You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Valarmathi - நானும் நாவலும்

இந்த பதிவை குறித்த உங்கள் கருத்து
சிறப்பு
மிக சிறப்பு
Quote

மரணித்த என் தந்தைக்கு மடல் எழுதுவது போல் உணர்கிறேன் இதை எழுதும் பொழுது... என்னை புத்தகங்களுக்கு அறிமுகப்படுத்திய புனிதர் அல்லவா...

துள்ளித்திரிந்த வயதில் பூந்தளிரையும், அம்புலிமாமா வையும், வளரும் பொழுது மாமேதைகளின் சுயசரிதைகளையும், பருவப்பெண்ணாக நான் உருமாற ரமணிச்சந்திரணையும் என் வாழ்வில் இணைத்தது நீதானே அப்பா...

வாழ்க்கை யின் பல வலிகளை புத்தகங்கள் துணையுடன் தாண்டிய நீங்கள் எனக்கும் அது சாலப்பொருந்தும் என எப்படி சரியாக கணித்தீர்கள் அப்பா?

என் வலியை தாங்கமுடியாமல் என்னைவிட்டு விண்ணுலகம் சென்றாயே, நீ விட்ட இடத்திலேயே உறைந்து நின்ற என்னை புதைகுழிக்குள் போகாமல் காப்பாற்றியது புத்தகங்கள் அல்லவா அப்பா...

ரமணி அம்மாவில் ஆரம்பித்து இன்று முகநூலில் அனைத்து எழுத்தாளர்களையும் விடாமல் பித்துபிடித்தது போல் படிக்கிறேன்.  படிப்பதை விட்டால் மூச்சுத்திணறி இறந்து விடுவேன் அப்பா.

ஏனெனில் ஒரு வழிப்பாதையில் நரகத்திற்கு நடைபயின்று கொண்டிருக்கும் என்னுடன் துணையாக நடந்து கொண்டிருப்பது நீயும் புத்தகங்களும் தானே அப்பா.....

 

monisha has reacted to this post.
monisha
Quote

வலி நிறைந்த உணர்வுபூர்வமான பதிவு 

உங்கள் பதிவை படித்த போது எனக்கு நான் உருவாக்கிய ஒரு கற்பனை கதாபாத்திரம் நினைவுக்கு வருகிறது. அந்த பாத்திரத்தின் வளர்மதி என்பதுதான் சிறப்பு. மேலும் தன் குடும்பத்தை இழந்த பின் வளர்மதி பாத்திரம் நாவல்களை நாடுவார். ரொம்பவும் முதிர்ச்சியான கதாபாத்திரம்.

என்னுடைய குறுநாவல் ஊடலை படித்தவர்களுக்கு வளர்மதி மிக பிடித்த பாத்திரம். நீங்களும் அப்படி என் மனதை நெகிழவைத்துவிட்டீர்கள். என்னுடைய கற்பனை பாத்திரத்திற்கு உயிர் வந்தது போல தோன்றியது. 

உங்கள் வாசிப்பு பயணம் மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள். 

உங்கள் தந்தை உங்களிடம் மிக சரியானதை தந்திருக்கிறார். புத்தகம் மனிதனின் படைப்பில் மிக சிறந்த ஒன்று.  

நன்றி மற்றும் மகிழ்ச்சி வளர்மதி 

நேரம் கிடைக்கும் போது நான் எழுதிய ஊடல் நாவலை படித்து பாருங்கள்.  

Valarmathi Veluswamy has reacted to this post.
Valarmathi Veluswamy

You cannot copy content