மோனிஷா நாவல்கள்
Silvesta vasanthi - நானும் நாவலும்
Quote from monisha on November 12, 2020, 3:13 PMவாழ்த்துக்கள் வசந்தி
உங்கள் பதிவுகளை கீழே உள்ள reply boxல் பதிவேற்றுங்கள்
நன்றி
வாழ்த்துக்கள் வசந்தி
உங்கள் பதிவுகளை கீழே உள்ள reply boxல் பதிவேற்றுங்கள்
நன்றி
Uploaded files:Quote from NILAA on November 12, 2020, 3:40 PM
ஹாய் பிரெண்ட்ஸ்வாய்ப்புக்கு முதலில் எனது நன்றிஇதற்கு முன் இப்படி ஒரு தலைப்போ பகிர்வோ நான் காணவில்லைஎனது பயணம் நாவலோடு...எனக்கு இரண்டு அக்காக்கள்..ஒரு அக்கா மிகப் பெரியவர்.எனவே அவருக்கு பொழுது போக்காக புத்தகம்அண்டை வீடுகளில் வாங்கிக்கொடுக்கும் வேலை என்னுடையது..அத்தோடு வாடகைக்கும் அப்போது புத்தகங்கள் கிடைக்கும்.நாலணா கொடுத்தால் ஒரு புத்தகம்..மூன்று நாட்களில் திருப்பிக் கொடுக்க வேண்டும். அக்காவிற்காக மட்டுமே நாவல்கள் எடுத்துக் கொடுத்த காலமது. அப்படியே சென்று கொண்டிருந்த நாட்களில், அப்படி என்னதான் இருக்கிறது அந்த புத்தகங்களில் என்று பார்ப்பதற்காக திறந்தேன்.பற்றிக்கொண்டது புத்தகத்தீ...ஆரம்ப நாட்களில் எனக்கு புத்தகங்கள் செலெக்ட் பண்ணத்தெரியாது..எனவே கடைசி பக்கத்தை வாசித்துப்பார்ப்பேன்..சிரித்தார்கள்..மகிழ்ச்சி இப்படி நேர்மறையான முடிவாகத் தெரிந்தால் மட்டும் எடுத்து வருவேன்..அக்கா லக்ஷ்மி, சிவசங்கரி, அனுராதா ரமணன் வித்யா சுப்பிரமணியம், பாலகுமாரன் என்று பல பெயர்கள் சொல்லுவார்கள். நானும் எடுப்பேன்..அப்புறம் திடீரென்று துப்பறியும் நாவல்கள் கண்ணில் படவே அதை எடுக்க ஆரம்பித்தேன்..யார் படிக்கவென்று நினைக்கிறீர்கள்..எனக்குதான்,,ஹி ஹிவிவேக் ரூபலா, நரேன் வைஜெயந்தி, கணேஷ் வசந்த் இப்படி யாரை வேண்டுமானாலும் எடுத்து விடுவேன்..அக்காவிற்கு இதெல்லாம் அவ்வளவாக பிடிக்காது.. என்னையும் வீட்டில் படிக்க விட மாட்டார்கள்..ஏன்னா அப்போது ஆறோ ஏழோ படித்தேன்..அந்த வயதில் சிறுவர் மலர் மட்டும் தான் அனுமதி..அப்போ என்ன செய்வேன் தெரியுமா...ரோட்டில் வந்து கொண்டிருக்கும்போதே வேக வேகமாக கொஞ்சம் படித்து விடுவேன்,,அப்புறம் அக்கா அம்மா கண்களைத் தப்பி கொஞ்சம்..அப்புறமா பாத்ரூமுக்கு கொண்டு போய் கொஞ்சம் படிப்பேன்..எப்படி புக்கைக் கொண்டு போவேன்னு பாக்கின்களா..வயித்துக்குள்ள வச்சு எடுத்திட்டுப்போவேன்..ஸ்கர்ட் குள்ள வச்சிடுவேன்..(என்ன ஒரு வில்லத்தனம் அந்த வயசில்..) சிலநேரம் எங்கயுமே புக் கிடைக்காது,,அதுக்காக நட்பு வட்டத்த பெருசாக்கி புக் குடுக்கல் வாங்கல் நடக்கும்..அக்கா கிட்ட எதாச்சும் காரியம் நடக்கணும்னா புக் எங்கயாச்சும் வாங்கி தருவேன்..வீட்ல அப்போல்லாம் குமுதம் மட்டும் வாங்குவாங்க..அத படிக்கவே வீட்ல தடா..அப்புறம் நாவல் படிச்சா..விளக்குமாறு பிய்யற அளவுக்கு அடி வாங்கிருக்கேன்னா பாருங்க..ஆனாலும் கொண்ட கொள்கையில மாறாது, திருட்டு தம் மாதிரி திருட்டு புக் பழக்கத்த விடலியே..(நாங்கல்லாம் யாரு)சாப்பிடும்போது படிச்சு நிறைய வாங்கிக்கட்டிருக்கேன்ங்க..அப்டி படிக்க ஆரம்பிச்சு ஒரு கட்டத்துல எதேச்சையா ரமணியம்மா கதை கண்ணில் பட்டுச்சு..அப்புறமென்ன..ட்ராக் மாறிப்போச்சு..க்ரைம் நாவல் டு குடும்ப நாவல்..அதுவும் ரமணிம்மா நாவல் மட்டுமே தேடி தேடி படிக்க ஆரம்பமாச்சு..ஒரு வயசுக்கு மேல வீடு வீடாவோ, வாடகைக்கு எடுக்கவோ போக முடியாதே..அப்போதான் லைப்ரரி ன்னு ஒண்ணு இருக்குன்னு நாபகம் வந்து ஊரில் உள்ள ஐந்து நூலகத்துலையும் உறுப்பினராயாச்சு..இங்க கிடைக்கிறது இங்க..அங்க கிடைக்கிறது அங்க..அப்டியே மாறி மாறி படிச்சு, காஞ்சனா ஜெயதிலகர் மேடம் கண்ல பட்டாங்க..தேடு அவங்களன்னு அடுத்த படையெடுப்பு..அப்டியே ஒவ்வொருத்தரா படிக்கும்போது ஜெயசக்தி மேம் மாட்டினாங்க..எந்த புக்குமே இல்லனா வேறே ஆத்தர் எடுப்பேன்..அப்டி தற்செயலா எடுத்தது தான் ஜெயசக்தி மேம்..அதுக்கப்புறம் ஒரு கட்டத்துல லைப்ரரியும் காலி..அதாவது நமக்கு தேவையான புத்தகம் இருக்காது..அப்டியே மெதுவா சிஸ்டம் ல தேட ஆரம்பிச்சேன்.. எல்லாமே கூகிள் ஆண்டவர் குடுக்காரே..இத குடுப்பாரான்னு பாத்தேன்..நம்பினோர் கைவிடப்படார் மாதிரி,,,ஹய்யோ...ஆன்லைன் ல இவங்க புக் லாம் பாத்து அப்டியே மலைச்சு போயிட்டேன் நான்.ஐயோ இவ்ளோ நாளா வேஸ்ட் பண்ணிட்டேயேடி பாவின்னு என்ன நானே திட்டிக்கிட்டேன்..அதெல்லாம் டவுன்லோட் பண்ண முடியும்னு தெரியாதுங்க அப்போ..ஓவேர் டைம் பண்ணி புக்கெல்லாம் வாசிப்பேன்...அத விட ஸ்வாசிச்சேன்னு சொல்லலாம்..ஆபிஸ் வந்தாலும் மைன்ட் புல்லா அதுதாங்க இருக்கும்...ஒரு சைட்வேல..ஒரு பக்கம் புக்குன்னு வாழக்கை ஜோரா போச்சு..அப்டியே ஒருநாள் யதேச்சையா ஒருநாள் முத்துலட்சுமி ராகவன் கண்ல பட்டாங்க..இவங்களும் நமக்கு புடிச்ச ஆத்தர்ஸ் வரிசைல ஆன்லைன்ல கண்ல பட்டதும், சரி,,,போனாப்போகுது ஒரு புக் வாசிக்கலாம்ன்னு ஆரம்பிச்சேன்..அவ்ளோதான்ங்க.. அப்புறம் அப்படியே அவங்க விசிறியும் ஆயாச்சு..அப்போதான் டவுன்லோட் பன்னமுடியும்னும் தெரியும்..இன்னிக்கே உலகம் அழிஞ்சிடும் அப்படிங்கற மாதிரி உக்காந்து டவுண்லோடோ டவுன்லோட்..அய்யோ அந்த பரவச நிலை இருக்கே,,அம்மாம்மா..சொல்ல முடியாதுங்க..அப்டி ஒரு நிலை எனக்கு..அப்புறம் தான் தெரிஞ்சது ஆன்லைன் ல நிறைய எழுத்தாளர்கள் இருக்காங்கன்னு..அமுதாஸ் ப்ளாக் ஆரம்பிச்சு என்னென்னவோ தேடித்தேடி அடிக்க ஆரம்பிச்சேன்..அன்னிக்கு ஆரம்பிச்ச தேடல் இன்னிக்கு வரைக்கும் இருக்கு..இடையில சில பல தடங்கல்கள் வந்தாலும் இன்னிக்கும் படிக்கிறேன்..முன்ன மாதிரி ஒரே நாள்ல நாலஞ்சுன்னு இல்ல..அப்போபோ படிக்கிறேன்..நிறைய நல்ல நல்ல எழுத்தாளர்கள் இருக்காங்க..இன்னுமின்னும் எழுதுறாங்க...நல்ல எழுதுறாங்க..தொடந்து எழுதுங்க..படிக்க நாங்க இருக்கோம்..இன்னும் நிறைய அனுபவம் இருக்கு..இருந்தாலும் இதோட போதும்..என்ன தான் டிஜிட்டல் யுகம்னாலும்\ கையில புத்தகம் வச்சுப் படிக்கிற சுகம் தனிதாங்க..அத விட எதோ வேலையில புக்க எங்கயாச்சும் மறந்து வச்சிட்டு தேடறதும் தனி சுகம்தான்..எழுத்தாளர்களே..தொடர்ந்து உங்கள் எழுத்துப்பயணம் நடக்கட்டும்..
ReplyForward
ஹாய் பிரெண்ட்ஸ்
வாய்ப்புக்கு முதலில் எனது நன்றி
இதற்கு முன் இப்படி ஒரு தலைப்போ பகிர்வோ நான் காணவில்லை
எனது பயணம் நாவலோடு...எனக்கு இரண்டு அக்காக்கள்..ஒரு அக்கா மிகப் பெரியவர்.எனவே அவருக்கு பொழுது போக்காக புத்தகம்
அண்டை வீடுகளில் வாங்கிக்கொடுக்கும் வேலை என்னுடையது..அத்தோடு வாடகைக்கும் அப்போது புத்தகங்கள் கிடைக்கும்.
நாலணா கொடுத்தால் ஒரு புத்தகம்..மூன்று நாட்களில் திருப்பிக் கொடுக்க வேண்டும். அக்காவிற்காக மட்டுமே நாவல்கள் எடுத்துக் கொடுத்த காலமது. அப்படியே சென்று கொண்டிருந்த நாட்களில், அப்படி என்னதான் இருக்கிறது அந்த புத்தகங்களில் என்று பார்ப்பதற்காக திறந்தேன்.பற்றிக்கொண்டது புத்தகத்தீ...
ஆரம்ப நாட்களில் எனக்கு புத்தகங்கள் செலெக்ட் பண்ணத்தெரியாது..எனவே கடைசி பக்கத்தை வாசித்துப்பார்ப்பேன்..சிரித்தார்கள்..மகிழ்ச்சி இப்படி நேர்மறையான முடிவாகத் தெரிந்தால் மட்டும் எடுத்து வருவேன்..அக்கா லக்ஷ்மி, சிவசங்கரி, அனுராதா ரமணன் வித்யா சுப்பிரமணியம், பாலகுமாரன் என்று பல பெயர்கள் சொல்லுவார்கள். நானும் எடுப்பேன்..அப்புறம் திடீரென்று துப்பறியும் நாவல்கள் கண்ணில் படவே அதை எடுக்க ஆரம்பித்தேன்..யார் படிக்கவென்று நினைக்கிறீர்கள்..எனக்குதான்,,ஹி ஹி
விவேக் ரூபலா, நரேன் வைஜெயந்தி, கணேஷ் வசந்த் இப்படி யாரை வேண்டுமானாலும் எடுத்து விடுவேன்..அக்காவிற்கு இதெல்லாம் அவ்வளவாக பிடிக்காது.. என்னையும் வீட்டில் படிக்க விட மாட்டார்கள்..ஏன்னா அப்போது ஆறோ ஏழோ படித்தேன்..அந்த வயதில் சிறுவர் மலர் மட்டும் தான் அனுமதி..அப்போ என்ன செய்வேன் தெரியுமா...
ரோட்டில் வந்து கொண்டிருக்கும்போதே வேக வேகமாக கொஞ்சம் படித்து விடுவேன்,,அப்புறம் அக்கா அம்மா கண்களைத் தப்பி கொஞ்சம்..அப்புறமா பாத்ரூமுக்கு கொண்டு போய் கொஞ்சம் படிப்பேன்..எப்படி புக்கைக் கொண்டு போவேன்னு பாக்கின்களா..வயித்துக்குள்ள வச்சு எடுத்திட்டுப்போவேன்..ஸ்கர்ட் குள்ள வச்சிடுவேன்..(என்ன ஒரு வில்லத்தனம் அந்த வயசில்..) சிலநேரம் எங்கயுமே புக் கிடைக்காது,,அதுக்காக நட்பு வட்டத்த பெருசாக்கி புக் குடுக்கல் வாங்கல் நடக்கும்..அக்கா கிட்ட எதாச்சும் காரியம் நடக்கணும்னா புக் எங்கயாச்சும் வாங்கி தருவேன்..வீட்ல அப்போல்லாம் குமுதம் மட்டும் வாங்குவாங்க..அத படிக்கவே வீட்ல தடா..அப்புறம் நாவல் படிச்சா..விளக்குமாறு பிய்யற அளவுக்கு அடி வாங்கிருக்கேன்னா பாருங்க..ஆனாலும் கொண்ட கொள்கையில மாறாது, திருட்டு தம் மாதிரி திருட்டு புக் பழக்கத்த விடலியே..(நாங்கல்லாம் யாரு)
சாப்பிடும்போது படிச்சு நிறைய வாங்கிக்கட்டிருக்கேன்ங்க..
அப்டி படிக்க ஆரம்பிச்சு ஒரு கட்டத்துல எதேச்சையா ரமணியம்மா கதை கண்ணில் பட்டுச்சு..அப்புறமென்ன..ட்ராக் மாறிப்போச்சு..க்ரைம் நாவல் டு குடும்ப நாவல்..அதுவும் ரமணிம்மா நாவல் மட்டுமே தேடி தேடி படிக்க ஆரம்பமாச்சு..ஒரு வயசுக்கு மேல வீடு வீடாவோ, வாடகைக்கு எடுக்கவோ போக முடியாதே..அப்போதான் லைப்ரரி ன்னு ஒண்ணு இருக்குன்னு நாபகம் வந்து ஊரில் உள்ள ஐந்து நூலகத்துலையும் உறுப்பினராயாச்சு..இங்க கிடைக்கிறது இங்க..அங்க கிடைக்கிறது அங்க..அப்டியே மாறி மாறி படிச்சு, காஞ்சனா ஜெயதிலகர் மேடம் கண்ல பட்டாங்க..தேடு அவங்களன்னு அடுத்த படையெடுப்பு..அப்டியே ஒவ்வொருத்தரா படிக்கும்போது ஜெயசக்தி மேம் மாட்டினாங்க..எந்த புக்குமே இல்லனா வேறே ஆத்தர் எடுப்பேன்..அப்டி தற்செயலா எடுத்தது தான் ஜெயசக்தி மேம்..அதுக்கப்புறம் ஒரு கட்டத்துல லைப்ரரியும் காலி..அதாவது நமக்கு தேவையான புத்தகம் இருக்காது..அப்டியே மெதுவா சிஸ்டம் ல தேட ஆரம்பிச்சேன்.. எல்லாமே கூகிள் ஆண்டவர் குடுக்காரே..இத குடுப்பாரான்னு பாத்தேன்..நம்பினோர் கைவிடப்படார் மாதிரி,,,ஹய்யோ...ஆன்லைன் ல இவங்க புக் லாம் பாத்து அப்டியே மலைச்சு போயிட்டேன் நான்.ஐயோ இவ்ளோ நாளா வேஸ்ட் பண்ணிட்டேயேடி பாவின்னு என்ன நானே திட்டிக்கிட்டேன்..அதெல்லாம் டவுன்லோட் பண்ண முடியும்னு தெரியாதுங்க அப்போ..ஓவேர் டைம் பண்ணி புக்கெல்லாம் வாசிப்பேன்...அத விட ஸ்வாசிச்சேன்னு சொல்லலாம்..ஆபிஸ் வந்தாலும் மைன்ட் புல்லா அதுதாங்க இருக்கும்...ஒரு சைட்வேல..ஒரு பக்கம் புக்குன்னு வாழக்கை ஜோரா போச்சு..அப்டியே ஒருநாள் யதேச்சையா ஒருநாள் முத்துலட்சுமி ராகவன் கண்ல பட்டாங்க..இவங்களும் நமக்கு புடிச்ச ஆத்தர்ஸ் வரிசைல ஆன்லைன்ல கண்ல பட்டதும், சரி,,,போனாப்போகுது ஒரு புக் வாசிக்கலாம்ன்னு ஆரம்பிச்சேன்..அவ்ளோதான்ங்க.. அப்புறம் அப்படியே அவங்க விசிறியும் ஆயாச்சு..அப்போதான் டவுன்லோட் பன்னமுடியும்னும் தெரியும்..இன்னிக்கே உலகம் அழிஞ்சிடும் அப்படிங்கற மாதிரி உக்காந்து டவுண்லோடோ டவுன்லோட்..அய்யோ அந்த பரவச நிலை இருக்கே,,அம்மாம்மா..சொல்ல முடியாதுங்க..அப்டி ஒரு நிலை எனக்கு..
அப்புறம் தான் தெரிஞ்சது ஆன்லைன் ல நிறைய எழுத்தாளர்கள் இருக்காங்கன்னு..அமுதாஸ் ப்ளாக் ஆரம்பிச்சு என்னென்னவோ தேடித்தேடி அடிக்க ஆரம்பிச்சேன்..அன்னிக்கு ஆரம்பிச்ச தேடல் இன்னிக்கு வரைக்கும் இருக்கு..இடையில சில பல தடங்கல்கள் வந்தாலும் இன்னிக்கும் படிக்கிறேன்..முன்ன மாதிரி ஒரே நாள்ல நாலஞ்சுன்னு இல்ல..அப்போபோ படிக்கிறேன்..நிறைய நல்ல நல்ல எழுத்தாளர்கள் இருக்காங்க..இன்னுமின்னும் எழுதுறாங்க...நல்ல எழுதுறாங்க..தொடந்து எழுதுங்க..படிக்க நாங்க இருக்கோம்..
இன்னும் நிறைய அனுபவம் இருக்கு..இருந்தாலும் இதோட போதும்..என்ன தான் டிஜிட்டல் யுகம்னாலும்\ கையில புத்தகம் வச்சுப் படிக்கிற சுகம் தனிதாங்க..அத விட எதோ வேலையில புக்க எங்கயாச்சும் மறந்து வச்சிட்டு தேடறதும் தனி சுகம்தான்..எழுத்தாளர்களே..தொடர்ந்து உங்கள் எழுத்துப்பயணம் நடக்கட்டும்..
|
|
Quote from monisha on November 13, 2020, 7:00 PMவாவ்! உங்க அனுபவமும் கூட கதை மாதிரி ஏற்ற இறக்கங்களோட அத்தனை சுவாரிசயமா இருந்துச்சு... ஸ்கேர்ட் குள்ள வைச்சு மறைச்சு எடுத்துட்டு போறதெல்லாம் வேற லெவல்... அது வில்லத்தனம் இல்லைங்கோ... திருட்டுத்தனம். ஆனாலும் இந்த மாதிரி திருட்டுத்தனம் செய்த வாசகர்கள்தான் பலரும். வீட்டில் நம்முடைய விருப்பத்தை புரிந்து கொள்ளாத போது இது இயல்புதான். இன்னும் கேட்டால் த்ரில்லிங்கா த்ரில்லர் படிப்பது ஒரு செம பீல்
உங்க பதிவுல அவ்வளவு எதார்த்தமா இருந்துச்சு... புன்னகையோடு ரசித்து படிச்சேன்
அருமையோ அருமை
உங்கள மாதிரி வெறித்தனமான வாசகர்கள் இருக்கும் வரை தமிழ் நாவல்களுக்கு அழிவே கிடையாது.
வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்
வாவ்! உங்க அனுபவமும் கூட கதை மாதிரி ஏற்ற இறக்கங்களோட அத்தனை சுவாரிசயமா இருந்துச்சு... ஸ்கேர்ட் குள்ள வைச்சு மறைச்சு எடுத்துட்டு போறதெல்லாம் வேற லெவல்... அது வில்லத்தனம் இல்லைங்கோ... திருட்டுத்தனம். ஆனாலும் இந்த மாதிரி திருட்டுத்தனம் செய்த வாசகர்கள்தான் பலரும். வீட்டில் நம்முடைய விருப்பத்தை புரிந்து கொள்ளாத போது இது இயல்புதான். இன்னும் கேட்டால் த்ரில்லிங்கா த்ரில்லர் படிப்பது ஒரு செம பீல்
உங்க பதிவுல அவ்வளவு எதார்த்தமா இருந்துச்சு... புன்னகையோடு ரசித்து படிச்சேன்
அருமையோ அருமை
உங்கள மாதிரி வெறித்தனமான வாசகர்கள் இருக்கும் வரை தமிழ் நாவல்களுக்கு அழிவே கிடையாது.
வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்