You don't have javascript enabled
Narmada novelsRomance

Madhu’s Maran-12

அத்தியாயம் 12:


மாறனின் தொலைபேசி எண்ணிற்கு அழைத்த வாணி, “எங்க போறோம்னு சொல்லுங்கப்பா. அப்ப தான் அதுக்கு ஏத்த மாதிரி டிரெஸ் செலக்ட் செய்ய முடியும்” என்று வினவினாள்.

“லெகின்ஸ் டாப் போட்டுக்கோ. நீ குட்டிப் பொண்ணா தெரியுற டிரெஸ் போட்டா போதும். சிம்பிளா இருந்தா போதும்.  நான் இன்னும் அரை மணி நேரத்துல வேலைய முடிச்சிட்டு வந்துடுவேன்.  நீ கிளம்பி ரெடியா இரு” என்றவன்,

“ஹே இரு இரு ஃபோன வச்சிடாத” என கத்த,

“என்னாச்சு வெற்றி” என்றாள்.

“ப்ளூ லெகின்ஸ் யெல்லோ டாப் காம்பினேஷன்ல உன்கிட்ட ஒன்னு இருக்குமே, அதை போடு” என்றான் மாறன்.

“அதென்ன பர்டிகுலரா இந்த டிரஸ்ஸூ” என வாணி கேட்க,

“நீ கிளம்பி இரு.  ஏன் எதுக்குனு கேள்வி கேட்காத”  என்று ஃபோனை வைத்து விட்டான்

“எங்க போறோம்னு அப்பவாவது வாயிலருந்து வருதா பாரு.  சப்ரைஸ்னா மட்டும் எப்படி கேட்டாலும் வாய்ல இருந்து ஒன்னும் வர வைக்க முடியாது” என வாய்குள்ளேயே முனங்கியவள் கிளம்பலானாள்.

வீட்டை அடைந்த மாறன்,  “கிளம்பலாமா??” எனக் கேட்டு தானும் குளித்து முடித்து ப்ளூ ஜூன்ஸ் யெல்லோ டீ ஷர்ட் அணிந்துக் கொண்டான்.

“வாவ் சேம் டு சேம்.  சேம் பிஞ்ச்” என அவனின் கையை கிள்ளியவள்,

“இந்த டீசர்ட் எப்பப்பா எடுத்தீங்க??” என முழு நீள கண்ணாடி முன் தன் உடையை சரி செய்துக் கொண்டிருந்த மாறனின் முன்பு போய் நின்று அவள் கேட்க,

அவளை கண்ணாடி பார்க்குமாறு திருப்பி நிறுத்தியவன், குனிந்து அவளின் இடையை பற்றி அவளின் கன்னத்தை வைத்து கண்ணாடியை பார்த்தவன்,

“செம்ம ஜோடிலடா நம்ம செல்லகுட்டி” என பூரிப்பாய் கூற,

“ஆமா ஆமா” என கூறியவள்,

“உங்களுக்கு முதுகு வலிக்க போகுது நிமிர்ந்து நில்லுங்க,  எனக்காக எவ்ளோ குனிய வேண்டியதா இருக்கு உங்களுக்கு” என அமைதியாய் கூறினாள்.

அவளின் முக மாற்றத்தை கண்டவன்,

கண்ணாடியில் பார்த்த தங்களது ஜோடி பொருத்தமும் முகத்தின் அருகாமையும் அவளை எதையோ எதிர்மறையாய் தாக்கியுள்ளது என கண்டு கொண்டவன்,
ஒரு சிறிய மேஜையை எடுத்து வந்து அதில் அவளை நிற்க வைத்தான்.

இப்ப பாரு என்றவன்,  குனியாமலேயே அவளின் இடை பற்றி கன்னத்தோடு கன்னம் வைத்து அவன் கண்ணாடி பார்க்க,   அதன் தங்களை பார்ததவள்,

“வெற்றிப்பா வெற்றிப்பா செல்பி செல்பி எடுக்கலாம்” என மேஜையிலிருந்தே குதித்தாள்.

“இரு இரு விழுந்து வச்சிடாத”  என்றவன்,

தங்களை விதவிதமாய் அவனின் ஃபோனில் படம் பிடித்திருந்த  நேரம் அவனுக்கு அழைப்பு வர,  சட்டென்று போனை லாக் செய்தவன்,

“இரு ஃபோன் பேசிட்டு வரேன்” என வெளியில் சென்றான்.

“ஃபோன் லாக் செஞ்சிட்டு போற அளவுக்கு என்ன சப்ரைஸ். ‘A’னு தான் எதோ பேர் பார்த்தோம்.  யாரு ஃபோன் செஞ்சிருப்பா??” என இவள் யோசித்திருந்த சமயம்,

“வா மது கிளம்பலாம். அம்மாகிட்ட நான் முன்னாடியே சொல்லிட்டேன்.  நைட் அவங்க மட்டும் இங்க சாப்பிட்டுப்பாங்க”  என்றவன் கூற,

“அத்தைக்கும்  மாமாவுக்கும் நாம வாங்கிட்டு வந்துடலாமா”  என்றவள் கேட்க,

“இல்ல மது.  நம்ம வர லேட் ஆகும்.  அதுக்குள்ள  அவங்க தூங்கிடுவாங்க. ஓவரா கேள்வி கேட்காம கிளம்பு நீ… டைம்  ஆகுதுல”  என அவளை பேச விடாமல் அழைத்துக் கொண்டு சென்றான்.

அவர்களின் கார் நின்றது ஒரு ஹோட்டலின் வாசலில்.

“யாரை  இங்க பார்க்க போறோம்” என்று வாணி கேட்க,

“உன்னை சைலண்ட்டா வர சொன்னேன்” என்றவன் முறைக்க,

கையை  வாயை பொத்தியது போல் அவள் வைக்க,
புன்சிரிப்பை  உதிர்த்தவன் அவளின் கை பற்றி அழைத்து சென்றான்.

அங்கு இவர்களுக்காக ரிசர்வ் செய்த இருக்கையில் ஒரு கும்பலே அமர்ந்திருக்க,  அவர்களை பார்த்த நொடி வாணி பூரிப்பாய் சிரித்தவள்,

“ஹே எல்லாரும் எப்படி இருக்கீங்க”  என்றாள்.
(இந்த கும்பல் அனைவரும் வாணியின் தோழமைகள். இக்கதையின் முதல் பாகமான உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம் நாவலின் கதாநாயகர்கள் நாயகிகளாய் வலம் வந்தவர்கள் இவர்களே!! உடன் வாணியும் இருப்பாள் அக்கதையில்)

” ஹை டி” என மஹாவும்,

“ஹை வாணி” என வேணியும்,

“ஹே கேபி எப்படி இருக்க”  என ஆஷிக்கும் தொடர்ந்து அவளிடம் கேட்க,
(கேபி என்பதன் விரிவாக்கம் குட்டிப்பொண்ணு. ஆஷிக் அவளை அவ்வாறு தான் விளிப்பான்)

“நான் உங்க எல்லார் மேலயும் கோபமா இருக்கேன்” என்றவள்,

“எதுக்குப்பா என்னைய இவங்கள பார்க்க கூட்டிட்டு வந்தீங்க”  என்று கண்ணில் கோபம் மின்ன நெஞ்சில் வலி சேர கேட்டவள்,

“இவங்க யாருக்கும் நான் எப்படி இருந்தாலும் கவலையில்லை.  அவங்கவங்களுக்கு அவங்க ஃலைப் முத்கியமா போய்ட்டு” என்று அழ,

வேணி மஹாவும் அவளினருகே சமாதானம் செய்ய செல்ல,

“மதும்மா, இத்தனை நாள் கழிச்சி பார்க்குறவங்க கிட்ட இப்படியா பேசுவ”  என கோபமாய் முறைத்தவன்,

“நான் கேட்ட ஒரு வார்த்தைக்காக உடனே உன்னை பார்க்க வந்திருக்காங்க.  நீ அவங்களை இன்செல்ட் பண்ணிட்டு இருக்க. சே சாரி” என அவளை முறைக்க,

கண்ணில் வந்த நீரை துடைத்தவள், “சாரி” என்றாள். 

ஆனால் அதன் பிறகு மாறனருகே அமராது கோபமாய் எழுந்து சென்ற வாணி,  வேணிக்கும் மஹாவிற்குமிடையே அமர்ந்துக் கொண்டாள்.

இவற்றை அமைதியாய் பார்த்திருந்த ஆஷிக், மாறனருகே சென்று அமர்ந்துக் கொண்டான்.

“எங்க வாணிய என்னா மிரட்டு மிரட்டுறீங்க…  இதெல்லாம் சரியில்லை சொல்லிட்டேன் ஆமா…  உங்களை நல்லா பார்த்துக்க சொல்லி தானே எங்க ஃப்ரண்ட கொடுத்தோம்” என ஆஷிக் மாறனிடம் கேட்க,

“டேய் என் புருஷன் என்னைய என்னனாலும் சொல்லுவாரு.  அதை கேட்க நீ யாருடா” என கையில் கிடைத்த கரண்டியால் ஆஷிக்கின் மண்டையில் இவள் தட்ட,

மாறன் சிரிப்பாய் பார்த்திருக்க,

“அடியேய் கேபி அறிவிருக்கா உனக்கு” என ஆஷிக் கத்த,

“ஹான் எனக்கு அறிவில்லை தான்.  உன்கிட்ட தான் அப்படியே நிறைஞ்சு வழியுதே, அதே எனக்கு கடனா கொடுத்துடு” என பழிப்பம் காட்டினாள்.

இவர்களின் பேச்சை கேட்டு சிரித்தனர்  அனைவரும்.  அந்நேரம் “சாரி ஃபார் த  டிலே” என வேணியின் எதிரில் வந்தமர்ந்தான் இளா.

வேணியும்  மஹாவும் தங்களின் குழந்தையை மடியில் அமர்த்தியிருக்க,

பெண்கள் மூவரும் சோபா சைடில் அமர்ந்திருக்க,  அதற்கு எதிரிலிருந்த நாற்காலியில் இளா, மாறன் மற்றும் ஆஷிக் அமர்ந்திருந்தனர்.

“வாங்கண்ணா எப்படி இருக்கீங்க??” என வாணி நலம் விசாரித்துக் கொண்டே அவர்களின் குழந்தையை கொஞ்சிக் கொண்டிருக்க,

“அடியேய் குழந்தையை கொஞ்சினது போதும். எங்ககிட்ட கொஞ்சம் பேசு” என இரு பெண்களும் உரைக்க,

இளா அவனின் மகனையும், மாறன் மஹாவின் குழந்தையையும் கைகளில் வாங்கி கொண்டனர்.

“நான் வரும் போது இங்க ஏதோ பஞ்சாயத்து நடந்துச்சே என்னதது” என்றான் இளா.

“நீங்களே சொல்லுங்க இளாண்ணா. இவங்க இப்ப மட்டுமில்லை எப்பவுமே இப்படி தான் பண்றாங்கனு வெற்றிக்கு தெரியலை. நான் லண்டனுக்கு போன பிறகு யாராவது என்கிட்டே பேசினாங்களா… எல்லாரும் அவங்கவங்க ஃலைப்ல பிசி ஆகிட்டாங்க தானே.  நான் திரும்ப பெங்களுர் வந்தப்ப கூட யாருமே அங்க இல்ல.  அப்புறம் நான் சிங்கப்பூர் போன  பிறகு தான் திரும்பவும் டச்ல வந்தாங்க.  அதுவரை டச்ல கூட இல்லை.  சரி அவங்க பேசலைனா என்ன… நீ எப்பவும் போல கால் செஞ்சிட்டு மெசேஜ் பண்ணிட்டு போக வேண்டியது தானேனு தான் எல்லாரும் கேட்பீங்க.

லண்டன்ல இருக்கும் போதும் சரி திரும்ப பெங்களுர் வந்தப்பவும் சரி என்னால முடிஞ்ச நேரம்லாம் மெசேஜ் செஞ்சிட்டு என் ஃலைப்ல நடக்குற முக்கிய விஷயம்லாம் பகிர்ந்துட்டுனு நான் செய்ய தான் செஞ்சேன்.  எனக்கென்னமோ நானே எப்பவும் போய் பேசுற ஃபீல் ஆகிட்டு” என கவலையாய் வாணி கூற,

“அப்படி இல்ல  வாணி,  எங்களுக்கு மேரேஜ் ஆகிட்டு. ஃபேமிலி ப்ராப்ளம் கமிட்மெண்ட்ஸ்னு எக்கசக்க விஷயங்கள் இருக்கு.  அதுல உன்னையே நினைச்சிட்டு இருக்க முடியாதுல வாணி” என்று வேணி கூற,

“கண்டிப்பா முடியாது தான் அம்மு.  ஆனா ஒருத்தங்களுக்காக நேரம் ஒதுக்கனும்னு நினைச்சா எந்நேரம்னாலும் எவ்ளோ பிசினாலும் பேசலாம்.  ஆனா பேசனுங்கிற எண்ணம் இரண்டு பேருக்குமே இருந்தா மட்டும் தான் அது சாத்தியம்.
நான் ஃபோன் பண்ணும் போது நீ பிசினா அடுத்து நீ எப்ப ஃப்ரீயோ அப்ப எனக்கு கால் பண்ணலாம்.  ரெண்டு பேரும் எப்ப ஃப்ரீனு ப்ளான் பண்ணிட்டு பேசலாம்… ஆனா இங்க பேசனுங்கிற எண்ணமே யாருக்குமே இல்லைனும் போது, நான் மட்டும்  கால் செஞ்சி என்ன பயன்” என்றாள் வாணி விரக்தியாய்.

வேணிக்கும்  மஹாவிற்கும்  அவளின் பேச்சு சற்று கோபத்தை மூட்டினாலும், அவளின் பாச குணம் அறிந்ததினால் அவளை எவ்வாறு சமாதானம் செய்யவென புரியாமல் ஆஷிக்கை பார்க்க,

“கேபி” என ஆஷிக் தொடங்க,

“நீ பேசாத…  மூஞ்சுலயே குத்துவேன்… வாயிலயே அடிப்பேன்” என்று ஆவேசமாய் வாணி தொடங்க,

“என்ன மாறன்!! வீட்டுல தினமும் உங்களை அடிச்சு வெளுக்குறால… குத்துவேன் அடிப்பேன்னு பேசுறா… எங்க வாணிக்கு இப்படி அராஜகமாலாம் பேச தெரியாதே” என ஆஷிக் ஏதோ சொல்ல முனைய,

“அவரை ஏன்டா இதுல இழுக்குற” என ஆஷிக்கை அவள் முறைக்க,

இப்பொழுது அனைவரும் வாணியை மலை இறக்க மாறனையே நாடினர்.

அவன் சொன்ன ஒரு வார்த்தைக்காக சாரி சொன்னவளாயிற்றே அதனால் மாறன் கூறினாள் கேட்பாள் என நம்பினர்.

அவர்களின் கெஞ்சும் பார்வையை பார்த்தவன், “மதும்மா இப்படி நீ சண்டை போடுவனு தெரிஞ்சிருந்தா யாரையும் நான் கூப்டுறுக்க மாட்டேன். இன்னும் நீ அவங்களை கஷ்டபடுத்திட்டு இருக்க.  ஃப்ரண்ட்ஸ்குள்ள  திட்டிப்பாங்க அடிச்சிப்பாங்கனு நான் ஒன்னும் சொல்லாம ஒதுங்கி இருந்தா நீ ஓவரா போற.  உன்னோட எக்ஸ்பெக்டேஷன் தான் ப்ராப்ளம்.  அவங்கலாம் அவங்க விஷயத்துல கரெக்ட்டா தான் இருக்காங்க”

“நேத்து மும்பைல ஆஷிக்கை பார்த்தேன்.  அங்க உடனே இவங்களுக்குலாம் கால் செஞ்சி அப்பவே உடனே டிசைட் செஞ்ச ப்ளான்.  எல்லாருக்குமே அவங்க அவங்க ஃப்ரண்ட்ஸ மீட் பண்ணனுங்கிற ஆசை ஏக்கம்லாம் இருக்க தான் செய்யும்.  அதனால தான் நான் கேட்டதும் அவங்க பிசி நேரத்திலும் எப்படியோ நேரம் ஒதுக்கி வந்திருக்காங்க.  அதை புரிஞ்சிக்கோ முதல்ல”  என்று காட்டமாய் உரைத்தவன்,

பின் அவன் அவள் கை பற்ற, அவள் அதை கோபமாய் இழுக்க முயல,  அவளின் கையை இழுத்து பிடித்தவன்,

“யாருக்கும் உன் மேல அன்பு இல்லாமலோ பாசம் இல்லாமலோ இல்ல மதும்மா.  அவங்க ப்ரயாரிட்டி ஃபேமிலினு ஆகிட்டு…  அவ்ளோ தான்.  நீ உடனே கேட்ப, நான் ஈக்வல் ப்ரயாரிட்டி தான் கொடுக்கிறேன்… அவங்க ஏன் அப்படியில்லனு. எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க.  அதுக்காக அவங்க உன் மேல காட்டுற அன்பு பொய் இல்ல.  அதை புரிஞ்சிக்கோ” என்று மென்மையாய் உரைத்தான்.

அவன் பேசி முடித்த நொடி சட்டென்று தன் கையை உருவிக் கொண்டவள்,  சற்றாய் தன் கோபத்தை மட்டுபடுத்தியிருந்தாள்.

“என்ன இருந்தாலும் மாறன்,  ரொமேன்ஸ் எப்படி பண்றதுனு உங்ககிட்ட தான் கத்துக்கனும்” என்று மாறனை  ஆஷிக் கலாய்க்க,

“அடப்பாவி, உங்களுக்காக தான்டா இவ்ளோ நேரம் பேசிட்டு இருந்தேன்” என்று மாறன் பாவமாய் முகத்தை வைத்து கூற,
அனைவரும் சிரித்திருந்தனர்.

“சரி எல்லாரும் எப்படி இருக்கீங்க??  மஹா, மதி அண்ணா வரலையா?? ஆஷிக், ரஹாவ ஏன்டா கூட்டிட்டு வரலை?? ரிஸ்வான் எப்படி இருக்கான்??” என அடுக்கடுக்காய்  வாணி கேள்விகள் கேட்க,

அவளின் கேள்வியில், “அடியே வாணி,  கோபம் வந்தாலும் படபடனு பொரியறது…  அன்பு வந்தாலும் பொங்கி பொங்கல் வச்சிடுறது. கொஞ்சமும் மாறாம அப்படியே இருக்கடி”  எனக் கூறி வேணி அருகிலிருந்த வாணியின் தோள் மீது கை போட்டு முகத்தோடு முகம் இழைக்க,

இருங்க இருங்க ஃபோட்டோ எடுக்கலாம் எனக் கூறி, மூவரின் முகமும் ஒன்றாய் இழைய அழகாய் ஒரு புகைப்படம் எடுத்தான் மாறன்.

பின் மாறன் அனைவருக்குமாக கேட்டு அவரவர் தேவைக்கேற்ப உணவு ஆர்டர் கொடுத்தான்.

“இது திடீர் ப்ளான்ல… அதனால மதியால வர முடியலை” என்றாள் மஹா.

“ரஹா  அன்ட் ரிஸ்வான் கூட்டிட்டு வர எனக்கு டைம் இல்ல”  என்று ஆஷிக் கூற,

“ஆரம்பிச்சிட்டான்டா”  என்பது போல் பார்த்த வாணி,

“என்னமோ இவன் தான் ப்ராஜக்ட்டையே தலைமேல தூக்கி வச்சிட்டு இருக்கிற மாதிரி பேசுறது” என நாக்கை துறுத்தினாள் வாணி.

“சோ எல்லாரும் சென்னைலயே செட்டில் ஆகிட்டீங்களா? பார்த்து நியர்லி ஒன் இயர் ஆக போகுதுல” என்பது போல்  வாணி பேச,

“ஆமாடி இந்த ஒரு வருஷத்துக்கே எங்களை ஒரு வழி பண்ற,   இன்னும் பேசாமலே இருந்தா என்ன பண்ணுவியோ” என்று மஹா கேட்க,

“ஹ்ம்ம் நீங்க யாரோ நான் யாரோனு போய்டுவேன்” என்று வாணி கூற,

“ஹ்ம்ம் போதும்மா போதும்.  திரும்பவும் வேதாளம் முருக்கைமரம் ஏறுறதுக்குள்ள நம்ம வேற டாபிக் டைவர்ட் பண்ணிட்டு போய்டுவோம்” என்று ஆஷிக் கூறிய நொடி,

அனைவருக்கும் ஆர்டர் செய்த சூப்பும் ஸ்டாடர்ஸூம் வர உண்ண ஆரம்பித்தனர்.

“கேபி மாறன் இன்னிக்கு கண்டிப்பா உங்களோட ஃபர்ஸ்ட் மீட் பத்தி சொல்லியே தீருரீங்க.  இன்னிக்கு பார்த்தா கூட உங்க ரெண்டு பேர்கிட்ட அவ்ளோ லவ்ஸ் தெரியுது. இது கண்டிப்பா அரேன்ஜ்டு  மேரேஜா இருக்க வாய்ப்பில்லை”

“எப்படி எங்க வாணி மேல லவ் வந்துச்சு சொல்லுங்க மாறன்” என்று ஆஷிக் கேட்கவும்,

“நான் சொல்றேன் நான் சொல்றேன்” என்று வாணி கூற,

“யாரோ லவ் பண்ணி காதல் நதியில நீந்தி குழந்தைலாம் பெத்ததுக்கு பிறகு தான் இந்த கதையை சொல்வேனு சொன்னாங்கப்பா… அது யாருனு தெரியுமா” என ஆஷிக் வாணியை கிண்டல் செய்ய,

“இப்ப எங்க லவ் ஸ்டோரி உனக்கு தெரிஞ்சிக்கனுமா வேண்டாமா” என வாணி ஆஷிக்கை பார்த்து கேட்க,

“ஹே இது அப்ப நிஜமாவே லவ் மேரேஜ் தானா?” என மஹா, வேணி, ஆஷிக், இளா அனைவரும் இன்பமாய் அதிர்ந்து கோரஸாய் கேட்டனர்.

வாணியிடம் முன்பே அவளை பார்த்து, தான் காதல் கொண்ட கதையை உரைத்திருந்தான் மாறன்.

வாணியை பொறுத்துவரை தற்போது அவள் கூறும் கதை தான் மாறன் அவளை முதன் முதலாய் பார்த்த நாள்.

ஆனால் அவளை அதன் முன்பே பார்த்திருந்த விஷயம் மாறன் மட்டுமே அறிந்த உண்மை அது.

தனக்கு தெரிந்த மாறனின் காதல் கதையை கூறினாள் மதுரவாணி.

இது தான் மதுவின் மேல் மாறன் காதலை உணர்ந்த தருணத்தை தெரிவிக்கும் கதை.

— நர்மதா சுப்ரமணியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content