You don't have javascript enabled
RomanceRomantic comedysivaranjani novels

Vithai-10

விதை 10

  அதன் பின்னர் தாங்கள் விட்டிருந்த  பணியினை நால்வருமே செவ்வனே தொடர்ந்தனர்.

என்ன பணி என்று சொல்லவும்  வேண்டுமோ? அதே அதே. தீயத் தீய அவர்கள் வறுத்த கடலை அவர்களுக்கு தித்திப்பாக  இருந்தது.

அவர்களின் பணி, திருமண வேலைகள், சம்பிரதாயங்கள், அழைப்பிதழ் வழங்குதல்  என்று நிறைய வேலைகளிலும், ரணகளத்திலும், ரெக்கை கட்டிப் பறந்த போதிலும்  அவர்களின் கிளுகிளுப்பினைக்  கைவிடவில்லை.

ஒரு சில உறவுகள் தங்கள்  கலக வேலைகளை செவ்வனே செய்தாலும், அதனை மிகத் திறமையாக தெளிவாகக் கையாண்டு கலகத்தினையும் கலகலப்பாக  மாற்றினர்.

இவ்வாறாக ஒரு மாதம் நொடியில் சென்றது போல் வேகமாக  ஓடியது. வந்தனா வர்ஷனின் திருமணமும்  இனிதே நிகழ்ந்தது. தாலி கட்டிய  தருணத்தில் வர்ஷன், வந்தனா, அவர்களின் பெற்றோர்,அதிதி,அமர் அனைவரின் விழிகளிலும் நீர்த் துளிர்த்தது.

வந்தனா அலுங்காமல் ஒரு கைக்குட்டையை வர்ஷனிடம் கொடுத்தாள். பிரித்துப் பார்க்குமாறு கண்களால் சைகை  காட்டினாள். அதில் ஐ லவ் யூ டா புருஷா  என்ற வாசகத்துடன்  ஹார்டின் மற்றும் கண்ணீர் வர  சிரிக்கும் ஸ்மைலி இடம் பெற்றிருந்தது.

இத்தனை நாட்களில் எத்தனையோ முறை ஐ லவ் யூ சொல்ல சொல்லிக் கெஞ்சி மசியவில்லை மங்கை. இதைப் பார்த்து மகிழ்ந்து, நிமிர்ந்து புன்னகைக்கவே  அவளும் கண்ணடித்து  சிரித்தாள்.

ப்ரியா வாரியர் கண்ணடித்த  பொழுதில் என்ன  நிகழ்ந்ததோ அதுதான் இங்கும் நிகழ்ந்தது.பயபுள்ள ஃபிளாட் ஆயிருச்சு.

கவலையில் கைகொடுப்பது  மட்டும் நட்பல்ல 

கல்யாணத்தில் கலாய்ப்பதும்  நட்பு!

இந்தப் புதிய  குறளிற்குத் தக்கவாறு  வந்தனா வர்ஷனை வைத்து செய்ய, (வச்சு செய்ய) விரிவானதொரு திட்டம் தீட்டப்பட்டிருந்தது. சம்பிரதாயங்களுக்கு இடையூறு  விளைவிக்காமல்  இதனைச் செய்து கொள்ள, பெரியோரிடம் அனுமதியும்  பெற்றுவிட்டனர்.

என்னலாம் நடக்கப்  போகுதோ? வாங்க பார்ப்போம்.

  குடத்தில் மோதிரம்  போட்டு,அதனைத் தம்பதிகளுள்   முதலில் யார் எடுப்பது என்றதொரு விளையாட்டு நடைபெறும் .அதனையே அவர்கள் வேறு விதமாக விளையாண்டனர்.

அமரும் அதிதியும்தான் கலாய்  சங்கத் தலைவர்கள். எனவே அங்கு வந்து செய்த அலப்பறையைப்  பாருங்கள்.

அமர் தம்பதியரைப்  பார்த்து, ஒரு அறிவிப்புத் தாள்  போன்ற ஒன்றிணைக் கையில் வைத்துப் படிக்கலானான்.

“இது உங்களுக்கான  லக்சுரி  பட்ஜெட்  டாஸ்க்”

வர்ஷனும் வந்தானாவும் அதிர்ந்து சிரித்தனர்.

வர்ஷன் இடையிட்டு, “டேய்ய், உங்க அலப்பறைக்கு அளவில்லையா? சர்ச்சைக்குரிய நிகழ்ச்சிலாம்  நடத்தாதடா! ரீடர்ஸ்  மீம்  போட்டு கும்மிருவங்க” என்று ரிவிட்  அடித்தான்.

“சர்ச்சைக்குரிய எதுவும் இங்க நடக்காதுடா. இப்டிலாம் சொன்னா நாங்க விட்ருவோமா? இன்னைக்கு நீ கொத்து  பரோட்டாதான்” என்று சூளுரைத்துவிட்டு,தன் கலாய்க்கும் பணியினைத்  தொடர்ந்தான்.

“ஒரு அண்டாவில்  குங்குமம்  போட்டு கரைத்த நீரில்  ஒரு மோதிரம் போடப்பட்டிருக்கும். நீங்கள் இருவரும் அதில் தேடி முதலில் யார் அதனை  எடுக்கிறீர்களோ,அவரே வெற்றியாளர்.

விதி முறைகள் :  *நீரில் கையை விட்டுவிட்டு கண்களால் காதல் கதை பேசக்கூடாது.

*நீரினுள்  கையைப்  பிடித்துக்கொண்டு  ரொமான்ஸ் சீன் ஓட்டக்கூடாது.

*ஒருவர் எடுத்து மற்றவர் கையில் திணிக்கக்கூடாது .

*அண்டாவில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளது. எனவே தப்பிக்க முடியாது.

பரிசு: ஹனிமூன்  டிக்கட்ஸ்.

இடம்: வெற்றியாளரின்  விருப்பம்.

“அடப்பாவிகளா!  நல்ல்லா  பண்றீங்கடா!”  என்று சிரித்தவாறு புலம்பிக்கொண்டே அண்டாவில் கை விடப்போனவர்களை தடுத்து, டாஸ்க்  பஸர் அடித்தவுடன்  துவங்கவும்  என்று ஒரு பஸரை ஒலிக்க விட்டனர்.

அவர்களும்  போட்டி போட்டு தேடோ தேடென்று தேடினர்.என்ன தேடியும் இருவருக்கும் ஒன்றும் கிடைக்கவில்லை.ஏனெனில் அதில் ஒன்றும் போட்டிருக்கவில்லை.

ஏமாந்தவர்களைப் பார்த்து நன்கு சிரித்து முடித்துவிட்டு,  ஒரு குடத்தைக்  கொடுத்தனர். அதில் உண்மையில் மோதிரம் இருப்பதாக வாக்களித்து  மீண்டும் தேட விட்டனர்.

இப்போது இருவரும் தேடி,இருவரும்  ஒரு சேர மோதிரத்தை  வெளியே  எடுத்தனர்.ஏனெனில்,அதில் இரு மோதிரங்கள்  போடப்பட்டிருந்தது.இரண்டிலும் வி என்ற ஆங்கில எழுத்து  இருந்தது.இருவரையும் பரஸ்பரம்  மோதிரம் அணிவிக்கச்  செய்தனர்.

பின்பு கூறினர், வி என்றால், வர்ஷன் வந்தனா என்று தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். வி என்றால் வாய் என்று அர்த்தம் என்று வாரிவிட்டனர்.

வர்ஷன் அமரை நன்றாக மொத்தினான்.

அடுத்த நிகழ்ச்சி  ‘வர்ஷனா? வந்தனவா ?’

இருவரில்  யார் வாய் அதிகம் என்று கண்டறியும் நிகழ்ச்சி.

இது அதிதி அமர் வழங்கும்,  வர்ஷனா? வந்தனாவா? .கோ  ப்ரெசன்ட்டேட் பை வர்ஷனின் நண்பர்கள் மற்றும் வந்தனாவின் நண்பர்கள்.

அதிக வாய் வர்ஷனாகத்தான் இருக்கக்கூடும்  என்று பேச அவரது தோழர்கள் சில சம்பவங்களோடும் சாட்சிகளோடும்  வந்துள்ளனர், அதேபோல், வந்தானாதான் அதிக வாய் என்று பேச அவரின் தோழிகள் சம்பவங்கள் மற்றும் சாட்சிகளோடு  வந்துள்ளனர்.சிறப்பு விருந்தினர்களாக  வர்ஷனின் தாயாரும்  வந்தனாவின் தங்கையும்  என்று கோட்  போட்டு உரை ஆற்றி  முடித்தான் அமர்.

வர்ஷனும் வந்தனாவும் வெடித்து சிரித்தனர்.பின்னர் யூ டூ ப்ரூட்டஸ்  என்று வர்ஷனின் தாயையும்  வந்தனாவின் தங்கையையும்  நோக்கினர்.

அவர்களை வேண்டிய அளவு கலாய்த்துவிட்டு இறுதியாக இருவருமே வாயாடிகள்  என்று கூறி,வாயாடி என்று எழுதிய டிராபியை  இருவருக்கும்  இணைந்தே வழங்கினர்.

“அடுத்து வர்ஷனுக்கு  ஒரு முக்கியமான கேள்வி. போன மாசம் 6,15,24 அந்த அன்னைக்குலாம்  நீங்க எங்க இருந்தீங்க?”  என்று அமர் கேட்டான்.

வர்ஷன் சற்று  மெல்லிய சிரிப்புடன், “கம்பெனிலதாண்டா. ஏன் கேக்குற?” என்றான்.

அதற்கு அமர், உங்களுக்கான குறும்படம் இதோ,என்று அங்கு இருந்த டிவியை காட்டினான்.

“என்னடா நடக்குது இங்க?” என்று கேட்டவாறே டிவியை இருவரும் நோக்க,

” அத நீங்கதான் சொல்லணும் வர்ஷன்”  என்று அமர் கூற,

குறும்படத்தில், வந்தனாவின் நாணச் சிரிப்பு, கடற்கரையில்  அவர்கள் நடை பயின்றது, ஊஞ்சல் ஆட்டிவிட்டது இது போன்ற அவர்களின் பல அழகிய புகைப்படங்கள் குறும்படமாக ஓடியது.

அவர்களுக்கே  அவர்களின் கெமிஸ்ட்ரி  மிகவும் பிடித்திருந்தது.

அந்த தேதிகளில்  அமரிடம்  பொய் சொல்லிவிட்டு வந்தனாவுடன்  சென்றுள்ளான். அமர் முன்பு  இவனிடம்  மாட்டியது  போல், இவனும் சிக்கிய சமயங்களில்  எடுத்த புகைப்படங்கள் அவை.

இவ்வாறு பல நிகழ்ச்சிகள்  நிகழ்த்தி  அவர்களை இடைவிடாது  சிரிக்க வைத்துவிட்டனர் அவர்களின் நட்புக் கூட்டம். அவர்களின் இந்த சிரிப்பினைப்  பார்த்து  மிகவும் நெகிழ்ந்து போயினர்  அவர்களின் பெற்றோர்.

இரவில் அவர்களை தனியே விடும்வரை  இந்தக்  கலாய் தொடர்ந்தது.அதன்பின், அவர்களே கலாய்த்துக்கொள்வர் என்று நம்பினர். அவர்களின் நம்பிக்கையைப் பொய்யாக்கவில்லை.

அவள் உள்ளே நுழையும் போதே, “ஹேய் வாடி வாடி வாடி வாடி காரப் பொண்டாட்டி”  என்று ஓட்டினான்.அவள் கவுண்ட்டர்  கொடுப்பாள்  என்று எதிர்பார்த்தான்.அப்படி எதுவும் செய்யாமல்  கூலாக அமர்ந்து,சூடான பாலைக் குடித்தாள்.

இவன், “நீ பாதி நான் பாதி கண்ண”  என்றான். அவளோ ஒரு சொட்டு  விடாமல் குடித்துவிட்டு  டம்ளரைக்  கவிழ்த்து,

 “உன் டாப்  போலவே இதுவும் காலி”  என்றாள்.

“அடியேய்!  பாதி கொடுக்கணும்னு  சொல்லி அனுப்பலையா? பயங்கர பசி  வேற”

“அதெல்லாம் கலாய் குடுக்கறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்,”

“போடி!  பால் இல்லனா என்ன? ஸ்வீட் இருக்குல்ல”  என்று அவன் ஸ்வீட்டை சாப்பிடத் துவங்க,அதிலும்  இவள் போட்டிக்கு சென்று,இருவரும் அங்கு இருந்த பழங்கள்  ஸ்வீட் என்று மொத்தமும் காலி செய்தனர்.

நான் பொறுமை இழந்து, “பாஸ் டுடே என்ன டே?பக்கத்துல 55 கே ஜி ஸ்வீடை வச்சுக்கிட்டு  அந்த ஸ்வீடை மொக்கிட்டு  இருக்கீங்களே.புவர் பெர்பார்மன்ஸ் பாஸ்.”  என்றேன்.

“ஆஹான்! ஒரு பெரிய கரடி கூட்டத்தையே  கூட்டிட்டு வந்துட்டு கேக்குற கேள்விய பாரு! இப்போ எல்லாரும் ஓடிருங்க.”  என்கிறான்.வாங்க!  நம்ம போவோம்.அவங்க வேலைய அவங்க பார்க்கட்டும்!

  அடுத்து வந்த பதினைந்து நாட்களும் பஞ்சாய்ப் பறந்து ஓடிவிட்டன.

அதிதி அமர் இந்து முறைப்படியும்  அல்லாமல், இஸ்லாம் முறைப்படியும் அல்லாமல், பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். பதிவாளர் அலுவலகத்திலேயே மோதிரம் மாற்றி,பரஸ்பரம் செயின்  அணிவித்து  திருமணத்தைப் பதிவு செய்துவிட்டு, ரிசெப்ஷன்  வைத்துக்  கொண்டனர்.

‘வினை  விதைத்தவன்  வினை  அறுப்பான்,’அறுத்தே தீருவான்’ என்பதற்கிணங்க, அமரும் அதிதியும் அவர்கள் விதைத்ததை  நல்ல மகசூலுடன்  அறுவடை  செய்தனர்.

நாங்க சும்மாவே ஆடுவோம். கால்ல வேற சலங்கையக் கட்டி விட்டுடீங்க, அரங்கேற்றம் பண்ணிட வேண்டியதுதான் என்று கூறி தமிழ்ப் பட வில்லன் போன்ற ஒரு லுக்கை வீசினர்  வர்ஷனும் வந்தனாவும்.

எல்லா விஷயங்களிலும்  சண்டையிடும்  வர்ஷனும் வந்தனாவும் இவர்களைக் கலாய்க்கும் விஷயத்தில் மட்டும் சண்டைக்கு சன்டே(sunday)  அறிவித்துவிட்டனர்.

கடந்த பதினைந்து நாட்களாக அவர்கள் ஈருடல் ஓருயிராய் இருந்து அயராது  உழைத்து  நல்லதொரு(!?) திட்டத்தினை  வகுத்தனர்.அதன்படி  ஒரே கல்லில்  பல மாங்காய்  அடித்தனர்.

அவர்கள் மூன்று நிகழ்ச்சி நிகழ்த்தி செய்ததை  இவர்கள் ஒரே நிகழ்ச்சியில்  செய்துவிட்டனர்.அது என்னவென்று காண்போம் வாருங்கள்.

இதெல்லாம் இவர்களின் மிக நெருங்கிய நட்பு வட்டமும் உறவுகளும் மட்டும் இருக்கும்போது  செய்தனர். அனைவரும் இருக்கும் வேலையில் வேறு ஒன்று செய்தனர் என்னவென்று பிறகு காண்போம்.

“வணக்கம் மக்களே!நான் உங்க வந்தனா. இப்போ நம்ம கூட இருக்குறது  நம்ம கதையோட ஹீரோ ஹீரோயின், வாங்க அவங்கள வச்சு செய்யலாம்.இந்த நிகழ்ச்சி காஃபி வித் வி வி (vv:வந்தனா வர்ஷன்) ப்ரெசென்ட்டட் பை வர்ஷன் &  வந்தனா,கோ  ப்ரெசெண்ட்டட் பை அமர் அதிதி நண்பர்கள் மற்றும் உடன் பணி புரிவோர்.”

அவள் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கையில் ஒரு கார்டினை(card) வைத்துக்கொண்டு சொன்ன அழகில், விதத்தில் அமரும் அதிதியும் வெடித்து சிரிக்கலாயினர்.

“மக்களே! சிரிச்சு எஸ்கேப்  ஆகப் பார்க்குறாங்க.அப்டிலாம் விட முடியாது. இன்னைக்கு அவங்க சின்னா  பின்னமாகப்  போறது உறுதி.உங்க சிரிப்பை  கொஞ்சம் கண்ட்ரோல் பண்ண ஒரு வார்ம் அப் செஷன்.ஐ மீன்  தெளிய  வச்சுட்டு  அடிப்பேன்னு சொல்ல வந்தேன்”.

(சிரிப்பு இன்னும் நின்ற பாடில்லை)

“அதிதி, இது உங்களுக்கான கேள்வி:  அமர்கிட்ட நீங்க ரொம்ப மதிக்குற விஷயம்,ஆர் உங்க காதலுக்கு அடித்தளம்  போட்ட விஷயமா எதை நெனைக்குறீங்க ?”

” அவரோட  அன்புதான்,நான் ரொம்ப ரசிக்குற,மதிக்குற ஒரு விஷயம்.பொதுவா நாம நமக்கு பிடிச்சவங்க  மேலதான்  அன்பு செலுத்துவோம்.அவங்க அன்புக்கு  ஏங்குவோம்.சமயத்துல நம்ம அன்புக்கு ஏங்கறவங்கள கூட விட்ருவோம்.பட் இவர் யார்க்கு அன்பு அதி முக்கியமா தேவைப்படுதோ அவங்களுக்கு அதை குடுக்க தவறினதில்ல.சோ தட்ஸ் இட்.” என்று நெகிழ்ந்து  உரைத்தாள்.அமரும் நெகிழ்ந்துவிட்டான்.

“வாவ்!  லவ்லி!ரொம்ப அழகான ஒரு பதில்.அமர் இப்போ நீங்க அதே கேள்விக்கு  பதில் சொல்லுங்க”

அமர் சிரித்துவிட்டு கூறினான்,

“அவங்க சொன்ன அதே பதில்தான்.அதுல அன்புக்கு  பதில் நம்பிக்கைனு போட்டுக்கோங்க.

போட்டில கலந்துக்கிட்டவனுக்கு  நம்பிக்கை குடுத்து ஜெயிக்க  வைக்கறதில்ல.கலந்துக்கவே  யோசிச்சு பயப்படறவனை,  போட்டிக்குள்ள  நுழைக்கும்  அவங்க வார்த்தைகள்.யாருக்கு ரொம்ப முக்கியமா நம்பிக்கை தேவைப்படுதோ அதை குடுப்பாங்க.அதான்”  என்று முடித்தான்.

“வாவ்!  சூப்பர்!  ரொம்ப அழகான கப்புள்.என் கண்ணே பட்டுடும்  போல.சோ இப்போ திருஷ்டி  கழிப்போம்.

இதான் முக்கியமான ரவுண்ட்.நாங்க உங்களுக்கு சில நிழற்படங்களை காட்டுவோம்.அதுக்கு பின்னாடி ஒளிஞ்சிருக்குற  நிஜங்களை  நீங்க சொல்லணும்.சில உறைபடங்கள் காட்டுவோம்.அதுக்கு பின்னாடி  உறைஞ்சிருக்குற உண்மைய சொல்லணும்.ஓகே.ரெடியா.ஸ்டார்ட் பண்லாமா? “என்று கேட்டாள்.

“வேணாம்னு சொன்னா விடவா  போறீங்க,நடத்துங்க” என்றான் அமர்.

‘குண்டு  மல்லி  ரெண்டு ரூபாய், உன் கூந்தல் ஏறி உதிரும்  பூ கோடி  ரூபாய்’ என்ற பாடல் வரிகளோடு  முதல் புகைப்படம் வந்தது.அது அமர் இவள் சூடிக்  கொடுத்த  ரோஜா இதழ்களை வைத்து செய்த கொலேஜ் ஒர்க்.

அதனைப் பார்த்தவுடன் அமர்’  அடப்பாவிகளா’  என்று சிரித்தான். அதிதி அப்பட்டமாய்  அதிர்ந்தாள்.

“இது என்னங்க அமர் ஜி”  என்றாள் வந்தனா.

“கலை”  என்றான் அமர்.

“அடடே!  நாங்க மட்டும் என்ன கொலைனா சொன்னோம். சூடிக்கொடுத்த  வாடிய மலர் கலையா  சுடர்விட்ட கதைய சொல்லுங்க பாஸ்”

“அதான் நீங்களே சொல்லிடீங்களே”

“நீங்க சொல்லுங்க ஜி”

“அவங்க யூஸ் பண்ணின  ரோஸ்  பெட்டல்ஸ்  வச்சு செஞ்ச கொலேஜ் ஒர்க் இது.”

“இவ்வ்வ்ளோ  ரோஸ் பெட்டல்ஸ் எப்படி கிடைச்சது”

“டெய்லி  மார்னிங்அவங்களுக்கு ரோஸ் குடுப்பேன். ஈவினிங்  திருப்பி வாங்கிப்பேன்”  என்று கூறி, ஆண்கள் வெட்கப்படும்  தருணத்தை  அடைந்தான்.

“அப்போ டெய்லி ரெண்டு லட்டு  சாப்டிருக்கீங்க “என்றாள் வந்தனா.

“யோவ்! முடிலயா,நெக்ஸ்ட் போட்டோ ப்ளீஸ்”  என்று சிரித்தான் அமர்.

இதற்கிடையில் அதிதி உருகியதும் அதனைக்  கண்களில் கசிய விட்டதும் அரங்கேறியது.

“அதிதி!  நீங்க நிறைய திருடறீங்களாமே?”  என்று ஒரு குண்டைப்  போட்டாள் வந்தனா.

“வாட் நான்சென்ஸ்”  என்று சற்றே கோபமாகவே கேட்டாள் அதிதி.

“உங்களுக்கான  உறைபடம் இதோ” என்றாள்.

அதில் ஜீன்ஸ் பட பி ஜி எம் பின்னணியில் ஓட,அமர் தூக்கி எறிந்த  சாக்லேட் ரேப்பரை  எடுத்து அவள் கைப்பையில்  பதுக்கும் வீடியோ  ஸ்லோ  மோஷனில்  ஓடி நின்றது.

இப்போது அதிதி நாணப்புன்னகையுடன், ” வொய் திஸ் கொலை வெறி யார்”  என்று கூறிச்  சிரித்தாள்.

“இது ஒரு சின்ன சாம்பிள்தான். இதுபோல பல பொருட்கள நீங்க பதுக்கினதா  நம்பத் தகுந்த  வட்டாரங்கள்ல இருந்து தகவல்கள்  கிடைச்சுது. அதை ஒரு தனிப்படை அமைச்சு விசாரிச்சுதுல  பல திடுக்கிடும்  உண்மைகள்  தெரிய வந்துள்ளது.இதற்காக நம்முடன்  இணைகிறார்  நமது சிறப்பு செய்தியாளர் வர்ஷன்.வர்ஷன் நீங்க இணைப்புல  இருக்கீங்களா?” என்று வந்தனா விடாமல் சரவெடி வெடிக்க, வயிற்றைப்  பிடித்துக்கொண்டு  சிரித்தனர் இருவரும்.(அனைவரும்தான்).

அங்கே வீடியோவில் வர்ஷன்  இயர் போன் மாட்டிக்கொண்டு, கையில் மைக் போன்ற ஒன்றை  வைத்துக்கொண்டு, தலையை  ஆட்டி ஆட்டி கேட்டுவிட்டு, “இணைப்புல தான் இருக்கேன் வந்தனா சொல்லுங்க”  என்றான்.

“உங்களுக்கு கிடைச்ச தகவல்கள் என்னென்ன ? இந்த பதுக்கல் குறித்த விவரங்கள்  பத்தி சொல்லுங்க வர்ஷன்”  என்றாள்.

அவனும் தலையை  ஆட்டி ஆட்டி

“அதாவது பார்த்தீங்கன்னா  அவங்க வர்ஷன் தூக்கி போட்ட எந்த பொருளையும்  விட்டு வைக்கல.அதை எல்லாம் எடுத்ததோட  மட்டும் இல்லாம அதை வச்சு நிறைய கைவினைப் பொருட்கள் செஞ்சிருக்காங்க.அதை நீங்க இப்போ பார்க்கலாம்.இது போன்று இன்னும் பல பொருட்கள் இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.சிரிப்பு செய்திகளுக்காக  பக்கத்து அறையில் இருந்து வர்ஷன் ,ஒளிப்பதிவாளினி மதுவுடன்”  என்று முடிந்தது அந்த வீடியோ,நன்றி வர்ஷன் என்று இங்கு வந்தனா முடித்தாள்.

அமரும் அதிதியும் வயிற்றைப் பிடித்துக்கொண்டு எழுந்தே  சென்றுவிட்டனர்.

சிறு இடைவேளைக்குப் பின் இன்னும் பல சுவாரஸ்யங்கள்  காத்துட்டு  இருக்கு.ஸ்டே ட்யூன்ட் வித் அஸ் “என்று நிறுத்தினாள் வந்தனா.

அவர்கள் சிரித்து முடித்து  அமர்ந்தவுடன்,

“வெல்கம் பேக் வியூவர்ஸ்,ரொம்ப அதிக நேரத்தைக் கடத்தாமல்  நேரா விஷயத்துக்கு வருவோம்.இதுக்கெல்லாம் என்ன விளக்கம் குடுக்கப்போறீங்க  அதிதி”  என்றாள்.

“பெஸ்ட்  அவுட் ஆஃப் வேஸ்ட்”  என்றாள் அதிதி.

“பார்த்தா அப்டி தெரிலயே,லவாங்கீஸ் அவுட் ஆஃப் லுச்சா  திங்க்ஸ் போல தெரியுதே”

“யோவ்! போதும். இன்னும் என்னென்ன கொடுமைலாம்  பார்க்க வேண்டி இருக்கோ”  என்றாள் அதிதி.

“ரொம்ப கதர்றாங்க  பாவம், அதனால இன்னும் ஒரே ஒரு புகைப்படத்தோட முடிச்சிக்கலாம் ”  என்ற வந்தனா

“மருதாணி  போட்டுட்டு  இருக்கும்போது பாதில  எங்கயோ கொஞ்ச நேரம் காணாம போய்ட்டிங்களாமே,அதிதி எங்க போனீங்க?” என்றாள்

“அதான் தெரிஞ்சிருச்சுல்ல, சீக்கிரம் முடிச்சி  விடுங்க”  என்றாள் அதிதி பொறுமை இழந்து.

‘மருதாணி பூசாமல்  சிவக்கின்றேன்  உன்னாலே’  என்ற பாடல் வரியுடன் ஒரு புகைப்படம் வந்தது.அதில் அமர் அதிதிக்கு  மருதாணி (  mehandi)  வைப்பது போன்ற காட்சி இருந்தது.

“இது என்னங்க மேடம்”  என்றாள் வந்தனா.

சிரிப்பு மட்டுமே பதிலாக  வந்தது அதிதியிடம்.

வந்தனாவே  தொடர்ந்தாள்.

“மருதாணிக்கு  டஃப் காம்பிட்டிஷன் குடுத்து பொண்ணு சிவக்குது.சோ நானே சொல்லிடறேன்.மேடம்க்கு அமர் பேரை அவங்க கைல எழுதிக்க  ஆசை,அதுவும் அமர் கையாலேயே.அதான் இது.இவங்க கைல மருதாணி நல்லா சிவந்திருக்கு.காரணம் என்னனு உங்க எல்லார்க்கும் இப்போ தெரிஞ்சிருக்கும்.

இவங்களை போதுமான  அளவு வச்ச்ச்சு செஞ்சுட்டதால  இந்த நிகழ்ச்சியை இதோட முடிச்சுக்குறோம். உங்களிடமிருந்து வணக்கம்  கூறி விடை பெறுவது உங்கள் விவி”  என்று கூறி ஒரு வழியாக முடித்துவிட்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content