மோனிஷா நாவல்கள்
Paruvameithi - 30(Final)
Quote from monisha on July 19, 2022, 9:32 PMஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அடிமைகளாக இருந்த பெண்கள்… கல்வி, மற்றும் பொருளாதார சுதந்திரத்தால் மீண்டும் தங்கள் அந்தஸ்த்தில் உயர்ந்தார்கள்.
அதுவும் அரை நூற்றாண்டிலேயே
மீண்டும் பல ஆண்களின் கலவியல் தேர்ச்சியில் எடை போட்டு பார்க்கும் சந்தர்ப்பம் பெண்களுக்கு கிடைத்து விட, தனக்கு மிகவும் பிடித்த ஆணுக்கு மட்டுமே குழந்தை பெற்று தர சம்மதித்தாள் பெண்.
இதனால் பெண்ணுக்கு பிடிக்கும்படி நடந்து கொள்ளும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டான் ஆண்.
‘ஆண் என்றால் ஆதிக்கம் செய்தாக வேண்டும்’ என்ற நிலைப்பாட்டிலேயே பின்தங்கிப்போன ஆண்கள் ஆட்டமிழக்க ஆரம்பித்தார்கள்.
மனித பெண் ஆணை தேர்ந்தெடுக்கப் பயன்படுத்திய அளவுகோலே மாறிவிட்டிருந்தது, வெறும் வீரமோ, உடல் வனப்போ, உணவு கொணரும் திறனோ, ஆண் குறியின் அளவையோ வைத்து அவள் இனி ஆண்களை எடை போடுவதாக இல்லை.
நவநாகரிக உலகின் தேவைகளை அனுசரித்து மனிதப் பெண் மனித ஆணிடம் மிக பெரிய உயரிய குணத்தையே விரும்பி தேர்வு செய்யலானாள்.
அப்பேர்ப்பட்ட அந்த உயர்ந்த குணம் எது என்று உங்களால் யூகிக்க முடிகிறதா?
உலகிலேயே மிக உன்னதமான, மேன்மையான, கிடைப்பதற்கு அரிதான, போலித்தனமே செய்ய முடியாத மனித குணமான அன்பு!
இதனால் போர் வன்முறை ஆதிக்கம் என்று காட்டுமிராண்டித்தனமான வேட்டைகளிலிருந்து மீண்டும், சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் என்ற அமைதியான மேன்நிலையை அடைய ஆரம்பித்து பெருந்தன்மையை பெற்றதினாலேயே மனிதர்கள் அடுத்த யுகத்திற்கு முன்னேறினார்கள்.
30
கனிக்கும் மாயனுக்கும் எளிமையான முறையில் சுயமரியாதை திருமணம் நடந்து முடிந்து இரண்டு மாதங்கள் கடந்திருந்தன.
காதலில் திளைத்தனர். உடலாலும் மனதாலும் இருவரும் ஒன்றென கலந்துவிட்டனர்.
சூரியன் மறைந்து இரவு நிலவு வருகை தர, கயிற்று கட்டிலில் நட்சத்திரங்களால் மின்னிய வானத்தை படுத்த மேனிக்கு மாயன் ஏகாந்தமாக ரசித்து கொண்டிருந்தான்.
வீட்டை விட்டு வெளியே வந்த கனி, “அதுக்குள்ள கட்டில போட்டு படுத்தாச்சா சாரு!” என்று கேட்டாள்.
அவள் முகத்தில் புது மணப்பெண்ணின் அழகும் பொலிவும் இன்னுமும் மிளிர்ந்து கொண்டிருக்க, பேசி கொண்டே வந்து வாயிற் படிக்கட்டில் அமர்ந்து கொண்டாள்.
அவளை திரும்பி பார்த்தவன், ‘அருகே வா’ என்பது போல சமிஞ்சை செய்ய “உஹும்” என்றாள்.
“வாடி” என்றவன் மீண்டும் ஏக்கமாக தன் கரங்களை நீட்ட,
“அசதியா இருக்கு… கை கால் எல்லாம் வலிக்குது” என,
“எங்க வலிக்குதுன்னு சொல்லு… நான் பிடிச்சு விடுறேன்” என்று அவன் கிறக்கமாக பேச,
“நீ எப்படி பிடிச்சு விடுவன்னு எனக்கு தெரியும்… போ” என்றவள் செல்லமாக கோபித்து கொள்ள,
“என் தங்கம் இல்ல… என் பட்டு இல்ல… என் செல்லம் இல்ல” என்றவன் அவள் புறம் திரும்பி கொண்டு கொஞ்சல்களை ஆரம்பிக்கவும் அவள் முகம் நாணத்தில் சிவந்தது.
“போதும் போதும்… வரேன்” என்று அவன் அருகே சென்று கட்டிலின் ஓரமாக அமர்ந்து கொண்டாள்.
அந்த நொடியே அவளை தன் அருகில் இழுத்து படுக்க வைத்து கொள்ள,
“என்ன பண்ற மாயா நீ” என்று எழ பார்த்தவளை இறுகி அணைத்து கொண்டு,
“பிடிச்சு விடுறேன்டி” என, “ஐயோ! நீ பிடிச்சு விடுறன்னு செய்ற அலப்பறைதான் எனக்கு வலிக்குது” என்றவள் திமற,
“சரி சரி மெதுவா… பதமா பிடிச்சு விடுறேன்” என்றவன் கரங்கள் அவள் தேகத்தை வருடி கொடுக்க, அவள் ஒரு மாதிரி கிறங்கி போனாள்.
இருந்தும் அவள் சுதாரிப்புடன், “யாராச்சும் பார்க்க போறாங்க” என்று தவிக்க,
“இந்த சமயத்துல நம்மல பார்க்க ஒரு ஈ காக்கா கூட இங்கே வராது” என்றபடி மென்மையாக தன் கரங்களால் அவள் கன்னங்களை வருடியபடி அவள் இதழ்களை நெருங்கினான். “மாயா” என்று அவளை அடுத்த வார்த்தை பேச விடாமல் அவள் அதரங்களை சிறைபிடித்தான்.
மெல்ல மெல்ல அவள் இதழ்கள் மீதான அவன் இதழ்கள் நழுவி அவள் கழுத்திற்கு கீழாக ஊர்ந்து போகவும்,
“மரத்து மேலே இரண்டு காகா நம்மலயே பார்க்குது” என்று கையை உயர்த்தி காண்பித்தாள்.
“காகாதானே… பார்த்துட்டு போகுது விடு” என்றவன் அசட்டையாக சொல்ல,
“நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் மாயா… அதை மட்டும் கேளேன்” என்றவள் கெஞ்சலுடன் சொல்ல,
“அப்புறம் சொல்லேன்டி…” என்று அவன் தன் காரியத்தில் கண்ணாக இருந்தான். அவன் அணைப்பிலும் முத்தத்திலும் அவளும் ஒரு மாதிரி கிறங்கி தன்னை மறந்து கொண்டிருக்கும் போது மாயனின் செல்பேசி அடிக்கவும்,
“இது வேற… ஒரு தொல்லை” என்றவன் அவள் மீதான அணைப்பை விடுத்து தரையில் வைத்திருந்த கைப்பேசியை துழாவி எடுக்கவும் அவள் இதுதான் சமயமென்று எழுந்து செல்ல பார்த்தாள்.
அவன் அதற்குள் அவளின் முந்தானையை வசமாக பற்றி கொள்ளவும் அது தோள் மீதிருந்து சரிய, “மாயா விடு” என்றாள். அவன் கல்மிஷத்துடன் முடியாது என்று தலையசைத்துவிட்டு அவன் பாட்டுக்கு கைபேசியில் பேச ஆரம்பித்தான்.
“அத்தை எப்படி இருக்கீங்க… டூர்லாம் எப்படி போகுது” என,
“அம்மாவா என்கிட்ட கொடு” என்று கை நீட்டியவளை வாகாக தன் தோள் மீது சரித்து கொண்டான். “டேய் என்கிட்ட கொடு டா” என்றவள் சொல்வதை காதில் வாங்காமல், “சரி அத்தை… ஒ அப்படியா?” என்று மும்முரமாக பேசி கொண்டிருந்தவனிடம் காதோடு காது வைத்து அப்படி என்ன பேசுகிறார்கள் என்று ஒட்டு கேட்பவளை தலையிலடித்து,
“இந்தா நீ பேசு” என்று செல்பேசியை அவளிடம் கொடுத்தான்.
அவள் எழுந்து செல்ல பார்க்க, “இப்படியே பேசு” என்று அவள் கழுத்தை இறுக்கி தன் புறம் திருப்பி கொள்ள அவள் கைபேசியை காதில் வைத்து கொண்டு,
“ஆ… அத்தை எப்படி போகுது டூர் எல்லாம்” என்றாள்.
“அத்தையா… உங்க அம்மா டி” என்றவன் சொல்ல,
“உன் அத்தை இல்ல… என் அத்தை” என்று அவனிடம் சொன்னவள் சுவாரிசயமாக அவர்கள் இருவரும் சென்ற கோவில் கதைகளை எல்லாம் சொல்ல அதனை உம் கொட்டி கேட்டாளே ஒழிய அவளை எதுவும் பேச விடாமல் அவன பாடாய் படுத்தி கொண்டிருந்தான். அவன் கைகள் அவள் தேகத்தில் வரையறை இல்லாமல் வளைய வந்து கொண்டிருந்தன,
“சரி அத்தை சரி வைச்சுடுறேன்” என்றவள் அழைப்பை துண்டித்துவிட்டு, “ஒரு போன் பேச விடுறியா?” என்று கடுகடுக்க,
“அப்புறம் பேசிக்கலாம்” என்றவன் தன் கைபேசியை பிடுங்கி ஓரம் வைத்துவிட்டு மீண்டும் தன் காதல் லீலைகளை புரிந்தான்.
“நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் மாயா” என்றவள் சொல்ல,
“ம்ம்ம் சொல்லு” என்றவன் மையலுடன் கேட்க, “அது” என்றவள் ஆரம்பிக்கவும் மீண்டும் அவன் கைபேசி ஒலித்தது.
“சை! யார்ரா அது?” என்றவன் அதை காதில் கொடுத்த மறுகணம் அவன் முகம் தீவிரத்துடன் மாற,
“யாரு?” என்று கனி கேட்க,
“வளவன் ஐயா” என்றவன் எழுந்து வாயிலுக்கு சென்றுவிட்டான்.
அவள் அப்படியே கட்டிலில் சாய்ந்து கொண்டு மேலே பார்க்க குல்மொஹர் மரத்தின் கிளைகளில் ஆரஞ்சு வண்ண பூக்களால் பூத்து குலுங்கி கொண்டிருந்தான். அதன் அழகில் அவள் மயங்கி கிடக்க மாயன் சத்தமில்லாமல் தன் செல்பேசியை வைத்து விட்டு அவள் அருகில் அமர்ந்தான்.
அவன் முகத்தினை உற்று பார்த்தவள், “என்னாச்சு மாயா?” என்று விசாரிக்க,
“உன்கிட்ட ஏற்கனவே சொன்னேன் இல்ல… நம்ம தொகுதியை தனி தொகுதியா… அதான் எஸ் ஸி தொகுதியா மாத்தி இருக்காங்கனு…”
“ஆமா சொன்ன”
“அதுலதான் அமுதவாணன் பயங்கர கடுப்பில இருக்கான்ன்னு… அவன் கையை விட்டு இந்த தொகுதி போறதை அவனால தாங்கவே முடியல”
“இதெல்லாம் தெரிஞ்ச கதைதானே”
“விஷயம் என்னனா ஏற்கனவே இந்த தொகுதில கட்சில இருக்க ஒருத்தரை நிற்க வைக்கிறதா முடிவு பண்ணி இருந்தாங்களாம்… இப்போ அவர் பின்வாங்கிட்டாராம்… அதனால இந்த தொகுதில என்னை நிற்க சொல்றாரு” என்றவன் சொன்னதை கேட்டு பட்டென்று எழுந்து அமர்ந்தவள்,
“என்ன சொல்ற மாயா?” என்று ஆச்சரியத்துடன் புருவங்களை உயர்த்தினாள்.
“ஆமா… ஆனா எனக்குதான் இதுல விருப்பம் இல்ல” என்றான்.
“ஏன்… இது நல்ல விஷயம்தானே”
“அரசியல தலையை விட்டுட்டா அப்புறம் அதுல இருந்து நாம வெளியே வரவே முடியாது கனி… இங்கே நடக்கிற ஒடுக்குமுறையை விட உள்ளே அதிகமா நடக்கும்” என்றவன் சொல்வதை கேட்டு சிந்தித்தவள்,
“நீ பயப்படுறியா மாயா?” என்று கேட்க,
“பயம் இல்ல… தேவையான்னு யோசிக்கிறேன்” என்றான்.
“தேவைதான்… நம்ம ஆளுங்க எல்லாம் மேல வரணும்னா உன்னை மாதிரி ஒருத்தர் பதவில இருக்கிறது நிச்சயம் தேவை… எல்லோருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு தேடி வராது… உனக்கு வந்திருக்கு… இது நீ பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் கிடைச்ச அங்கீகாரம்… நீ அந்த வாய்ப்பை நழுவ விட கூடாது” என்றவள் சொல்ல அமைதியாக கேட்டவன்,
“அப்போ துணிஞ்சு இறங்கலாம்குறியா?” என்றான்.
“கண்டிப்பா” என்றவள் உறதியாக சொல்ல, “சரி நான் ஐயா கிட்ட பேசுறேன்” என்றவன் மீண்டும் தன் செல்பேசி எடுத்து பேச சென்றவன் திரும்ப வர வெகுநேரமானது.
கனி கட்டிலில் சாய்ந்தபடி கண்ணயரவும் அவன் பேசி முடித்துவிட்டு வந்து மீண்டும் அவள் அருகில் நெருக்கமாக படுத்து கொள்ள, மீண்டும் அசந்த விழிகளை பிரித்து கொண்டாள்.
“பேசிட்டியா?”
“ம்ம்ம் பேசிட்டேன்… ரொம்ப சந்தோஷமா பேசுனாரு” என்றவன் சொல்வதை அவள் ஆர்வமாக கேட்டு கொண்டிருக்க, “ஆமா நீ ஏதோ விஷயம் சொல்றேன்னு சொன்னியே?” என்று கேட்டான்.
“சொல்லவா?”
“சொல்லுடி”
“இதான் அந்த விஷயம்” என்றவள் அவன் இடை மீதிருந்த கரத்தை எடுத்து தன் வயிற்றின் மீது பதித்தாள்.
“கனி” என்றவன் பூரிப்பு பொங்க அவளை அப்படியே தன் நெஞ்சணைப்பில் இருத்தி கொண்டான். அவன் கண்களில் கண்ணீர் வழிய அவளும் அவனை அணைத்தபடி கண்ணீருடன் பேசினாள்.
“அப்ப எல்லாம் மாதவிலக்கு வரும் போதெல்லாம்… எதுக்கு இது வருதுன்னு கோபம் கோபமா வரும்… இந்த கர்ப பையை கழட்டி வைச்சுட்டா நல்லா இருக்கும்னு கூட தோணும்… ஆனா இப்போ இந்த நிமிஷம் நான் இவ்வளவு நான் தாங்கின வலியெல்லாம் உனக்காக உன் புள்ளைய சுமக்கன்னும் போது… எனக்கு என் பெண்மையை நினைச்சு பெருமையா இருக்கு” என்றவள் சொன்னதை கேட்டு அவள் முகத்தை நிமிர்த்தியவன் கண்ணீருடன் அவள் நெற்றியில் ஈர முத்தம் பதிக்க,
“நாம பட்ட கஷ்டத்தை நம்ம புள்ளையங்க அனுபவிக்க கூடாது மாயா… இந்த சமுதாயத்துல அவங்க சுயமரியாதையோட வாழணும்” என்று அவள் சொன்னதற்கு நெகிழ்வுடன் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தான்.
இருவரும் நெருங்கி ஒருவரை ஒருவர் அணைத்திருக்க மிதமாக தென்றல் காற்று அவர்களை காதலுடன் தழுவியது. அந்த காற்றின் அசைவில் கிளையிலிருந்த குல்மொஹர் மலர்கள் எல்லாம் அவர்கள் மீது பூமாரி பொழிந்தன.
*******************சுபம்**************
தேடிச் சோறுநிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாட பலசெயல்கள் செய்து - நரை
கூடி கிழப் பருவமெய்தி - கொடும்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரை போலே - நான்
வீழ்வேனென்று நினைத் தாயோ?
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அடிமைகளாக இருந்த பெண்கள்… கல்வி, மற்றும் பொருளாதார சுதந்திரத்தால் மீண்டும் தங்கள் அந்தஸ்த்தில் உயர்ந்தார்கள்.

Quote from sembaruthi.p on July 19, 2022, 10:33 PMகடைசி பாடல் நச் 👌🏻👌🏻👌🏻👌🏻. சிவப்பு எழுத்துக்களில் நீங்க குடுத்த விஷயம் எல்லாமே சூப்பர்... மாயன் கனி ஒண்ணு சேர்ந்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு...
ரொம்ப ரொம்ப வித்தியாசமான கதை... ஒடுக்கப்பட்ட சமூக மக்களோட வலிகள், நிஜங்கள் முடிஞ்சளவு குடுத்துட்டிங்க.. இது உங்க பெஸ்ட் னு சொல்லமாட்டேன்.. இன்னுமின்னும் நிறைய தேடி இனி வரப்போகும் நாவல்களுக்கு காத்துகிட்டு இருக்கேன். 🤩
கடைசி பாடல் நச் 👌🏻👌🏻👌🏻👌🏻. சிவப்பு எழுத்துக்களில் நீங்க குடுத்த விஷயம் எல்லாமே சூப்பர்... மாயன் கனி ஒண்ணு சேர்ந்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு...
ரொம்ப ரொம்ப வித்தியாசமான கதை... ஒடுக்கப்பட்ட சமூக மக்களோட வலிகள், நிஜங்கள் முடிஞ்சளவு குடுத்துட்டிங்க.. இது உங்க பெஸ்ட் னு சொல்லமாட்டேன்.. இன்னுமின்னும் நிறைய தேடி இனி வரப்போகும் நாவல்களுக்கு காத்துகிட்டு இருக்கேன். 🤩
Quote from chitti.jayaraman on July 20, 2022, 1:25 AMWow rumba nalla irundathu pa story ithu different type dan pa enaku rumba pudichi iruku pa kani um mayan um mataka mudiatha characters pa super
Wow rumba nalla irundathu pa story ithu different type dan pa enaku rumba pudichi iruku pa kani um mayan um mataka mudiatha characters pa super
Quote from monisha on July 20, 2022, 6:58 PMQuote from sembaruthi.p on July 19, 2022, 10:33 PMகடைசி பாடல் நச் . சிவப்பு எழுத்துக்களில் நீங்க குடுத்த விஷயம் எல்லாமே சூப்பர்... மாயன் கனி ஒண்ணு சேர்ந்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு...
ரொம்ப ரொம்ப வித்தியாசமான கதை... ஒடுக்கப்பட்ட சமூக மக்களோட வலிகள், நிஜங்கள் முடிஞ்சளவு குடுத்துட்டிங்க.. இது உங்க பெஸ்ட் னு சொல்லமாட்டேன்.. இன்னுமின்னும் நிறைய தேடி இனி வரப்போகும் நாவல்களுக்கு காத்துகிட்டு இருக்கேன்.
முதலில் தளத்தில் உங்கள் கருத்தில் பதிவிட்டமைக்கு நன்றி. அடுத்ததாக ஒவ்வொரு தடவையும் உங்கள் கருத்தை தொடர்ந்து பதிவிட்டிருந்தீங்க. அதனை படிக்கும்போது மனதிற்கு உற்சாகமாக இருந்தது பா. அதுக்கு இன்னும் பெரிய பெரிய நன்றி. எல்லாவற்றிற்கும் யாருமே அந்த சிவப்பு வரிகளை குறிப்பிட்டு பாராட்டவில்லை. நீங்க அதனையும் குறிப்பிட்டு உங்க கருத்தை சொல்லி என் முயற்சிக்கு மதிப்பு கொடுத்திருந்தீங்க. என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
Quote from sembaruthi.p on July 19, 2022, 10:33 PMகடைசி பாடல் நச் . சிவப்பு எழுத்துக்களில் நீங்க குடுத்த விஷயம் எல்லாமே சூப்பர்... மாயன் கனி ஒண்ணு சேர்ந்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு...
ரொம்ப ரொம்ப வித்தியாசமான கதை... ஒடுக்கப்பட்ட சமூக மக்களோட வலிகள், நிஜங்கள் முடிஞ்சளவு குடுத்துட்டிங்க.. இது உங்க பெஸ்ட் னு சொல்லமாட்டேன்.. இன்னுமின்னும் நிறைய தேடி இனி வரப்போகும் நாவல்களுக்கு காத்துகிட்டு இருக்கேன்.
முதலில் தளத்தில் உங்கள் கருத்தில் பதிவிட்டமைக்கு நன்றி. அடுத்ததாக ஒவ்வொரு தடவையும் உங்கள் கருத்தை தொடர்ந்து பதிவிட்டிருந்தீங்க. அதனை படிக்கும்போது மனதிற்கு உற்சாகமாக இருந்தது பா. அதுக்கு இன்னும் பெரிய பெரிய நன்றி. எல்லாவற்றிற்கும் யாருமே அந்த சிவப்பு வரிகளை குறிப்பிட்டு பாராட்டவில்லை. நீங்க அதனையும் குறிப்பிட்டு உங்க கருத்தை சொல்லி என் முயற்சிக்கு மதிப்பு கொடுத்திருந்தீங்க. என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
Quote from monisha on July 20, 2022, 6:59 PMQuote from chitti.jayaraman on July 20, 2022, 1:25 AMWow rumba nalla irundathu pa story ithu different type dan pa enaku rumba pudichi iruku pa kani um mayan um mataka mudiatha characters pa super
Thank you so much ma. Unga comments ellame very motivational... 😍😍😍
Quote from chitti.jayaraman on July 20, 2022, 1:25 AMWow rumba nalla irundathu pa story ithu different type dan pa enaku rumba pudichi iruku pa kani um mayan um mataka mudiatha characters pa super
Thank you so much ma. Unga comments ellame very motivational... 😍😍😍
Quote from monisha on July 25, 2022, 6:46 AMQuote from Thani Siva on July 23, 2022, 5:25 PMஅழகான கதை
சூப்பர் சிஸ்
நன்றி மா
Quote from Thani Siva on July 23, 2022, 5:25 PMஅழகான கதை
சூப்பர் சிஸ்
நன்றி மா
Quote from Rathi on July 26, 2022, 11:35 AMஅருமையான கதை, Monisha. கதைக்களமும் வித்தியாசமாக இருந்தது. யதார்த்தமாகவும் இருந்தது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஆரம்ப தகவல் பகுதி சுவாரஸ்யமாக இருந்தது. பெண்களின் ஆளுமை ஆதிக்கம் எப்படி நாகரீகம் என்ற பெயரில், கொஞ்சம் கொஞ்சமாக முடக்கப்பட்டது என்ற தகவல் அறிவுபூர்வமாக இருந்தது. Dr ஷாலினி அவர்களின் பேச்சை போலவே இருந்தது. எப்படியெல்லாம் நாம் முட்டாளாக்கப்பட்டிருக்கிறோம் என்பது வியப்பாக உள்ளது. இந்த மூளை சலவையில் இருந்து வெளி வர பல ஆண்டுகள் பிடிக்கும் போல .
அருமையான கதை, Monisha. கதைக்களமும் வித்தியாசமாக இருந்தது. யதார்த்தமாகவும் இருந்தது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஆரம்ப தகவல் பகுதி சுவாரஸ்யமாக இருந்தது. பெண்களின் ஆளுமை ஆதிக்கம் எப்படி நாகரீகம் என்ற பெயரில், கொஞ்சம் கொஞ்சமாக முடக்கப்பட்டது என்ற தகவல் அறிவுபூர்வமாக இருந்தது. Dr ஷாலினி அவர்களின் பேச்சை போலவே இருந்தது. எப்படியெல்லாம் நாம் முட்டாளாக்கப்பட்டிருக்கிறோம் என்பது வியப்பாக உள்ளது. இந்த மூளை சலவையில் இருந்து வெளி வர பல ஆண்டுகள் பிடிக்கும் போல .
Quote from maanya.rangarajan on March 5, 2024, 4:59 PMNice story 👍
Nice story 👍
Quote from Marli malkhan on May 7, 2024, 12:31 PMWow super...odukappatta samuthayathinar oda kastam ivlovanu padokirappa kadtama irukuthu...
Wow super...odukappatta samuthayathinar oda kastam ivlovanu padokirappa kadtama irukuthu...