மோனிஷா நாவல்கள்
Seethaigal Yaaro - Episode 32 & 33

Quote from monisha on April 15, 2026, 1:25 PMஅத்தியாயம் – 32
மூன்று நாட்களுக்குப் பிறகுதான் ஜோஸிற்கு அந்த கோரச் சம்பவம் நடந்த விஷயமே தெரிய வந்தது. அவளுடையது சிறிய கிராமம் என்பதால் அவர்களின் ஊரில் செல்போன் சிக்னல் கிடைப்பதே பெரும்பாடாக இருந்தது.
‘விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு பெண்கள் கல்லூரி விடுதியில் தீ விபத்து: முப்பது மாணவிகள் பலி’ செய்திகளில் இவ்வளவுதான் வந்தது. ஏன், எதற்கு என்ற எந்தக் காரண காரியங்களைப் பற்றிய விவாதங்களும் இல்லை. விசாரணை என்னவானது என்ற கேள்விகளும் எழவில்லை.
இரண்டு நாட்கள்தான், அந்தச் செய்தியும் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து போனது. சமூக ஊடகங்கள் அப்போதுதான் புதிதாகத் தொடங்கியிருந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியைப் பற்றிப் பேசுவதில்தான் ஆர்வம் காட்டின. ‘ஓவியாவிற்கு நீதி வேண்டும்’ என்று இணையமே கதறிக்கொண்டிருந்தது. முப்பது சாமான்ய பெண்கள் கருகிச் செத்துப் போனதைப் பற்றி எந்தவித அக்கறையும் அவர்களுக்கு இல்லை.
காவல் நிலையத்தில் ஜோஸ்லினை அழைத்து விசாரித்தபோது, அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இதெல்லாம் திட்டமிட்ட சதி என்று சொல்லத் துடித்தாலும், அவள் வாய் திறக்கவில்லை. அவர்கள் விசாரித்த விதத்திலேயே, நடந்ததை விபத்தாகவே பதிவு செய்து முடிக்க வேண்டிய அவசரம் தெரிந்தது.
இந்தக் கூட்டத்திடம் உண்மையைச் சொன்னாலும், அதற்கு எந்த மதிப்பும் இருக்காது என்பதும்… நீதி கிடைக்காது என்பதும் அவளுக்கு நன்றாகப் புரிந்தது. ஆதலால், அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் "தெரியாது" என்று ஒரே பதிலைக் கூறிவிட்டு, நேராக எழிலின் வீட்டிற்கு வந்தாள்.
அங்கே பெரிய உறவினர் பட்டாளமே கூடியிருந்தது. வரவேற்பறையின் நடுவில் சோகமே உருவாய் அமர்ந்திருந்த நாராயணமூர்த்தியின் முகம் அழுது வீங்கிச் சிவந்திருந்தது. ஜோஸைப் பார்த்த கணமே அவர் மீண்டும் கதறி அழ ஆரம்பித்துவிட்டார்.
“ஏம்மா... ஏன் இப்படி நடந்துச்சு என் பொண்ணுக்கு?” என்று அவர் விம்மல்களுக்கு இடையே கேட்ட கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை. தான் இருந்திருக்க வேண்டிய இடத்தில்தான் சுடர் இருந்தாள் என்பதை அவள் எப்படிச் சொல்வாள்?
“அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு நான் ஊருக்குப் போயிட்டேன்... எனக்கு இப்பதான் விஷயமே தெரியும்” என்று ஜோஸ் சொல்ல, அவர் உடல் குலுங்க அழுதார். “சித்தப்பா, போதும் அழாதீங்க... ஏற்கனவே ரொம்ப அழுதுட்டீங்க” என்று அருகே இருந்த ஆடவன் ஆறுதல் கூறி அவரைத் தேற்ற, மெல்ல நிமிர்ந்தார்.
ஜோஸ் மேலும், “நான் எழிலை பார்த்துட்டு வரேன்” என்று சொல்ல, “நீயாச்சும் அவளுக்குப் புரிய வைம்மா” என்றார் நாராயணமூர்த்தி.
அவர் எதைப் புரிய வைக்கச் சொல்கிறார் என்ற கேள்வியுடன் அறைக்குள் சென்ற ஜோஸிற்கு, அங்கே எழில் ஜன்னல் கம்பிகளைப் பிடித்தபடி வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
ஜோஸ் தோளைத் தொடவும், எழில் திரும்பினாள். ஆனால் அவள் முகத்தில் அழுததற்கான எந்தத் தடயமும் இல்லை.
“வந்துட்டியா ஜோஸ்? ஆமா... சுடர் எங்கே?” என்று அவள் கேட்க, ஜோஸிற்குத் தூக்கி வாரிப்போட்டது.
“சுடரா?”
“ஆமா, எங்கே ஜோஸ்... சுடர் எங்கே?” என்று எழில் திரும்பத் திரும்பக் கேட்க, ஜோஸ் தடுமாறினாள். “அவ... அவ என் கூட வரல எழில்.”
“அவ உன் கூட வரலைன்னா அப்புறம் யார் கூட இருக்கா? எங்கே போனா?”
“நம்ம ஹாஸ்டல்ல நடந்த அந்தத் தீ விபத்தைப் பத்தி உனக்குத் தெரியாதா எழில்?”
“தெரியும்...” என்றவள் குரல் லேசாக உடைய, அடுத்த நொடியே சுதாரித்துக்கொண்டு, “ஆனா சுடருக்கு எதுவும் ஆகல” என்று உறுதியுடன் சொன்னாள்.
“உனக்கு எப்படித் தெரியும்?”
எழிலின் கண்கள் நீர் கோர்த்துத் ததும்பியது.
“எனக்குச் சொல்லத் தெரியல ஜோஸ்... ஆனா எங்கேயோ அவ உயிரோட இருக்கான்னு எனக்குத் தோணுது. சத்தியமாத் தோணுது... ப்ளீஸ், நீயாச்சும் என்னை நம்பு” என்று கண்ணீர் மல்க ஜோஸின் கைகளைப் பிடித்துக் கெஞ்சினாள்.
எழில் சொல்வது போல சுடர் எங்கேயாவது உயிரோடு இருக்க மாட்டாளா என்று ஜோஸின் மனமும் ஏங்கியது. ஆனால் யதார்த்தம் அதற்குச் சற்றும் இடமளிக்கவில்லையே!
“அன்னைக்கு ஹாஸ்டல்ல இருந்த எல்லோரும் எரிஞ்சுட்டதாத்தான் போலிஸ் சொல்லிட்டாங்க.”
“ஆனா அவங்க சுடரோட பாடியைக் கொடுக்கல.”
“அடையாளம் காண முடியாத நிலைமையில இருக்குன்னு சொல்றாங்க…” என்று ஜோஸ் சொல்ல, எழில் தீர்க்கமாகத் தலையசைத்தாள்.
“இல்ல என்னமோ என் மனசு சுடர் இறந்துட்டாங்குறதை ஏத்துக்க மாட்டேங்குது” என்றாள். அவளின் அந்தத் தவிப்பை எப்படி எடுத்துக்கொள்வதென்று ஜோஸிற்குப் புரியவில்லை.
மௌனமாக நின்றவள் கையை மேலும் பலமாகப் பற்றிய எழில், “ஜோஸ், எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா?” என்று கேட்டாள்.
“என்ன?”
“நம்ம போய் சூர்யாவைப் பார்த்துட்டு வரலாமா?”
“ஏன்?”
“ஒருவேளை... அவன் கூட சுடர் இருந்தா?” என்று எழில் கேட்க, ஜோஸ் மறுப்பாகத் தலையசைத்தாள். “நீ சொல்ற மாதிரி சுடர் உயிரோட இருந்திருந்தா நமக்கொரு போன் பண்ணி இருக்க மாட்டாளா?”
“பண்ணி இருப்பா தான்... ஆனா... அவ ஏதாவது பெரிய ஆபத்துல மாட்டி இருந்தா?” எழில் கேட்கவும், ஜோஸின் மூளையும் ஒரு நிமிடம் யோசித்தது.
“எனக்கு ஹெல்ப் பண்ணு ஜோஸ், ப்ளீஸ்...” என்று எழில் ஒரு குழந்தையைப் போலக் கெஞ்ச, “என்ன மாதிரி ஹெல்ப் கேட்குற நீ?” என்று வினவினாள் ஜோஸ்.
“இங்கிருந்து என்னை வெளியே கூட்டிட்டுப் போ. நம்ம போய் சுடரைத் தேடுவோம்.”
“இல்ல. இது நல்ல யோசனை இல்ல” என்று ஜோஸ் தயங்க,
“அப்போ நீயும் என்னை நம்பல... போ... இங்கிருந்து போ!” என்று கத்திய எழில், தலையைப் பிடித்துக்கொண்டு தரையில் அமர்ந்தாள். “யாரும் எனக்குத் தேவையில்லை... நானே சுடரைத் தேடி கண்டுபிடிச்சுப்பேன்.”
அவளின் நிலையைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தாலும், என்ன செய்வது என்று புரியாமல் அங்கிருந்து வெளியேறிய ஜோஸ், பேருந்தில் ஏறி அமர்ந்தாள்.
ஜன்னல் வழியாக முகத்தில் அறைந்த காற்று அவளுக்குச் சுடருடன் கழித்த தருணங்களை நினைவூட்டியது. கண்கள் நனைந்தன.
அப்போது தற்செயலாகச் சாலையோரம் சூர்யாவைப் பார்த்தாள் ஜோஸ். அவன் பைக்கில் அமர்ந்து யாரிடமோ சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தான். அவன் தோற்றத்தில் துளி கூட வருத்தமோ, இழப்பின் வலியோ தெரியவில்லை. பேருந்து அவனை வேகமாகக் கடந்து சென்றதை அதிர்ச்சியுடன் பார்த்தாள் ஜோஸ்.
‘சுடர் இறந்துவிட்ட செய்தி அறிந்தும் எப்படி இவனால் இவ்வளவு சாதாரணமாக இருக்க முடிகிறது?’ இந்தக் கேள்வி அவள் மூளையைக் குடைந்தது.
அடுத்த நிறுத்தமான ‘சாலமேடை’ வந்ததும் சட்டென்று இறங்கிவிட்டாள். அது சூர்யாவின் ஊர். அவன் வீடு எங்கே இருக்கிறது என்று தெரியாது.
ஆனால் சுடர் ஒருமுறை சொன்ன துர்க்கை அம்மன் கோவில் நினைவுக்கு வந்தது. அங்கே இருந்த பூசாரியிடம் விசாரித்தபோது, “எலெக்ட்ரிசியன் சூர்யா வீடா? இதோ இந்த வழியே போங்க” என்று அடையாளம் காட்டினார்.
வீட்டு வாசலில் அவன் பைக் நின்றிருந்தது. இப்போது உள்ளே சென்று அவனிடம் என்ன கேட்பது? ‘சுடர் இறந்ததற்கு நீ ஏன் சோகமா இல்லன்னு கேட்குறதால என்ன மாறிவிடப் போகுது?’ ஒருகணம் யோசித்தவள், அவனிடம் பேசும் எண்ணத்தைக் கைவிட்டுத் திரும்பினாள்.
வெயில் கொளுத்தியது. உடல் சோர்ந்து போக, வரும் வழியில் பார்த்த அதே துர்க்கை அம்மன் கோவிலில் ஒதுங்கினாள். பூசாரியைக் காணவில்லை. கருவறையிலிருந்த அம்மன் சிலை உருவத்தில் சிறியதாக இருந்தாலும் தோரணையில் கம்பீரமாகத் தெரிந்தது. செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே சென்றாள்.
உள்ளம் தாள முடியாத துயரத்தில் இருக்கும்போது, மனிதர்களுக்குக் கடவுள் பேதங்கள் தெரிவதில்லை. உதவிக்கு வரும் கரமே கடவுள் என்ற எண்ணத்தில் கண்களை மூடி நின்றாள். அப்போது கோவிலுக்குப் பின்னால் இருவர் பேசிக்கொள்ளும் சத்தம் அவள் காதில் விழுந்தது.
“எனக்கு என்னவோ இது எதுவும் சரியா படலடா... தாமு அண்ணன்கிட்ட விஷயத்தைச் சொல்லிடுவோம்.”
“வேணாம்! சூர்யாவுக்குத் தெரிஞ்சா கொன்னுடுவான்.”
“பிரச்சனைன்னா அவ மட்டுமா மாட்டுவான்? நாம எல்லாரும்தானே மாட்டுவோம்?”
“நாம ஏன் மாட்டப் போறோம்? நாம செஞ்சதைச் சொல்ல அங்கே யார் இருக்கா?”
“ஏன்... அவ இருக்காளே உயிரோட!”
“இன்னும் எத்தனை நாளைக்கு இருக்கப் போறா? அவன் ஆசை தீர்ந்ததும் அவளை முடிச்சு விட்டுடுவான்.”
பேசிக்கொண்டிருந்தவர்கள் சட்டென்று விலகிச் செல்ல, ஜோஸ் சுவருக்குப் பின்னால் அப்படியே உறைந்து நின்றாள்.
‘ஆனா சுடரோட பாடியைக் கொடுக்கலையே’ அந்த நொடி எழில் சொன்னதை நினைவுப்படுத்திய ஜோஸிற்கு, இப்போது உடல் சிலிர்த்தது.
அவள் வெறும் மனப்பிரமையில் பேசவில்லை. அவள் மனதிலிருக்கும் ஏதோ ஒரு உணர்வுதான் சுடர் உயிருடன் இருப்பதாக நம்ப வைத்திருக்கிறது.
அதுவும் அவர்கள் சொன்ன ‘அவள் இருக்கிறாள்’ அந்த ஒற்றை வார்த்தை ஜோஸின் மூளைக்குள் திரும்பத் திரும்ப ஒலித்தது.
‘அவள் இருக்கிறாளா? அந்த அவள் சுடரா? ஒரு வேளை அவள் சுடராக இருந்தால்...’ எங்கேயோ சுடர் உயிருடன் இருக்கிறாள் என்கிற சந்தேகம் இப்போது அவளுக்குள் ஆழமாக வேர்விட்டது.
‘கர்த்தரே’ என்று மனதிற்குள் தன்னுடைய சிலுவையை அழுந்தப் பற்றிக் கொண்டே எதிரே காட்சியளித்த துர்க்கை அம்மனைப் பார்த்தாள்.
‘சுடர் உயிரோட இருந்தா அவளைக் காப்பாத்துங்க... ப்ளீஸ்’ என்று உள்ளம் உருக வேண்டிக்கொண்டவள், அந்த நொடியே ஊருக்குப் போகும் தன்னுடைய முடிவைக் கைவிட்டாள்.
மீண்டும் எழில் வீட்டிற்குத் திரும்பியவள், “நான் ஒரு ரெண்டு நாளைக்கு இங்கே தங்கிக்கட்டுமா?” என்று நாராயணமூர்த்தியிடம் கேட்க, “இது உன் வீடுமா, தாராளமாத் தங்கு” என்றார்.
அறைக்குள், எழில் இன்னும் அதே பித்து பிடித்த நிலையில் அமர்ந்திருந்தாள். அவளருகே அமர்ந்து தோளில் கை போட்ட ஜோஸ், “நீ சொல்றதை நான் நம்புறேன் எழில்” என்றாள்.
“நிஜமாவா?” என்று எழில் வியப்புடன் பார்க்க, “ஆமாம், தேடி பார்க்கலாம்” என்று ஜோஸ் உறுதியாகக் கூறினாள்.
அதேநேரம் சுடர் உயிருடன் இருக்கிறாள் என்று நம்புவதற்கு அவர்களிடம் பெரிதாக எந்த ஆதாரமும் இல்லை. யாரோ இருவர் சம்பந்தமே இல்லாமல் பேசிய உரையாடலும் எழிலின் ஆழ்மன நம்பிக்கை மட்டுமே அவர்களை இயங்க வைத்தது.
அந்தத் தேடலில் அவர்களுடன் இன்னும் ஒரு நபரும் இருந்தான். ‘செல்வம்’. எழிலின் மீது அவனுக்கு அதீத மரியாதை. அவள் என்ன கேட்டாலும் அவனால் செய்யாமல் இருக்க முடியாது.
அவன்தான் சூர்யாவைப் பின்தொடர்ந்து சென்று, சுடர் அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்தப் பழைய பங்களாவைக் கண்டுபிடித்தான்.
நமக்கு ஒன்று தீவிரமாக வேண்டுமென்று நினைத்தால், ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும் அதை அடைய நமக்கு உதவும் என்பது போல அவர்கள் ஆழ்மன நம்பிக்கையும் தேடலும் சுடரைக் கண்டடையும் வழியை அவர்களுக்குக் காட்டிக் கொடுத்தது.
ஆனால், அவர்களின் தேடல் முடிவதற்குள் சுடர் அங்கே பாதி நடைபிணமாக மாறியிருந்தாள்.
அத்தியாயம் 33
சுடர் தன் வீட்டில் ஒவ்வொரு பொருளும் அதனதன் இடத்தில் பளிச்சென்று இருக்க வேண்டும் என்று நினைப்பவள். ‘சுத்தம்... சுத்தம்...’ என்று ஒரு சிறு துளி தூசியைக் கண்டாலும் துடித்துப் போகிறவள். அவளது அந்த சுபாவத்திற்கு, இன்று அந்த அழுக்குப் படிந்த அறை ஒரு நரகமாகத் தெரிந்தது.
அத்தனை காலமாக எதை எல்லாம் கண்டு அருவருப்பு அடைந்தாலோ அவற்றுடனே தான் வாழும் அவல நிலை உருவாகும் என்று அவள் கற்பனை கூட செய்ததில்லை.
அதுவும் அந்த அறையின் அழுக்கை விட, தன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் படிந்திருக்கும் அவனது தீண்டல்தான் அவளை இன்னும் அதிகமாக அருவருக்கச் செய்தது.
எவ்வளவு தேய்த்துக் குளித்தாலும், எத்தனை முறை கழுவினாலும் அவன் தொடுகையினால் ஏற்பட்ட அந்த அசிங்கமான உணர்வை அவளால் அகற்ற முடியவில்லை.
அங்கிருந்து சிலந்தி வலைகள், சிதறிக்கிடக்கும் குப்பைகளுக்கும் இடையே அவளுமே ஒரு அழுக்கு பிண்டமாக மாறி கிடப்பதாக உணர்ந்தாள்.
அதுவும் அந்தப் பூட்டிய கதவைத் திறந்து சூர்யா உள்ளே நுழையும் போதெல்லாம் அவள் உடலின் ஒவ்வொரு அணுவும் நடுங்கியது. ஒவ்வொரு நாளும் அவளுடைய தைரியம், நம்பிக்கை, சுயமரியாதை என அனைத்தும் சிதைக்கப்பட்டன.
அன்றும் அதே போல அந்த கதவு திறக்கும் சத்தம் கேட்டதுமே, சுடர் பயத்தில் சுவரின் மூலையில் சென்று ஒண்டிக்கொண்டாள். உள்ளே வந்த சூர்யாவின் கையில் ஒரு சாப்பாட்டுப் பொட்டலம் இருந்தது.
“இந்தா பிடி” என்று அதை அவள் முன்னே விசிறி அடித்தான். அந்த மலிவான உணவின் வாசனையே அவளுக்குக் குமட்டியது.
“எனக்கு வேண்டாம்” என்று வாயைப் பொத்திக்கொண்டு முணுமுணுத்தாள்.
“சாப்பிடாமலேயே இருந்தா செத்துப் போயிடுவடி!” என்று அவன் கோபமாகக் கத்த, அவள் கண்கள் கலங்கின. “நான் செத்தே போறேன்... ப்ளீஸ் என்னை விட்டுடு!” என்று கைகளைத் தட்டிக் கெஞ்சினாள்.
அவள் சொன்னதைக் கேட்டு வக்கிரமாகச் சிரித்தான். “என்னடி... என்னை விட்டுட்டுச் செத்துப் போகப் போறியா? அப்போ நம்ம காதல்? அதெல்லாம் என்ன ஆகுறது?” என்று கேட்டபடியே, அவளருகே உரசியபடி அமர்ந்தான்.
‘காதல்’... அந்த வார்த்தையை அவன் வாயால் கேட்கவும் அவளுக்கு உடம்பெல்லாம் பற்றிக்கொண்டு எரிந்தது. அந்த நொடியில் கையில் ஏதாவது கிடைத்தால் அவனைத் துண்டு துண்டாக வெட்டிப் போடலாம் என்றளவுக்கு ஆத்திரம் பொங்கியது.
ஆனால், நினைத்த எதையும் செய்ய முடியாமல் அவள் கண்களிலிருந்து கண்ணீர் மட்டுமே வழிய, “ஏய்... எதுக்கு இப்போ அழுற?” என்றபடி அவள் கன்னங்களைப் பலமாகத் திருப்பித் தன் பக்கம் இழுத்தான்.
“என் கூட இருக்கிறது உனக்குப் பிடிக்கலையாடி?” என்று ஒரு வித தவிப்புடன் கேட்க, அவள் பதில் சொல்லாமல் பற்களைக் கடித்துக்கொண்டு ஆத்திரத்தைக் கட்டுப்படுத்தினாள்.
அவன் விடுவதாக இல்லை. அவள் கூந்தலைக் கோதியபடியே, “உனக்கு ஒன்னு தெரியுமா சுடர்? நான் எல்லாத்தையுமே என் பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணிக்குவேன்... ஆனா உன்னை மட்டும் அப்படி என்னால விட்டுக் கொடுக்க முடியல. அதுல அவனுங்களுக்கு எல்லாம் என்மேல கொஞ்சம் காண்டுதான்” என்று பெருமையாகச் சொல்ல, கண்களை அழுந்த மூடித் திறந்தாள்.
தன்னை அவனின் உடைமை பொருளை போல அவன் பேசுவதை கேட்கவே அவளுக்கு சித்திரவதையாக இருந்தது.
“என்ன நான் மட்டும் பேசிட்டு இருக்கேன்... நீ எதுவும் பேச மாட்டுற?” என்று அவன் அவளை உலுக்க, “என்னால முடியல சூர்யா” என்றாள் தேம்பலுடன்.
“என் ஒருத்தன் கூட இருக்கவே உன்னால முடியலையா?” என்று அவன் சட்டென்று குரலை உயர்த்தியதில் அவள் நடுங்கிவிட்டாள்.
கண்ணீர் ஆறாகப் பெருக, உடைந்து போன குரலில் சொன்னாள். “இந்த இடம் ரொம்ப அழுக்கா, அசிங்கமா இருக்கு சூர்யா... நாத்தமடிக்குது. என்னால இங்க இருக்கவே முடியல.”
அவள் சொன்னதைக் கேட்டு அவன் முகம் சட்டென்று மாறியது. ஒரு விகாரமான புன்னகையுடன், “ஓ... அப்போ என் கூட இருக்கிறது உனக்குப் பிரச்சனை இல்லை... இந்த இடம் தான் பிரச்சனை, அப்படித்தானே?” என்று கேட்க, சுடர் மௌனமாகத் தலையசைத்தாள்.
“அதானே பார்த்தேன்” என்று சிரித்தவன், பின்னர் சற்று நிதானித்து, “சரி, நீ ஒழுங்கா இந்தச் சாப்பாட்டைச் சாப்பிட்டன்னா, இந்த ரூமை நான் கிளீன் பண்ணித் தர்றேன்” என்றான்.
“நிஜமாவா?” என்று அவள் நம்பிக்கையுடன் கேட்க, அவன் ‘ஆமாம்’ என்பது போலத் தலையசைத்தான். அந்த ஒரு காரணத்திற்காக வேண்டி அந்த உணவை சிரமப்பட்டு அவள் விழுங்கினாள்.
அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாகக் காத்திருந்தவன், அவள் கையைத் துடைத்ததும் சட்டென்று அவளைத் தன் பக்கம் இழுத்து அணைத்தான்.
“கிளீன் பண்றேன்னு சொன்னியே?” என்று அவள் பதற்றத்துடன் கேட்க,
“அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் செல்லம்... இப்போ நீ வா” என்றவன், வலுக்கட்டாயமாக அவளைப் படுக்கையில் தள்ளினான். தன் சட்டையைக் கழற்றியவன், தோளில் அவள் கடித்த காயத்தைக் காட்டி, “நீ பண்ண வேலையைப் பாரு... எவ்வளவு வலிக்குது தெரியுமா?” என்றான் போலிக் கோபத்துடன்.
“தெரியாமப் பண்ணிட்டேன்... சாரி” என்று அவள் நடுங்கும் குரலில் கெஞ்ச, “நானும் தெரியாமப் பண்ணட்டுமா?” என்று அவன் வக்கிரமாகக் கேட்க, அவள் பயத்தில் விழித்தாள்.
அவள் பயத்தைக் கண்டு ரசித்தவன், “ச்சே ச்சே... அப்படி எல்லாம் பண்ண மாட்டேன். ஏன்னா நான் உன்னை லவ் பண்றேன் செல்லம்” என்று சொல்லிக் கொண்டே அவள் முகத்தை வருட, அவனை அப்படியே கழுத்தை நெரிக்க வேண்டும் போலிருந்தது.
ஆனால் அத்தகைய பலம் அவள் உடலில் அப்போது இல்லை.
தன்னுடைய அந்த பலவீனம்தான்... இன்னும் இன்னும் அதிகமாக அவளுக்கு வலித்தது.
போராடத் தெம்பில்லாமல் அப்படியே கண்களை இறுக மூடிக்கொண்டாள். அந்த வலியும் வேதனையும் அவளுக்குப் பழகிப்போயிருந்தது. ஒரு மரக்கட்டையைப் போல உணர்ச்சியற்றுக் கிடந்தவளை, அவன் தன் இச்சைப்படி ஆக்கிரமிக்கத் தொடங்கினான்.
அப்போது, முதல் முறையாக அந்தப் பங்களாவின் அழைப்பு மணிச் சத்தம் கேட்டது. பதறியடித்து எழுந்த சூர்யா, அவளை ஒரு நொடி எச்சரிக்கையாகப் பார்த்தான்.
பின்னர் தன் உடைகளைச் சரி செய்துகொண்டு, “சத்தம் ஏதாவது போட்டே... சங்கை அறுத்துடுவேன்” என்றுவிட்டு வெளியே சென்றான்.
கதவு பூட்டப்படும் சத்தம் கேட்டதும் சுடர் பெருமூச்சு விட்டாள். சில நொடிகள் நிசப்தமாக இருந்தது. பிறகு யாரோ உள்ளே வரும் சத்தம் கேட்க, மெதுவாக எழுந்து கதவருகே சென்றாள்.
கதவின் சாவித் துவாரத்தின் வழியாக பார்த்தாள். வேட்டி சட்டையில் ஆஜானுபாகுவாய் நின்ற ஒரு மனிதன் தெரிந்தான். முகம் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அவரது குரலில் இருந்த அதிகாரம் அந்த அறையையே அதிர வைத்தது.
சுடர் தன் காதை கதவின் மீது வைத்துக்கொண்டு அவர்கள் பேசுவதை கவனித்தாள்.
“உங்களை யார் இங்க வர சொன்னது?”
“நீ செஞ்சு வைச்சு இருக்க வேலைக்கு?”
“நீங்க செய்யாதது என்ன புதுசா நான் செஞ்சிட்டேன் இப்போ?”
“டேய்... ஒரு லேடீஸ் ஹாஸ்டலை மொத்தமா எரிச்சு இருக்க! முப்பது பேரை முழுசா கொளுத்தி இருக்க... மாட்டுனா வாழ்க்கை பூரா ஜெயில்லதான் கிடக்கணும்”
“அப்படி எல்லாம் மாட்ட மாட்டேன்” என்று சூர்யா கூலாகப் பதில் சொன்னான்.
“அந்த மினிஸ்டர் ஆசைதம்பி உன் கூட கூட்டா? அவன் சொல்லித்தான் இதெல்லாம் செஞ்சுட்டு இருக்கியா நீ?” என்றதும் சூர்யா மௌனமாக நின்றான்.
“அவனை நீ நம்பாதடா! கூட்டாளியா இருந்த என் கழுத்தையே அறுக்கப் பார்த்தவன் அவன். அவன் அரசியல்ல ஜெயிக்கணும்னு அவனுக்காக நான் எவ்வளவோ செஞ்சேன். ஆனா என் மேல ஏறிப் போனவன் இப்போ என்னை மனுஷனா கூட கண்டுக்குறது இல்ல. இப்போ உன்னையும் அவன் ஆசைக்கு பலி கொடுக்கப் பார்க்குறான்!”
“நான் யாருக்கும் பலி ஆக மாட்டேன்... எனக்கு எப்படி மேல வரணும்னு தெரியும்” என்று சூர்யா எகிறினான்.
“ம**** தெரியும்! நீ செஞ்சது எல்லாம் என்ன சாதாரண கொலையா? எல்லாம் சின்ன சின்னப் பொண்ணுங்க... அவங்க குடும்பம் எல்லாம் சும்மா விட்டுருமா என்ன?”
“யாருக்குத் தெரியும்? எல்லோரைப் பொறுத்தவரைக்கும் அது ஒரு ஃபயர் ஆக்சிடென்ட்... அவ்வளவுதான்! அப்படித்தான் நம்ப வைச்சு இருக்கேன். காலேஜ் சார்புல செத்த ஒவ்வொரு பொண்ணுக்கும் தலைக்கு இரண்டு லட்சம் கொடுக்கப் போறாங்க. வாங்கிட்டு எல்லாம் வாயை மூடிட்டு போயிடுவானுங்க!”
“ஓ அந்த கரஸ்பாண்டன்ட் சகாதேவனுக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்கா?”
“யோவ்! ஹாஸ்டலை கொளுத்தச் சொன்னதே அந்த ஆளுதான்! அந்தப் பொண்ணுங்க வாயைத் திறந்தா காலேஜ் ரெப்யூட்டேஷன் போயிடுமாம்.”
“பாத்ரூம்ல கேமரா வைக்கும்போது தெரியலையாடா அவனுங்க ரெப்யூட்டேஷன் எல்லாம்?” என்று தாமு எள்ளி நகையாடினார்.
“இப்போ எதுக்கு தேவை இல்லாம நீ பேசிட்டு இருக்க?” என்று சூர்யா சலித்துக்கொண்டான்.
“நானும் எவ்வளவோ அசிங்கமான வேலை எல்லாம் பார்த்திருக்கேன்... ஆனா இந்த மாதிரி நல்ல குடும்பத்துப் பொண்ணுங்க மேல கை வைச்சது இல்லடா”
“அது என்ன நல்ல குடும்பத்துப் பொண்ணுங்க? நல்லா இல்லாத குடும்பத்துப் பொண்ணுங்க? எல்லாம் பொண்ணுங்கதான்... ஒவ்வொருத்தி வீடியோவுக்கும் தனி ரேட்டு... ஆளுங்களுக்கு வேற ரேட்டு! நீ இத்தனை வருஷமா சேர்த்த காசை, இந்த ஒரு வருஷத்துல நான் சேர்த்துட்டேன்னா பார்த்துக்கோ”
“நீ ஜெயிலுக்கு போனா எவனும் கூட வரமாட்டான்”
“ஏன் வர மாட்டான்? அத்தனை பேரோட வீடியோவும் நான் வைச்சு இருக்கேன். நான் மாட்டுனா அவ்வளவு பேரும் மாட்டுவானுங்க!” என்று சூர்யா கூற, அந்த மனிதர் அப்படியே தலையைப் பிடித்துக்கொண்டு சோபாவில் உட்கார்ந்துவிட்டார்.
அந்த நொடி அவருடைய முழு உருவமும் துவாரத்தின் வழியாக சுடருக்குத் தெரிந்தது. அவன் சூர்யாவின் தந்தை தாமு! அவன் வீட்டுக்குச் சென்றபோது புகைப்படத்தில் பார்த்திருக்கிறாள்.
“கிளம்பு... நீ எனக்கு வேலை இருக்கு” என்று சூர்யா விரட்டினான்.
“என்ன வேலை? எதுக்கு நீ இந்த பங்களால தனியா இருக்க?” என்று தாமு அவனை நிமிர்ந்து பார்க்க, “அது... நான் சும்மா அப்பப்போ வந்து ரெஸ்ட் எடுப்பேன்” என்றான். அவன் குரல் லேசாகத் தடுமாறியது.
“ரொம்ப சமாளிக்காத... எல்லாம் உன் கூட்டாளிங்க சொல்லிட்டாங்க” என்றதும் சூர்யாவின் முகம் மாறியது. “அந்த பொண்ணை உள்ளே வைச்சு இருக்கியா?”
“அவ நான் காதலிச்ச பொண்ணு... கொல்ல மனசு வரல, அதான்...”
“நீ செஞ்ச அத்தனை கொலைக்கும் அவதான்டா சாட்சி! அவ ஒரு ஆதாரம்டா பொறம்போக்கு! ஒழுங்கா அவளையும் முடிச்சு விடு... செய்றதுன்னு ஆயிட்டா முழுசா செஞ்சு முடி! அப்புறம் உனக்கு வெளிநாட்டுக்கு பிளைட் டிக்கெட், பாஸ்போர்ட் எல்லாம் ரெடி பண்ணித் தர்றேன். கொஞ்ச நாளைக்கு இங்க இருக்காத... போயிடு!”
“அதெல்லாம் முடியாது”
“நான் உன் நல்லதுக்காகத்தான் சொல்றேன்... எவன் எவனோ சொல்றதைக் கேட்குற, உன் அப்பா நான் சொல்றதைக் கேட்க மாட்டியா?”
“உனக்குதான் வேற குடும்பம் இருக்கு... வேற புள்ளைங்க இருக்காங்க! நான் எதுக்கு உனக்கு?”
“நீதான்டா எனக்கு ஒரே ஆம்பள புள்ள! என் வாரிசுடா நீ! உங்க அம்மாவை நானா பிரியல... அவதான் என் ரவுடித்தனம் பிடிக்காமப் பிரிஞ்சு போனா. உன்னை நல்லவனா வளர்க்கணும்னு நினைச்சா... ஆனா நீ இப்போ பண்ற காரியம் எல்லாம் அவளுக்குத் தெரிஞ்சுதுன்னு வை... உயிரையே விட்டுருவா!” என்றதும் சூர்யா மௌனமாகிவிட்டான்.
“சொல்றதைக் கேளு... கொஞ்ச நாளைக்கு எங்கயாவது போயிடு... எனக்கு நீ வேணும்!” என்றவர் எழுந்து அவன் தோளில் கை வைத்து, “ஆனா எல்லாத்துக்கும் முன்னாடி அந்தப் பொண்ணை முடிச்சுடு!” என்று சொல்ல, சுடர் அப்படியே கதவோரம் ஒண்டிக்கொண்டாள்.
இதயம் படபடவென்று துடித்தது. சூர்யா வாசல் வரை சென்று தந்தையை வழியனுப்பி விட்டு வந்தான். அத்தனை நேரம் ஓரமாக நின்ற காளியப்பனின் சட்டையை கொத்தாகப் பிடித்தவன், “ஏன்டா அவர்கிட்ட எல்லா விஷயத்தையும் சொன்ன?” என்று பல்லைக் கடித்தான்.
“நம்ம நல்லதுக்குதான் மாப்பிள்ளை...” என்றான் காளியப்பன் குரலில் நடுக்கத்துடன்.
சூர்யாவின் முகம் உக்கிரமாக மாறியது. “உன்னால முடியலன்னா சொல்லு... நான் முடிச்சு விட்டுடுறேன்” என்றவன் காளியப்பனின் கழுத்தைப் பிடித்து நெரித்தான். “அவளை எவனாச்சும் தொட்டீங்கன்னா கொன்னுடுவேன்” என்று எச்சரித்தான்.
“அவ உயிரோட இருக்க வரைக்கும் நம்ம நிம்மதியா தூங்க முடியாதுடா... அவ ஒன்னும் உன் காதலி இல்ல... நம்ம தலைக்கு மேல தொங்குற கத்தி” என்று காளியப்பன் சொல்ல, சூர்யா ஒரு கணம் அமைதியானான்.
“முடிச்சுடுறா மாப்பிள்ளை...” என்று மீண்டும் காளியப்பன் தூண்ட, அவனை எரிச்சலாக பார்த்த சூர்யா,
“நாய்ங்களுக்குக் கறி வாங்கிட்டு வந்தியா?” என்று கேட்க,
“அது... மறந்துட்டேன்” என்று தலையை சொரிந்தான்.
“எந்த வேலையும் உருப்புடியா செய்றது இல்ல... போடா அந்த வேலையை முதல செய்” என்று விரட்டியவன், தன் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு உள்ளே நடந்தான்.
அறைக்குள் அடைந்து கிடந்த சுடருக்கு அந்த அமைதி பயங்கரமாக இருந்தது. எவ்வளவு நேரம் அப்படியே இருந்தது என்று தெரியவில்லை. ஏதோ மோசமாக நடக்கப் போகிறது என்று அவள் உள்ளுணர்வு மிரட்டியது.
திடீரென்று, வெளியே ‘தடால் புடால்’ என்று பொருட்கள் உருளும் சத்தமும் கேட்டது.
மீண்டும் துவாரத்தின் வழியாகப் பார்த்த போது, சூர்யா ஒரு நீண்ட கத்தியைக் கையில் மறைத்துக்கொண்டு கதவை நோக்கி வருவது தெரிந்தது. இதயத்துடிப்பு அதிகரித்தது. பயத்தில் உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டியது. அவன் கதவருகே வந்துவிட்டான். அவளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.
கதவின் வெளித் தாழ்ப்பாளை அவன் திறக்கும் சத்தம்...
மறுபுறம் இதயம் கன்னாபின்னாவென்று துடிக்கும் சத்தம்...
அவள் மூச்சைப் பிடித்துக்கொண்டு கதவோரம் ஒதுங்கி நின்றாள். கதவு திறந்தது. அவன் உள்ளே நுழைந்த மறுகணமே தன் முழு பலத்தையும் திரட்டி அவனை உள்ளே தள்ளிவிட்டாள்.
அடுத்த வினாடி கதவை இழுத்து மூடி, வெளிப்பக்கமாகத் தாழ்ப்பாளைப் போட்டுவிட்டாள்.
சுதாரித்து எழுந்த சூர்யா, “ஏய்! கதவைத் திறடி” என்று கர்ஜித்தான். கூடவே கதவை இரண்டாக பிளப்பது போல தட்டினான்.
அந்த சத்தத்தில் சுடரின் உடல் முழுவதும் நடுக்கம் எடுத்தது. அங்கிருந்து தப்பிக்க வாசற்கதவைத் திறந்தவள், அங்கே மிரட்டலான தோற்றத்தில் உமிழ்நீர் வடிய உலவிக்கொண்டிருந்த அந்த வேட்டை நாய்களைக் கண்டு அப்படியே பின்வாங்கிவிட்டாள்.
“கதவைத் திறடி கதவைத் திற!” என்று சூர்யா வேறு உள்ளே வெறி பிடித்தவன் போல கத்தி கூப்பாடு போட்டான்.
அவனது குரல் அவள் நாடி நரம்புகளில் எல்லாம் பயத்தை நிரப்பியது. அந்த பயத்துடன் பதற்றத்துடனும தப்பிக்க வழி தேடி அந்தப் பங்களாவிற்குள் பித்துப் பிடித்தவள் போல ஓடினாள்.
வலது பக்கத்தில் மாடிக்குச் செல்லும் படிக்கட்டு ஒன்று இருந்ததை கண்டு அதில் ஏறிச் சென்றாள்.
ஒரு கனமான இரும்புக்கதவு போட்டு அது பூட்டப்பட்டிருந்தது. அதை இழுத்து இழுத்துப் பார்த்தாள். கைதான் வலித்ததே தவிர, கதவு அசையவில்லை.
வேறு வழி இல்லாமல் மீண்டும் கீழே வந்தாள்.
அவனோ விடாமல் கத்திக் கொண்டிருந்தான்.
“எல்லாம் பசில இருக்குங்க... வெளியே போன... அந்த நாய்ங்க உன்னைத் துண்டு துண்டாக் கடிச்சு குதறிடும்” என்றான்.
இன்னும் அவள் வழியை தேடிக் கொண்டிருந்தாள்.
“இப்போ நீ கதவைத் திறக்கப் போறியா இல்லையா? வந்து கதவைத் திறடி... தே******... வான்னு சொன்னேன்!”
அவளுக்கு எந்த வழியும் கிடைக்கவில்லை. கதவருகே மூச்சை பிடித்து கொண்டு நின்றுவிட, அவன் இம்முறை நிதானமாக எச்சரித்தான். கத்தினான்.
“எனக்குத் தெரியும் உன்னால வெளியே போக முடியாது. ஒழுங்கா நீயா வந்துட்டா உன்னை வலிக்காமக் கொல்லுவேன்... இல்லனா என் கையில போன் இருக்கு... ஒரே ஒரு கால்தான்... என் பிரண்ட்ஸ் வருவானுங்க...
ஒவ்வொருத்தனும் உன் மேல சரி காண்டுல இருக்கான்... வந்தா உன்னை என்னவெல்லாம் பண்ணுவாங்கனு நான் உனக்கு சொல்ல வேண்டியது இல்ல”
அவன் பேசியதைக் கேட்டவளுக்கு ரத்தம் உறைந்து, முதுகுத்தண்டு சில்லிட்டது. கதவைத் திறந்து அவனிடமே சரணடைந்து விடலாமா என்று ஒரு கணம் அவளது உள்ளம் சலனப்பட்டது.
ஆனால் அந்த கும்பலை விடவும் அவன் அதிக வெறியும் வக்கிரமும் பிடித்தவன் என்று தோன்ற அப்படியே நின்றுவிட்டாள்.
“இப்போ நான் பத்து வரைக்கும் எண்ணுவேன்... நீயா வந்து கதவைத் திறந்துடு” என்றவன் தன் மிரட்டலை தொடர்ந்தான்.
இனி ஒரு அடி கூட எடுத்து வைக்க அவள் உடலில் தெம்பில்லை. தப்பிக்க வழி இருப்பதாகவும் தெரியவில்லை. மறைந்து கொள்ளவும் எந்த இடமும் இல்லை. வெளியே ராட்சத நாய்கள். உள்ளே இந்த வெறி பிடித்த மனித மிருகம். போதாகுறைக்கு அவளை வேட்டையாட துடிக்கும் அவனுடைய நண்பர்கள் கூட்டம்.
“ஒன்று... இரண்டு... மூன்று...” அவன் எண்ணத் தொடங்கினான். அவள் இதயம் மத்தளமாகக் கொட்டியது.
“ஏழு... எட்டு... ஒன்பது...” அவன் இறுதியாக, “பத்து” என்று சொல்லி முடித்த கணமே அவள் கதவோரம் சுருண்டு அமர்ந்துவிட்டாள்.
“உன் டைம் முடிஞ்சு போச்சு சுடர்” என்றவன் தன் செல்பேசியை எடுத்து தன் நண்பனுக்கு அழைத்தான்.
“டேய் எங்கடா இருக்க? அவ என்னை உள்ளே வச்சுப் பூட்டிட்டா *******... ஆமா எல்லோரும் வாங்க... சீக்கிரமா” அந்த குரலிலிருந்த வெறி கதவை தாண்டி வந்து அவளை கிழித்தது.
இனி யாருமே தன்னைத் காப்பாற்ற முடியாது. மொத்தமாக நம்பிக்கையிழந்தவள், அப்படியே கை கால்களை முடக்கிக்கொண்டு உட்கார்ந்த சமயத்தில்... யாரோ பங்களாவின் பிரதான கதவை திறக்க முயற்சிக்கும் சத்தம் கேட்டது.
அத்தியாயம் – 32