Kavalum kadhalum-final
13
ஆதியிடம் மல்லிகா கூறியது இதுவே அந்த பெராலிஸஸ் பேஷண்டான தன் கணவனை காண்பித்தாள். நேற்று அதை பார்த்ததும் ஆதியின் மனம் இளகியது.
“ச்சி….இப்படி பட்ட பொன்ன போய் சந்தேக பட்டடுமே கண்டிப்பாக ராகவனை மல்லிகா கொன்னுருக்க மாட்ட….அவ்ளோ ஆக்ரோஷமான மனசு அவளுக்கு கிடையாது.” என்று நொந்து கொண்டான்.
இரண்டு நாள் கழிந்தது.
வீட்டில் அசதியாக உக்கார்ந்து பேப்பர் படித்துக்கொண்டு இருந்தான் ஆதி அப்போது ஆனந்திக்கு பிரசவ வலி ஏற்படாடது என்று தகவல் வர அங்கு விரைந்து சென்றான்.
ஏழு மாசம் தானே அதுக்குள்ள எப்படி என்று தன் தாய் காமட்சி யிடம் விடை கேட்க, “ஆதி கன்னு கொர பிரசவம் னா அப்படி தான்” என்று கூற அவனுக்கு நடப்பது எதுவும் புரியவில்லை.
முதல் பிரசவம் என்பதால் பயத்தில் தன் கணவன் உடன் இருக்க ஆசை கொண்டு டாக்டர் மூலமாக சொல்லி ஆதியை உள்ளே வர சொன்னாள்.
“மாமா எனக்கு பயமா இருக்குடா” என்று அவன் கையை இருக்கமாக பிடித்துக்கொள்ள,
சிறிது நேரத்தில் குவா குவா சத்தம் கேட்டது. அழகான ஆண் குழந்தை பிறந்தது.
வெளியே வந்த ஆதி முதலில் தன் தாய் காமாட்சி யை கட்டி அணைத்து, “அம்மா…ஐ ..லவ் யூ சோ மச்” என்று நெத்தியில் முத்தம் பதித்தான்..
“என்னடா கன்னு” என்று தாய் கண்ணீர் விட,
“மா….இப்படி தானே நீயும் நான் வித்யா லா பிறக்குறப்ப கஷ்டபட்டுருப்ப.” என்று மீண்டும் அணைத்தான். அவனறியாமல் கண்களிலிருந்து கண்ணீர் வந்துக்கொண்டே இருந்தது.
“மா…..எனக்கு…எனக்கு பையன் பிறந்திருக்கான் என்று மகிழ்ச்சியில் வார்த்தை யை எண்ணி எண்ணி கூறினான்”
வித்யா – “டேய் அண்ணா…அழாத டா டேக் இட் ஈஸி….விடு டா….& கங்க்ராட்ஸ் டா.”
“இல்லை டி வித்யா….எனக்கு பையன் பொறந்த சந்தோஷத்தை விட ஆனந்தி அய்யோ அம்மானு கதறியது தான் கண்ணில் முன்னாடி வருது”
அண்ணணுக்கு ஆறுதல் சொல்லியவாரு தானும் தனக்கு கல்யாணம் பிறகு நடக்கபோகும் பிரசவம் நினைத்து சற்று பயந்தாள்.
******
பூவரசன் சொல்வதை காதில் வாங்கியபடி தன் மனதில் பட்டதை சொன்னாள் ரேணுகா, “ஏங்க நீங்க என்னமோ உங்க தங்கச்சி மனநிலை பாதிக்கப்பட்ட வ னு சொல்றீங்க… ஆனால் உங்க தங்கச்சியை பார்த்தாள் எனக்கு அப்படி தோனலை….அவ ஆன்லைன் ஷாப்பிங் பன்றதை நான் பார்த்தேன் அது எப்படி மனநிலை பாதிக்க பட்ட பொன்னு அதெல்லாம் பன்னமுடியும்?”
“அப்படியா சொல்ற?”
“இல்லை டி எனக்கு நல்லா தெரியும் அவளுக்கு டாக்டர் தான் பரிசோதித்து மென்டலி சேலஞ்டுனு சர்டிபிகேட் தந்தாரு.”
“எ….என்னங்க சொல்றுங்க…எனக்கு ஒன்னுமே புரியல….உங்க தங்கச்சி காக தான் என்னை சீக்கிரம் கல்யாணம் பன்னிங்க ….ஆனால் உங்க தங்கச்சி நல்லாவே இருக்கானு உங்களுக்கு புரிய மாட்டேங்குது”
“விடு நான் இனிமே அவளை கவனிக்கிறேன் கவலை படாத……என்றபடி தன் தங்கையை திரும்பி பார்க்க அவளோ சிறுபிள்ளை போல் வாயை அசைத்து கொண்டு பொம்மை யை” பார்த்து கொண்டிருந்தாள்
சில நாட்கள் கழித்து..
கார்த்திக் வித்யாவுக்கு இன்று திருமணம் நடைபெற்றது சரியாக காலை 6.30-7.30 முஹூர்த்தம்…. சும்மா பட்டு புடவைல ஜம்முனு மாலையும் கழுத்துமா உக்கார…பக்கத்தில் பட்டு வேட்டியுடன் அவன் . லேசாக அவளை சீண்டிவிட்டு, “ஓய் பொண்டாட்டி”
அவள் அவனை பார்த்து கண்ணடிக்க இவர்களுக்கு இடையில் ஒரு படமே ஓடிக்கொண்டிருந்தது.
கெட்டி மேளம் கெட்டி மேளம் என்றதும் தாலி ஏறியது அவள் கழுத்தில் அவன் கையால்.
கல்யாணம் முடிந்த கையோடு இருவரும் கோவிலுக்கு அழைத்து சென்றனர்….கார்த்திக் கு கல்யாணம் ஆனால் பொன்னு விரதம் ஒரு வாரம் இருக்க சொல்றனு கார்த்திக்கின் அம்மா வேண்டியதை தன் மருமகளிடம் கூற….
ஷாக் ஆயிட்டான் நம்ப கார்த்திக்…..
……………
‘ச்ச இந்த மம்மி நல்லா கால் வாரி விட்டுருச்சு விரதம் னு சொல்லி… என்ன பன்றது.. மொத்தத்தில் ஒன்னும் பண்ண இயலாது சரி நம்ப மூடிட்டு இருப்போம் என்று கார்த்திக் யோசிக்க..’
“ஹலோ புருஷா உன் மைண்டு வாய்ஸ் கேக்குது.”
ஓ…கேட்டுருச்சா 😀😀😀😀ஈஈஈ என்று பல்லை இளிக்க அவளோ அசடு வழிது” என்று கிண்டல் அடிக்க ஒரே ரகளையாய் இருந்தது. இன்று முதல் விரதம் தொடர்ந்தது வித்யாவுக்கு.
*******
அன்று ஆதி மாற்று வேடத்தில் இருப்பது கூட தெரியாமல் அவளது தோழி மீனு அங்கு வந்தாள். அவனிருக்கும் அப்பார்ட்மண்டில் வீடு ஒன்று வாடகைக்கு எடுக்க வந்தவள் சரியாக ஆதி தங்கியிருந்த வீட்டுக்கு பக்கத்தில் அவள் பார்க்கும் வீடு…..
வீட்டை பார்த்து விட்டு இது தெற்கு வாசலாச்சே நமக்கு சரியா வராதே என்று யோசித்து கொண்டே வெளியே வர ஆதி மீது மோதிக்கொண்டாள்…
“மேடம் முஜே மாஃப் கீஜியே” என்று ஹிந்தியில் கூற…..
ம்ம்ம் இட்ஸ் ஓகே என்றபடி அவனை பார்க்க… இவனை எங்கேயோ பார்த்துருக்கோமே என்று யோசிக்க…. அவன் அவளது காதில் “ஏய் லூசு நான் ஆதி டி பக்கி…”
“என்ன?”
“ஆமா மாறுவேடத்தில் இருக்கிறேன்…உள்ள வா…சொல்றேன்.” என்று உள்ளே அழைத்து விவரத்தை கூறினான் அப்போது தான் ஒரு விஷயத்தை அவனுக்கு நினைவுட்டினாள்.
கார்த்திக் ….தன் உறவினர் ஒருவரின் கல்யாணத்துக்கு சென்றான் வித்யாவை அழைத்து கொண்டு….. விரதம் என்ற பெயரில் அவள் அங்கும் எதுவும் சாப்பிடாமல் இருக்க…
“என்ன டி இதெல்லாம்? இதுக்கா டி ஆசையா கல்யாணம் பன்ன? ஆசைப்பட்டு எதும் சாப்பிடவும் மாட்டேங்குற… என் கூட சந்தோஷமாவும் இல்லை……. எதுக்கு டி இந்த விரதம்”
“உங்க அம்மாவோட வேண்டுதல் நிறைவேற்றனும்…ஒரு நல்ல மருமகள் னு ப்ரூ பன்ன இது ஒரு நல்ல வாய்ப்பு எனக்கு”
“அதுசரி… இங்க என் பீலிங்ஸ யாரும் புரிஞ்சிக்கிறது இல்லை… உன்னை அன்னைக்கே.” என்று அவன் அன்று கல்யாணம் முன்பு நடந்து ரொமான்டிக் விஷயத்தை நினைவு கூற
“ஓ….அப்போ இதுக்கு தான் கல்யாணம் பன்னிட்டிங்களா.???ச்ச”
“ஏய் அப்படி இல்லை டி”
“நீ எதுவும் பேசாத என்று கோபித்து கொண்டு விரு விரு னு கிளம்ப..அவள் கையை அவன் பிடிக்க அதை உதறி தள்ளி ஆட்டோவில் ஏறி நேராக வீட்டுக்கு வந்தாள் வித்யா…..பின்னாடியே பைக்கில் வந்தான்.
‘கார்த்திக்…ச்ச ரொம்ப கஷ்டபடுத்துருமோ அவளை’ என்று வருந்தினான். வரும் வழியில் யாரையோ ஆதி துரத்துவதை கண்டான்.
“ஆதி மச்சான்ஸ் வா பைக்கில் ஏறு” என்று ஏத்திக்கொண்டு இருவரும் துரத்தினர்….முன்னே ஓடி செல்பவரோ வேகமாக ஸ்கூட்டியில் செல்ல…சந்து பொந்துக்குள் புகுந்து தப்பிக்க முயற்சி செய்யவே கார்த்திக் குறுக்கு வழியில் சென்றான் …
“ஆதி மச்சி யாரை துரத்துறீங்க?”
“அய்யோ அக்யூஸ்ட் மச்சான் ராகவன் கேஸ் ல வசமாக மாட்டின பக்கி …பிடிச்சு கோர்ட்டில் ஆஜார் படுத்தனும்”
“அப்படியா? 😊😊எப்படியோ ஒருவழியாக கேஸ் முடியபோது சந்தோஷம்….ம்ம்ம் என் விஷயம் என்ன ஆகுமோ தெரியல”
“ஏன் உங்களுக்கு என்ன?”
“உன் தங்கச்சி மா கோச்சிக்கிட்டா மச்சான் விடு பார்த்துக்கலாம்…”
“ஓய் என் தங்கச்சி யை எதாவது பன்ன மவனே என்கவுண்டர் தான்”
“பன்னி தொலைங்க மச்சான்…அப்படியாச்சும் எமலோகத்துல சந்தோஷமா இருக்கேன்”
“சரி சரி போய் ஸ்கூட்டியை மடக்கு.”
“மடக்கிடலாம் …ம்ம்ம் மாட்டினியா பக்கி என்று கூறிக்கொண்டு அந்த ஸ்கூட்டியை மடக்க …இறங்கி ஆதி அவளை பிடித்தான்”
********
வீட்டுக்கு வந்த வித்யா கோபித்துக்கொண்டு தன் அறைக்கு செல்ல ..இவளது மாமியாருக்கு ஏதோ சண்டை இருக்கும் போல நம்ப பையனுக்கும் மருமகளுக்கும் என்று யோசித்து அவளறைக்கு சென்றாள்
“அம்மாடி வித்யா….என்ன மா?”
“வாங்க அத்தை..என்று சொல்லிவிட்டு அவரை பார்க்காமல் திரும்பிக்கொண்டாள். “அம்மாடி என்ன மா கோபம்?”
“ம்ம்ம் என்ன செய்ய எல்லாம் உங்களால தான்… ச்ச புதுசா கல்யாணம் ஆனவங்களை போயிட்டு விரதம் அது இதுனு இப்ப பாருங்க இதனாலயே எங்களுக்குள்ள பிரச்சினை.”
“அ….மா….இது எனக்காக சொல்லல மா நீயும் மகனும் நல்லாயிருக்கனும்னு பன்றது…கல்யாணம் ஆனால் பன்றதா வேண்டுதல் இருந்தது அதான்.”
“ஆமா அப்படினா இதை உங்க பையன் கிட்ட நீங்களே பேசிக்கோங்க…என்கிட்ட சொல்லி எந்த பிரயோஜனம் இல்லை. “
இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போது கார்த்திக் உள்ளே நுழைய, “வா கார்த்திக் என்னடா உன் பிரச்சினை?”
“மா……இது உனக்கே நல்லாயிருக்கா ..நான் சொன்னனா? இப்படி வேண்டிக்கோ னு? ஏன் மா இதெல்லாம்.”
“டேய் உனக்கு ஜாதகத்தில் தோஷம் இருந்தது இப்படி பன்னா சரியாகிடும் னு ஜோஸியர் சொன்னார் அதான்”
“ஹாஹா இன்னுமும் இந்த மாதிரி மூடநம்பிக்கை ல இருந்து வெளியே வரமாட்டிங்கல?”
“அப்படி இல்லை… டா” என்று சொல்லும்போதே இடத்தை விட்டு நகர்ந்தான் அவனை சமாதானம் செய்ய வித்யா பின்தொடர அவசரமாக படி இறங்கும்போது காலில் சுளுக்கிட… ஸ்ஸா….ம்மா…..ஆ னு காலை பிடித்தபடி அவள் அலறிட இவனோ அவளை அப்படியே தூக்கி ஸோபாவில் உக்கார வைத்து அவள் காலின் சுளுக்கை நீவி விட எண்ணெய் எடுத்து வந்து நீவிவிட்டான்.
சிறிதும் கலங்கமில்லாமல் அவளின் காலை நீவிவிட்டான். “ரொம்ப வலிக்குதா?”
“ம்ம்ம்….. ஆனால் அதைவிட நீங்க என்கிட்ட கோச்சிக்கினது ரொம்ப வலிக்குது.”
“அடிப்பாவி! கோச்சிக்கிட்டு ஆட்டோல வந்தவ நீ …என்னை சொல்றீயா????பக்கி. சரி சரி நீ ரெஸ்ட் எடு எந்த வேலையும் செய்யாத மூனு நாள் பிடிச்சு விட்டா எல்லாம் சரியாகடும் அப்புறம் பெயின் குறைய டாபிலட் தரேன்.”
“ம்ம்ம்….. சரி என்று அவனை அன்போடு பார்த்தாள்.”
“குற்றம் சாட்டபற்ற இந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பில் வாதாட வக்கிலுக்கு உத்தரவிடுகிறேன்”
“யுவர் ஆனர்…எனது கட்சிக்காரர் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் என்று தாங்களே கூறுகிறீர்கள் பிறகு எவ்வாறு ஒரு கொலையை அந்த பெண் செய்திருக்க இயலும்?”
அங்கு குற்றவாளி கூண்டில் நிற்பது பூவரசனின் தங்கை…
“ஆம் நம் ஆதி துறத்தி பிடித்தது இவளை தான் . ஆக….உண்மையில் அவள் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணா?”
ஆதி விசாரணை நடத்தினான் அவளிடம்….
“உன் பெயர்?”
“வள்ளி”
“ஓ……யார் கூட தங்கியிருக்க????
“அண்ணன் அண்ணி கூட”
“ம்ம்ம்…. சரி ராகவன் பேரு ஏன் பச்சை குத்தியிருக்க.”
சட்டென்று அவள் முகம் மாறியது.
“இல்லை இல்லை அவன் யாருன்னு தெரியாது.”
“ஹாஹா தெரியாதா இல்லை தெரியாத மாதிரி நடிக்கிறியா?”
“சத்தியமா தெரியாது.”
“அவளை பார்த்து கண்ணடித்தான் இப்படியே மெயிண்டென் பன்னு” என்று. (உண்மையில் அவளை காப்பாற்ற நினைக்கிறான் ஆதி)
“ம்ம்ம் அது சரி ….அப்போ யார் நினைத்து பச்சை குத்தின?”
“அது வந்து…ஆ…நான் ராகாவா லாரன்ஸ் பேன் அதான் பச்சை குத்தியிருக்கேன்” என்று வெகுளியா கூற…. மீண்டும் வக்கீல் பேச்சை துவங்கினான்.
“எனது கட்சிகாரர் இவ்வளவு வெகுளியாக பேசும் போதே தெரியவில்லை யா யுவர் ஆனர்”
நீதிபதி – வள்ளியின் மெடிக்கல் சான்றிதழ் காட்டவும்..
சான்றிதழ் சரிபார்த்து விட்டு ….
“குற்றம் சாற்றபட்ட வள்ளி மனநிலை பாதிக்கப்பட்ட பெண் என்பது உறுதியானது எனவே அவரது குற்றம் யாவும் அறிந்து செய்திருக்க வாய்ப்பில்லை அவரை விடுதலை செய்கிறேன்”
விடுதலை ஆகிவிட்டு கையெழுத்து போட்டு விட்டு வெளியே வந்தாள் வள்ளி…வந்தவள் முதலில் ஆதிக்கு நன்றி சொல்லி, “அண்ணே என்னை காப்பாத்துனதுக்கு நன்றி”
“ஹாஹா…. ராகவன் மாதிரி ஒரு ஐயோகியன் செத்தது எவ்வளவோ மேலு….உன்னை காதலிச்சு வாழ்க்கை யை சீரழித்து…..ச்சி….அவனுக்கு நீ கொடுத்தது தான் சரியான தண்டனை.”
“இவ்வளவு நாள் பைத்தியமா நடிச்சதுக்கு மன்னிச்சிருங்க எல்லோரும்.”
“தங்கச்சி….விடுமா ..வா வீட்டுக்கு போலாம்.”
ரேணுகா – “முதல்ல குடும்பத்தோட குலதெய்வ கோவிலுக்கு போயிட்டு வருவோம் . இன்னியோட நம்பள பிடிச்ச சனி போகட்டும்.”
கேஸ் முடிந்த கையோடு அவனுக்கு அவார்டு கிடைத்தது….ம்ம்ம் அப்புறம் என்ன? இரண்டாவது பேபிக்கு ப்ளான் போட்டான்…..
அதுக்குள்ள வித்யா ….தலைபிரசவதுக்கு அம்மா வீட்டுக்கு வந்தா. டோட்டல் பேமிலி ஹேப்பி.
**நிறைவு**