் பார்வையைத் திருப்பவே இல்லை.

வீடு வரும் வரை அவன் அழுத்தமான மௌனத்தைக் கடைப்படிக்க அவளும் அமைதியாகவே வந்தாள். காரிலிருந்து அவளை இறக்கி வீட்டில் விட்டவன் எதுவும் பேசாமல் அவள் முகத்தைக் கூடப் பார்க்காமல் விறுவிறுவென்று திரும்பிச் சென்றுவிட்டான்.

அவன் கோபத்தை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் திருமண நாள் வரை அவன் அந்தக் கோபத்தைச் சுமந்திருப்பான் என்று எதிர்பார்க்கவில்லை. ஏதாவது அவளிடம் விளக்கம் கேட்பான் என்று நினைத்தாள்.

ஆனால் அவன் எதுவுமே பேசவில்லை. அவளாக செல்பேசியில் அவனிடம் பேச அழைத்த போதும் அவன் அந்த அழைப்பை ஏற்கவில்லை. இரண்டு மூன்று முறை முயற்சித்துவிட்டுப் பின் அவளும் அவனை அழைப்பதை நிறுத்திவிட்டாள்.

அதற்குப் பிறகான அவர்களின் நேருக்கு நேரான சந்திப்பு திருமண மண்டபத்தில்தான் நிகழ்ந்தது.

shanbagavalli, kothai.suresh and bhavanya lakshmi.nagarajan have reacted to this post.
shanbagavallikothai.sureshbhavanya lakshmi.nagarajan
Quote

Super ma 

You cannot copy content